Share

Mar 2, 2016

High Noon (1952 movie)திரை ரசிக சிகாமணிகள் எப்போதும் தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த படங்களை திரும்ப திரும்ப பார்ப்பார்கள்.
இப்படி அல்லாமல் மிகச்சிறந்த நல்ல படம் என்பதற்காகவும் பலர் குறிப்பிட்ட சில படங்களை அடிக்கடி பார்க்கும் வழக்கம் கொண்டிருப்பார்கள்.
நல்ல வாசகர்கள் சிறந்த நாவல்கள், விசேஷமான சிறுகதைகளை மீண்டும்,மீண்டும் வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பார்கள்.


இப்படி மிகவும் பிரபலமான மனிதருக்கு மிகவும் பிடித்த படம் ஹாலிவுட் படம் High Noon.

பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த எட்டு வருடங்களில் பதினேழு முறை வெள்ளை மாளிகையில் ‘ஹை நூன்’ படத்தைப் பார்த்திருக்கிறார். அப்படியானால் ஜனாதிபதியாவதற்கு முன்னால் எத்தனை தடவை இந்தப் படத்தைப்பார்த்திருப்பார். சரி, முன்னால் ஜனாதிபதியாக பின்னாளில் எத்தனை முறை பார்த்திருப்பாரோ?!
High Noon is Bill Clinton’s all-time favourite film!
மனித மனத்தின் தேர்வு என்பது புதிரானது. ஏன், எதனால் என்றெல்லாம் சுலபமாக தீர்மானிக்க முடியாத விசித்திர வினோதம்.


There is a saying that High Noon is a western for people who don’t like westerns.
High Noon – the story of a man who was too proud to run.
When these hands point straight up… the excitement starts!

க்ரகெரி பெக் நடித்திருக்க வேண்டிய படம். வாய்ப்பை தட்டிக்கழித்ததற்காக பின்னால் வருத்தப்பட்டார்.

கேரி கூப்பர் கதாநாயகனாக நடித்த படம் ஹை நூன்.

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் நல்ல நண்பர் கேரி கூப்பர்.
க்ரேஸ் கெல்லி கதாநாயகி. படத்தில் நடிக்கும்போது கேரி கூப்பருடன் காதலும் உறவும் ஏற்பட்டது.

ஹிட்ச்காக்கின் இரண்டு படங்களில் கூட கதாநாயகியாக நடித்தவர்.
பின்னால் இவர் மொனாக்கா இளவரசரை மணந்து இளவரசியானவர்.

கேரி கூப்பருக்கு மர்லின் டீட்ரிச், இங்க்ரிட் பெர்க்மன், பேட்ரீசியா நீல் ஆகிய நடிகைகளுடன் கூட காதல் உறவு இனித்திருக்கிறது.
ஹை நூன் கதாநாயகன் 1925-26ல் எக்ஸ்ட்ரா நடிகராக இருந்திருக்கிறார். ஊமைப்படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்.

இதில் நடித்துள்ள மெக்சிகன் நடிகை கேட்டி ஜுராடா.

Broken lance படத்தில் ஸ்பென்ஸர் ட்ரேசியுடன், One-eyed Jacksல் மார்லன் ப்ராண்டோவுடன் நடித்த நடிகை. ஜுராடாவைப்பார்க்கும் போது இந்திய நடிகை போலவே இருக்கிறார்.

லீ வான் க்ளிஃப் நடித்த முதல் படம்.

அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. பின்னால் ‘Good, Bad, Ugly’யில் ‘BAD’ ஆக லீ வான் க்ளிஃப் மிகப் பிரபலம்.  
For a few dollars more படத்தில் கர்னல் மார்ட்டிமர்.

”Do not forsake me, oh, my darlin',
On this, our wedding day.
Do not forsake me, oh, my darlin',
Wait; wait alone.”
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான பாடல். This was the first Oscar winning song from a non-musical film.

Kane: You know I've only got an hour and I've got lots to do. Stay at the hotel until it's over.
Amy: You're asking me to wait an hour to find out if I'm going to be a wife or a widow.
ஜட்ஜ் கேட்கிறார்: Why must you be so stupid? Have you forgotten what he is? Have you forgotten what he's done to people? Have your forgotten that he's crazy? Don't you remember when he sat in that chair and said, 'You'll never hang me. I'll come back. I'll kill you, Will Kane. I swear it, I'll kill you.'


இயக்குனர் ஃப்ரெட் ஜின்னமென் இந்தப் படத்தை வண்ணத்தில் எடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தார். இதை கறுப்பு-வெள்ளையில் தான் வடிவமைத்தார். கறுப்பு வெள்ளையில் தான் ஹை நூன் காட்டப்படவேண்டும் என்பது தான் அவர் தீர்மானம்.ஆனால் பிற்காலத்தில் இதன் வண்ணப்பிரதியும் உருவாகியது என்பது ஒரு முரண் நகை.
…………………….

http://rprajanayahem.blogspot.in/…/nothing-in-common-1986.h…

http://rprajanayahem.blogspot.in/…/on-waterfront-1954movie.…

http://rprajanayahem.blogspot.in/…/…/apartment1960movie.html

http://rprajanayahem.blogspot.in/…/well-nobody-is-perfect.h…

http://rprajanayahem.blogspot.in/…/…/vertigo-1958-movie.html

http://rprajanayahem.blogspot.in/…/vittorio-de-sica-s-bicyc…

http://rprajanayahem.blogspot.in/…/fellini-and-his-movie-8.…

http://rprajanayahem.blogspot.in/20…/…/birds-1963-movie.html

http://rprajanayahem.blogspot.in/…/when-harry-met-sally1989…

http://rprajanayahem.blogspot.in/2009/02/roman-holiday.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/doctor-zhivago.html

..................................................................1 comment:

  1. எனக்குமே மிகவும் பிடித்த படம்.

    இசையமைப்பாளரைப் பற்றியும், இந்த படம் ஏற்படுத்திய விளைவுகளைப்பற்றியும் கூட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே சார்?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.