Share

Aug 26, 2017

வீடு பேறு


Present fears are less than horrible imaginings.
Come what may, Time and the hour runs through the roughest day.
- Macbeth


வீடு தேடுதல் படலம் முடிந்து வீடு மாற்றும் நேரம் இது. Shifting itself is a nightmare.
இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்து குடியேறிய வீட்டில் இருந்து பத்தொன்பது நாட்களில் வேறு வீடு மாற்ற வேண்டியிருந்த துர்பாக்கியம் நேர்ந்தது. இப்போது மீண்டும் வேறு வீடு.
ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடி போகிறேன்.

வீடு தேடிய போது தெரிய வருகிற விஷயம். பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுகிற நிர்வாகம் பெண்கள் கையில். Women house owners.எல்லோரும் லேடி மாக்பெத்தின் பேராசையுடன். A  Lady can never be a Gentleman.


Property is theft - மார்க்ஸ் வார்த்தைகள்.

பதற்றத்துடன் கேட்கிறார்கள். “ நீங்கள் இந்து தானே?”

வாடகைக்கு குடியிருப்பவர்களை அடிமைப்படுத்தி பிழியும்படியான, நரக வேதனைக்குட்படுத்தும் சண்டித்தனங்கள்.

இருக்கிறதிலே ஈசியான விஷயம் - Violence and Anger.


No more laughters. Prepare for tears.


”நான் என்ன தெய்வமா? யானையைப் ப்ராக்கெட்டில் போட்டு அஸ்வத்தாமாவின் உயிர் போய் விட்டது என்று ஜகப்புரட்டு பண்ண? சாதாரண மனிதன.” தி.ஜானகிராமன் “ போர்ஷன் காலி” கதையில்.



காலோ ஹய்யம் நிரவதி: விபுலாச ப்ருத்வி.

........................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2017/06/blog-post_19.html



Aug 24, 2017

கவி சுகம் ஒன்று, நாகேஷ் - சுருளி சுவை ஒன்று



ஷங்கர் ராமசுப்ரமணியன் திறம் மிக்க கவி


“மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின
வட்டமாய் அணிவகுத்து
துள்ளத் தொடங்கின
தங்கள் இலக்கில்லாத
முற்றுகையை
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத் திண்ணையில் படுத்திடும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”


’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை. இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியத்துவமானது.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
…………………………………………………….



குருக்கள் நாகேஷ்.

கொம்புத்தாழன் சுருளிராஜன் கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறார்.

சுருளி நெற்றியில் விபூதி பட்டை போட்டிருப்பதைப் பார்த்து நாகேஷ் “பட்டைய எடம் மாத்திட்ட!”

பட்டை சாராய பழக்கம் உள்ள சுருளி சாராயம் குடல கெடுப்பதை குறிப்பிடுவது இப்படி - “ பட்டை உள்ள போடுறதில்ல. ரூட்டு கெட்டுப்போயிடுது.”


குருக்கள் பிரசாதம் கொடுக்கிறார். சுருளி அதை சாப்பிடும் போது நாகேஷ் கேள்வி : ”பிரசாதத்த கூட ஏண்டா திருட்டுத்தனமா தின்னுற?”

சுருளி சுளித்த முகத்துடன் வாய விரித்து : ”பழகிப்போச்சி.”

பழைய ’ருத்ர தாண்டவம்’ படத்தில்.
……………………………………….

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-38.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_10.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4856.html

Aug 23, 2017

ஊள அழுக, பவ்யம் பாவ்லா


”கருணாநிதி சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்” - வைகோ

மு.க சிரிப்பின் ஒரேஅர்த்தம், பார்வையின் ஒரே விளக்கம் :
“ஒன் ஊள அழுக, பவ்யம் பாவ்லாவெல்லாம் ஆயிரம் தடவ பாத்திட்டேன். நான் பயப்படவே மாட்டேன்.தைரியமா இருப்பேன்.”

........................................

http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2016/05/2016.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_28.html

Aug 20, 2017

Bigg Boss scraps


ஆரவ் ஒரு நவீன இளைஞன்.
நடிகை ஓவியா காதலிக்கிறாள். அவனிடம் பிரச்னை இருக்கிறது.  இவளை உதாசீனப்படுத்துகிறான். அவள் மிகுந்த வியாகூலமடைகிறாள். அவளுக்கு ஆறுதலாக ஒரு முத்தம் கொடுக்கிறான். அது “மருத்துவ முத்தம்”.
You must remember this.
A kiss is just a kiss, a sigh is just a sigh.


அவள் அந்த முத்தத்தை அவனிடம் இருந்து விரும்பி, முழு மனதுடன் தான் வாங்கியிருப்பாள். ஏனெனில் அவள் அவனை மிக நேசிக்கிறவள்.
அவன் அவளுடைய காதலை நிராகரிப்பதற்கு காரணம் இருக்கலாம். ஒரு வேளை அவன் முஸ்லீம் என்பதால் மனத்தடை இருக்கலாம். இன்னொரு பெண்ணை விரும்பிக்கொண்டிருக்கலாம்.
கனியிருக்க ஏதோ ஒரு காயை கவர்ந்திட விரும்புகிறானோ என்னவோ? அது அவன் தலையெழுத்து.

அருகுளது எட்டியேயாயினும் அல்லிக்கொடி படரும். இது ஓவியா தலையெழுத்து.

அவன் வில்லி காயத்ரி கண்ட்ரோல்ல இருக்கான். அவள் இவனை “பேர கெடுத்துக்காத தம்பி”ன்னு சாம்பிராணி போடுறாள்.

இன்னொரு பஃபூன்! கவிங்கன்! ஓவியா கிட்ட “ உனக்கு எங்க என் நெனப்பு இருக்கு”ன்னு நூல் விடுறான்.
ஆரவ் இவனளவுக்கு கண்ணியக்குறைவானவன் அல்ல.
அவள் கிளம்ப இருப்பது தெரிந்து தூங்கி எழுகிறவள் படுக்கையில் உட்கார்ந்து கவிஞ்சன் தடவுகிறான். தலையில கை வக்கிறான். கூந்தலுக்குள்ள கை விடுறான். முடிய நல்லா கசக்கி ஷாம்பு போடற மாதிரி விரலால கோதுறான். ஊள அழுகை வேற.
பொதுவா இந்த மாதிரி நடவடிக்கைகள் “ நான் ரெடியாயிருக்கேன். நீ அவன ஏம்மா பிடிச்சிட்டு தொங்கணும்”னு நாக்க தொங்கப்போடும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு.
அல்லது “ நீ அவனோட ஆளாயிருந்தா எனக்கென்ன.. கல்லு காஞ்சிக்கிட்டு இருந்தா நான் தோச சுடத்தான் செய்வேன்”

நல்ல வேளை. அவ கிளம்பும் போது “ no more emotional dramas”னு சொல்லிட்டு போயிட்டா. இல்லன்னா கவிஞ்சன் பாய்ஞ்சி கட்டிப்பிடிச்சி, கண்ண மூடி சொக்கி, கெறங்கு, கெறங்குன்னு கெறங்கியிருப்பான், குரங்கு!
இவன பத்தி பொம்பளங்க எந்த கம்ப்ளைண்டும் பண்ணலயே என்பது பரணியை காயப்படுத்தற விஷயம்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன். இந்த சினேங்க்க்கனின் சினேகம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சரியாக வேகாத சோறு போல என்பது அவர்களுக்கு அவனுடைய புறணி மூலம் தான் புரியும்.
பரணி பற்றிய கேள்விக்கு கவிங்கன் பொய் சொல்லும்போது கண்கள் கிடந்து அல்லாடியது.

எப்படியோ காயத்ரி இன்று வெளியேற்றப்படுகிற விஷயம் விஷேசமானது.
வெளியே வந்ததும் தலித்துகளுக்கு விரோதமாக அவள் பரணி பற்றி பயன்படுத்திய வார்த்தை ஒன்றே அவளை பெட்டிப்பாம்பாக சுருண்டு படுக்க வைத்து விடும்.
அவள் திருந்த எந்த வாய்ப்புமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் திட்டமிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகத் தான் புலம்புவாள்.

ஒவ்வொரு சனி, ஞாயிறிலும் கமல் ஹாசன் சினேகன், காயத்ரி விஷயத்தில் பாரபட்சமாக கண்டும் காணாமல் நடந்து கொள்கிறார். Selective Amnesia and wilful blindness!

கவிங்கன் முகஸ்துதியில உலக நாயகனை கவுத்துட்டான். பாரதி, கண்ணதாசனுக்கு அடுத்து கமலஹாசன்னு!
தாழன் சைஸ் சரியில்ல. கொம்புத்தாழன்.

 

..................................

https://rprajanayahem.blogspot.in/…/find-funny-side-to-bigg…

https://rprajanayahem.blogspot.in/…/graceless-inelegant.html

http://rprajanayahem.blogspot.in/…/08/bigg-boss-bullshits.h…

http://rprajanayahem.blogspot.in/2017/08/good-bad-ugly.html

http://rprajanayahem.blogspot.in/…/07/pigs-in-bigg-boss.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_19.html


http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_11.html

Aug 19, 2017

மரம்...தனி



இதற்கு முன் நான் பார்த்தேயிராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற ஒரு இலக்கியவாதி.
தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது இவனையெல்லாம் ஏண்டா பாத்தோம்னு ஆகிப்போச்சி. சி..சீ…ச்சின்னு இருந்தது.

பெரிய மேதாவிங்கிற, பெரிய புடுங்கிங்கிற நெனப்பு.

குடிச்சிப்பிட்டு தான் மேடையில பேசமுடியும்னான்.

அவனோடு பேசியதில் எப்படி இவன் மத்தவங்க கிட்ட அடி வாங்காம தப்பிக்கிறான்னு தோணுச்சி.


சம்மந்தமேயில்லாமல் தான் பெரிய மசகாளி என்றான்.
தன்னைப்பற்றி எவனாவது இப்படி ஒரு கேஸனோவான்னு சொன்னான்னா அவன் ஒரு மன நோயாளின்னு அர்த்தம்.
இப்ப கூட ஒரு கவிங்கன் ‘ இவ என்ன ஐஸ்வர்யா ராயா? கவிஞ்சன்களிலேயே அதிக கேர்ள் ப்ரண்ட்ஸ் எனக்கு தான். தேவதைகளோட வாழறவன் நான்’னு பீத்தினான்.
பொதுவாவே இவனுங்க எப்பவும் பீத்திக்கிட்டே தான் இருப்பானுங்க.

நான் சந்திச்ச எழுத்தாளன் கூட தன்னோட பெண் வயதுள்ள ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்றான். இத்தனைக்கும் இவன் பொண்டாட்டி இவன வேணவே வேணாம்னு போயிட்டா. கிழிஞ்ச கல்யாணம்.

மூஞ்சப் பாத்தீங்கன்னா கரிச்சட்டி மாதிரி முகத்தில் அங்கங்கே கரியடிச்சி இருந்தது. ரத்தம் செத்த பய. இவன போய் ஒரு சின்னப்பொண்ணு காதலிப்பது உண்மையென்றால் அவள் எப்பேர்ப்பட்ட கோட்டிக்காரியாக இருப்பாள்.

இவன் ரொம்ப வருஷங்களுக்கு முன்ன வேலை பார்த்த இடத்தில் முதலாளி தன் மனைவியோடு இந்த பயலை படுக்க சொன்னதாக சொன்னான்.
பயல் என்றவுடன் இளம் வாலிபன் என்று நினைத்து விடக்கூடாது.
இப்ப அறுபதை தாண்டி நாலு வருசம் ஆனவன். ஆனால் எழுபது வயசுக்கு மேலன்னா நம்பலாம்.
………………………………



க.சீ. சிவகுமார் அகால மரணமடைந்த போது எவ்வளவு இரங்கல் பதிவுகள். இணையம், பத்திரிக்கை எல்லாமே இரங்கல் செய்திகள்.
இந்த க.சீ. எப்படியெல்லாம் எவ்வளவு பேருடன் நல்ல rapport! என்ன ஒரு public relation!

ஒரு பெரிய குழுவாக இங்கே எல்லா எழுத்தாளர்களும் இயங்குகிறார்கள்.

ஒருவரோடும் சேராமல், தொடர்பில் இல்லாமல், செல் பேசி உறவு கொண்டாடாமல் ஒதுங்கியிருக்கும் நான் இறந்தால் எனக்காக இரங்கல் தெரிவிக்க இலக்கிய உலகத்தில் ஆளே இல்லை.

Unwept, unsung, unhonored.
தன்னிரக்கம் எதுவும் கிடையாது. இருந்தாலும் உண்மை இது தான்.

’கும்பலில் சேராமல் கும்பலைச் சேர்க்காமல் உருப்படாமல் போன பிறிதொருவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன் காலம் காலமாய் ‘என விமலாதித்த மாமல்லன் எழுதிய போது கணேஷ்குமார்.ஆர் பதிலாக ராஜநாயஹம் பெயரை குறிப்பிட்டு ’தலைவரே..கற்றோர் இருவர்’ என்று கொடுத்த கமெண்ட்டிற்கு உமா மகேஷ்வரன் லைக் கொடுத்திருந்தார்.


நான் எந்த இலக்கிய உலக எழுத்தாளரையும் சந்திக்க இப்போதெல்லாம் விரும்புவதில்லை.
எல்லோருமே Self-centred persons.
எழுத்தாளனோடு உறவு கொண்டாட அவனுடைய எழுத்தை படித்துக்கொண்டே, கொண்டே இருக்கவேண்டும். அவனுடைய எழுத்தைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
என்னுடைய சிறுகதை படிச்சீங்களா? என்னோட புது நாவல் படிச்சிட்டீங்களா? இந்த பத்திரிக்கையில என் கட்டுரை படிச்சீங்களா?
இல்லன்னா உறவு அஸ்தமித்து விடும்.

எப்ப எவன் பேன் பார்ப்பான், எவன் காத அத்துருவான்னு சொல்ல முடியாது. பேன் பாக்கறான்னு நெனக்கும்போதே காத அத்துடறவனும் உண்டு!


இவ்வளவு நாளில் நான் ஒரு வாசகரிடம் கூட என் புத்தகம் வாசிச்சீங்களா? என்று கேட்டதில்லை. பிறகு எழுத்தாளனிடம் கேட்க எனக்கு பைத்தியமா!


ஒரு முப்பது பக்க கவிதை நூலுக்கே எவ்வளவு செலவு பண்ணி விழா எடுத்து விடுகிறார்கள்.

இரண்டு புத்தகம் என் பெயரில் வந்திருக்கிறது. அதற்கு வெளியீட்டு விழா என்று நடந்ததில்லை. விமர்சனம் கேட்டு எவனையும் கால் நக்கியதில்லை. படியுங்கள் என்று யாரிடமும் வன்முறை பிரயோகித்ததில்லை.

" தனியாக இருக்கத் தெரியாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது”
- நகுலன்
………………………………………………………….

https://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_22.html

Aug 16, 2017

சீத்தாப்பழம்


சீத்தாப்பழம் பழைய படம் 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தின் மூலம் பிரபலம்.
சிவாஜியின் அண்ணி சாவித்திரி பெயர் சீதா. பாலாஜி தான் கணவர்.
அண்ணனுக்கு பிடித்த பழம் சீத்தாப் பழம்.



சுசிலா பாடிய கவிஞர் மாயவநாதன் பாடல் சாவித்திரிக்கு
“ தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க”

……………………………………………….



மாலை நேரம்.
பார்க்கில் வாக்கிங் போய் விட்டு வரும் போது
சீத்தாப்பழம் விற்றுக்கொண்டிருந்த தள்ளுவண்டிக்காரரிடம் இரண்டு பழம் வேண்டினேன்.
இருபது ரூபாய்.

’எப்ப சாப்பிடலாம். நாளைக்கா? இன்றைக்கே பழுத்திருக்கிறதா?’

தள்ளு வண்டிக்காரர் பதில் : ’எப்ப பழுக்கும்னெல்லாம் சொல்ல முடியாது. பாருங்க தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கேன். காலையில பார்த்தா அனலா இருக்கும்.’

‘ ரெண்டு மூனு நாள்ல பழுத்திராதா?’

‘ எத்தன நாள் ஆகுமோ? யாருக்குத்தெரியும். ஆனா ஒன்னு. பழுத்தவுடன சாப்பிடாம விட்டீங்கன்னா அப்புறம் உள்ள வெறும் கொட்டங்களா தான் இருக்கும்.’

பக்கத்தில் ஒரு திண்டில் உட்கார்ந்திருந்த ஆள் என்னைப் பார்க்காமலே சொன்னார் “ தண்ணியில போட்டு வைங்க. பழுத்துரும்..”

சீத்தாப் பழக்காரர் சொன்னார்: ஃப்ரிட்ஜ்ல வையுங்க! கவனமா இருங்க! பழுக்கும்போது சாப்பிட மறந்திடாதீங்க. இல்லன்னா வெறும் கொட்ட தான்!”

 விற்க வேண்டிய சரக்குக்கு இப்படி anti - marketing பண்ணுறாரே!

’ஆண்டாளே! ரங்கமன்னாரே! இவருக்கு அமோகமா வியாபாரம் நடக்கணும்.’ சத்தமா சாமி கும்பிட்டேன்.

ரெண்டு சீத்தாப்பழத்தை பார்க்க ஏதோ வெடிகுண்டு அளவுக்கு மிரட்சி.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்து சொன்னேன். “ இந்த பழம் பழுக்கணும். எத்தன நாளோ! அத எப்படியாவது நீ கண்டு பிடிக்கணும். ஆண்டாளே! ரங்கமன்னாரே!’

தண்ணியில போட்டு வச்சு, ஃப்ரிட்ஜில வச்சு....
கடைசியா மூணு நாள் அரிசி பானையில போட்டு வச்சு....


பத்து நாள் கழித்து சீத்தாப்பழம் இன்று சாப்பிட்டோம்.
........................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

https://rprajanayahem.blogspot.in/2014/03/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2081.html

http://rprajanayahem.blogspot.in/2017/08/blog-post_13.html

Aug 15, 2017

Sorrows never come singly






நள்ளிரவு 2 மணி. ஆதம்பாக்கத்திலிருந்து டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.

டாக்ஸி டிரைவர் சொன்ன ஒரு விஷயம்.
அவருடைய தகப்பனார் சகோதரர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் ஏழு பேர் உடன் பிறந்த சகோதரிகள். ஆக அண்ணன் தம்பிகள் ஏழு பேர் மனைவியர் கூட ஒரு தாய் மக்கள்.
இந்த செய்தி சற்று அதிசயமாக, ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.


ஆனால் இதை விட ஒரு ஆச்சரியமான, அதிசயமான செய்தி ஒன்றை அவர் சொன்னார்.



முப்பது வருடங்களுக்கு முன் நடந்த துயரம்.


அண்ணன் தம்பிகள் ஏழுபேரும் அவர்கள் மனைவியர் ஏழு பேரும் ஒரே ஆண்டில் இறந்திருக்கிறார்கள்.


விபத்தா என்றால் இல்லை. தற்கொலையா என்றால் அதுவும் இல்லை.ஒரு பெரியப்பா இறந்திருக்கிறார். உடனே சில நாட்களில் பெரியம்மா இறந்து போய் விட்டார். அடுத்தடுத்து உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மற்ற தம்பதியர்களும் குறிப்பிட்ட வரிசை என்று இல்லாமல் இறந்திருக்கிறார்கள்.


பதினான்கு மரணங்கள் ஒரே ஆண்டில் நடந்து முடிந்து விட்டிருப்பது விந்தை.
அப்போது அந்த வருடம் இந்த டிரைவர் அய்யனார் திருமணமாகிய புதிது.

புது மாப்பிள்ளை.
 
குடும்பத்தில் ஒரு மரணத்தை தாங்கிக்கொள்வதே சித்ரவதை. தொடர்ந்து துக்கம். தந்தை, தாய், பெரியப்பா, பெரியம்மா சித்தப்பாக்கள் எல்லோரும் ஒரே ஆண்டில் இறந்த துயரத்தை பார்க்கும் துர்பாக்கியம்.
இப்படி ஒரு கதையில்,சினிமாவில் சம்பவங்கள் என்றால் கூட மிகையாகத்தான் தெரியும். 


……………………………….



Aug 12, 2017

Find a funny side to Bigg Boss



Gayathri thinks too much of herself. Super ego.
சே! சனியன அவ்வளவு சீக்கிரம் வெளியேத்த மாட்டீங்களாடா? வெளியே ஆர்த்தியும் ஜூலியும் கூட இத கேட்டு பொங்கியிருக்குங்க.
கமலுக்கு வீட்டோ பவர் இருந்தா தான் pompous witch டிஸ்மிஸ் ஆக வாய்ப்பு.

நீ கெட்ட வார்த்தை பேசினது ஒன்னும் தப்பில்ல. ஆனா நீ கெட்டவ.
அது தான் Issue!


கவிஞ்சன் பரப்பெடுத்த பய. ஃபீல்ட் ஒர்க்கர் என்பது ஏய்ப்பு. Field working is his tool to fool others in Bigg Boss house.
வையாபுரிய தூக்கி மனையில வச்சிட்டாங்களேனு அப்செட் ஆகி கவிஞ்சன்
 “ நான் வெளிய போறேன். பத்து வருசத்திற்கு முந்தி இருந்த கவிங்கன் வெளிய வந்துடுவானோன்னு பயமாயிருக்கு”ன்னு ஸ்டண்ட் அடிக்கிறான்.

ஒன்னு டிஃபன் கேக்கறான். இல்ல டிஃபன் கொடுக்கப்பாக்கறான்.
ஒரு நாள் ரைசாவ முதுக மிதிக்கச் சொல்றான். மறு நாள் ரைசா கிட்ட கவிஞ்சன் எட்டிப்பாத்து “ தலய பிடிக்கவா? மொலய பிடிக்கவா”ன்னு நைசா நூல் விடறான்.
ஊசி எடம் கொடுத்தாத்தான நூலு  நொழையும்?

தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மனியம் சுந்தரனார் என்பது கூட தெரியாத கவிஞ்சன் நிச்சயம் மடக்கவிங்கன் தானே!

சக்தி நல்ல கலகலப்பு. Humor sense சரி தான். ஆனா காயத்ரி இன்ஃப்ளுயன்ஸ்ல இருக்கிறானே.
காமடி வில்லன் ‘மக்கள் பாத்துக்கிட்டு இருக்காங்க’ன்னு முட்டாத்தனமா கவிஞ்சனிடம் ஆறுதல் சொல்றான். அது தான் ஆபத்துன்னு தெரியல பாவம்.

ஆர்த்தியும் ஜூலி,காயத்ரி வகையறா தான். விகடன் பேட்டியில் ஓவியாவுடன் தோள் சேர்ந்து, புனிதை போல தன்னைப் பற்றி பேசுவது அபத்தம்.

ஆர்த்தி உள்ளயிருந்திருந்தா சினேகன், காயத்ரிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டியிருந்திருக்கும். வெளிய இருப்பதால் முக சுளிப்பு.


......................................................

Aug 11, 2017

ஸ்ரீகாந்த்



ந.முத்துசாமி சாருடன் இருப்பது ரொம்ப அருமையான அனுபவம்.

டி.வியில் பழைய ஸ்ரீகாந்த் பார்க்க நேர்ந்த போது “ இவரு இப்ப படங்கள்ள நடிக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்.

  நான் “ கொஞ்ச வருடங்களுக்கு முன் சில டி.வி சீரியலில் பார்த்திருக்கிறேன்.”

முத்துசாமி சார் “ பெரிய புடுங்கின்னு நெனப்பு. நாங்க அமெரிக்கன் சென்டர் போகிற காலங்களில் அங்க ரொம்ப வெறப்பா அலட்டிக்கிட்டு...இருப்பார்.”

இப்போது ஸ்ரீகாந்தின் சமீபத்திய புகைப்படம் பார்க்க கிடைத்தது!


..............................


வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் தியேட்டரில் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கத்தியதை நேரில் பார்த்த போது வெறுத்துப்போனார். அவருடைய நடிப்பு அப்போது தமிழ் ரசிகர்களுக்குப்பிடிக்கவில்லை.

ரொம்ப அவமானமாயிருந்ததால் ஒரு முடிவெடுத்தார் - இனி சினிமாவில் நடிக்க கூடாது.
இது அவரே சொன்ன விஷயம்.
வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதற்கு நேர் மாறாக இவரை படம் பார்த்தவர்கள் புறந்தள்ளினார்கள். இப்போது அந்தப்படம் பார்த்தால் அவருடைய நடிப்பு அப்படியொன்றும் மோசமெல்லாம் கிடையாது.அருமையான பி.பி.எஸ் பாடல்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன்!
1965ல் இருந்த ரசிகர்கள் முழுக்க எம்.ஜி.ஆர் – சிவாஜி மயக்கத்தில் இருந்தவர்கள்.

ஸ்ரீகாந்த் அமெரிக்கன் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டே நடிக்க வந்தவர்.

இவர் தன் திரைப்பட அறிமுகத்திற்குப்பின் கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டார்.

ஸ்ரீ காந்த் சினிமா வாழ்வு கொஞ்சம் விசித்திர மானது. இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டதால் இவருக்கு எந்த பெரிய பலனும் கிட்டவில்லை.
1965ல் ஸ்ரீதர் தரத்துக்கு சற்றும் பொருந்தாத இயக்குனரான ஜோசப் தளியத்தால் அறிமுகமான ஜெய்சங்கர் பிஸியான கதாநாயகன்.
சிறந்த இயக்குனர் பாலச்சந்தர் நாடகங்களில் நடித்து ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் சினிமாவில் சாதாரண நடிகராகிவிட்டார்.
ஸ்ரீதர் முன்னதாக அறிமுகப்படுத்திய ரவிச்சந்திரன் கூட ரசிகர்களால் 'காதலிக்க நேரமில்லை' யில் ரசிக்கப்பட்டார்.


பாலச்சந்தர் நாடகங்களில் நடித்தவர் என்பதால் அதே வருடம் 'நாணல்' படத்தில் காமெடி பாத்திரம் செய்தார்.
ஏ.வி.எம் ராஜன் ‘கற்பூரம்’(1967) – ‘நிலவே உனக்கு குறையேது? என் அருகினில் நெருங்கிட வரும்போது’ என்ற ஒரு பாடலுடன் ஸ்ரீகாந்த்துக்கு சின்ன ரோல்.மணிமாலாவை கற்பழிப்பார்.
செல்வமகள் படத்திலும் ’செல்ல’ வில்லன்.
பாலச்சந்தரின் “நாணல்”,
“பாமாவிஜயம்”
“எதிர் நீச்சல்”
“பூவாதலையா?”
“நவக்கிரகம்” படங்களில் எல்லாம் ஸ்ரீகாந்த் தன் முதல் படத்து பிம்பத்துக்கு சம்பந்தமேயில்லாமல் காமெடி ரோல் தான் செய்தார்!
பாமா விஜயத்தில் சச்சுவிடம் ஸ்ரீகாந்த் " I have no father.. no mother.."
எதிர் நீச்சலில் சௌகாரிடம் " ஏட்டிக்குப்போட்டி பேசாதேடி பட்டோ!"
பூவாதலையா - "போடச்சொன்னா போட்டுக்கிறேன்.போடும் வரை கன்னத்திலே." ஏ.எல்.ராகவன் பின்னனி குரல்!
நவக்கிரகம் - "திட்டுறான் திட்டுறான் மறுபடியும் திட்டுறான்! எல்லாரும் சாட்சி."


அதன் பிறகு அந்த பாலச்சந்தர் பட பாத்திரங்களுக்கு சம்பந்தமேயில்லாமல் ப்ளேய் பாய் ஆக ஆளே மாறிவிட்டார். மிக பிஸி.
“தோரஹா” இந்திப்படம் தமிழில் ‘அவள்’ தயாரிக்கப்பட்டபோது அதில் ருபேஷ் குமார் செய்த வில்லன் ரோலை செய்தார். “I’m always open!”
வெண்ணிற ஆடை நிர்மலாவை கற்பழிப்பார்.

சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களில் ஸ்ரீகாந்த் பிஸியான நடிகர். அதே 1972ல் காசே தான் கடவுளடா, ஞான ஒளி, தொடர்ந்து அடுத்த வருடம் ராஜபார்ட் ரங்கத்துரை.
1974ல் சிவாஜியின் மகனாக தங்கப்பதக்கத்தில் கலக்கி விட்டார்.

அதேவருடம் சிங்கிதம் சீனிவாசராவின் ‘திக்கற்ற பார்வதி’யில் கதாநாயகன். கதாநாயகி லக்ஷ்மி!
‘ராஜநாகம்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன்.
 தேவர் படம் ‘கோமாதா என் குல மாதா’ வில் பிரமீளாவுக்கு ஜோடி.

அவருடைய ஹேர்ஸ்டைல் தனித்துவமானது.


வத,வத என்று பல படங்கள் நடித்தார்.
‘பைரவி’, ‘சதுரங்கம்’ இரண்டு 1978 படங்களில் ரஜினிகாந்த்துடன்.
(மேஜர் சந்திரகாந்த் கதையில் இரண்டு பாத்திரங்கள். சந்திரகாந்தின் இருமகன்கள் ஸ்ரீகாந்த், ரஜினி காந்த்.
இந்த இரண்டு பெயர்களை பாலசந்தர் இரண்டு நடிகர்களுக்கு சூட்டினார்!)

ஜெயகாந்தன் நாவல்களின் நாயகன்.
ஒரு வித்தியாசமான ஸ்ரீகாந்த்.
சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)


கமல்ஹாசனுடன் “நீயா?”(1979)

.......

ஸ்ரீகாந்த் தன் நண்பன் நாகேஷ் பற்றி சொல்லியிருக்கிற சுவாரசியமான விஷயம்.
நாகேஷ்,ஸ்ரீகாந்த்,கவிஞர் வாலி மூவரும் திரையுலக முயற்சியில் இருந்த காலத்திலேயே நண்பர்கள்.

நாகேஷுக்கு நண்பர்கள் மத்தியில் பட்டப்பெயர்
"மொபைல் நாகேஷ்"!
தங்குவதற்கு தனி அறை ஏதும் இல்லாததால் ஒவ்வொரு நண்பர்கள் அறையாக மாறி, மாறி தங்கிக்கொள்வாராம்! அதனால் மொபைல் நாகேஷ்!

................................................................................................

Aug 10, 2017

உடை படும்




நல்ல நண்பர்கள் ஒருவருடைய அந்தரங்க விஷயங்களை மற்றவர் அறிந்திருப்பர்.
தி.ஜாவின் அந்தரங்க விஷயம் ஒன்றைப் போட்டு உடைத்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.
’மூன்றாவது புருஷார்த்தத்தில் ஜானகிராமனுக்கு எல்லையில்லா வேகம்’ உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. அவன் இளமைப் பருவத்திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன்.’


நல்ல நட்பு எப்படியெல்லாம் விரிகிறது.
தி.ஜானகிராமன் பற்றி கரிச்சான் குஞ்சு பெருமிதம் ’ என் நண்பன் மட்டுமா ஜானகி? என் உறுப்புகளுக்குள் ஒன்றாயிருந்தவன்.’


தி.ஜா கறார் பார்வை கொண்டவர். கரிச்சான் குஞ்சு இது பற்றி
‘ அவனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது. போலிக்கவிதை என்பான்.’

இப்படி கரிச்சான் குஞ்சு சொல்வது போல் தி.ஜா.வின் விமர்சனப்பார்வை பற்றி நா.காமராசன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.
தி.ஜா. தமிழ் கவிஞர்கள் பற்றி ஒரு நூல் சாகித்ய அகாடமிக்காக எழுத வாய்த்த போது கண்ணதாசன் பற்றி தன் அதிருப்தியை வெளியிட்டார். அப்போது கண்ணதாசனின் கவிதைத்தொகுப்புகள் பலவற்றை பார்த்து விட்டு நா.காமராசனிடம் உதட்டை பிதுக்கி சொல்லியிருக்கிறார். “ ஒரு தொகுப்பு கூட தேறவில்லையே. இவரை தமிழ் நாட்டில் கொண்டாடுகிறார்களே.”
நா.காமராசன் இதனை குமுதம் வார இதழ் ஒன்றிலேயே குறிப்பிட்டிருந்தார்.



நேர் மாறான அனுபவமாக வாழ்வு சில உண்மைகளை காட்டும்.
தமிழ் தாத்தாவுக்கு தன் குரு பற்றி உள்ள மரியாதையும், பக்தியும் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் ராமசாமி முதலியார் என்பவருடன் பழக வாய்த்தது.
ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்
’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம்.


சார்லி சாப்ளின் போல இருப்பவர்களுக்கான போட்டி ஒன்று. நீதிபதிகள் நிச்சயம் சார்லி சாப்ளின் பற்றி முழுமையாக நுட்பமாகத்தான் அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள்!
சார்லி சாப்ளினே அதில் கலந்து கொண்டாராம். அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
......................................................

Aug 7, 2017

Graceless, Inelegant


Incorrigible
கவிங்கன்: நம்ம தான் காரணமோ?
சக்தி: நம்ம என்னண்ணே பண்ணோம்?
கவிங்கன் : நம்ம ஒன்னும் பண்ணல.......

பேசுன புறனி கொஞ்சமா? மடக்கவிங்கன்!

காசனோவான்னு தன்ன பற்றி நினப்பில ”என்னப்பத்தி எங்க நீ நெனக்கிற”ன்னு ஓவியா கிட்ட நைசா ஒரு நூல் விட்டான் பாருங்க....
தாழன் சைஸ் சரியில்ல. கொம்புத் தாழன்!


ஊள அழுகை.. அழுதுக்கிட்டே இருக்கானே!
மூஞ்சை ’ஓத்த சுன்னி’ மாதிரியே தொங்கப்போட்டுக்கிட்டான்.


Incurably bad Gayathri

ஓவியா பற்றி ரைசாவிடம் காயத்ரி : "She was triggering us. She crossed the line!"


Step mother ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடசீல கமல் மேல பாஞ்சிட்டா.

’எங்க அம்மாக்கு தான் என்ன கேக்க உரிம இருக்கு’ன்னு சொல்லட்டுமே!
’வீட்டுக்கு அடங்காதது ஊருக்குத் தான் அடங்கும்’னு ஒரு சொலவடை.


சினேகன், காயத்ரி இருவரையும் வெளியேற்ற வேண்டும். Graceless Characters.
ரெண்டும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள்.Both are cut from the same cloth. They are two peas from the same pod.

........................................

http://rprajanayahem.blogspot.in/…/08/bigg-boss-bullshits.h…

http://rprajanayahem.blogspot.in/2017/08/good-bad-ugly.html

http://rprajanayahem.blogspot.in/…/07/pigs-in-bigg-boss.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_11.html

Aug 6, 2017

Bigg Boss Bullshits



தாழன் சைஸ் சரியில்ல. கொம்புத் தாழன்! கூந்தலுக்குள்ள விரல விட்டு கோதிட்ட்ட்ட்டான்.
 குண்டிய கையால தூக்கி தலய முலயிலயே வச்சுட்டான்.


மடக் கவிங்கன் முகஸ்துதியில உலக நாயகனை கவுத்துட்டான். பாரதி, கண்ணதாசனுக்கு அடுத்து கமலஹாசன்னு!
தாழன் சைஸ் சரியில்ல. கொம்புத்தாழன்.

சக்தி! காமெடி வில்லன்! ஆனா அவன் ஹீரோன்னு தான் நினச்சுக்கிட்டிருக்கான். நாம் தான் விலகி நின்னு அவன ரசிச்சி சிரிக்க வேண்டியிருக்கு!


மருத்துவ முத்தம் - Arav! A medicated kiss is the worst trick of an escapist!

புரியல, தெரியலன்னு ஒரு மழுப்பல் காயத்ரி!
எனக்கு காயத்திரியை பிக் பாஸ்ல பாத்தப்ப என்னோட step mother சாயல் தெரிந்தது. என் அப்பாவோட concubine. அதே கல்யாண குணங்கள் கூட!
’திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்று இவளும் ஜுலியும் சேர்ந்து பாடியது அபத்தம்.
Both are incurable, incorrigible Vixens!




பிக் பாஸ் நிகழ்வில் ’மீண்டும் ஓவியா’ எனில் ’மீண்டும் பரணி’யும் வர வேண்டும்!
 ............................................

https://rprajanayahem.blogspot.in/2017/08/good-bad-ugly.html

https://rprajanayahem.blogspot.in/…/…/pigs-in-bigg-boss.html

https://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_19.html

https://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_11.html

Aug 4, 2017

Good, Bad, Ugly!


Good - ஓவியா,
Bad - காயத்ரி,
Ugly - ஜூலி.


பரணியால் பெண்கள் பாதுகாப்புக்கு பங்கம் என்ற ’காயத்திரி சதிகாரகும்பல்’ ஓவியாவை அதே பாணியில் ஆரவ் விஷயத்தில் களங்கப்படுத்துகிறது.

டேய்! சினேங்ங்க்க்கன் மடக்கவிங்க்கா! தங்கச்சி, ’தேங்காச்சில்’ன்னே தடவி கையெழுத்து போடுறியேடா!

புறணி பேசிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி ஓவியா கிட்டயும் நல்லவனா நடிக்கிற சினேகன். நாட்டாம பண்ண தவிச்சி தக்காளி விக்கிறான்.

மர்லின் மன்றோ அன்றோ அன்றே சொன்னாள் ?! ”புறணி விஷயத்தில பொம்பளக்கி ஆம்பள சளச்சவனே இல்ல.”

மஹால் தூண் நமிதாவ எக்கி,எக்கி கட்டிப்பிடிச்ச சினேகன் வர்ற ஞாயித்துக்கிழமை ஜூலி மேல எத்தன தடவ பாய்ஞ்சி இறுக்குவான்?

சில்ற சினேகன்! கள்ளி காயத்திரி! சப்ப ஜூலி!
Notoriety is often mistaken for fame!

ஜனரஞ்சகமாவே சொல்லிடுறேன். 
ஓவியா வாழ்க! 
சினேகன், ஜூலி, காயத்திரி ஒழிக!

நம்பியார பத்தி நாடோடி மன்னன் படத்தில வீரப்பா சொல்வாரு
 “ பிங்களனோ ஒரு அப்பாவி!”  
சக்தி ஒரு பிங்களன்!
   நாடோடி மன்னனில் நம்பியாரும் வில்லன் தான்!

ஆரவ்! நீ ஆரோ?
அருகுளது எட்டியேயாயினும் அல்லிக்கொடி படரும்.

அல்லிக்கொடி - ஓவியா
எட்டி மரம் - ஆரோ.

எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?

..................................................

http://rprajanayahem.blogspot.in/…/07/pigs-in-bigg-boss.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_11.html