Share

Nov 4, 2016

கமல் ஹாசனின் சொந்த வாழ்க்கை


ஒரே விஷயம் ( ஒரு மாநிலம்?) குறித்து இருவேறு அபிப்ராயங்கள்.
கமல் ஹாசன் தான் ஓய்வு பெற்ற பின் வாழ விரும்பும் பூமி என்று குறிப்பிட்டது கேரளாவை தான். அமைதியும் நிம்மதியும் அங்கு தான் தனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை.
நான்கு வருடங்களுக்கு முன் மோகன்லால் ஸ்டேட்மெண்ட்
“ கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும் அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக கேரளா மாறி வருகிறதோ என தோன்றுகிறது.”
Opinion differs.
கமல் பற்றி பேச இன்று வேறு ஏதுமில்லையா?

கே.பாலச்சந்தரின் ’அவர்கள்’ படத்தில் கமல் அன்று பேசிய வசனம். நடிகை சுஜாதாவிடம் உருக்கமாக, கலக்கத்துடன் ஏங்கி சொல்வார்: ’’சிலருக்கு வாழ்க்கையில ’கல்யாண பாக்யம்’ கிடையாதுங்க’’

வாணி இவரை விட்டுப் பிரிந்த போது சாருஹாசன் ஒரு வட நாட்டு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி : “My brother Kamal is always promiscous.”
சாரு ஹாசன், சுஹாசினி இருவரும் வாணியை விட்டுப் பிரிந்ததை சிலாகிக்கவில்லை. Their sympathy and solidarity were with Vani.இதனால் மூத்த சகோதரருடன் மனஸ்தாபம் தான். சுஹாசினி வெறுப்போடு சரிகா பற்றி பேசி அது பத்திரிக்கையொன்றில் வந்திருந்தது.


பெரும்பாலும் ஆண்களுக்கு மூன்றாவது புருஷார்த்தத்தில் எப்போதுமே மிகுந்த வேகம் உண்டு.
”ஒரு தார மரபு என்பது நம் கலாச்சாரத்திலேயே கிடையாது.
நம்முடைய தெய்வங்களே அதற்கு உதாரணம்” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தன் இரண்டாவது திருமணத்திற்கு காரணம் சொன்னதுண்டு.

ஒரு திரைப்பட நடிகனின் வாழ்வு எப்போதும் Erotic ஆனது.
கமலால் எப்போதுமே ’ஒக்க மாட்ட ஒக்க பாணம் ஒக்க பத்னி’ கண்ணியமெல்லாம் காட்ட முடியாத நிலை. அதனால் தான் இன்று கௌதமி பிரிவுக்கும் காரணம் முதிர்ந்த நடிகரின் புதிய காதல் தான் என்று ஒரு வதந்தியும் உழவும் சூழல்.

எவ்வளவோ கதாநாயகிகள் இந்த இளைய நடிகருக்காக அன்று ஏங்கிய போது
குட்டி பத்மினி சொன்ன வார்த்தைகள் : ” கமல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன். அவன் யார் கையிலும் சிக்க மாட்டான்.”

பாரதிராஜா கதாநாயக பஞ்சம் பற்றி சலித்துப் போய் சொன்னார்.: ”தமிழ் திரையுலகின் துரதிர்ஷ்டம். இங்கே கமல் ஹாசன் ஒருவன் தான் அழகான ஒரே நடிகன்.”

மண வாழ்வு விஷயத்தில் உஷார் பேர்வழி. ” உறவுகள் எனக்கென இருந்தது தான். கனவுகள் பாதியில் கலைந்தது தான்.”

Once bitten, twice shy. அதனால் தான் இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சரிகாவுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் வேர்த்து விறுவிறுத்துப் போய் பிரியத்தான் வேண்டியிருந்தது.

அதனால் தான் ரொம்ப பிரமாதமான முன் ஜாக்கிரதையுடன் கௌதமிக்கு திருமண அந்தஸ்தே தரவேயில்லை. கௌதமிக்கு குழந்தையும் இவருக்கு பிறக்கவில்லை.

தன் ஒரே மகள் வாழ்க்கைக்காகத்தான் இந்த முடிவு என்று கௌதமி பிரகடனம். Lame Excuse! பதிமூன்று வருடங்களுக்குப் பின் இந்த ஞானம்! பாபநாசம்??

’பாரத ரத்னா’ விருது பெற தகுதியுள்ள ஒரே இந்தியத் திரைப்பட நடிகனின் சொந்த வாழ்க்கை பலருக்கும் ’அவல்’ ஆகிப்போன அவலம். கலாச்சாரம், பண்பாடு கூப்பாடு……


சாதனைப்பயணம் திரையில் தொடர்வதில் எந்த தடை இருக்கிறது?
…………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_4.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.