உன்னத உள்ளங்கள்
பா. அசோக் : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை.
குடத்திலிடப்பட்ட விளக்கல்ல நீங்கள் ... உண்மையில் குடத்திலடைபட்ட மின்னல்..
அதே பிரமிப்பு இன்றும் இனியும்!
Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..
Umamaheshvaran Panneerselvam: If I can write half as versatile as thyself I will pat myself sir. Always an admirer of your writings ..
Ilangovan Chanemouganandam : நான் முகநூலில் மிகவும் விரும்பிப் படிக்கும் பதிவுகள் R.p. Rajanayahem னுடையவை. A versatile personality. ஒருநாள் என்னத்த கன்னையா பற்றி எழுதுவார். திடீரென்று Cary Grant பற்றி எழுதுவார். சிலசமயம் மௌனி பற்றி பதிவார். அடுத்தநாள் Silvia Plath பற்றி அலசுவார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பற்றி எழுதிவிட்டு , பார்த்தால் Something is rotten in the state of Denmark (Hamlet) பற்றி கலக்குவார். impressionism -Paul Cezanne, Van Gogh, Rembrandt ...அப்பாடா.
சித்ரா சம்பத் : எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத, காப்பாற்றாத சமுதாயத்தின் ஓர் அங்கம் நான் என்ற வெட்கமும் உண்டு.
...............
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.