Share

Nov 14, 2016

Mounting on two horses



Italy offers Robert De Niro asylum after Trump win if he is serious about leaving the country

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அமெரிக்க அதிபர் தேர்தலின் போது “ ட்ரம்ப் ஜெயிச்சா நான் இத்தாலிக்கு போயிட வேண்டியது தான்” என்று சொன்னார்.

Straddling two cultures or standing between two stools?
இப்ப இத்தாலிக்கே வரச்சொல்லி அங்கே ஃபெர்ரஸ்ஸானோ மேயர் அழைப்பு விடுத்திருக்கிறார். Asylam! இத்தாலி அடைக்கலம் கொடுக்கத்தயார்.
Italy! Your Motherland? Italy! Your people cry for you?
இத்தாலிக்கு போய் நீரோ பிடில் வாசிக்கவா முடியும். பொழப்பு அமெரிக்காவில இருக்கும்போது இத்தாலிக்குப் போய் ’சிங் சிங் சான்’ சிங்கியடிக்க என்ன தேவை!?
பொழக்கிற இடம், பொழச்ச இடம் தான் சொந்த தேசம். சோறு கண்ட இடம் தானே சொர்க்கம்!

Diaspora! So, here too foreign for Italy, too foreign for America, never enough for both! Straddling two cultures or falling between two stools?
....................

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றி ஒரு ஜுரம் இங்கே இருக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன் ஒபாமா ஜெயித்த போது உலகமே ரட்சிக்கப்பட்டு விட்டது போல இந்தியாவில் ஒரு கொண்டாட்ட மனநிலை. கறுப்பர் வந்ததால் என்ன மறுமலர்ச்சி..
அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே ’உலகத்தின் நம்பர் ஒன் பேட்டை ரௌடி’ தான்.
டெமாக்ரடிக் பாட்டியா இருந்தா என்ன? ரிபப்ளிக் தாத்தாவா இருந்தா என்ன? எப்பவுமே அமெரிக்க அதிபருக்கு ஒரே முகம் தானே! பழைய கருப்பன் கருப்பனே!
உலக அரசியலுக்கு, வாழ்வுக்கு என்ன பெரிய மாற்றம், மறுமலர்ச்சி நிகழ்ந்து விடப்போகிறது.
இதில் யார் ஜெயித்தால் தான் என்ன? அந்தப் பதவி பற்றி நிறைய பிரமைகள் இந்தியர்களுக்கு எதற்கு?
ட்ரம்ப் ஜெயிப்பான்… ஹிலாரி ஜெயிப்பா
விவாதங்கள்….
ஏன் அவ ஜெயிக்கக்கூடாது… அவ ஜெயிச்சா பிரச்னை ..
ஏன் இவன் ஜெயிக்கக்கூடாது…. இவன் ஜெயிச்சா ப்ராப்ளம்!
................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4039.html

http://rprajanayahem.blogspot.in/…/…/tom-hanks-in-sully.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/03/hello-goodbye-hello.h…




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.