Share

Dec 29, 2023

வீட்டம்மா செஞ்சது தகுதியும் நீதியுமானது

நல்ல ஸ்திதியில இருந்த 
அதி பிரபலமான மனுஷனுக்கு வருடக்கணக்கா ஒடம்புல ரொம்ப படுத்தியெடுத்து முடியவே முடியாம   போனதுனால 
வீட்டுல பொம்பள அவர பாக்க ஆசப்படுற 'நான் தான்  சகாவாக்கும். நான் தான் முக்கியமான ஆளாக்கும். பாத்தே ஆகனும் ' பிரபலங்கள பாக்க விடலன்னு சடச்சிக்கிட்டா.. இந்த ஆவலாதி சகிக்கல.

பாக்க ஆசப்பட்ட அந்த நூற்றுக்கணக்கான 
' நான் தான் முக்கிய சகா' பிரபலங்கள பாக்கவே விடாததிலே என்ன தப்பு?
வீட்டம்மா செஞ்சது தகுதியும் நீதியுமானது. 

விட்டுருந்தா ஒடம்பு முடியாத மனுஷனுக்கு எவ்வளவு சித்திரவதை. இவிங்க Nostalgia பேசியே கொன்னெடுத்து ..
இவரு எப்பயோ போயிருப்பாரே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.