1988ம் வருடம் ரொம்ப அழகான வித்தியாசமான இன்லெண்ட் லெட்டர்களில் என் பெயர் விலாசம் அச்சிட்டு அவற்றில் தான் கடிதங்கள் எழுதுவேன்.
அசோகமித்திரன் அது குறித்துகேட்டு எழுதியிருந்தார் - ” நீங்கள் பயன்படுத்துவது போன்ற லெட்டர்ஹெட் எங்கு கிடைக்கின்றது?”
நான் உடனே கோவை ராஜவீதியில் ஒரு கடையில் அந்த இன்லண்ட் லெட்டர்கள் வாங்கி உடனே அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
1990ல் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலுருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்தின் சாரம் - “ ஒரு மூன்று ஆங்கில புத்தகங்கள். எங்கள் சந்தாதாரர் அசோகமித்திரன் அவர்களிடம் ரீடர்ஸ் டைஜஸ்ட் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.’ இந்த புத்தகங்கள் வாசிக்கத் தகுதியான உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரை நீங்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.’
அவர் ‘R.P. ராஜநாயஹம்’ என்று உங்களை அடையாளமிட்டிருக்கிறார்”
...
ராஜநாயஹத்துக்கு எழுதிய கடிதமொன்றில் அசோகமித்திரன் :
”நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.”
அசோகமித்திரன் பிறந்த வருடம் 1931. என் அப்பாவும் அதே வருடம் பிறந்தவர்.
................................................
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html
http://rprajanayahem.blogspot.in/2012/12/taste-differs.html
http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_25.html

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.