Share

Oct 24, 2020

மனம் ஒரு குரங்கு

 சுக துக்கங்களில் பெரும்பான்மை வேண்டாதவை தான். 


பல வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்ட விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. 

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் சிவில் என்ஜினீயரிங் முதலாமாண்டு மாணவி. 

படிக்க முடியாததால் துப்பட்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். விவசாயக் கூலி தொழிலாளியின் மகள். 

அவள் பெயர் தைரிய லட்சுமி. 


அண்ணா பல்கலை என்றவுடன் அண்ணா சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. 

" நான் சென்னையில் இருந்து செட்டி நாட்டுக்குச் செல்கிறேன். சென்னையில் வீடுகள் இல்லா மனிதர்கள். செட்டி நாட்டிலே மனிதர்கள்"

 இல்லாத வீடுகள். 


இப்போது ஆரோக்கியமான நாகரீக அரசியல் பார்க்க முடிகிறது. 

எடப்பாடி அம்மா இறப்புக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதெல்லாம்

நடக்காத விஷயம். 


மேற்கு வங்க மாநிலம் பற்றி கேள்விப்பட்ட விஷயம். 

மார்க்சிஸ்ட் கட்சியினருடன் திருமண உறவு கூடாது. அவர்களின் உறவினர்களைக் கூட திருமணம் செய்யக் கூடாது என்று தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உத்தரவிட்டிருந்ததாம். 

திரிணாமுல் தொண்டர்கள் மார்க்சிஸ்ட் தொண்டர்களுடன் சேரக்கூடாது. அருகில் அமரக்கூடாது. டீக்கடைகளில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால் கூட அவர்களுடன் பேசக்கூடாது என்று கட்சி கட்டுப்பாடு இருந்திருக்கிறது. 

இன்று அநேகமாக பி. ஜே. பி குறித்தும் 

ஒரு வேளை மம்தா இப்படியே உத்தரவிட்டிருக்கலாம். 


இன்னொரு அபத்தம் ஒன்று சம்பந்தமேயில்லாமல் நினைவுக்கு வருகிறது. 

ச்சே மனம் ஒரு குரங்கு. 


கோவை துடியலூர் ஒட்டி பூச்சியூர்  நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே குறிப்பிட்ட சமுதாய குல தெய்வங்கள். தொண்டம்மாள், மகாலட்சுமி, வேட்டக்கார சாமின்னு.. 

சிவராத்திரியில் விடிய விடிய திருவிழா நடக்கும். கோவில் பூசாரி முள் செருப்பு அணிந்து நடந்து வருவார். பெண் பக்தர்கள் தரையில் படுத்துக் கொள்வார்கள். அவர்கள் மீது பூசாரி முள் செருப்புடன் நடிப்பாராமே. 


மக்கள் பிரார்த்தனை என்பது begging தான் என்பார் பெர்னாண்டஸ் ஷா. 

அதை விட மோசம். 


Enough Sorrow.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.