Share

Jun 15, 2016

நிலாக்காலங்களில் சோலைகளில்


”ஆசை” வசந்த் இயக்கத்தில் அஜீத் நடித்து வந்தது. வசந்த் எனக்கு பிடித்த இயக்குனர். அவர் இயக்கத்தில் வெளி வந்த படங்கள் நான் எப்போதும் உற்சாகமாக பார்ப்பதுண்டு.

இப்போது அஜீத் எட்டியிருக்கிற உயரம் ரஜினியையும் தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். இன்று அவர் ரசிகர்கள் அறியாத ஒரு விஷயம். ’ஆசை’ காரணமாக ஒரு பட்டம் அஜீத்திற்கு கிடைத்தது. “சின்ன அரவிந்த் சாமி” என்று அழைக்கப்பட்டார்!

அரவிந்த் சாமி கமல் ஹாசனுக்கு போல அஜீத்திற்கும் சரியான Supporting actor ஆக இருப்பார்.
……………………

நாமாக விரும்பி ஒரு பாடலைக் கேட்பது என்பது வேறு. ஆனால் எங்காவது வெளியில் கொஞ்சம் ஏகாந்தமான மௌன சூழலில் திடீரென்று சில பாடல் வரிகள் காதில் விழும் போது மாய உலக சஞ்சாரம் வாய்க்கிறது.
“ நிலாக்காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகையிடம் காணும் சுகம் இன்னும் பல கோடி….”
அப்புறம் காற்று திசை மாறியதால் எதுவும் கேட்கவில்லை.
மீண்டும் சில நிமிடங்களில்..
”அலை மோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்…..
மீண்டும் காற்று காரணமாக சரியாக கேட்கவில்லை…
எந்த பாடலின் சரண வரி இது….
மீண்டும் சில வரி விட்டு விட்டு.. காதில் “பாரதி கண்ணம்மா….. அதிசய மலர் முகம்…….. தேன் மொழி சொல்லம்மா..”
ஆஹா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒரு புண்ணியாத்மா..
பெண் குரல் வாணி ஜெயராம் போல தெரிந்தது.. மெஸ்மரிசம் செய்வது போல என்ன ஒரு குரல்…
………………………………………………………..


”பொட்டு வைத்த முகமோ” வலஜி ராக மெட்டில் அமைந்த பாடல்.
"மலைத்தோட்டப் பூவில் மணம் இல்லை என்று... “ சரண வரியில்
சிவாஜி கணேசன் நடை முத்துராமன் ஸ்டைலில் இருக்கிறது.

சிவாஜியே ஜாலியாக இப்படி சொல்லி விட்டு நடந்திருப்பாராய் இருக்கும்.
“டேய், மொதலியார் ஸ்டைலில் இதில் நடக்கிறேன் பாருங்கடா!”

கௌதம் கார்த்திக்கின் தாத்தா, கார்த்திக்கின் அப்பா முத்துராமன் முக்குலத்தோர் தான். சினிமாவுலகில் அவருக்கு பட்ட பெயர் மொதலியார்!
……………………………………….

1 comment:

  1. ரெண்டுமே அருமையான எம்.எஸ்.வி பாடல்கள்.

    பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - வாணி ஜெயராமோடு நினைத்தாலே இனிக்கும் படத்தில் டூயட்.

    பொட்டு வைத்த முகமோ... மலைத்தோட்டப் பூவில் மணம் இல்லை என்று... என்ன அழகான பாட்டு. பி.என்.வசந்தாவின் ஹம்மிங்கும் பாலுவின் குரலும்.. அடடா!

    மெல்லிசை மன்னா... நீ வாழ்வாங்கு வாழ்பவனய்யா!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.