Share

Aug 19, 2017

மரம்...தனி



இதற்கு முன் நான் பார்த்தேயிராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற ஒரு இலக்கியவாதி.
தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது இவனையெல்லாம் ஏண்டா பாத்தோம்னு ஆகிப்போச்சி. சி..சீ…ச்சின்னு இருந்தது.

பெரிய மேதாவிங்கிற, பெரிய புடுங்கிங்கிற நெனப்பு.

குடிச்சிப்பிட்டு தான் மேடையில பேசமுடியும்னான்.

அவனோடு பேசியதில் எப்படி இவன் மத்தவங்க கிட்ட அடி வாங்காம தப்பிக்கிறான்னு தோணுச்சி.


சம்மந்தமேயில்லாமல் தான் பெரிய மசகாளி என்றான்.
தன்னைப்பற்றி எவனாவது இப்படி ஒரு கேஸனோவான்னு சொன்னான்னா அவன் ஒரு மன நோயாளின்னு அர்த்தம்.
இப்ப கூட ஒரு கவிங்கன் ‘ இவ என்ன ஐஸ்வர்யா ராயா? கவிஞ்சன்களிலேயே அதிக கேர்ள் ப்ரண்ட்ஸ் எனக்கு தான். தேவதைகளோட வாழறவன் நான்’னு பீத்தினான்.
பொதுவாவே இவனுங்க எப்பவும் பீத்திக்கிட்டே தான் இருப்பானுங்க.

நான் சந்திச்ச எழுத்தாளன் கூட தன்னோட பெண் வயதுள்ள ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்றான். இத்தனைக்கும் இவன் பொண்டாட்டி இவன வேணவே வேணாம்னு போயிட்டா. கிழிஞ்ச கல்யாணம்.

மூஞ்சப் பாத்தீங்கன்னா கரிச்சட்டி மாதிரி முகத்தில் அங்கங்கே கரியடிச்சி இருந்தது. ரத்தம் செத்த பய. இவன போய் ஒரு சின்னப்பொண்ணு காதலிப்பது உண்மையென்றால் அவள் எப்பேர்ப்பட்ட கோட்டிக்காரியாக இருப்பாள்.

இவன் ரொம்ப வருஷங்களுக்கு முன்ன வேலை பார்த்த இடத்தில் முதலாளி தன் மனைவியோடு இந்த பயலை படுக்க சொன்னதாக சொன்னான்.
பயல் என்றவுடன் இளம் வாலிபன் என்று நினைத்து விடக்கூடாது.
இப்ப அறுபதை தாண்டி நாலு வருசம் ஆனவன். ஆனால் எழுபது வயசுக்கு மேலன்னா நம்பலாம்.
………………………………



க.சீ. சிவகுமார் அகால மரணமடைந்த போது எவ்வளவு இரங்கல் பதிவுகள். இணையம், பத்திரிக்கை எல்லாமே இரங்கல் செய்திகள்.
இந்த க.சீ. எப்படியெல்லாம் எவ்வளவு பேருடன் நல்ல rapport! என்ன ஒரு public relation!

ஒரு பெரிய குழுவாக இங்கே எல்லா எழுத்தாளர்களும் இயங்குகிறார்கள்.

ஒருவரோடும் சேராமல், தொடர்பில் இல்லாமல், செல் பேசி உறவு கொண்டாடாமல் ஒதுங்கியிருக்கும் நான் இறந்தால் எனக்காக இரங்கல் தெரிவிக்க இலக்கிய உலகத்தில் ஆளே இல்லை.

Unwept, unsung, unhonored.
தன்னிரக்கம் எதுவும் கிடையாது. இருந்தாலும் உண்மை இது தான்.

’கும்பலில் சேராமல் கும்பலைச் சேர்க்காமல் உருப்படாமல் போன பிறிதொருவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன் காலம் காலமாய் ‘என விமலாதித்த மாமல்லன் எழுதிய போது கணேஷ்குமார்.ஆர் பதிலாக ராஜநாயஹம் பெயரை குறிப்பிட்டு ’தலைவரே..கற்றோர் இருவர்’ என்று கொடுத்த கமெண்ட்டிற்கு உமா மகேஷ்வரன் லைக் கொடுத்திருந்தார்.


நான் எந்த இலக்கிய உலக எழுத்தாளரையும் சந்திக்க இப்போதெல்லாம் விரும்புவதில்லை.
எல்லோருமே Self-centred persons.
எழுத்தாளனோடு உறவு கொண்டாட அவனுடைய எழுத்தை படித்துக்கொண்டே, கொண்டே இருக்கவேண்டும். அவனுடைய எழுத்தைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
என்னுடைய சிறுகதை படிச்சீங்களா? என்னோட புது நாவல் படிச்சிட்டீங்களா? இந்த பத்திரிக்கையில என் கட்டுரை படிச்சீங்களா?
இல்லன்னா உறவு அஸ்தமித்து விடும்.

எப்ப எவன் பேன் பார்ப்பான், எவன் காத அத்துருவான்னு சொல்ல முடியாது. பேன் பாக்கறான்னு நெனக்கும்போதே காத அத்துடறவனும் உண்டு!


இவ்வளவு நாளில் நான் ஒரு வாசகரிடம் கூட என் புத்தகம் வாசிச்சீங்களா? என்று கேட்டதில்லை. பிறகு எழுத்தாளனிடம் கேட்க எனக்கு பைத்தியமா!


ஒரு முப்பது பக்க கவிதை நூலுக்கே எவ்வளவு செலவு பண்ணி விழா எடுத்து விடுகிறார்கள்.

இரண்டு புத்தகம் என் பெயரில் வந்திருக்கிறது. அதற்கு வெளியீட்டு விழா என்று நடந்ததில்லை. விமர்சனம் கேட்டு எவனையும் கால் நக்கியதில்லை. படியுங்கள் என்று யாரிடமும் வன்முறை பிரயோகித்ததில்லை.

" தனியாக இருக்கத் தெரியாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது”
- நகுலன்
………………………………………………………….

https://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_22.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.