Share

Nov 17, 2023

உண்மைக்காக 'ஒத்த' எழுத்தாளராம்


திருமணமாகி விவாகரத்து வரை என்றாகி இதனால் ஆண் அனுபவிக்கும் வியாகுலம், மனைவி காரணமான தொடர் துயரம், குழந்தையைப் பார்க்க முடியாமல் தவிப்பது எல்லாம் அவ்வை சண்முகி துவங்கி இப்போது விஜய் டிவி சீரியல் வரை அரைத்த மாவு.

மனைவியால் இன்றைய கணவன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஏற்படும் பிரச்சினைகள், கணவன் குடும்பத்தை வரதட்சணை கேஸ் போட்டு நோகடிப்பது உட்பட பல விஷயங்கள் பற்றி பல வருடங்களுக்கு முன் எத்தனையோ முறை திருச்சி தமிழ் இலக்கியக் கழகம், திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் இலக்கியக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றிய
அழகிய நாயகி அம்மாளின் 'கவலை' 
எம்.எஸ். சௌந்தரம் ' சங்கீத நினைவுகள் ' ஆகிய இரண்டு நூல்கள் பற்றி ஒப்பிட்டு திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் நான் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, 2000 ஆண்டில் பேசிய போது, எதிர்மறையாக தற்காலத்தில் மனைவிகளால் சொல்லொணா கொடூர துயர் அனுபவிக்கும் கணவர்கள் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறேன்.
Male chauvinist ராஜநாயஹம் என சிலர் அங்கே pointed their finger on me.


2009ல் பெண்ணியமும் குசும்பனும் என பகடி எழுதியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் மாமியார் கொடுமை.
இந்தக்காலத்தில் மருமகள் கொடுமை.
'மருமகள் தான் இப்ப மாமியார்'.
இதை மிகச்சிறிய பதிவாக சில மாதங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன். அதை விரித்துப் பார்த்தால் பெரிய கட்டுரை.

இப்போது பிரபல எழுத்தாளர் இது பற்றி பேசிய வீடியோ  பற்றி 
'இது வரை யாரும் தொடாத, பேசத்துணியாத விஷயத்தை பேசியிருப்பதாக' குலையடிக்கப்பட்டிருக்கிறது.
உண்மைக்காக நிற்கும்
'ஒத்த' எழுத்தாளராம்.

ஓஹோன்னானாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.