Share

Oct 31, 2023

101,102 Episodes shooting 31.10. 2023


31.10. 2023 Tuesday 

101,102 episodes of Cinema Enum Bootham 
Shooting Today

1. T.R. மஹாலிங்கம்  
ஒளிபரப்பு 05.11.2023 ஞாயிற்றுக்கிழமை 

2. ஸ்ரீராம் 
ஒளிபரப்பு 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை

..........

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Oct 24, 2023

ரமாப்ரபா


மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது பேராசிரியர் வசந்தன் அடிக்கடி சொல்வார்:
" இங்கே திரைப்பட நடிகை ஒருவர் தான்.
ரமாப்ரபா தான் சிறந்த நடிகை. Number one performer."

இதெல்லாம் Conviction. பிடிவாத கண்ணோட்டம் என்று வரிந்து கட்டிக் கொண்டு அப்போதே அவரிடம் வாதம் செய்ததுண்டு. 
"Please sir. You should consider Ramaprabha as one of the best performers."

Vasanthan's stubborn reply : No. Ramaprabha is the only artiste.."
வசந்தனுக்கு சிவாஜியை பிடிக்காது.
அப்போதெல்லாம் சிவாஜி over action உச்சம் என அபிப்ராயம்.

 

வசந்தன் -  ஷேக்ஸ்பியர் நாடக இயக்குநர். 

அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை மிகவும் விசேஷமானது.

இன்றும் ஹேம்லட் என்றால் வசந்தன் தான். 
நெடுமாறன் தான் மார்க் ஆண்ட்டனி.

Doctor Faustus என்றால் 
ரிச்சர்ட் பர்ட்டனை முந்திக்கொண்டு நினைவிற்கு வருபவர் ஜான் சகாயம்.

தேர்ந்த கனிவான முழு அறிவுஜீவீ
பேராசிரியர்  R.P. நாயர்.

....

ரமாப்ரபா முழுமையாக அனுபவச் செறிவு மிக்கவர்.
Ramaprabha is having a different charm. 

இல்லாவிட்டால் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டவர் மீது சாதனையாளர்
 S.P. பாலசுப்பிரமணியம்  காதல் வயப்பட்டிருப்பாரா. 
தெய்வீக அன்பு இருவருக்கும் இருந்ததைப் பற்றி ரமாப்ரபா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

A winsome angel.
அழகான நடிகர் சரத்பாபு ஈர்க்கப்பட்டு ரமாப்ரபாவுடன் இணைந்து வாழ்ந்திருக்கிறார்.

Ramaprabha prayanam என்பதாக You tube channel ஆந்திரா, தெலிங்கானாவில் இப்போது பாப்புலர்.  அவ்வளவு admirers.

சமீப காலங்களில் இரண்டு தமிழ் படங்களில் கூட தலைகாட்டியிருக்கிறார்.

குழந்தைகள் கிடையாது. 
மதனப்பள்ளியருகே கங்கனப்பள்ளியில் பண்ணை வீட்டில் சகோதரர் குடும்பத்துடன் இருக்கிறார்.

......

100th Episode of R.P.Rajanayahem
Cinema Enum Bootham 

"Ramaprabha"

R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்
நூறாவது நிகழ்ச்சி 
 

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை

முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு 

"ரமாப்ரபா" 

....

Oct 21, 2023

Hell is empty; All the devils are here


"Hell is empty ; And all the devils are here"
Shakespeare in 'The Tempest'

போர், கலவரத்தை அறிய வரும்போது,
அட்டகாச குதூகலம், அற்ப சந்தோஷ கும்பல், மத மூர்க்கம் 
இவையெல்லாம் காணுகிற நேரங்களில் 
ஷேக்ஸ்பியரின் இந்த சொற்களும் ...

Oct 19, 2023

சிஸ்டத்தை மாற்றிய G.D. நாயுடு


விஞ்ஞானி கோவை ஜி.டி நாயுடு 
பேட்டியில் சொல்லியிருந்தார். 

இவர் டாய்லட் போகும்போது கவனித்திருக்கிறார். முதலில் சிறுநீர் போய் இருக்கிறது. அப்புறம் மலம் வெளியேறியிருக்கிறது. 
தொடர்ந்து இதைக்கவனித்த அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

சிஸ்டத்தை மாற்ற வேண்டும். ஆமா. சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று ரஜினி மாதிரியே  ஜி.டி.நாயுடு அன்றே முடிவு செய்திருந்திருக்கிறார்.

அதன் படியே சிஸ்டத்தை மாற்றி தான் அதன் பிறகு he was relieving himself. மொதல்லவே two toilet  போகட்டும். அப்பால தான் one toilet.


இதை அப்புறம் ஒரு டாக்டரிடம் சொல்லியிருந்திறார். 
அவர் “ ஏங்க சிஸ்டத்தை இப்படி மாத்துறீங்க. இயல்பா அத போக விட்டுடுங்க. சும்மா லூஸ்ல விடுங்க..” என்று அறிவுறுத்தியிருக்கிறார். 

அப்புறம் தான் பழைய சிஸ்டப்படியே காலைக்கடனை முடித்து வந்தாராம்.

2019 'நக்கல்' பதிவில் (Jan 11, 2019) 
ஒரு பகுதி

சினிமா எனும் பூதம் பாகம் - 2 பற்றி வீரன்மணி பாலமுருகன்

சினிமா எனும் பூதம் பாகம் - 2  
முன் வைத்து                     
வீரன்மணி பாலமுருகன் இன்று :
Veeranmani Balamurugan 

"நவீன இணைய தேடுபொறிகளும் வியந்து அதிசயக்கும் தகவல்களின் வற்றா ஊற்றுதான் பன்முக கலைஞர், அபூர்வ மனிதர் R.P. ராஜநாயஹம். Rajanayahem R.p. 


அவரால் தான் சரித்திர நாயகனையும் சாமானிய மனிதனையும் 
தன் எழுதுகோலால் 
ஒரே நேர்கோட்டில் நிறுத்த முடியும்.

 ஒரு இடி மழை பெய்வது போலும் 
ஒரு பூத் தூறல் படர்வது போலும் 
பல சுவாரசியங்களை கொண்டது
 அவரின் பொழிவு.

 அவரின் எழுத்தாக்கங்களின் வரிசையில் இப்போது பேசப்பட்டு கொண்டாப்படும் "சினிமா எனும் பூதம்" முதலிரண்டு பாக நூல்கள் என்பது அரிய திராட்சை கொத்துக்களைக் கொண்டு வடித்து பனிப்பாறைக்குள் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் போன்ற தகவல்களின் மது ரசம் என்பேன்."

சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
 R.P. ராஜநாயஹம்:

பிரதிக்கு:
தோட்டா கம்பெனி 
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?


"உங்க வாய தூக்கி காதுல வைங்களேன்"
தலக்கி மேல கைகள தூக்கி கைதட்டுவானே..
அந்த நடிகன் என்ன ஆனான்?

படத்துல ஆக்ட் குடுத்த எல்லாருமே ஃபேமஸாயாச்சே..

சலிக்கவே சலிக்காத செம்ம காமடி படம்.

Oct 18, 2023

கணம் The past is not ours to change


கணம் 

Time machine 

The past is not ours to change.
Che Sara Sara 

( ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் que sera sera ( Spanish Language )

( கிறிஸ்டோபர் மார்லோவ் Che sara sara 
( Italian Language). )

இளமையில் அமலா ரசிகன். 
அமலா அமலா தான்.
The one and only Amala.


அதனாலேயே 'கணம்' விரும்பி பார்க்க முடிந்தது.

Life can only be understood backwards; but it must be lived forwards.
- Kierkegaard


அமலா அமலா தான்.


Oct 16, 2023

'சினிமா எனும் பூதம்' டிவி தொடர் பற்றி சரவணன் மாணிக்கவாசகம்

சரவணன் மாணிக்கவாசகம் பதிவு:

"மதுரை அரசரடி- ஆரப்பாளையம் சாலையில், தி.மு.க மன்றத்தின் முன் இருபது பேர்கள் கூட்டமாக நின்றால், அதன் நடுவே 
தோழர் R.P. ராஜநாயஹம் இருக்கிறார் என்று அர்த்தம். 

 "அந்த சினிமா என்ன தோழரே" 
" பத்மினி சிவாஜியை லவ் பண்ணாங்களா தோழரே" என்பது போல் மக்கள் அடிமனதில் மறைத்துவைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவரவர் ரசனைக்கேற்ப பதில் கிடைக்கும்.

செரிமானம் அதிகமாகவும், கையிருப்பு குறைவாகவும் பலருக்கு இருந்து,  ஒன் பை டூ டீ குடித்த காலத்தில், 
தோழர் முப்பது வடை, முப்பது ஸ்பெஷல் டீ என்று எல்லோருக்குமாக 
ஆர்டர் கொடுப்பார்.

இலக்கியம் குறித்து நிறையவே பேசியிருக்கிறோம்.  சினிமா அல்லது மற்ற சுவாரசியமான விஷயங்கள் என்று ஆவலுடன் வருபவர்கள் ' நாளை மற்றுமொரு நாளில் கந்தன்....." என்ற பேச்சைக் கேட்டு, வணக்கத்துடன் அப்படியே நழுவும் சிரமத்தை அளிக்க வேண்டாம் என்று நாங்களிருவரும் மதுரைத் தெருக்களில் நடந்து கொண்டே உரையாடி இருக்கிறோம்.  
ஒருமுறை சினிமாவில் ரெட்டை வேடத்தை எப்படி எடுக்கிறார்கள் என்று நான் கேட்டதற்கு இவர் அளித்த விளக்கம் இன்றும் நினைவிலுள்ளது.

எண்பதுகளிலேயே ( இணையதளம் இல்லாத காலம் என்பதைத் தவிர்க்க முடியாமல் அடிக்கடி சொல்ல வேண்டியதாகிறது)  வசந்தமாளிகையில் சிவாஜியின் அம்மாவாக நடித்த நடிகை, மனோகராவில் டி.ஆர். ராஜகுமாரியின் காதலராக வரும் நடிகர் ( இவ்வேளையில் இவரது பேச்சு கிளைச்சாலையில் ராஜகுமாரியிடம் போய் வரும்.  மந்தி சிந்து கனிகளுக்கு.....  ஆண்குரங்கின் முகபாவத்தோடு வாயைத் திறந்து சிலர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்) போல சிறுவேடத்தில் வருபவர்கள் குறித்து ஒரு மணிநேரம் இவரால் சுவையாக பேசமுடியும்.

அதைக் கேட்டதால் தானோ என்னவோ, எனக்கு இவர் முரசு டிவியில் தொடர்ச்சியாக நூறாவது நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. காலையில் எழுந்தால் மனைவி காப்பி கொடுக்கவில்லை என்றால் தானே அது சம்பவம்.

 நூறாவது நிகழ்வில் பி.சுசிலா குறித்துப் பேசுகிறார்.முரசு டிவியில் 
15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
  ஒற்றைச் சதத்துடன் நிற்காது பல சதங்களை முடிக்க வாழ்த்துகிறேன்."

https://m.facebook.com/story.php?story_fbid=3698595720353867&id=100006104256328&mibextid=Nif5oz

Oct 15, 2023

R.P. ராஜநாயஹம் "P.சுசீலா" நிகழ்ச்சியில்

ப்ரியா பவானி சங்கர் தாயார் 
முரசு டிவியில் R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' தொடரில் இன்று "P.சுசீலா" நிகழ்ச்சி பார்த்து, படம் பிடித்து அனுப்பியிருக்கிறார், கீழ்க்கண்ட குறிப்புடன்.

"நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் அருமை👏🏻"

......

பால்ய நண்பன் ஜோசப் ரத்தினம் கோயம்புத்தூரில் 
"P.சுசீலா"
நிகழ்ச்சி பார்த்து 
 டிவியில் எடுத்த படத்தை அனுப்பி எழுதியிருப்பது

"கனவில் நினையாத காலம் இடை வந்து.....
 Thanks Gaby
Feeling lucky today."

......

Oct 14, 2023

வாசுதேவன் காத்தமுத்து


வாசுதேவன் காத்தமுத்து குறித்து
எண்ணங்கள் 

ராஜநாயஹத்தை 
'ஓரிரு முறை பார்த்திருக்கிறேன்' என்று ஞாபக மறதியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

1. 2001ம் ஆண்டு திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் ஆல்பர் காம்யு ஃப்ரெஞ்ச் "அந்நியன்" ஆங்கில மொழி பெயர்ப்பு, தமிழ் நேரடி மொழிபெயர்ப்பு இரண்டையும் ஒப்பிட்டு 
ராஜநாயஹம் இரண்டு மணி நேரம் பேசிய பின் வாசுதேவன் கேட்டார் " நீங்க இங்க்ளீஷ் ப்ரொஃபஸரா?"

2. வாசுதேவன் காத்தமுத்து ஜப்பானிய யசுநாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகள் இல்லம் ' மொழிபெயர்ப்பு குறுநாவல் பற்றி 
அடுத்த மாதத்தில் தமிழ் இலக்கியக் கழகத்தில் 
அருமையாக பேசியதை மறக்கவே முடியாது.

3. அதன் பிறகும் சில முறை தமிழ் இலக்கியக் கழகத்தில் சந்தித்திருக்கிறேன்.

4. 2002ல் தமிழ் இலக்கியக் கழகத்தில் R.P.ராஜநாயஹம் "ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" கட்டுரையை வாசித்த போது வாசுதேவன் வரவில்லை என்பதால் வாசுதேவனின் தில்லை நகர் ஆஃபிஸிற்கே வந்து தந்திருக்கிறேன்.

5. திருச்சியில் வாசுதேவனின் தில்லை நகர் ஆஃபிஸிற்கு அதன் பிறகும் இரு முறை அப்போது ராஜநாயஹம் வந்ததுண்டு.

ராஜநாயஹம் மறக்கவே முடியாத முக்கிய நண்பர் வாசுதேவன் காத்தமுத்து.

"ராஜநாயஹத்தை நினைக்கும் போது ஏன் கண் கலங்குகிறது?" என்ற வாசுவின் உருக்கம் நெகிழ்த்துகிறது.

.....

ராஜநாயஹம் பற்றி 

"திருச்சியில் எவ்வளவு இளமையாக பார்த்த முகம்! 
காலம் எதனையும் நிலைக்க விடுவதில்லை நினைவுகளைத் தவிர!"

-  வாசுதேவன் காத்தமுத்து

...

"என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

Oct 13, 2023

R.P. ராஜநாயஹம் யார்?


"I think you have started a new career in front of the cameras for the television channels.
 If you can also perform your experiences in front of the television cameras, you will very soon become a superstar in no time.
 Thank you 
Mark this day time and period when I say this to you."

- Natesh

"உங்கள் எழுத்தை வாசிக்கும் போது உங்கள் குரலிலேயே ஒலிப்பதை பலமுறை உணர்ந்து இருக்கிறேன். எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடாது இந்தத் திறன்."

- ஆத்மார்த்தி

"என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

பிரபலமாகாத எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட்


மாமா இசையில்
எம்.ஜி.ஆர் சரோஜா தேவி டூயட் பாடல்களில் கூட ரசமில்லாத, ஈர்ப்பில்லாத பிரபலமாகாத பாடல் இருக்கிறதே..


"இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம்?

கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் 
அது கோடை என்றாலும் குளிர்காலம்.

முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் 
வையகம் முழுதும் இருளாகும் "

கண்ணாம்பா நாகபூஷணம் தம்பதியர் எடுத்த படம் 'தாலி பாக்கியம்'

வாலி காத்திருந்த கண்களே பாட்டிலும் கூட
எழுதியிருக்கிறார்.
'கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன' 

இப்படியே இன்னும் எத்தனை பாடல்களில் இதையே எழுதியிருக்கிறாரோ?

https://youtu.be/uZgSpKOTIAA?si=2F5ADTNDc6_XPwTi

கண்மலரில்

V. நாகையாவின் பக்கத்தில் நிற்பவர்கள் 

S.N. சுந்தர், S.N.சுரேந்தர், S.N. ஷோபா.
ஒரு தாய் மக்கள். உடன் பிறந்தவர்கள்.

(கிருஷ்ணன்) பஞ்சுவின் சகோதரர் பட்டு இயக்கத்தில் வந்த 'கண்மலர்' படத்தில் மாமா மஹாதேவன் இசையில், வாலி எழுதி 
பாலமுரளி கிருஷ்ணா பாடிய "ஓதுவார், உன் பெயர் ஓதுவார்" பாடல் காட்சியில் 
உடன் பிறப்புகள் குரல்களும் பாடலில் ஒலிக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் தேவாரம். 

கண்மலரில் இன்னொரு பாடல்  ஜானகி பாடியது.  அதில் துவக்கத்தில் பாலமுரளி பாடும் கேதார் கௌள ராக தொகையறா 'அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா, உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா?' 
நான் வாய் விட்டு ரசித்து பாடும் வரிகள்.

https://youtu.be/7uzriC0UwyU?si=G-lWblkj_VrpWx9E

https://youtu.be/Jg6bZ5UWzqA?si=9Iaydu_hOpzUG15k

Oct 12, 2023

Angels in a child's sleep



காலையில் மனைவியுடன் walk போன போது எங்கள் அருகில் எட்டு வயது குழந்தை
லக்ஷிதா ஜாக்கிங், வாக்கிங். 
நான்காம் வகுப்பு படிக்கிறாள்.

" Lakshita is a very good child. It's always good for a child to walk. Why, you know?
 Angels speak to you when you go for a walk."

குழந்தை முகம் மலர்ந்து உடனே சந்தோஷமாக தலையை ஆட்டி ஆமோதித்து பெருமையுடன் சொன்னாள்: 
" I dreamed angels in my sleep."

Oct 10, 2023

தொட்ட குறை விட்ட குறை

செப்டம்பர் மாத கடைசியில் பத்து நாட்கள் கோயம்புத்தூர், திருப்பூர் சென்றிருந்த போது யாரையுமே சந்திக்கவில்லை.

திருப்பூரில் எதிர்பாராத
தற்செயல் சந்திப்பு. 2003லிருந்து 2011 வரை வேலை பார்த்த பனியன் கம்பெனி முதலாளி பார்த்தசாரதியுடன் இரண்டு நிமிடம்.

2011 ஜூலையில் நான் relieve ஆன போது வருத்தப்பட்டு சொன்னார்.
"உங்களையெல்லாம் வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைத்ததில்லை. இப்போது இப்படி சூழ்நிலை" 

பன்னிரண்டு வருடங்களுக்கு பின்  மீண்டும் பார்த்தேன். யதேச்சையான நிகழ்வு.


பார்த்தசாரதியிடம் வேலை பார்த்த போது பல விதத்தில் உதவிகரமாக இருந்திருக்கிறேன்.

மெஷின் இம்போர்ட் செய்தது சம்பந்தமாக நீண்ட காலமாக வராமலிருந்த இருபத்தைந்து லட்சம் ரூபாய் தொகையை தூத்துக்குடி கஸ்டம்ஸில் இருந்து நான் தான் மீட்டுக் கொடுத்தேன்.

அபாண்டமான பொய் வழக்கு ஒன்றில் சிக்கிய போது சேலத்தில் அவருக்கு பிடி வாரண்ட் போட்ட போது அதிலிருந்து மீள உதவினேன்.

ஹை கோர்ட்டில் பார்த்தசாரதி மீது போடப்பட்ட பொய் வழக்கு விஷயமாக அப்போது 
 பல தடவைகள் சென்னை சென்றிருக்கிறேன்.

லோக் அதாலத்தில்
ஒரு முறை நீதியரசர் மலைசுப்ரமண்யம் முன் பார்த்தசாரதி சார்பில் ஆஜராகியிருக்கிறேன்.
மறுமுறை லோக் அதாலத்தில்
நீதியரசர்கள் பாஷா, ரவிராஜ் பாண்டியன், தினகரன் ஆகிய மூவரிடமும் நானே வாதாடியிருக்கிறேன்.

கேஸ் பார்த்தசாரதிக்கு சாதகமாக தீர்ப்பு வர அத்தனை முயற்சிகளையும் செய்தேன்.

2009 ராஜநாயஹம் பதிவிலிருந்து கீழே :

நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது. அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது.

 அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்

08-07-2006 அன்று என் எம்.டி சார்பில் 

ஆஜர் ஆக நான் போயிருந்தேன். 

அங்கே நீதியரசர்கள் பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய ஜஸ்டிஸ் தினகரனும் இருந்தார். 

எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் 
பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார். 

கேஸ் அபாண்டமான பொய் கேஸ்.

இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார்.

 தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம்.

 பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார். அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார். ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார்.

அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம்.'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார். 

நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம். தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன். 

மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது. 

வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம். 

அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது 

தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள். 

அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ்.அசோக் குமார் (கலைஞர் கருணாநிதி நள்ளிரவு கைதில் 

போலீசை கிண்டியெடுத்த 

அதே நீதிபதி தான் )அவர்கள்

 தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.

.... 

Oct 9, 2023

மக்களே போல்வர்

 
Lady Macbeth : "It is the eye 
of the childhood
 that fears a painted devil" 

A ruffian says "You fear, there fore I am" 

கவி ஒரு குழந்தை. 

'கனவின் மனிதன்' தலைப்பிடப்பட்ட இந்த கவிதை 
குழம்பிய ஞானக்கூத்தன் 

"ஒருவனைக் கனவில் கண்டேன் 
உதடுகள் பற்கள் கண்கள் 
தலைமயிர் நகங்கள் கை கால் 
அனைத்துமே மனிதன் போல 
இருந்திடும் அவனைக் கண்டேன் 
கனவிலும் மனிதன் போலத்
தோன்றினால் மனிதன் தானா? "

வைத்தீஸ்வரன் கவிதையில் கடவுளின் விசாரம் 
' மரங்களை நம்பி 
பறவைகளைப் படைத்தேன்... 
அப்போது மனிதர்களை யோசிக்கவில்லை!'

Why be a  man when you can be a success? 
என்று திகைக்க வைக்கும்
 பெர்டோல்ட் ப்ரெக்ட் கேள்வி. 
தோற்பவன் தான் மனிதன்? 
அல்லது ஜெயிக்க முடிகிற போது
 மனிதத்தையும் கைவிடாமல்
இருக்க வேண்டியதன் அவசியம். 

மனிதன் பற்றி ப்ரெக்ட். 
" மனிதன் ரொம்ப உபயோகமானவன். 
அவனால் பறக்க முடியும் 
கொலை செய்யக்கூடியவன் 
ஆனால் அவன் ஒரு குறையுள்ளவன். 
அவனால் சிந்திக்க முடியும்."

திரும்பவும் ஷேக்ஸ்பியர் " There is no art to find 
the mind's construction in the face" 

Looks can be deceiving. 
மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா 
- கண்ணதாசன் ஆதங்கம். 

குறள் - மக்களே போல்வர் கயவர் 

What power shapes a human's way. 
Disgrace and Discomfort.

Oct 3, 2023

சினிமா எனும் பூதம் நூறாவது எபிசோட்


100th Episode

Century 
 A landmark score


 03.10. 2023 செவ்வாய் கிழமை 

"சினிமா எனும் பூதம்"
தொடரில்

நூறாவது எபிசோட் ஷுட்டிங்

கலைஞர் டிவியில் 


.......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.