Share

Oct 30, 2016

T.R. ராஜகுமாரி


(குமுதம் லைஃப் தீபாவளி மலரில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.)

எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமண்யம் (பத்மா சுப்ரமண்யத்தின் அப்பா) அங்கே துரு,துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். Visibly Smart ! ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.

இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரின் தாயார்.
ராஜகுமாரியின் தாயாருக்கு தனலட்சுமி சகோதரி.


தமிழ் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக்கன்னி டி.ஆர் ராஜகுமாரி.
Vamp role என்றால் அதற்கு Role model ராஜகுமாரி தான். முதன் முதலான Item Dancer.’மன்மதலீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்’
என்று ’ஹரிதாஸ்’(1944) படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் இவரைப்பார்த்துத் தான்.

’சந்திரலேகா’ படத்தில் எம்.கே.ராதாவுடனும் ரஞ்சனுடனும்,

’குலேபகாவலி’(1955)யில் எம்.ஜி.ஆரின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி.
”வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே!”

இவருடைய தம்பி பெஞ்சாதி பி.எஸ்.சரோஜா எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக நடித்த புதுமைப்பித்தனில் ராஜகுமாரி “ மன மோகனா, மறந்து போவேனா” பாட்டு பாடி பாலையாவை ஆட்டுவிப்பார்.

இவரிடம் ஒரு விஷேச நளினம் இருந்தது. சல்லடை போட்டுத் தேடினாலும் அதை வேறு எந்த ஒரு நடிகையிடமும் காணவே முடியாது.
அவர் பார்க்கும் ’பார்வை’ மிடுக்குடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கு அந்த அற்புதமான கண்கள் தான் மூலதனம். வாள் விழி வீச்சு!

(Give a big hand! Clap your hands together! தட்றா.. தட்றா..தட்றா….தட்றா!)


வில்லியாக வரும்போது அந்தக்கண்களில் கொப்பளிக்கும் ’குயுக்தி’, கதாநாயகியாக வரும்போது அதே கண்களில் தெறிக்கும் ’குறும்பு’.


’குலேபகாவலி’, ’புதுமைப்பித்தன்’ இயக்குனரான தன் தம்பி ராமண்ணாவின் ’பெரிய இடத்துப் பெண்’(1963)ணில் எம்.ஜி.ஆருக்கு அக்காவாக நடித்தவர். தன்னை கற்பழித்த எம்.ஆர்.ராதாவை நள்ளிரவில் கொல்ல வருவார். அந்த காட்சிகள் திகிலாக இருக்கும்.


நடிகை ராஜகுமாரி தன் பெயரிலேயே கட்டிய தியேட்டர் தி. நகர் பாண்டி பஜாரில் அந்தக்காலத்தில் ஒரு லேண்ட் மார்க்.
ராஜகுமாரி பஸ் ஸ்டாப்!

சினிமா இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பதற்றமாக படபடப்பாக, கோபமும், ஆவேசமுமாக பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் ராமண்ணா செட்டில் இருப்பதே தெரியாது. அவ்வளவு அமெரிக்கையானவர். சாந்த சொரூபி. இடி போன்ற பிரச்னைக்கும் கலங்கவே மாட்டார். அப்படிப்பட்டவரின் தமக்கை என்பதும் ராஜகுமாரிக்கு பெருமை சேர்க்கிற விஷயம் தான்.

தன் தம்பி ராமண்ணாவின் மூன்று மனைவிகளையும் அரவணைத்து, குடும்பத்தில் சிக்கல் இல்லாத நிம்மதி நிலவ, நேர்த்தியான திறமையுடன் செயல் பட்டவர்.

சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு புண்ணியவதி.

தன் குடும்பத்திற்காக, தம்பிகளுக்காக அவர் தன்னை தியாகம் செய்த மெழுகுவர்த்தி. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தவர். Sage-ing while age-ing.
மரம் முத்துனா வைரம்! மனுஷப்பிறவி முத்துனா புத்தி! ஞானம்!1992ம் ஆண்டு துவக்கத்தில் திருச்சியில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நான் ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்த போது ஒரு கணவானுடன் வந்த அவருடைய மனைவி அப்படியே அச்சு அசலாக ஹரிதாஸ்,குலேபகாவலியில் பார்த்த நடிகை ராஜகுமாரி போலவே இருந்ததைப்
பார்த்து பிரமித்துத்தான் போனேன்.
அந்த சீமாட்டியிடம் நான் நாசூக்காக கேட்டேன் ‘ நீங்கள் சினிமா டைரக்டர் ராமண்ணாவுக்கு சொந்தமா?’ ஒரு வேளை ராமண்ணாவுக்கு, ராஜாபாதருக்கு மகள் தன் அத்தை சாயலில் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே!
அவர் பதில்: ”இல்லை..இல்லை”


பின்னாளில் பல வருடங்களுக்குப்பின் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்” பாட்டில்
நடிகை சினேகாவின் சிரிப்பில் ராஜகுமாரி சாயல் தெரிந்தது!

…………………………………2 comments:

  1. Dear RP,

    I see TR and Rita Hayworth are look-a-like. Did you enjoy Cover Girl? Rita was also a great dancer.

    Anon

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.