Humbled.
பிரமை, பிரமிப்பு எதுவுமே இல்லாத நிலை.
பெருமை என்பது முறம்.
புடைத்து எடுத்தா எதுவும் கிடையாது.
நகைச்சுவை நடிகர் சார்லி
சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ’செல்’ பேசினார்.
R.P. ராஜநாயஹம் புத்தகம் படித்து விட்டு பரவசமாய் சொன்னார் : ”ராஜநாயஹம், நீங்கள் மிக,மிக,மிகப்பெரிய ஜீனியஸ்.
உங்களுக்கு மிக,மிக,மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.”
உடனே மனதில் ஏக்கமும் வேதனை
யும் :
“ மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ் காலம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்”
I will survive anything,
even praise.
இது மாதிரி நிறைய கேட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது.
Applause – Enjoy it; but never quite believe it.
கொசுவை விட சாதாரணமானவன்.
செத்தா எழவு கொண்டாடாம
ஒடனே எரிச்சுடனும்.
சாம்பலை வைத்து சடங்கெதுவும் கூடாது.
" நான் என்பதே வன்முறை.
இதில் நான் இன்னார் என்பது
எவ்வளவு பெரிய வன்முறை"
- கவிஞர் தேவதேவன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.