காலத்தின் பெருந்துயர நிகழ்வுகள் வெளிச்சப்படுத்தப்படும்போது
நொறுங்கிப்போன இதயம் எந்த நிவாரண மருந்துமின்றி தான் ஸ்தம்பித்துப்போய் விடுகிறது.
சமூக பொது புத்தி வலைத்தளம், பத்திரிக்கை, தொலைக்காட்சி பொங்கி சீறும் போது ஒதுக்கமாக
இருப்பது அறம் சம்பந்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் தர்ம அடி கொடுக்கலாம்.
இந்த சமீபத்திய பொள்ளாச்சி நிகழ்வில் புகார் கொடுத்த வீராங்கனை
பற்றிய பெயர், குடும்ப விவரங்கள் காவல் துறையால் பகீரங்கப்படுத்தப்பட்டதென்பதும், அரசாணையிலும் கூட அச்சிடப்பட்டிருப்பதும் தான் உச்ச பட்ச துச்சாதனம்.
கொடுமையான அந்த அரக்கச்செயல்களையும் விட கொடூரமான துச்சாதனம்
இது தான். நிர்பய துச்சாதனம்.
இந்த துச்சாதனத்திற்கு என்ன தண்டனை? இதற்கு பிராயச்சித்தம் வேண்டாமா?
டெல்லி நிர்பயா பிரச்னை தமிழக காவல் துறைக்கும், அரசாணை வெளியிட்டிருப்பவர்களுக்கும்
தெரிந்திருக்கவில்லை. பொது அறிவு இல்லையா? இது அடிப்படை அறிவு கூட இல்லையா?
அந்தப் பெண் பற்றிய விவரங்கள் பகீரங்கப்படுத்தப்பட்டதே அவளுக்கு
மட்டுமல்லாமல் மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்குமான தெளிவான மிரட்டல். புகார் கொடுத்த
பெண் உடனே சல்லித்தனத்தால் பாதிக்கப்பட்ட செய்தியையும் கவனிக்கிறோம். காவல் துறையில்
புகார் கொடுப்பவர்கள் காயப்படுத்தப்படுவார்கள் என்பதும் அயோக்கியத்தனம்.
காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஏன் இப்படி அந்த பெண்ணின் பெயர்,
குடும்ப விபரங்களை வெளியிட்டீர்கள் என்ற கேள்விக்கு அவரது ஒற்றை வரி பதில்: ’தவறு தான்’
ம்ஹும் ..ச்சே…
………….
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.