Share

Mar 20, 2016

சில செவிலியர்களும் என் செருப்பும்


இரவு ரயில். ஸ்லீப்பர் கோச் கம்பார்ட்மெண்ட்.

ரயிலில் லோயர் பெர்த்தில் எதிரில் ஒரு முப்பத்தைந்து வயது இளைஞன்.வந்தவுடன் தன் Running Nose ஐ கையை உபயோகப்படுத்தி Spray செய்து எனக்கு எரிச்சலை ஏற்படுத்தினான். கையில் அந்த ஈரம். மூக்குத்துவாரங்களில் அசிங்கமாக Booger!

பொது இடத்தில் பல விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

என்னுடைய வாட்டர் பாட்டிலைக்கேட்டு அந்த ஈரக்கையை நீட்டினான். ரயில் நின்று கொண்டிருக்கிறது. இறங்கிப்போய் வாட்டர் பாட்டில் வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டி வந்தது.

கொஞ்ச நேரத்தில் பெண் மாணவியர் பதினாறு பேர் நுழைந்தனர். நர்ஸ் பயிற்சி மாணவியர் என்று அறிய வந்தேன்.
இதில் மேலே இரு பக்கமும் நான்கு நர்ஸ் பயிற்சி படிக்கும் பெண்கள். இந்த பக்கமும் அடுத்த பகுதியிலும் முழுவதும் இந்தப் பெண்களின் வகுப்புத்தோழிகள் பன்னிரண்டு பெண்கள்.

தூங்கப்போகும் முன் எல்லோரும் எனக்கு அறிமுகமாகி நான் சில மெடிக்கல் ஜோக்ஸ் அடித்து அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

எல்லாம் கடி ஜோக்குகள் தான்.
“ஏன். நர்ஸ், டாக்டர் ஆப்ரேசன் செய்யும்போது முகத்திற்கு மூடி அணிந்து க்ளவுஸ் மாட்டிக்கொள்கிறீர்கள். அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவும், கைரேகை போலீஸிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும் தானே?” என்றேன். விழுந்து விழுந்து செவிலித்தாய்மார்கள் சிரித்தார்கள். ’இன்னும் சில ஹாஸ்பிடல் ஜோக் சொல்லுங்க சார்!’ என்று கேட்டார்கள்.

கைவசமிருந்த டாக்டர் ஜோக்குகளை அவிழ்த்து விட்டேன்.

“ மிஸ்டர் பாபு சங்கர்! ஆப்ரேஷன் செய்வதில் ஒரு தவறு நடந்து விட்டது!”
“ ஐயோ டாக்டர்! நான் கௌரி சங்கர்!”
”கரெக்ட்! ஆப்ரேஷனில் என்ன தவறு நடந்தது என்பதை சரியாகப் புரிந்துகொண்டு விட்டீர்களே!”
செவிலித்தாய்கள் ஆரவாரம்.

“ டாக்டர்! எனக்கு ஐஸ் வாட்டர்னா உயிர் டாக்டர்! ஐஸ்வாட்டர் நான் குடிக்கலாம் தானே?”
“ தாராளமா குடிங்க. சுட வச்சுட்டு குடிச்சிடுங்க.”


ஒரு குண்டன் கவலையோடு டாக்டரிடம் “ The problem is, OBESITY runs in our family.”
டாக்டர்“ No, the problem is no one RUNS in your family!”



”What’s the difference between Mother Teresa and a nurse?”

”Mother Teresa only has to serve one God.”


ஒருத்தன் தன் காதலை நர்ஸிடம் தெரியப்படுத்தினான்.

“I love you, SISTER!” இது குஷ்வந்த்சிங் ஜோக்.

 
நல்ல கலகலப்பு!

எதிர் பெர்த் இளைஞன் (என்ஜினியர்) ஒரு INTROVERT என்று தெரிந்தது. ஒருவரிடமும் பேசவில்லை. நானே பேசி ஊர், பேர், தொழில் தெரிந்து கொண்டேன்.
பெண்பிள்ளைகள் அனைவரும் குட் நைட் சொல்லி விட்டுப் போய் படுத்த பின் விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. நானும் கண்ணயர்ந்தேன்.
நள்ளிரவில் விழித்தேன்.
‘One toilet’ போவதற்காக என் செருப்பைத்
தேடினேன். என் செருப்பைக்காணவிலை. இருட்டில் செருப்பைத்தேடினேன். கீழே நன்கு கைகளால் தேடியும் சிக்கவில்லை. ட்ரையின் மூவிங்கில்
பக்கத்துப்பகுதிக்குப் போயிருக்குமோ.
 நான் இருந்தப்பகுதியிலேயே அதிக நேரம் தேடுவது சிலாக்கியமில்லை. பெண்கள் இரவில் ஆண் நடமாடினால் தூக்கக் கலக்கத்தில் மிரண்டு விடுவார்கள். திடீரென்று பயந்து கத்தி விடுவார்கள். பொற்கை பாண்டியன் நிலை எனக்கு!

 படுத்துக்கொண்டேன். யூரினோ எனில்  அர்ஜெண்டைனாவில். அதாவது மூத்திரம் முடுக்கிக்கொண்டு!

எதிர்த்த பெர்த்தில் அந்த இளைஞனைக் காணவில்லை. ஒரு பதினைந்து நிமிடத்தில் வந்தான்.
“ என் செருப்பை காணோம் சார்!”
எஞ்சினியர் “ நான் தான் டாய்லெட்டுக்கு ஒங்க செருப்பப் போட்டுக்கிட்டுப் போனேன் சார்! என்னோடது ஷூ!”
“ ஒன் ஷூவைத்தான்யா நீ போட்டுக்கிட்டுப் போகணும்”
லெஃப்ட் அண்ட் ரைட் நல்லா செம டோஸ் விட்டேன்.
பெண்கள் இருந்ததால் mummy mother sister என்று abusive language மட்டும் நான் அவனிடம் USE பண்ணவில்லை.


காலையில் ரயிலை விட்டு இறங்கியபோது உற்சாகமாக செவிலியர் எனக்கு விடை கொடுத்தார்கள்.
இளைஞன் காணப்படவில்லை. முந்தைய ஸ்டேசனில் இறங்கியிருக்கலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.