Share

Nov 29, 2021

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி பரமசிவம் எஸ்

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி
பரமசிவம் எஸ்.

"நீங்கள் எனது ஆசான்...
துயரம் என்னை நெருங்கும்போதெல்லாம்
 உங்களின் கைகளே 
என்னைக் காத்து நிற்பது போலப்  பலமுறை உணர்ந்திருக்கிறேன்..."

Nov 28, 2021

Concentration and Distraction

Concentration and Distraction

குழந்தையாய் இருந்த காலத்தில் ஆரம்பித்து வாழ்வின் பள்ளிப் பருவம், கல்லூரி படிப்பு, பின் பிசினஸ், வேலை என்று 
எந்த விஷயத்திலும் எப்போதும் concentration என்பது சவாலாக, சிரமம் தருவதாக இருந்திருக்கிறது. 
வெகு இயல்பாக கவனச்சிதறல்.

 அவ்வப்போது  distraction. 
சூழலுக்கு,  சற்றும் பொருந்தாத நிர்ப்பந்தங்களை மீறிய, வேறு ஈடுபாடுகள் கொண்ட distraction.
Truancy.
'A truant disposition' என்பார் ஷேக்ஸ்பியர். 
'Let Rome in Tiber melt' - Mark Antony.
'Melt Egypt into Nyle' - Cleopatra.

Concentration குறைவதன் 
அர்த்தம் Irresponsibility.
Concentration தான் prudence என்ற மிரட்டல் எப்போதும் இருந்திருக்கிறது. 
Attentive ness -கவனம், செறிவு.

Distraction குறியீடு தான் 'நீரோ பிடில்'.

Distraction அந்த நேரத்தில்  பற்பல சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தாலும் 
Blessing in disguise  என்ற பலனை தந்திருக்கிறது.

இன்று என் ஆளுமையை இந்த distraction தான் மேம்படுத்தி 
பெரும் உலகை விரித்துக் காட்டியிருப்பதாக தெளிவாகத் தெரிகிறது.
 Playfulness is heaven.

காதல், சுக சௌகரியம்,  இலக்கியம், இசை, திரைப்படம், ஓவியம் என பெரும் புதையலை   distraction மூலம் தான் கண்டடைந்திருக்கிறேன்.

ஜூலியோ கொர்த்தஸார் சொன்னது வேத வாக்கு.

"You have to allow yourself to be distracted when you are unable to concentrate.
All profound distraction opens 
certain doors."

R.P. ராஜநாயஹம் - பழனிவேல் வெங்கட் பார்வையில்


R.P.ராஜநாயஹம் யார்?

பழனிவேல் வெங்கட் பார்வையில் :

ஆங்கிலமொழித் தேர்ச்சியின் பயனாக அயல் பிரதேச சிறந்த  கலை, இலக்கியங்களை வாசிப்பு அனுபவமாக பெறுகின்ற வாய்ப்பு கிட்டியது ஒரு சிறப்பு. 

அதே போல் தமிழ் இலக்கிய சூழலில் நவீனத்துவம் வரை ஆழ்ந்ததொரு  ரசனையும்,பயிற்சியும் பெற்றிருப்பதும் 
கூடுதல் சிறப்பு.

ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் அங்கீகரிப்பும் நட்பும் உங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு வரமே.

இது எல்லாவற்றையும் தாண்டி கர்நாடக,இந்துஸ்தானி போன்ற இசையை ஆழ்ந்த ஈடுபாட்டோடு மனம் லயித்துப்போய் கிறங்கிய அனுபவம் தங்களைப்போன்ற சிலருக்கே வாய்க்கும்.

வாழ்க்கையின் நானாவித அனுபவங்களையும் எழுத்தில் சுவைபட கொண்டுவருவது எல்லோருக்கும் 
சாத்தியம் அல்ல.

தங்களை இனிமையானவராக உணரும்  ஏராளமான
 இதயங்கள் உண்டு. 
எழுத்தின் வழி உறவுகள் தொடரட்டும்.

Nov 25, 2021

A womanizer

The Imagination as a womanizer

'பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்'

'காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று ..'

'ராஜா யுவராஜா, நாள் தோறும் புது ரோஜா'

'அடி ராஜாத்தி வாருங்கடி,
 புதிய ராஜாவை பாருங்கடி'

சிவாஜி 'இளம் வாலிப விடன்'(ஸ்த்ரீ லோலன்) பாத்திரத்தை
 கால காலமாக, வயசான காலத்திலும், பேரன் பேத்தி எல்லாம் பார்த்த பிறகும் செய்திருக்கிறார்.

'இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்
வாலிபம்பம்பம் சாகசம்சம்சம்
லீலைகள்கள்கள் ஆனந்தம் தம்தம்'

எம்.ஜி.ஆர் இப்படி ஷோக்கு மைனர் ரோல் ('ரொம்ப கவனமா') செஞ்சதேயில்ல. 
என்னா வெவரம்!

இப்படி பாட்டு சீனல்லாம் பாத்துட்டு, தண்ணிய ஊத்திக்கிட்டு, மப்புல
 காசு குடுத்து பொம்பள மேல உளுந்து எந்திரிச்சு, 
சிகரெட்ட பத்த வச்சி இளுத்து
'டேய் நானெல்லாம் 
பெரிய 'ஜாரி ஜோக்கர்'டா, 
கெட்ட 'மச காளிடா'ன்னு 
கத உட்டுக்கிட்டு 
மெதப்புல எவ்ளவ் பய
திரிஞ்சானுக, 
இப்பயும் தான் இந்த கனவிலயே 
மூள தலக்கி வெளிய தொங்குறவன்லாம் கூட திரியறானுங்க.
வெட்டி நெனப்பு வெண்ண வெட்டி சிப்பாயிங்க.

Don't fall for a dog who has eyes 
for every bitchனு சொல்லத் தேவையேயில்ல.
இப்படி கொம்பு தாழனுங்கள பொண்ணுங்க சட்டயே பண்ணாதுங்க. 

ஆனா நட்டுத்தாழனுக இத ஒத்துக்கவே மாட்டானுக.

Nov 21, 2021

அண்டி உறப்பு ராஜநாயஹம்

பாரதி மணி கொடுத்த பட்டம் -

'அண்டி உறப்பு 'ராஜநாயஹம்!

சில உண்மைகளையும், 
தன் மனதில் இருப்பதை 
வர்ணம் பூசாது, 
வெளியே சொல்லவும், 
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’,                        மலையாளத்தில் ‘அண்டி உறப்பு'

‘அண்டி உறப்பு’ உங்களிடம் நிறையவே இருக்கிறது, ராஜநாயஹம்! பாராட்டுக்கள்!

..

2008

Nov 20, 2021

தஞ்சை ராமமூர்த்தி

1983வாக்கில் மதுரை ரீகல் தியேட்டரில் இலங்கை தமிழர்கள் ஆதரவு கூட்டம் ஒன்று.
பழ.நெடுமாறன், இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி, நிலக்கோட்டை பொன்னம்மாள், இவர்களுடன் தஞ்சை ராமமூர்த்தி கலந்து கொண்ட கூட்டம்.
அமிர்தலிங்கத்தின் மனைவி அன்று அந்த கூட்டத்தில் புலிகள் ஆதரவு பாடல் கூட மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பாடினார்.
 காசி ஆனந்தன் பாடலாக இருக்கும். அப்போது அவருக்கு புலிகள் தான் தன் கணவரை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் 
எப்படி தெரியும்?

பொன்னம்மாள் நெடுமாறனை தம்பி, தம்பி என்று உருகினார்.
அந்த கூட்டத்தில் தஞ்சை ராமமூர்த்தி தனித்த பெரும் ஆளுமையாக தெரிந்தார்.மிக அழகாக, தெளிவாக பேசினார். 
தஞ்சை ராமமூர்த்தி ஹேர்ஸ்டைல்          என் தகப்பனார் போல நேர் உச்சியில் வகிடெடுத்து சீவியிருந்தார்.
அப்பா போலவே நல்ல சிவப்பு. 

மேடைப் பேச்சில் கண்ணியம், நிதானம் வித்தியாசமான விஷயம். ஏனென்றால் ஆவேசமான அரசியல் சூழலில், கொந்தளிப்பான பார்வையாளர்களிடம்
 அமெரிக்கையாக, மென்மையாக பேசி அவரால் கைதட்டல் வாங்க முடிந்தது. 

அவர் அரசியல் காமராஜரின் தொண்டராக ஆரம்பித்து காமராஜர் பார்க்க இந்திரா காங்கிரஸில் இணைந்து பின்னர் காமராஜர் மரணத்திற்குப் பின்னர் இந்திரா காங்கிரஸில் மூப்பணாருடன் ஒத்துப்போக முடியாமல் வெளியேறி,
இலங்கை பிரச்சினையில் பழ.நெடுமாறனோடு, பின் வி.பி.சிங் ஜனதா தளம், கடைசி காலத்தில் வைகோவை சிலாகித்துக்கொண்டு ..

நல்ல செயல் திறன் கொண்ட வழக்கறிஞர். தன் பரபரப்பான அரசியல் செயல்பாடுகளுக்கு சம்பந்தமேயில்லாமல் இலக்கிய ஆர்வலராக, எழுத்தாளராக "வள்ளலார்" எனும் நூலாசிரியராக.

காங்கிரஸில் தான் திண்டிவனம், வாழப்பாடி என்று ராமமூர்த்திகள் பரிமளித்தார்கள். 
தஞ்சை ராமமூர்த்தி மங்கிப்போன நிலை.

சிதைந்த அரசியல்வாதியாக மறைந்திருக்கிற பேராள்மை.

அரசியலில் தோற்றுப்போன கண்ணியமான நேர்மையாளர்களில் ஒருவர்.

Consistency is the hallmark of mediocrity.

Nov 17, 2021

'சினிமா எனும் பூதம்' தொட்டு பா.அசோக்

'சினிமா எனும் பூதம்' தொட்டு 
பா.அசோக் 

"மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே 
அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம், 
 சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... 
மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... 

ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  
ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  
எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  
சாதரணமாக, 
நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். 
நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  
அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்...

 தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..

ஓவியமா.. இதை பார்,  

அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, 
பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,...
 ஊரே வியக்கும் சாருவுக்கு... 
சாரு இவரை கண்டு வியப்பார்...

கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 

எவ்வளவோ உண்டு சொல்ல...

காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... 
ஆனால் அந்த வைரங்கள் 
காலத்தை வென்று நிற்கும்... 
அப்படி ஒரு வைரம் தான் 
என் ஞானதகப்பன், 

R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்"

Nov 16, 2021

புரியல

உரையாடும் போது, 
நேரடியான பேச்சிலோ,
மொபைலிலோ அலோவானாலும், அடிக்கடி இருவரில் ஒருவர் பேச்சுக்கிடையில் 'புரியல' என்று நிறுத்த, அடுத்தவர் 
தான் சொன்னதை
 மீண்டும் புரியும்படி சொல்ல
 தவித்து தக்காளி
 விக்க வேண்டியிருக்கிறது.

நீண்ட கால பழக்க வழக்கத்திலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டதாக முடிவு செய்வதெல்லாம் சாத்தியமாவதில்லை.
ஆண்டாண்டு காலமாக பழகிய ஒருவனை  நெருங்கிய போது தெரிந்த விஷயம், அவன் மிக மோசமான Sadist.

வடிவேலு புரியாமல் திகைத்துப் போய் அனுகூல சத்ருக்களான
 தாடி பாலாஜியையும், 
போண்டா மணியையும் ஏற இறங்க உற்றுப் பார்த்து கேட்ட
 'கெட்ட' வார்த்தைகள் " அதென்னடா, 
எங்க போனாலும் 
சிக்கல் எனக்குத் தான் வருது.
நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க."

'புரியாது, புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது' கவிஞர் சுரதாவின் வரிகள். சுப்புரத்தின தாசன்.
P.B.ஸ்ரீநிவாஸ் குரல்வளத்தில்.

The eternal mystery of the world is 
its comprehensibility.

'ஒன்னுமே புரியல உலகத்தில, 
என்னமோ நடக்குது, 
மர்மமா இருக்குது' 
- சந்திரபாபு Base voice.

மழை வெள்ளப் பாதிப்பு.

எழுத்தும் புரிதல் வேண்டி நிற்கிறது.

“Only one man ever understood me…
 And he didn’t understand me”
ஹெகல் இப்படி சொன்னான்.                                புரிதலைப் பற்றி
 இதை விட சொல்ல 
வேறு என்ன இருக்கிறது?
...

காதலிக்க நேரமில்லை காமெடி சமாச்சாரங்கள்

ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை காமெடி எந்த அளவுக்கு பிரபலம்?
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா 
செம ஹிட்.

இதனால் அடுத்த வருடம் வெண்ணிற ஆடையிலும் இதே பாணியில் காமெடி காட்சிகள்.

கோபு தான் இங்கேயும் காமெடி வசனங்கள்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அப்பா பிள்ளை பாலையா - நாகேஷ்.

வெண்ணிற ஆடையில் 
அப்பா பிள்ளை மாலியும் 
வெண்ணிற ஆடை மூர்த்தியும்.

இதிலேயே இந்த பட காமெடி 
படு தோல்வி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காதலிக்க நேரமில்லையில் 
ஓஹோ ப்ரடக்ஸன் செல்லப்பா படம்
எடுக்கிற மிதப்பு.

வெண்ணிற ஆடையில்
" மூர்த்தி தொழிற்சாலை" 
பெரிய பிரமாண்ட தொழிற்சாலை நிறுவுகிற கனவுடன் மூர்த்தி.
படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பெயரே மூர்த்தி தான்.

பிசுபிசுத்துப் போன சப்பை காமெடி.

 இந்த வெண்ணிற ஆடை படம் 
வெளி வந்த நான்கு மாதங்களுக்கு பிறகு எல்.வி. பிரசாத் 'இதய கமலம்' ரிலீஸ்.

சூப்பர் ஹிட் பாடல்கள்.

இந்த பட காமெடியனை (ஆரணி ராமசாமி ? இதயக் கமலம் உதவி இயக்குநர்) எங்கே எல்.வி. பிரசாத்  கண்டு பிடித்திருப்பார், தெரியவில்லை. 
காமெடி செய்கிறேன் பார் என்று  பெருமையாக தானே சிரித்த மூஞ்சியுடன் காமெடியன்.

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் தான் கதாநாயகன்.
 பின்னாளில் இவருடைய மனைவியான ஷீலாவுக்கு 
படத்தில் ஜோடி அந்த இளிச்ச மூஞ்சி காமெடியன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த ஜயண்ட் டி.எஸ். பாலையா                       இதய கமலத்தில்  காமெடியனுக்கு மாமா.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷுக்கு மாமனாராய் நடித்த பிரபாகர் இதில் 
'சின்ன புத்தி சிவா'வாக.

எல்.வி.பிரசாத்துக்கு எல்லோரையும் ரசித்து சிரிக்கச் செய்த 'ஸ்ரீதர் பட பாலையாவுக்கு  நாகேஷ் பேய் கதை சொல்கிற காமெடி சீன்' பிடித்துப் போய் இதய கமலத்திலும் 
பாலையாவுக்கு காமெடியன் பேய்க்கதை சொல்லுகிற காமெடியை வைத்து விட்டார். 

இயக்குநர் ஸ்ரீகாந்த் என்று டைட்டில்.
ஆரூர்தாஸ் வசனம்.


காதலிக்க நேரமில்லையில் 
பேய் கதை  ஒரே சீன். 
இதய கமலத்தில் பேய் சமாச்சாரம் ரெண்டு சீன். 

பாலையா இருந்து என்ன பிரயோஜனம்? நாகேஷ் இல்லையே.
 நாகேஷே ஒரு வேளை இதய கமலத்தில் வந்து பேய் காமெடி செய்திருந்தாலும் repititionல் நல்லாவா இருக்கும்?

..

Nov 15, 2021

Self standing

Self standing

'என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
நான் சினிமாவுக்கு என்னை கூட்டிக் கொண்டு போவேன்,
என்னை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துக் கொண்டு போவேன்.என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்' - மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி என்ற பெ.கோ.சுந்தர்ராஜன் இப்படி ஆரம்பித்து ஒரு கட்டுரை சந்தோசமா  எழுதியதுண்டு.

இதுவே சலிப்பா நெனச்சிட்டா?

அடுத்த பேரா அது தான்.

"எனக்கு தெனமும் நானே  செய்ய வேண்டியிருக்கிற மலயப் பொரட்ற வேலயெல்லாம் வரிச கட்டி நிக்றத நெனச்சா ..
ராத்ரி நானே தான் தூங்கி காலயில எல்லா நாள்ளயிம் எந்திரிச்சு, நானே பல்ல வெளக்கி, காலக் கடன தலயெழுத்தேன்னு மூக்க பிடிச்சி முடிச்சு, அப்றம் நானே தான்
 அழுக்க தேச்சி குளிக்க வேண்டியிருக்கு. தலய துவட்டி..
 அன்னாடம் கொஞ்ச பாடா? சங்கிலியா தொடர்ர பிரச்னங்க..
The intray is never finished.

Monotonous, tedious and repetitious routine.

Fatigue overtakes me."

......

Rekha appreciates R.P.Rajanayahem

Rekha appreciates R.P. Rajanayahem

Rekha Rekha :

"உங்கள் எழுத்தில் அருமையான திரைக்கதை உள்ளது.
 திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி.
தேடிப் படிக்க தோன்றும் எழுத்து."

https://m.facebook.com/story.php?story_fbid=3190596701153774&id=100006104256328

Nov 13, 2021

This week in Poetry' - Professor R.NeduMaran - Podcast

Professor R.Nedumaran's 
"This Week in Poetry"
Podcast

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் 
அவருடைய மாணவனாக  கேட்ட அற்புதமான குரல்
 இன்றும் அப்படியே இளமையாக.
வெகுநேரம் செயலோயச் 
செய்து விட்ட விசேஷ குரல்.

Powerful Magical voice in Podcast!

  

 "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன்.
மூன்று திரை படங்களிலும் 
தலையை காட்டி இருக்கிறார்.

நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். 

அமெரிக்க ஆங்கிலம்!
 தமிழில் முழங்கும் போது
 இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது. 

உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்.

Listen 

Professor R.Nedumaran's popular Audio
"This Week in Poetry" - A.K.Ramanujam

Nov 12, 2021

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram appreciates R.P.Rajanayahem

Prabhu Ram :
 Not many know how to live life
 "this moment".
You are blessed Sir!!
One can remember these things,
 only when they lived that way!!
Refreshing to read your posts!

https://m.facebook.com/story.php?story_fbid=2563810633832387&id=100006104256328

Nov 10, 2021

R.P.ராஜநாயஹம்

Devendhira Poopathy Bhaskarasethupathy :
R.P.Rajanayahem sir,
You are an archive of experiences and events..
You are having extraordinary memories of the past and having an wonderful talent to connect with present sir.

Janakiraman Nappalur :
அற்புதமான மனிதர் சார் நீங்க.
என்ன மாதிரியான வாழ்வு, அனுபவங்கள்....
அதை அப்படியே படிப்பவருக்கும் கடத்தி விடும் ரசவாதம். இந்த லைக், ஷேர், கமெண்ட்லாம் சின்னப்பசங்க விஷயம்.
உங்களை புரிஞ்சுகிட்டவங்க இப்படி உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க. 

Ram Subu  :
உங்கள் எழுத்தில் அனுபவ செறிவு உள்ளது சார். வெறும் கேள்வி ஞானத்தில் மட்டுமே எழுதினால் ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது.
உங்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. உங்களை ஃபேஸ்புக்கில்
சுமார் ஒரு மாதமாகத் தான் ஃபாலோ செய்கிறேன். உங்கள் எழுத்தில் அருமையான Dialogue form உள்ளது.

Nov 7, 2021

வீட்டுக்கு வீடு வாசப்படி

மதுரையில் 
அப்ப ஹார்வி நகர்ல வீடு.
ஹார்வி நகரிலிருந்து வெளிய வந்து  ஏ.ஏ.ரோட்டுல  திரும்புறேன்.

எதிரேயுள்ள 
ஒரு வீட்டுல வெராண்டாவில 
பாஸ்கர் ( நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இளைய சகோதரர்.) பாண்டியன் ( பாஸ்கரின் மூத்த சகோதரர் டி.எஸ்.பி கதிர் வேலு வின் மகன் ) நிற்பதைப் பார்த்தவுடன்
ரொம்ப சந்தோஷமா  
நான் " என்னண்ணே, பாஸ்கர்ணே, பாண்டி,  இங்கே ? " 

பாண்டியன் " அண்ணே!
 சித்தப்பா, இங்க பாருங்க கேபி."

பாஸ்கர் " தம்பி, எப்டியிருக்கீங்க " 

அவர்களிடம் "வாங்க எங்க வீட்டுக்கு"

பாண்டி " இங்க இந்த வீட்ல ஒரு பஞ்சாயத்து "

அந்த வீட்டில் எனக்கு தெரிந்தவர் கிடையாது. ஒரு வக்கீல் வீடு. தினமும் போகிற வருகிற பாதை.

பாஸ்கர் அந்த வீட்டிற்குள் உள்ளே பார்த்து  "அவர எங்க, ஒடனே நாங்க பாத்தாகனும்"

பாஸ்கர், பாண்டியன் இருவரும் அந்த வீட்டின் விருந்தினர்களாக வரவில்லை. சொல்லப் போனால் சிக்கல். 

நாங்கள் பல வருடங்களுக்குப் பின்னர் இப்படி தற்செயலாக சந்தித்துக் கொண்ட விஷயமானது 
ஒரு தர்ம சங்கடம். 
Embarassing situation.

 அந்த வீட்டில் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில். பெண்கள் இவர்கள் சொல்வதை சத்தம் போட்டு மறுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த குடும்பத்தில் இருந்து வெளி நாடு போன ஒருவரிடம் அங்கேயிருந்த யாரோ பாஸ்கரிடம் எதையோ கொடுக்கச் சொல்லி கொடுத்தனுப்பியிருக்கிறார். இந்த வக்கீல் குடும்பம் அதை பாஸ்கரிடம் கொடுக்காமல் மறைத்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.

அந்த வீட்டில் நின்று கொண்டிருந்த பாஸ்கரும், கதிர் வேலு டி.எஸ். பியின் மகன் பாண்டியனும் என்னோடு 
கல கலப்பாக  பேச முடியாத இறுக்கமான அபத்த சூழல். 

ஒரு கால் மணி நேரம் அவர்களோடு நெருப்பில் நிற்பது போல்   இருந்த பின் அன்று நான் விடை பெற வேண்டியிருந்தது. 

பாஸ்கர் மறைந்து விட்டார். 

மூன்று வருடங்களுக்கு முன் ட்ராட்ஸ்கி மருதுவின் தங்கை மகன் திருமணம் சென்னையில் நடந்த  போது கூட பாண்டியனை நான் சந்திக்க வாய்க்கவில்லை. 

மறைந்த கதிர்வேலுவின் குடும்பத்தாரை மருதுவின் தங்கை 
காட்டி அறிமுகப் படுத்தினார்.
பாண்டியன் அந்த திருமணத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது.

ட்ராட்ஸ்கி மருது, திலகர் மருது, போஸ் மருது கூட தங்கை மகன் திருமணத்திற்கு வரவில்லை.
வீட்டுக்கு வீடு வாசப்படி.

பின்னர் கூத்துப்பட்டறை போர்ட் மீட்டிங் கலந்து கொள்ள ட்ராட்ஸ்கி மருது வந்திருந்த போது 
நான் "என்னண்ணே?" 
ஓவியர் மருது " அதான், எங்களுக்குப்
பதிலா நீ தங்கச்சி மகன் கல்யாணத்துக்கு போயிட்டியே!"

....