Share

Mar 14, 2016

களவானிகள்


ஆடு களவானிகள்


ஒரு மீன் கடை. கடைக்காரர் மீன் விற்பனையில் மும்முரமாயிருந்தார். அங்கே எண்பது வயது பெரியவர் திருநெல்வேலிச்சீமையிலிருந்து வந்தவர். சுவாரசியமாக பேசினார்.
அவர் இளைஞனாய் இருந்த காலத்தில் கிராமத்தில் கிடையில் ஆடுகள் இரவில் அடைக்கப்பட்ட பின்பு அவ்வப்போது ஒரு ஆடு கிடையில் காணாமல் போய் விடும். அந்த ஆட்டிற்கு என்ன நேரிடும் என்பதை அவர் விரிவாக விளக்கினார்.


கிராமத்தில் உள்ள திமிரான விடலைகள் தான் இப்படி ஆட்டை கிடையில் இருந்து திருடுவார்களாம். உடன் அதன் கழுத்தை நெறித்து உடைத்து விடுவார்களாம் பக்கத்தில் இருக்கிற மலைக்கு கொண்டு போய் விடுவார்களாம். மலையில் அதை தோலுரித்து பாறையில் போட்டு வர மிளகாயை அதன் மீது தூவி அதைச்சுற்றி நெருப்பெரியச்செய்வார்கள். பாறையில் ஏற்படும் வெப்பத்திலேயே நன்றாக வெந்துவிடும். நான்கைந்து பேர் உட்கார்ந்து முழு ஆட்டையும் பிய்த்துப் பிய்த்துச் சாப்பிட்டு விடுவார்களாம்! இவ்வளவு செய்பவர்களுக்கு மிஞ்சிய எலும்பை டிஸ்போஸ் செய்யத்தெரியாதா என்ன?

………………………………………………………………………………………

Sep 23, 2008

கோழி களவானி


மதுரை பி சிக்ஸ் போலிஸ் ஸ்டேஷன். ஜென்டில் மேன் காங்கோ அங்கே ஸ்டேஷன் எஸ் ஐ இடம் விளக்குகிறார்.

" ஒண்ணுமில்லை சார் . இந்த கார்பரேசன் பார்க் இல்லை. அங்க We used to smoke grass I mean Kanja. அப்போ திஸ் Fellow அப்ப to and fro வா வாக் பண்ணிக்கிட்டிருந்தான்.அங்கே பார்க் ஒட்டி வேலி Fence பக்கமா ஒரு Hut குடிசை இல்ல. அதுக்குள்ளே போனான்.
திரும்ப வரும் போது அவன் STOMACH கொஞ்சம் BULKY யா இருந்திச்சி. என்னடா உள்ள போனான் . இப்போ BULKY STOMACH !வெளியே போறானே.. நினைச்சேன். ஆனா அப்ப மரிஜுவானா smoke பண்ணி கிட்டிருந்ததாலே We didn’t pay heed
திரும்ப இவன் ஒரு சாக்கு .. I mean ஒரு bag எடுத்துட்டு வந்தான்.
நாலு HEN யை தூக்கி சாக்குக்குள்ளே போட்டான்.
ஆஹா! THIS FELLOW SEEMS TO BE A HEN THIEF!

டே இடியட். Hen Thief! இங்க வாடா என்னடா What the hell is going on here.
டே இதெல்லாம் Actually theft ஆச்சேடா கெட்ட பழக்கம் bad habit இல்லையா?
’ஒரு HEN யை தூக்கி இங்க எங்க கிட்ட போடுறா’ன்னு சொன்னா
 Mummy Mother Sister ன்னு Abusive language use பண்ண ஆரம்பிச்சிட்டான் சார்!
நாங்க நாலஞ்சு Heavy blows கொடுத்து இவனைகட்டியேத்தி கொண்டு வந்திருக்கோம் சார் ."

எஸ் ஐ : "டே 305! இவனை முதல்ல தூக்கி உள்ள போடுடா. அப்புறமா கோழி களவானியை கவனிப்போம்."
..................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_23.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.