Share

Mar 22, 2016

இசைந்த குரூரம்






லியோனார்டோ டி காப்ரியோவுக்கு ஆஸ்கார் விருது வாங்கிக்கொடுத்த “The Revenant”.1823ல் நடக்கும் கதை.
அலக்ஸாண்டரொ கொன்சாலஸ் இனாரித்து இயக்கிய படம்.

“The hateful Eight.” டாரண்டினோ எட்டாவது படம்.
என்னியோ மோரிகோன் இசை. 

 இரண்டு பும் 2015ல் ந்தை.

இந்த இரண்டு படங்களிலும் கதையில் இசைந்த குரூரம்.







The Revenant - லியோனார்டோ டி காப்ரியோவை ஒரு கரடி குதறி எடுக்கிறது. இதனால் படுகாயமுற்ற நிலையில் இருப்பவரை டாம் ஹார்டி மூச்சை நிறுத்த முயற்சிக்கிறார். இதை காப்ரியோவின் மகன் ஃபார்ரஸ்ட் குட்லக் பார்த்து விடுகிறான்.


டாம் ஹார்டி அந்தப்பையனை கையறு நிலையில் உள்ள காப்ரியோவின் கண் முன்னே கொல்கிற காட்சி.



The hateful Eight - அமெரிக்க உள் நாட்டுப்போர் ( 1861-1865) நடந்தின் - Some time after the American Civil War
  
மார்க்யூஸ் ஆக நடிக்கும் சாமுவேல் ஜாக்சன், ஜெனரல் ஸ்மிதர்ஸ் ஆக நடிக்கும் ப்ரூஸ் டெர்ன் பெற்ற மகனை எப்படி கொன்றார் என்பதை விவரிக்கும் காட்சி.


பனிக்கட்டிப்பிரதேசத்தில் ஸ்மிதர்ஸ் மகனை அம்மணமாக முன் நடக்கச்செய்யும் சாமுவேல் ஜாக்ஸன். கடும் குளிரில் ஒரு போர்வை கேட்டுக்கெஞ்சும் அந்த இளைஞனை தனக்கு வாய்ப்புணர்ச்சி செய்யச்சொல்லி சித்திரவதை செய்து குளிருக்கு போர்வையும் தராமல் பின்  நிர்வாணமாகவே கொன்று விட்டதை விலாவரியாக ப்ரூஸ் டெர்னிடம் விலாவரியாக விவரிக்கும் காட்சி.

”All he wanted, was a BLANKET.

what a man that cold, would-do-for-a-blanket. You wanna know what your boy did? I pulled my BIG, BLACK, PECKER outta my pants. And I made him crawl in the snow on all fours over to it. Then I grabbed a handful of that black hair at the back of his head... And I stuck my Big Black Johnson right down his goddamn throat! Charles Chester Smithers sucked on that warm black dingus for as long as he could. Hahahaahaha!”


That blanket was just a heart breakin' liar's promise.










…………………………………………………………….......................................

புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.

ராவணனின் புத்திர சோகம்:
எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
-    கம்பன் 

பாண்டவர்கள்  தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் பறி கொடுக்கிறார்கள். பீமன் மகன் கடோத்கஜன், அர்ஜுனன் மகன் அரவான், அபிமன்யூ, கடோத்கஜன் மகன் பர்பரிகன், பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து பாண்டவ புத்திரர்கள்.



Mar 20, 2016

சில செவிலியர்களும் என் செருப்பும்


இரவு ரயில். ஸ்லீப்பர் கோச் கம்பார்ட்மெண்ட்.

ரயிலில் லோயர் பெர்த்தில் எதிரில் ஒரு முப்பத்தைந்து வயது இளைஞன்.வந்தவுடன் தன் Running Nose ஐ கையை உபயோகப்படுத்தி Spray செய்து எனக்கு எரிச்சலை ஏற்படுத்தினான். கையில் அந்த ஈரம். மூக்குத்துவாரங்களில் அசிங்கமாக Booger!

பொது இடத்தில் பல விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

என்னுடைய வாட்டர் பாட்டிலைக்கேட்டு அந்த ஈரக்கையை நீட்டினான். ரயில் நின்று கொண்டிருக்கிறது. இறங்கிப்போய் வாட்டர் பாட்டில் வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டி வந்தது.

கொஞ்ச நேரத்தில் பெண் மாணவியர் பதினாறு பேர் நுழைந்தனர். நர்ஸ் பயிற்சி மாணவியர் என்று அறிய வந்தேன்.
இதில் மேலே இரு பக்கமும் நான்கு நர்ஸ் பயிற்சி படிக்கும் பெண்கள். இந்த பக்கமும் அடுத்த பகுதியிலும் முழுவதும் இந்தப் பெண்களின் வகுப்புத்தோழிகள் பன்னிரண்டு பெண்கள்.

தூங்கப்போகும் முன் எல்லோரும் எனக்கு அறிமுகமாகி நான் சில மெடிக்கல் ஜோக்ஸ் அடித்து அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

எல்லாம் கடி ஜோக்குகள் தான்.
“ஏன். நர்ஸ், டாக்டர் ஆப்ரேசன் செய்யும்போது முகத்திற்கு மூடி அணிந்து க்ளவுஸ் மாட்டிக்கொள்கிறீர்கள். அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவும், கைரேகை போலீஸிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும் தானே?” என்றேன். விழுந்து விழுந்து செவிலித்தாய்மார்கள் சிரித்தார்கள். ’இன்னும் சில ஹாஸ்பிடல் ஜோக் சொல்லுங்க சார்!’ என்று கேட்டார்கள்.

கைவசமிருந்த டாக்டர் ஜோக்குகளை அவிழ்த்து விட்டேன்.

“ மிஸ்டர் பாபு சங்கர்! ஆப்ரேஷன் செய்வதில் ஒரு தவறு நடந்து விட்டது!”
“ ஐயோ டாக்டர்! நான் கௌரி சங்கர்!”
”கரெக்ட்! ஆப்ரேஷனில் என்ன தவறு நடந்தது என்பதை சரியாகப் புரிந்துகொண்டு விட்டீர்களே!”
செவிலித்தாய்கள் ஆரவாரம்.

“ டாக்டர்! எனக்கு ஐஸ் வாட்டர்னா உயிர் டாக்டர்! ஐஸ்வாட்டர் நான் குடிக்கலாம் தானே?”
“ தாராளமா குடிங்க. சுட வச்சுட்டு குடிச்சிடுங்க.”


ஒரு குண்டன் கவலையோடு டாக்டரிடம் “ The problem is, OBESITY runs in our family.”
டாக்டர்“ No, the problem is no one RUNS in your family!”



”What’s the difference between Mother Teresa and a nurse?”

”Mother Teresa only has to serve one God.”


ஒருத்தன் தன் காதலை நர்ஸிடம் தெரியப்படுத்தினான்.

“I love you, SISTER!” இது குஷ்வந்த்சிங் ஜோக்.

 
நல்ல கலகலப்பு!

எதிர் பெர்த் இளைஞன் (என்ஜினியர்) ஒரு INTROVERT என்று தெரிந்தது. ஒருவரிடமும் பேசவில்லை. நானே பேசி ஊர், பேர், தொழில் தெரிந்து கொண்டேன்.
பெண்பிள்ளைகள் அனைவரும் குட் நைட் சொல்லி விட்டுப் போய் படுத்த பின் விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. நானும் கண்ணயர்ந்தேன்.
நள்ளிரவில் விழித்தேன்.
‘One toilet’ போவதற்காக என் செருப்பைத்
தேடினேன். என் செருப்பைக்காணவிலை. இருட்டில் செருப்பைத்தேடினேன். கீழே நன்கு கைகளால் தேடியும் சிக்கவில்லை. ட்ரையின் மூவிங்கில்
பக்கத்துப்பகுதிக்குப் போயிருக்குமோ.
 நான் இருந்தப்பகுதியிலேயே அதிக நேரம் தேடுவது சிலாக்கியமில்லை. பெண்கள் இரவில் ஆண் நடமாடினால் தூக்கக் கலக்கத்தில் மிரண்டு விடுவார்கள். திடீரென்று பயந்து கத்தி விடுவார்கள். பொற்கை பாண்டியன் நிலை எனக்கு!

 படுத்துக்கொண்டேன். யூரினோ எனில்  அர்ஜெண்டைனாவில். அதாவது மூத்திரம் முடுக்கிக்கொண்டு!

எதிர்த்த பெர்த்தில் அந்த இளைஞனைக் காணவில்லை. ஒரு பதினைந்து நிமிடத்தில் வந்தான்.
“ என் செருப்பை காணோம் சார்!”
எஞ்சினியர் “ நான் தான் டாய்லெட்டுக்கு ஒங்க செருப்பப் போட்டுக்கிட்டுப் போனேன் சார்! என்னோடது ஷூ!”
“ ஒன் ஷூவைத்தான்யா நீ போட்டுக்கிட்டுப் போகணும்”
லெஃப்ட் அண்ட் ரைட் நல்லா செம டோஸ் விட்டேன்.
பெண்கள் இருந்ததால் mummy mother sister என்று abusive language மட்டும் நான் அவனிடம் USE பண்ணவில்லை.


காலையில் ரயிலை விட்டு இறங்கியபோது உற்சாகமாக செவிலியர் எனக்கு விடை கொடுத்தார்கள்.
இளைஞன் காணப்படவில்லை. முந்தைய ஸ்டேசனில் இறங்கியிருக்கலாம்.

Mar 17, 2016

Edward Albee's "The Zoo story"




எட்வர்ட் அல்பீ எழுதிய  நாடகம் “The zoo story.”
 
எட்வர்ட் அல்பீ 12 வயதிலேயே ஒரு பாலியல் பகடி நாடகம் எழுதியவர்.
 அவர் அதன் பின் எழுதிய இரண்டாவது  நாடகம் தான் இந்த ”மிருகக்காட்சி சாலை கதை”. முப்பது வயது அப்போது. அமெரிக்க நாடகாசிரியர்.

பீட்டர் – ஜெர்ரி என்று இரண்டே கதாபாத்திரங்கள் தான் இந்த நாடகத்தில். நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பார்க். அங்கே பீட்டர் அமர்ந்திருக்கிறான். ஒரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு பூனைகள், கிளிகள் என்று பப்ளிஷிங் எக்ஸிக்யூடிவ் தான் பீட்டர். சலிப்பாக கேட்கிறான் :”Am I the guinea pig for today?” நான் தான் இன்று உனக்கு பலியாடா? இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?


 ஜெர்ரி ஒரு ஏகாந்தி. மனம் தளர்ந்த மனிதன். அர்த்தப்பூர்வமான உரையாடல் நடத்த ஏங்குபவன். பீட்டரை அணுகி “ நான் மிருகக்காட்சி சாலைக்குப் போனேன்..”என்று ஆரம்பிக்கிறான். அவன் சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை பீட்டரிடம் வலிந்து திணிக்கிறான். “ I don’t like to use words that are too harsh in describing people. I don’t like to. But the landlady is a fat, ugly, mean, stupid, unwashed, misanthropic, cheap, drunken bag of garbage.”
 
 ’நான் ஏன் ஜூவுக்குப்போனேன்’ என்று வள,வள என்று சொல்லி …..அதன் பின் கடைசியில் கத்தியை எடுக்கிறான். கத்தியை பீட்டர் எடுக்கும்படி கீழே போடுகிறான். கத்தியை பீட்டர் தன்னை பாது காத்துக்கொள்ள நினைத்து கையில் எடுக்கும்போது ஜெர்ரி கத்தி தன் நெஞ்சில் பாயும்படி ஓடி வந்து மோதுகிறான். பீட்டர் தான் ’ஐயோ கடவுளே! ஐயோ கடவுளே!” என்று கதறுகிறான். ஜெர்ரி ஒரே தடவை தான் ”ஐயோ கடவுளே!” என்று கடைசியாக சொல்லி விட்டு செத்துப்போகிறான்.
Habit is the ballast  that chains the dog to his vomit, Breathing is habit, Life is habit.


 நாடகத்தில் இரண்டு கதா பாத்திரங்கள். ஆனால் எட்வர்ட் அல்பீ சொல்வார் “ என்னுடைய நாடகத்தில் ஒன்றரை கதாபாத்திரங்கள் தான். ஜெர்ரி முழுமையாக உருவான, முப்பரிமாண கதாபாத்திரம். ஆனால் பீட்டர் குறைபட்ட பாதியான கதாபாத்திரம். முக்கிய பாத்திரமாக்கப்பட்டவன்.

Mar 14, 2016

களவானிகள்


ஆடு களவானிகள்


ஒரு மீன் கடை. கடைக்காரர் மீன் விற்பனையில் மும்முரமாயிருந்தார். அங்கே எண்பது வயது பெரியவர் திருநெல்வேலிச்சீமையிலிருந்து வந்தவர். சுவாரசியமாக பேசினார்.
அவர் இளைஞனாய் இருந்த காலத்தில் கிராமத்தில் கிடையில் ஆடுகள் இரவில் அடைக்கப்பட்ட பின்பு அவ்வப்போது ஒரு ஆடு கிடையில் காணாமல் போய் விடும். அந்த ஆட்டிற்கு என்ன நேரிடும் என்பதை அவர் விரிவாக விளக்கினார்.


கிராமத்தில் உள்ள திமிரான விடலைகள் தான் இப்படி ஆட்டை கிடையில் இருந்து திருடுவார்களாம். உடன் அதன் கழுத்தை நெறித்து உடைத்து விடுவார்களாம் பக்கத்தில் இருக்கிற மலைக்கு கொண்டு போய் விடுவார்களாம். மலையில் அதை தோலுரித்து பாறையில் போட்டு வர மிளகாயை அதன் மீது தூவி அதைச்சுற்றி நெருப்பெரியச்செய்வார்கள். பாறையில் ஏற்படும் வெப்பத்திலேயே நன்றாக வெந்துவிடும். நான்கைந்து பேர் உட்கார்ந்து முழு ஆட்டையும் பிய்த்துப் பிய்த்துச் சாப்பிட்டு விடுவார்களாம்! இவ்வளவு செய்பவர்களுக்கு மிஞ்சிய எலும்பை டிஸ்போஸ் செய்யத்தெரியாதா என்ன?

………………………………………………………………………………………

Sep 23, 2008

கோழி களவானி


மதுரை பி சிக்ஸ் போலிஸ் ஸ்டேஷன். ஜென்டில் மேன் காங்கோ அங்கே ஸ்டேஷன் எஸ் ஐ இடம் விளக்குகிறார்.

" ஒண்ணுமில்லை சார் . இந்த கார்பரேசன் பார்க் இல்லை. அங்க We used to smoke grass I mean Kanja. அப்போ திஸ் Fellow அப்ப to and fro வா வாக் பண்ணிக்கிட்டிருந்தான்.அங்கே பார்க் ஒட்டி வேலி Fence பக்கமா ஒரு Hut குடிசை இல்ல. அதுக்குள்ளே போனான்.
திரும்ப வரும் போது அவன் STOMACH கொஞ்சம் BULKY யா இருந்திச்சி. என்னடா உள்ள போனான் . இப்போ BULKY STOMACH !வெளியே போறானே.. நினைச்சேன். ஆனா அப்ப மரிஜுவானா smoke பண்ணி கிட்டிருந்ததாலே We didn’t pay heed
திரும்ப இவன் ஒரு சாக்கு .. I mean ஒரு bag எடுத்துட்டு வந்தான்.
நாலு HEN யை தூக்கி சாக்குக்குள்ளே போட்டான்.
ஆஹா! THIS FELLOW SEEMS TO BE A HEN THIEF!

டே இடியட். Hen Thief! இங்க வாடா என்னடா What the hell is going on here.
டே இதெல்லாம் Actually theft ஆச்சேடா கெட்ட பழக்கம் bad habit இல்லையா?
’ஒரு HEN யை தூக்கி இங்க எங்க கிட்ட போடுறா’ன்னு சொன்னா
 Mummy Mother Sister ன்னு Abusive language use பண்ண ஆரம்பிச்சிட்டான் சார்!
நாங்க நாலஞ்சு Heavy blows கொடுத்து இவனைகட்டியேத்தி கொண்டு வந்திருக்கோம் சார் ."

எஸ் ஐ : "டே 305! இவனை முதல்ல தூக்கி உள்ள போடுடா. அப்புறமா கோழி களவானியை கவனிப்போம்."
..................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_23.html

Mar 12, 2016

விவசாயிக்கு என்ன மிச்சம்?


சாலி கிராமம் அகிலன் தெருவில் காய்கறி வாங்க அந்தக்கடைக்குப்போனேன். ஒரு பெரியவர் கடைக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். நான் நினைத்தேன். விலைவாசி பற்றி அல்லது காய்கறி பற்றி ஏதோ குறை சொல்கிறாராக்கும் என்று. பெரியவர் மிக அடங்கிய குரலில் வேதனை வெளிப்பட காய்கறிக்காரரிடம் ஏதோதோ சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனார்.

கடைக்காரர் என்னிடம் அவரே பெரியவரின் ஆதங்கம் என்ன என்று சொன்ன போது, அடடே அந்தப்பெரியவர் முகத்தைக்கூட நான் சரியாக கவனிக்கவில்லையே என்று நான் எண்ணினேன்.


பெரியவர் தக்காளி விலை பத்து ரூபாய் என்றறிய வந்த போது தான் விலை குறைந்திருக்கிறதே என்று சந்தோஷப்படாமல் வேதனைப்பட்டிருக்கிறார். “ ஒரு கிலோ பத்து ரூபாய் என்று சில்லறை வியாபாரி நீங்கள் சொல்கிறீர்களே. விவசாயிக்கு இதில் ஒன்றிரண்டு ரூபாய் தானே கிடைக்கும். மார்க்கெட் மொத்த வியாபாரிகள் ஒரு நான்கு பேர் கை மாறி இப்படி கடைகளுக்கு வருகிறது. விவசாயிக்கு என்ன மிச்சம்?அந்த வியாபாரிகள் பார்த்த லாபத்தைத் தாண்டி விவசாயிக்கு என்ன கிடைக்கும். அவன் எப்படி பிழைப்பு நடத்துவான்.”


When tomatoes blush, you’ve probably said something really naughty!

பட்டுக்கோட்டை தான் அன்றைக்கே பாட்டெழுதி விட்டானே.
”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.”

(ஓவியம் : செழியன்)

....................

Tomato Joke in the movie PULP FICTION

there's a family of tomatoes walking down the street.

the daddy tomato..the mommy tomato..and the baby tomato..

the daddy tomato is becoming more and more annoyed with 
the baby tomato....

because the baby tomato is taking its time dragging his feet... 
looking at everything...

so finally the daddy tomato turns around... 
walks back to where the baby tomato is & steps & smuches the baby tomato & screams: 

"Ketchup!
……………………………………………………………………………….

Oct 1, 2008

விவசாயி - உழவும் வாழ்வும்




நகைகடை பஜார். முதலாளி ஆளவந்தார் தன் கடையில் உட்கார்ந்திருக்கிறார்.

அவருடைய செல்லம்பட்டி நிலத்தில் விவசாயம் செய்கிற பண்ணை கூலி உழவன் கந்தன் வருகிறான்.

'அய்யா அந்த மிளகா செடியெல்லாம் உரம் போட்டு முடிஞ்சிது '
'சரி 'தலையை ஆளவந்தார் ஆட்டுகிறார்.

'நெல்லுக்கு பூரா தண்ணி விட்டாச்சி . முந்தாநாளு களை பிடுங்கி சுத்தமா ஆயிடுச்சி ..' தலையை சொரிகிறான்.

' நிறுத்தாதே .. சொல்லிகிட்டே வா. ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் உனக்கு மெடல் கொடுக்கனுமா ?'

'அந்த பம்ப் செட் பூரா கழுவி விட்டுட்டேன்...... '

'நிறுத்தாதே. சொல்லிகிட்டே வா '

'தக்காளி விதைச்சாச்சி. பயிருக்கெல்லாம் மருந்து அடிச்சிட்டேன் ...... கத்திரிக்காயெல்லாம் பறிச்சி காலையிலே மார்கெட்டுக்கு போறதுக்கு உங்க காரியஸ்தர் கிட்ட சாக்குலே போட்டு கொடுத்துட்டேன்.'

'சரி இப்ப என்ன?'

கந்தன் அக்குளை சொரிந்து விட்டு அதன் பின் தலையை சொரிந்து
' மொதலாளி , வீட்டு செலவுக்கு ஒரு முன்னூறு ரூபா வேணும்...குழந்தைக்கு மருந்து வேற வாங்கணும்.....'

சீறி வெடிக்கிறார் ஆளவந்தார்: ' வோத்தால வோக்க. இவன் லண்டன்லே விவசாயம் பண்ணுறான்! ஒக்காலோலி என் தலையிலே தீ வைக்க தானேடா வர்றே.'


"விதையை
மண்ணில் ஒளித்து
வைக்கும்
வெள்ளந்திக்குப் பெயர்
விவசாயி"
கலாப்ரியா

..................................



உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது.


............................................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_01.html