1984 ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கடும் சுகவீனமுற்று கோமா நிலைக்கு சென்ற போது தமிழகத்தில் அதிமுகவினர் கோவில்களுக்கு செல்லத் துவங்கினர்.
வழியெங்கும்" இறைவா உன் மாளிகையில் எத்தனையோ
மணிவிளக்கு.. ..உள்ளமதில் உள்ளவரை, அள்ளித்தரும் நல்லவரை.. இறைவா நீ ஆணையிடு...இறைவா நீ..." ஒளி விளக்கு பாடல் ஒலிக்கும்.
சோகமோ சோகம்.. பாதயாத்திரை, காவடி, வேண்டுதல் என்று அதிமுக ஆர்ப்பாட்டம் சாமியாட்டம் தான்.
அதிமுக கட்சியினர் தொடர்ந்து " வள்ளல் முகம் வாடாமல் இறைவா நீ ஆணையிடு.. இறைவா...இறைவா...இறைவா.."
பல பல சோக நாடகங்கள்...
ஆஸ்பத்திரியில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி சென்னை வந்தார்.
அதிமுக காரர்கள் மேல் மூடிகள் துவங்கி தொண்டரடிப்பொடி வரை கடும் சோகம் கொண்டாடிக்கொண்டிருந்த போது
எம்.ஜி.ஆரைப் பார்க்க இந்திரா காந்தி வந்த அதே மாதத்தில் அவரது படுகொலை நிகழ்ந்து விட்டது.
எம்.ஜி.ஆர் உடல் நிலை சோகத்தை இந்திரா காந்தி படுகொலை மூடி விட்டது.
Sir your simple and sweet ,small request try to write fiction based this real life incidents, it will be a fantastic novel
ReplyDelete