Share

Aug 16, 2017

சீத்தாப்பழம்


சீத்தாப்பழம் பழைய படம் 'படித்தால் மட்டும் போதுமா?' படத்தின் மூலம் பிரபலம்.
சிவாஜியின் அண்ணி சாவித்திரி பெயர் சீதா. பாலாஜி தான் கணவர்.
அண்ணனுக்கு பிடித்த பழம் சீத்தாப் பழம்.



சுசிலா பாடிய கவிஞர் மாயவநாதன் பாடல் சாவித்திரிக்கு
“ தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க”

……………………………………………….



மாலை நேரம்.
பார்க்கில் வாக்கிங் போய் விட்டு வரும் போது
சீத்தாப்பழம் விற்றுக்கொண்டிருந்த தள்ளுவண்டிக்காரரிடம் இரண்டு பழம் வேண்டினேன்.
இருபது ரூபாய்.

’எப்ப சாப்பிடலாம். நாளைக்கா? இன்றைக்கே பழுத்திருக்கிறதா?’

தள்ளு வண்டிக்காரர் பதில் : ’எப்ப பழுக்கும்னெல்லாம் சொல்ல முடியாது. பாருங்க தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கேன். காலையில பார்த்தா அனலா இருக்கும்.’

‘ ரெண்டு மூனு நாள்ல பழுத்திராதா?’

‘ எத்தன நாள் ஆகுமோ? யாருக்குத்தெரியும். ஆனா ஒன்னு. பழுத்தவுடன சாப்பிடாம விட்டீங்கன்னா அப்புறம் உள்ள வெறும் கொட்டங்களா தான் இருக்கும்.’

பக்கத்தில் ஒரு திண்டில் உட்கார்ந்திருந்த ஆள் என்னைப் பார்க்காமலே சொன்னார் “ தண்ணியில போட்டு வைங்க. பழுத்துரும்..”

சீத்தாப் பழக்காரர் சொன்னார்: ஃப்ரிட்ஜ்ல வையுங்க! கவனமா இருங்க! பழுக்கும்போது சாப்பிட மறந்திடாதீங்க. இல்லன்னா வெறும் கொட்ட தான்!”

 விற்க வேண்டிய சரக்குக்கு இப்படி anti - marketing பண்ணுறாரே!

’ஆண்டாளே! ரங்கமன்னாரே! இவருக்கு அமோகமா வியாபாரம் நடக்கணும்.’ சத்தமா சாமி கும்பிட்டேன்.

ரெண்டு சீத்தாப்பழத்தை பார்க்க ஏதோ வெடிகுண்டு அளவுக்கு மிரட்சி.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்து சொன்னேன். “ இந்த பழம் பழுக்கணும். எத்தன நாளோ! அத எப்படியாவது நீ கண்டு பிடிக்கணும். ஆண்டாளே! ரங்கமன்னாரே!’

தண்ணியில போட்டு வச்சு, ஃப்ரிட்ஜில வச்சு....
கடைசியா மூணு நாள் அரிசி பானையில போட்டு வச்சு....


பத்து நாள் கழித்து சீத்தாப்பழம் இன்று சாப்பிட்டோம்.
........................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

https://rprajanayahem.blogspot.in/2014/03/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2081.html

http://rprajanayahem.blogspot.in/2017/08/blog-post_13.html

2 comments:

  1. அருமை
    https://sankarsubramanian.blogspot.in/

    ReplyDelete
  2. Dear Sir, A couple of years ago I saw a programme on Kalaignar TV, I think. Anchor of the show Abdul Hameed was talking about the song 'Kakitha Odam Kadal Alai Meethu'. He said that when he was young singing using only the word Mayavanathan in the same tune as the Kavitha Odum song was popular and sang a few lines too. He was even wondering if Mayavanathan was watching that then or where he was or something to that effect. I could, of course, recollect from your post the teribble way Mayavanathan had died. The way you brought out the irony in the words he used to pen the Thannilavu song and the heat exhaustion and hunger associated with his death can never be forgotten.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.