”தே.மு.தி.க கட்சிய கூட்டணியில சேர்க்க திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பிஜேபி எல்லா கட்சியுமே போட்டி போடுவாங்க!”
2010ல் நான் சொன்னது.’இங்கே நிறைய ஸ்டீபனோக்கள்’ என்ற பதிவில். கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன். இன்றும் நான் சொன்ன வார்த்தைகள் சாசுவத நிலையில் தான்.
இன்றும் 2019ல் அதை அரசியல் கட்சிகள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். ’உடல் நலம் விசாரிப்பு மத்தாப்பூ’
'Look like the innocent flower,இன்றும் 2019ல் அதை அரசியல் கட்சிகள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். ’உடல் நலம் விசாரிப்பு மத்தாப்பூ’
But be a serpent under it.'
- Shakespeare in Macbeth
”தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..” - இப்படி இந்த வருட ஜனவரி மாதம் ‘விஜய்காந்த்’ பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
கண்ணாமூச்சி இந்த பாராளுமன்ற கூட்டணி விஷயத்திலும் தொடர்ந்திருக்கிறது.

’துரைமுருகன் தான் தே.மு.தி.க மூக்கை அறுத்து விட்டாரே’ என்ற பீற்றல் கேலிக்குரியது.ச்சீ இந்த பழம் புளிக்கும் முக சுளிப்பு.
ஸ்டாலின் தேமுதிக தலைவர் வீட்டுக்கு போனதை, நல்ல பதில் வரும் என்று திமுக காத்திருந்ததை சுலபமாக புறம் தள்ளும் Selective Amnesia.
ஸ்டாலின் தேமுதிக தலைவர் வீட்டுக்கு போனதை, நல்ல பதில் வரும் என்று திமுக காத்திருந்ததை சுலபமாக புறம் தள்ளும் Selective Amnesia.
அதிமுக பாஜக கூட்டணி கதவு தேமுதிக இன்னும் சாத்தப்படவில்லை. (இங்கே எழுதும்போது பா.ம.க பெயர் விடுபட்டது பிரக்ஞைபூர்வமானது தான்.மறதியல்ல.)
தே.மு.தி.கவுக்கு திரி சங்கு நிலை இப்போதும் கிடையாது.
அதிமுக மன்னார்குடி குடும்பத்தில் இருந்து விடுதலை என்பது சரி. ஜெயலலிதா மரணத்திற்கு முன் நினைத்தே பார்த்திருக்க முடியாத விஷயம் தான். அதற்காக மீதியெல்லாம் சரி என்று ஏற்க முடியுமா?
சட்டியில் இருப்பது தான் அகப்பையில். ஸ்டாலின் கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.