Share

Mar 12, 2016

விவசாயிக்கு என்ன மிச்சம்?


சாலி கிராமம் அகிலன் தெருவில் காய்கறி வாங்க அந்தக்கடைக்குப்போனேன். ஒரு பெரியவர் கடைக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். நான் நினைத்தேன். விலைவாசி பற்றி அல்லது காய்கறி பற்றி ஏதோ குறை சொல்கிறாராக்கும் என்று. பெரியவர் மிக அடங்கிய குரலில் வேதனை வெளிப்பட காய்கறிக்காரரிடம் ஏதோதோ சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனார்.

கடைக்காரர் என்னிடம் அவரே பெரியவரின் ஆதங்கம் என்ன என்று சொன்ன போது, அடடே அந்தப்பெரியவர் முகத்தைக்கூட நான் சரியாக கவனிக்கவில்லையே என்று நான் எண்ணினேன்.


பெரியவர் தக்காளி விலை பத்து ரூபாய் என்றறிய வந்த போது தான் விலை குறைந்திருக்கிறதே என்று சந்தோஷப்படாமல் வேதனைப்பட்டிருக்கிறார். “ ஒரு கிலோ பத்து ரூபாய் என்று சில்லறை வியாபாரி நீங்கள் சொல்கிறீர்களே. விவசாயிக்கு இதில் ஒன்றிரண்டு ரூபாய் தானே கிடைக்கும். மார்க்கெட் மொத்த வியாபாரிகள் ஒரு நான்கு பேர் கை மாறி இப்படி கடைகளுக்கு வருகிறது. விவசாயிக்கு என்ன மிச்சம்?அந்த வியாபாரிகள் பார்த்த லாபத்தைத் தாண்டி விவசாயிக்கு என்ன கிடைக்கும். அவன் எப்படி பிழைப்பு நடத்துவான்.”


When tomatoes blush, you’ve probably said something really naughty!

பட்டுக்கோட்டை தான் அன்றைக்கே பாட்டெழுதி விட்டானே.
”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.”

(ஓவியம் : செழியன்)

....................

Tomato Joke in the movie PULP FICTION

there's a family of tomatoes walking down the street.

the daddy tomato..the mommy tomato..and the baby tomato..

the daddy tomato is becoming more and more annoyed with 
the baby tomato....

because the baby tomato is taking its time dragging his feet... 
looking at everything...

so finally the daddy tomato turns around... 
walks back to where the baby tomato is & steps & smuches the baby tomato & screams: 

"Ketchup!
……………………………………………………………………………….

Oct 1, 2008

விவசாயி - உழவும் வாழ்வும்




நகைகடை பஜார். முதலாளி ஆளவந்தார் தன் கடையில் உட்கார்ந்திருக்கிறார்.

அவருடைய செல்லம்பட்டி நிலத்தில் விவசாயம் செய்கிற பண்ணை கூலி உழவன் கந்தன் வருகிறான்.

'அய்யா அந்த மிளகா செடியெல்லாம் உரம் போட்டு முடிஞ்சிது '
'சரி 'தலையை ஆளவந்தார் ஆட்டுகிறார்.

'நெல்லுக்கு பூரா தண்ணி விட்டாச்சி . முந்தாநாளு களை பிடுங்கி சுத்தமா ஆயிடுச்சி ..' தலையை சொரிகிறான்.

' நிறுத்தாதே .. சொல்லிகிட்டே வா. ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் உனக்கு மெடல் கொடுக்கனுமா ?'

'அந்த பம்ப் செட் பூரா கழுவி விட்டுட்டேன்...... '

'நிறுத்தாதே. சொல்லிகிட்டே வா '

'தக்காளி விதைச்சாச்சி. பயிருக்கெல்லாம் மருந்து அடிச்சிட்டேன் ...... கத்திரிக்காயெல்லாம் பறிச்சி காலையிலே மார்கெட்டுக்கு போறதுக்கு உங்க காரியஸ்தர் கிட்ட சாக்குலே போட்டு கொடுத்துட்டேன்.'

'சரி இப்ப என்ன?'

கந்தன் அக்குளை சொரிந்து விட்டு அதன் பின் தலையை சொரிந்து
' மொதலாளி , வீட்டு செலவுக்கு ஒரு முன்னூறு ரூபா வேணும்...குழந்தைக்கு மருந்து வேற வாங்கணும்.....'

சீறி வெடிக்கிறார் ஆளவந்தார்: ' வோத்தால வோக்க. இவன் லண்டன்லே விவசாயம் பண்ணுறான்! ஒக்காலோலி என் தலையிலே தீ வைக்க தானேடா வர்றே.'


"விதையை
மண்ணில் ஒளித்து
வைக்கும்
வெள்ளந்திக்குப் பெயர்
விவசாயி"
கலாப்ரியா

..................................



உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது.


............................................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_01.html

2 comments:

Note: Only a member of this blog may post a comment.