Share

Jun 11, 2016

தலை வணங்கு!


பாகப்பிரிவினையில் ஒற்றைக்கை நொண்டியான சிவாஜியிடம் எம்.ஆர்.ராதா “எங்கேடா போற?

சிவாஜி அப்பாவியாக “ கோவிலுக்கு..”
ராதா “ ஒத்தக்கைய வச்சுக்கிட்டு கோவிலுக்குப் போய் சாமிக்கு சலாமா போடப்போறே!”

Acid wit and sarcasm against people who could not retaliate.
திருப்பிப்பேசி தாக்க திராணியற்ற அப்பாவிகள் மீதான பேச்சு வன்முறை..செயல் வன்முறை…
A villainous violent person always says “you fear, therefore I am!”

எறும்பைப் பற்றி ஒரு கவிதை ரொம்ப முன்னர் படித்தது. I can’t quote the exact verbatim. ஆனால் அது இப்படி தான்..
’எறும்பை ஏன் நசுக்குகிறோம். அதன் எதிர்ப்புக்குரல் நம் காதில் விழாது என்பதால் தானே?”

எஸ்.வைத்தீஸ்வரன் எழுதியது இந்தக்கவிதை.

இன்னொரு கவிதை ஒரு நாவலில் படித்தது
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று!
கதறிட மறுக்கும் குதிரையை கல்லென்று நினைக்கவேண்டாம்”
பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் நாவலில் வரும் கவிதை.

உடனே எஸ்.வைத்தீஸ்வரனின் இந்தக்கவிதைக்கு முன்னதாகவே எழுதப்பட்டு விட்ட குதிரை கவிதை நினைவிற்கு வருகிறது.
”மனிதன் இழுக்கும் மாமிச வண்டியில்
குதிரை கிடந்து ஹை..ஹை என்றது!”
……………………………………………

உப்பைத்தின்னு தண்ணி குடிக்கவேண்டித்தான் இருக்கு.
“I tell no one the story of my life
It is something I have to spend
I spend it”
- Urdu poet Hakeem Makmoor


ஒரு மதிக்கத்தக்க விஞ்ஞானி மிச்சியோ காக்கு என்பவர் சமீபத்தில் கடவுள் இருப்பு என்பதற்கு சாதகமான துப்பு கண்டுபிடித்து விட்டதாக சொல்கிறார்.

Believe me, everything that we call ‘Chance’ today won’t make sense anymore. We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’. – Michio Kaku
இதை மு. நடேஷ் ஃபேஸ்புக்கில் படித்தேன்.
விஞ்ஞான அறிவியல் எப்போதும் கடவுள் பற்றிய கோட்பாடுகளை நிராகரிப்பது.
ஆனால் ஐன்ஸ்டீன் சொன்ன பிரபலமான வார்த்தைகள்
“கடவுள் தாயக்கட்டை உருட்டுவதில்லை” தான் மிச்சியோ காக்கு கூற்றைப்படித்த போது நினைவுக்கு வந்தது.
“ God Does not play at Dice”
……………………………

ஒரு பெரியவர் சொன்ன விஷயம்.

தேவி காம்ப்ளக்ஸுக்கு படம் பார்க்க இளமைக்காலத்தில் போயிருந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் நடித்த படம் ”நீதிக்கு தலை வணங்கு” மாடியில் உள்ள ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கட் அவுட் பெரிதாக காம்ப்ளக்ஸில்.
க்ரௌண்ட் ப்ளோரில் உள்ள தியேட்டரில் ஹெர்மன் ஹெஸ்ஸெயின் பிரபலமான நாவல் படமாக்கப்பட்டு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. ”சித்தார்த்தா”! பெரிய பேனரில்
சசி கபூர், சிமி இருவரும். சிமி நிர்வாணமாக நிற்பார். சசிகபூர் முழங்காலிட்டு சிமியை வணங்கிக்கொண்டிருப்பார்.

தியேட்டர் முன்னால் ஒரு வெளியூர்க்காரர் ஒரு மாடர்ன் யூத்திடம் கேட்டார் “ என்ன படம்லாம் சார் ஓடுது.”
அந்த இளைஞன் சத்தமாக சொன்னான்“ மேலே “ நீதிக்கு தலை வணங்கு!” கீழே “ கூதிக்குத் தலை வணங்கு!”
We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’!
…………………………………………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.