Share

Oct 31, 2016

Zorba the Greek


God bless – எல்லோரும் சொல்வது. இப்படிச் சொல்லும்போது சோர்பாவின் பதில். “And the devil too,Boss” சோர்பாவைப்பொருத்தவரை “ God is a clever devil!”



நிகோஸ் கசான்ஸாகிஸ் எழுதிய அற்புத நாவல் “ சோர்பா தி க்ரீக்”

மைக்கல் கக்கோயோன்னிஸ் இயக்கத்தில் 1964ல் திரைப்படமானது.

நாவலில் உள்ளவையெல்லாம் படத்தில் வரவில்லை என்று வாசித்தவர்கள் ஏங்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் கசான்ஸாகிஸின் சமுத்திரத்தை சினிமா என்ற சிப்பிக்குள் அடக்க முடியுமா?

இந்த நடை முறை சிரமத்தையும் மீறி முழுமையாக இல்லாவிட்டாலும் “சோர்பா தி க்ரீக்” திருப்தி தரும் வகையில் செய்நேர்த்தியாக திரையில் நெய்யப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்திலுள்ள தன் சுரங்கத்தில் உழைப்பதற்கு பாசில் ( ஆலன் பேட்ஸ்) என்ற சாதுவான எழுத்தாளன், சோர்பா ( ஆந்தனி க்யின்) என்கிற ஒரு விசித்திர வினோதமான பித்துக்குளியை வேலைக்கு சேர்க்கிறான். சுரங்க வேலை சோர்பாவின் அசாத்திய உழைப்பை துச்சமாக்கி விடுகிறது.

’கோரிக்கையற்றுக் கிடக்குதடா வேரில் பழுத்த பலா’ என்றார் பாரதி தாசன்.
இரண்டு விதவைகள். இருவேறு குண நலன்கள் கொண்ட அம்மணிகள்.



பூபுலினா (லிலா கெட்ரொவா) பற்றி அந்தக் கிராமத்தில் உள்ளவன் தன் தலை முடியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறான்: “ How many hairs I have. She is a widow of the same number of husbands!”
தன் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட அந்தப் பெண். அவள் முலைகளைப் பார்த்து சோர்பா சொல்கிறான் : “It is big! But she shakes it well!”
அவள் கணக்குப்படி “ Four times a widow.” தன் முன்னாள் கணவர்கள் பற்றி புல்லரிப்புடன் சோர்பாவிடம் எப்போதும் விவரிப்பவள்.



இன்னொரு விதவை பாவ்லோ (ஐரின் பப்பாஸ்) - அந்த கிராமத்தில் எவன் கையிலும் சிக்க மறுப்பவள். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் அவளை ஒருதலையாக உயிருக்குயிராக காதலிக்கிறான். “ The more she spits, the more he wants her.

இவள் பாசிலுக்கு இளகி விடுகிறாள். பாசில் தயக்கம் நிறைந்தவன்.
சோர்பா மிகுந்த பிரயாசையுடன் பாசிலை அவளுக்கு இணங்கச்சொல்லி வற்புறுத்தும் நிலை. “ Boss! God, who is a clever devil has put a gift in your hands from Paradise.”
But Basil doesn’t want ’trouble’. But Zorba insists upon him “ Boss! Life is trouble, only death is not. To be alive is to undo your belt and look for trouble.”
Basil is an unaffected naïve person?
ச்சே போய்யா என்று சலித்து சோர்பா “ On a deafman’s door, You can knock for ever.”

பாசில் இளகி, பாவ்லோவின் இல்லத்துக்கு சென்று அவளோடு கலக்கும்போது அது அவள் உயிருக்கு உலை வைப்பதாகி விடுகிறதே! ஊரே அவமானப்படுத்தி அவள் கொல்லப்படுகிறாள்.

பாவ்லோவாக நடிக்கும் ஐரின் பப்பாஸ் 1961ல் ’கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ படத்தில் நடித்தவர். கிரகெரி பெக், ஆந்தனி க்யின், டேவிட் நிவன் நடித்த இரண்டாம் உலக யுத்தப்படம்.
ஐரின் பப்பாஸ் இன்று 90 வயது கிழவி!


சோர்பா ஜீவனுள்ள ரத்தமும் சதையுமான கதாபாத்திரம்.
“My brain gives me crazy ideas.”
“When my boy Dimitri died I danced. Every body said ‘Zorba is mad’. But only the dancing stops the pain.”
“The age kills the fire inside of a man, he hears death coming.”

சோர்பா பல பெண்களுடன் தொடர்பு கொள்பவன்.
"How can I not love them? Poor weak creatures... and they take so little, a man's hand on their breast, and they give you all they got."
"God has a very big heart but there is one sin he will not forgive..if a woman calls a man to her bed and he will not go..."
தன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளும் பூபுலினாவை உதாசீனப்படுத்துவதில்லை. அவளைத் திருமணம் செய்யவும் தயங்காதவன். பூபுலினாவின் மரணம் எதிர்கொள்ளும் விளைவுகள்.

A great big crazy plan. மரங்களை வெட்டி மலையிலிருந்து கீழிறக்கும் சோர்பாவின் திட்டம் படுதோல்வியில் முடிகிறது.


பாசில் மிகவும் கற்றுத் தேர்ந்த அறிஞன். எழுத்தாளன். பாமரனான சோர்பாவைப் பார்த்து ’கலாச்சாரம் என்றால் என்ன?’ ’விடுதலை என்றால் என்ன?’ என்று திடுக்கிட்டுப்போகிறான். தான் வாசித்த புத்தகங்கள் தராத தரிசனத்தை சோர்பா தருகிறான் எனும் நிலையில் திகைத்துப்போகிறான்.
“ Boss! You’ve got everything except one thing – Madness. A man needs a little madness or else he never dares cut the rope and be free.”
“ Boss! I have never loved a man more than you.”




மனம் தளராத சோர்பா மீண்டும் ஒரு பெரு நகரத்திற்கு ஒரு பெரும்பயணத்திற்கு ஆயத்தமாகி விடுகிறான்.

பாசில் தனக்கு நடனம் கற்பிக்க வேண்டும் என்று சோர்பாவை கேட்கிறான். கொப்பளிக்கும் உற்சாக உத்வேகத்துடன் சோர்பா கிரேக்க சர்டாகி நடனத்தை கற்றுத்தருகிறான். இந்தப் படத்தின் மூலம் இந்த கிரேக்க நாட்டுப்புற நடனம் உலகப் பிரபலமானது.

Both Zorba and Basil laugh at the catastrophe.
வீழ்ச்சி மனித மாட்சிமையை மேலெடுத்துச் செல்லுமா?!
...................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_6441.html

Oct 30, 2016

T.R. ராஜகுமாரி


(குமுதம் லைஃப் தீபாவளி மலரில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.)

எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமண்யம் (பத்மா சுப்ரமண்யத்தின் அப்பா) அங்கே துரு,துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். Visibly Smart ! ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.

இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரின் தாயார்.
ராஜகுமாரியின் தாயாருக்கு தனலட்சுமி சகோதரி.


தமிழ் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக்கன்னி டி.ஆர் ராஜகுமாரி.
Vamp role என்றால் அதற்கு Role model ராஜகுமாரி தான். முதன் முதலான Item Dancer.



’மன்மதலீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்’
என்று ’ஹரிதாஸ்’(1944) படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் இவரைப்பார்த்துத் தான்.

’சந்திரலேகா’ படத்தில் எம்.கே.ராதாவுடனும் ரஞ்சனுடனும்,

’குலேபகாவலி’(1955)யில் எம்.ஜி.ஆரின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி.
”வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே!”

இவருடைய தம்பி பெஞ்சாதி பி.எஸ்.சரோஜா எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக நடித்த புதுமைப்பித்தனில் ராஜகுமாரி “ மன மோகனா, மறந்து போவேனா” பாட்டு பாடி பாலையாவை ஆட்டுவிப்பார்.

இவரிடம் ஒரு விஷேச நளினம் இருந்தது. சல்லடை போட்டுத் தேடினாலும் அதை வேறு எந்த ஒரு நடிகையிடமும் காணவே முடியாது.
அவர் பார்க்கும் ’பார்வை’ மிடுக்குடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கு அந்த அற்புதமான கண்கள் தான் மூலதனம். வாள் விழி வீச்சு!

(Give a big hand! Clap your hands together! தட்றா.. தட்றா..தட்றா….தட்றா!)


வில்லியாக வரும்போது அந்தக்கண்களில் கொப்பளிக்கும் ’குயுக்தி’, கதாநாயகியாக வரும்போது அதே கண்களில் தெறிக்கும் ’குறும்பு’.


’குலேபகாவலி’, ’புதுமைப்பித்தன்’ இயக்குனரான தன் தம்பி ராமண்ணாவின் ’பெரிய இடத்துப் பெண்’(1963)ணில் எம்.ஜி.ஆருக்கு அக்காவாக நடித்தவர். தன்னை கற்பழித்த எம்.ஆர்.ராதாவை நள்ளிரவில் கொல்ல வருவார். அந்த காட்சிகள் திகிலாக இருக்கும்.


நடிகை ராஜகுமாரி தன் பெயரிலேயே கட்டிய தியேட்டர் தி. நகர் பாண்டி பஜாரில் அந்தக்காலத்தில் ஒரு லேண்ட் மார்க்.
ராஜகுமாரி பஸ் ஸ்டாப்!

சினிமா இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பதற்றமாக படபடப்பாக, கோபமும், ஆவேசமுமாக பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் ராமண்ணா செட்டில் இருப்பதே தெரியாது. அவ்வளவு அமெரிக்கையானவர். சாந்த சொரூபி. இடி போன்ற பிரச்னைக்கும் கலங்கவே மாட்டார். அப்படிப்பட்டவரின் தமக்கை என்பதும் ராஜகுமாரிக்கு பெருமை சேர்க்கிற விஷயம் தான்.

தன் தம்பி ராமண்ணாவின் மூன்று மனைவிகளையும் அரவணைத்து, குடும்பத்தில் சிக்கல் இல்லாத நிம்மதி நிலவ, நேர்த்தியான திறமையுடன் செயல் பட்டவர்.

சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு புண்ணியவதி.

தன் குடும்பத்திற்காக, தம்பிக்காக அவர் தன்னை தியாகம் செய்த மெழுகுவர்த்தி. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தவர். Sage-ing while age-ing.
மரம் முத்துனா வைரம்! மனுஷப்பிறவி முத்துனா புத்தி! ஞானம்!



1992ம் ஆண்டு துவக்கத்தில் திருச்சியில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நான் ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்த போது ஒரு கணவானுடன் வந்த அவருடைய மனைவி அப்படியே அச்சு அசலாக ஹரிதாஸ்,குலேபகாவலியில் பார்த்த நடிகை ராஜகுமாரி போலவே இருந்ததைப்
பார்த்து பிரமித்துத்தான் போனேன்.
அந்த சீமாட்டியிடம் நான் நாசூக்காக கேட்டேன் ‘ நீங்கள் சினிமா டைரக்டர் ராமண்ணாவுக்கு சொந்தமா?’ ஒரு வேளை ராமண்ணாவுக்கு மகள் தன் அத்தை சாயலில் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே!
அவர் பதில்: ”இல்லை..இல்லை”


பின்னாளில் பல வருடங்களுக்குப்பின் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்” பாட்டில்
நடிகை சினேகாவின் சிரிப்பில் ராஜகுமாரி சாயல் கொஞ்சமா தெரிந்தது!

…………………………………



Oct 28, 2016

Left-handed compliment


எங்கள் கல்லூரிக்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்தார். மாணவர் யூனியன் அழைப்பின் பேரில். பணம் கொடுக்க வேண்டிய மாணவர் செக்ரட்டரி ரொம்ப தந்திரமாக அவர் கிளம்பும்போது மறைந்து விட்டான். முட்டாள். He had buried his head in the sand. அவன் என்ன நினைத்தான் என்றால் இந்தத் தொகையை அவரிடம் கொடுக்காமல் தப்பித்து விட்டதாக.

கண்ணதாசன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போனவுடன் டிரைவரிடம் “பணம் வாங்கி விட்டாயா?” என்று கேட்டிருக்கிறார். டிரைவர் ‘இல்லையே.. யாரும் கொடுக்கவில்லையே!’
“ போய் உடனே வாங்கிக்கொண்டு வா!”
கல்லூரிக்கு வந்து கண்ணதாசனுடைய டிரைவர் ஆஃபிஸில் சீன் க்ரியேட் செய்து விட்டான். மாணவர் யூனியன் செக்ரட்டரியைத் தேடிப்பிடித்து பணத்தை வசூல் செய்து கண்ணதாசன் டிரைவரிடம் கொடுத்தனுப்பினார்கள்.
………………………………………………………………………………………………..


ஜூலியானாவை திருமணம் செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஜெமினி கணேசனை Chief guest ஆக சிவகாசியில் ஒரு க்ளப் அழைத்திருந்தார்கள். அவர் அங்கிருந்து என் பெரிய மாமனாரின் வீட்டிற்கு வருவதாக உத்தேசம். அவரை அழைத்துக்கொண்டு வர என் பெரிய மாமனாரும் நானும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து போயிருந்தோம்.

அந்த க்ளப் நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்தவுடன் ஜெமினி தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பும் நேரம். க்ளப்பின் தலைவர், செக்ரட்டரி எவரையும் காணவில்லை. அவருக்கு ஒரு தொகை தர வேண்டும். அந்த தொகையும் அவருக்கு கிடைக்கவில்லை.
ஜெமினி பொறுமையிழந்து “என்னய்யா?... எங்கய்யா ஒங்க ப்ரசிடெண்ட். ஒங்க செக்ரட்டரி.”
க்ளப் மெம்பர் ஒருவர் “ சார்.. அவசர வேலையா திடீர்னு கிளம்பிட்டாங்க சார்…”
“ எங்கய்யா பணம்…? “ ஜெமினி கைவிரல்களை விரித்துக் கேட்டார்.
” சார்… மதுரையில உங்களுக்கு பாண்டியன் ஹோட்டல்ல ரூம் ஏற்பாடு செஞ்சிருக்கோம் சார்….” தலையை சொறிந்தார் க்ளப் மெம்பர்.
ஜெமினி “ எனக்கு கொடுக்க வேண்டிய பணம் எங்கய்யா?”
பதில் சரியாக வரவில்லை. மீண்டும் இன்னும் சில மெம்பர்கள் மலுப்பலாக ஏதேதோ சொன்னார்கள்.
ஜெமினி கோபமாகி விட்டார். “ மிஸ்டர்! I’m a multi-millionaire. That’s a different thing. நான் இங்க உங்களுக்காக வந்திருக்கேன். என்னை ஒரு மகாராஜா மாதிரி ட்ரீட் பண்ணனும்! You are insulting me.”
என் பெரிய மாமனார் அந்த க்ளப் மெம்பர்களிடம் பேசி பணத்தை வாங்கி ஜெமினியிடம் கொடுத்தார்.
It was very hard for Gemini to swallow this unpleasant occurrence and he hauled them over the coals. “ எங்கிட்ட இப்படி சில்லியா நடந்துக்கறாங்க. இதுவே சரத்குமாரிடம் இப்படி செஞ்சாங்கன்னா அடி வெளுத்துடுவான். ஆமா… சரத்குமார் அடிச்சிடுவான்.பந்தாடியிருப்பான்.”

……………………………………………………….



Oct 27, 2016

”Hypocrisy”


பத்து பேர் இருக்கிற இடத்தில் எப்போதும் என்னுடைய நகைச்சுவை வெடிகள் சரம் பட்டாசு போல கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும். சிரித்து முடியவில்லை என்று வயிற்றைப்பிடித்துக்கொள்வார்கள். I’m always seriously humourous.

இது இன்று நேற்று அல்ல. பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து என்னுடைய நகைச்சுவை விருந்து நடந்தே வந்திருக்கிறது. In the trueman there is a joker concealed – who wants to amuse and delight others.

சில வருடங்களுக்கு முன் என்னைப் பற்றி இணையத்திலேயே சினிமா நடிகர் ஒருவர் சொன்னார்.
“ ராஜநாயஹம் தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வந்திருக்க வேண்டியவர். இயக்குனராக முயன்று தோற்றார்.”

இந்த நடிகர் கல்லூரி கால நண்பர். சினிமாவில் கதாநாயகனாகக் கூட நடித்தவர்.
மேலே சொன்னது பற்றி நான் மறுக்க ஒன்றுமில்லை. என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கலாம். என் தகுதி, தோல்விகளை அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம்.

’இனிய நண்பர் ராஜநாயஹம்’ என்பதாக என்னை விளித்திருந்தார். சந்திக்க வேண்டும் என்ற தன் ஆர்வம், ஆவலையும் வெளிப்படுத்தியிருந்தார். சந்தோஷம். But I have to steel my heart against sentiments of kindness and pity.

நான் ஒரு மிக அழகான விலையுயர்ந்த ஃபாரின் கோட் இவருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன். சட்டை கூட கொடுத்திருக்கிறேன். அதனால் நான் அந்த நடிகருக்கு ஒரு இனிய நண்பன் தான் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும்?

இதை அடுத்து அவர் சொன்ன ஒரு விஷயம் தான் வடி கட்டின பொய்.
“ ஆங்கில இலக்கியம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.” என்று ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டிருந்தார்.

ஆங்கில இலக்கியம் படித்தவன் ராஜநாயஹம் என்பது உண்மை தான். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் அதை அடுத்து அந்த நடிகர் சொன்ன வார்த்தைகள் தான் கடைந்தெடுத்த புளுகு.
ராஜநாயஹத்திற்கு இலக்கிய உலகில் ஒரு அடையாளம் இருக்கிறது. அதற்கான க்ரெடிட்டை இவர் தனக்கு எடுத்துக்கொண்டு விட்டார்!
இலக்கியத்திற்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லாத  நபர்!
’நாங்கள்’ என்பது ஏதோ ஒரு பெரிய இலக்கிய வட்டமோ?

“…. ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.”

Why should one dress me in deceptive, false statement?
ராஜநாயஹம் செத்த பிறகு தானே இப்படி ஒரு ஆள் பொய் சொல்லலாம்.

எனக்கு தெரியும். அந்த நடிகருக்கும் தெரியும். இவரோ அல்லது இவரைச் சேர்ந்த யாருமோ எனக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவே இல்லை என்கிற உண்மை.
இந்த க்ரெடிட்டை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் சவ்வாஸ் பரூக் alias பெரிய சேட்டுக்குத் தான் கொடுக்க முடியும். ஆங்கில இலக்கியம் நான் முதலாமாண்டு படிக்கும்போது பெரிய சேட்டு மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவர். ஜெயகாந்தனை இவர் தான் எனக்கு வாசிக்கக் கொடுத்தவர்.
சுந்தர ராமசாமியை கல்லூரி காலத்தில் நான் எப்படி முதல் முதலாக வாசித்தேன் என்பதை ’பிரசாதம் செய்த மாயம்’ என்ற என் கட்டுரையில் தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்.
அந்த நடிகரோ அப்போது எகனாமிக்ஸ் தமிழ் மீடியம்.
இவரிடம் காலத்தால் கொஞ்சமும் transformation ஏற்படவேயில்லை என்பதே இந்தப்பொய் மூலம் தெரிய வருகிறது. பக்குவமடையவேயில்லை. Stagnant person. Hypocrisy இருப்பதால் தான் இப்படியெல்லாம் தம்பட்டமான புளுகு வருகிறது. Stay humble or perish.
யார் அந்த சினிமா நடிகர் கேள்வியை யாரும் கேட்கவே வேண்டாம். ஹேஸ்யமாக இவர்?, அவர்!
- இப்படி கமெண்ட் செய்யவும் வேண்டாம். மார்க்கெட் போன நடிகராக சொல்ல முடியாது. மார்க்கெட்டுக்கே வராத நடிகர்.
……………………………………………………………..








Oct 21, 2016

1.காகம் 2.மூன்று கவிதைகள்


ஒரு காக்கா ஜன்னல் திரையை மூக்காலேயே தூக்கி கா..கா.. என்று ’எனக்கு எங்கே சாப்பாடு’ என்று உரிமையோடு கேட்குமளவுக்கு அன்னியோன்னியம். அன்னியோன்னியம் என்று சொல்லமுடியுமா? அது சந்தேகமாகத் தான் பார்க்கிறது. 

காக்காயை யாரும் பிடிக்க முயற்சிப்பதில்லை. கிளி போல கூண்டில் போட்டு வளர்க்கப்போவதில்லை. அல்லது கோழி போல யாரும் அறுத்து சமைத்து சாப்பிடவும் தயாராயில்லை. ஆனாலும் அதற்கு என்னா ஒரு நெனப்பு. ஜன்னல் திரையைத் தூக்கி கா..கா என்று நிதமும் ஒரு மூன்று முறையாவது வாலண்டியராக காக்காவே கூப்பிடும்போது அதற்கு ஏதேனும் உணவு, பலகாரம் கொடுக்க ஒவ்வொரு முறையும் ஜன்னலை நெருங்கும் போதே உடனடியாக ரொம்ப கன உஷாராக கொஞ்சம் ஒதுங்கி, பறக்க ஆயத்தமாகி
“ சாப்பிடக்கொடுக்கிற சாக்கில் என்னை பிடிக்க நினைத்து விடாதே.. நான் ரொம்ப உஷாராக்கும். என்னை தொட்டு விடாதே.. நான் ரொம்ப மடி, ஆச்சாரம் ” என்பதாகத் தான் அதன் ‘Body language’.
……………………………………………………………..



இரவில் மூங்கில் இளங்காற்று வீசும்போது ஆடி அதன் உச்சி நிலவை தொடுவதாக நிமிர்ந்து பார்க்கும் கண்ணுக்கு தோன்றுகிறது. டாப் ஆங்கிள் ஷாட்.
கவிஞன் பார்வையில் தோன்றும் படிமம்.
முலை என்கிற வார்த்தை இன்றும் கூட வெகு ஜன இதழ்களில் கெட்ட வார்த்தையாகத்தான் இருக்கிறது.

எஸ்.வைதீஸ்வரன் எழுதியுள்ள முலை கவிதைகள் மூன்று.
1.கனிவு
இரவின் ரகஸியத்தில்
வானம் காட்டிய ஒளிமுலை- ஒன்று.
அதை மெதுவாய்
இளமூங்கில் நுனிகள்
நெருடிப் பார்க்கும்
தென்றலில்..
இரவின் நிலவை மட்டுமல்லாது சூரியனையும் முலை படிமத்தில் அடக்கும் கவி.
2.துள்ளல்
மேலாக்கு வானம்
இழுத்து மூட இயலாத
இயற்கை முலைகளா, சூரிய சந்திரன்?
வேளைக்கொரு முலை மாற்றி
ஒளிப்பால் கொடுப்பதேன்,
பூமிக்கு?
தினம் குடித்து
வெளி உருண்டு ஆடும்
பிள்ளை மேதினிக்குள்
நானும் துள்ளுகிறேன்?
மூன்றாவது கவிதை ஒரு குழந்தையின் பொருமல். தவிப்பு.
3. குழந்தை
எனக்கும்
இந்த முலைக்கும்
எத்தனை நாள் சம்பந்தமோ?
தெரியவில்லை.
இந்தக் கையும் காலும்
என் கட்டற்று
கண்டபடி துள்ளுவதையும்
புரியாமல்
பொறுத்துக் கொள்கிறேன்.
ஆனால்
இந்தக் கட்டைவிரல் மட்டும்
என் கைக்கெட்டாமல்
வாயை ஏமாற்றும்
ஆத்திரந்தான்…..
……………………………………………………………………………

Oct 16, 2016

உதயசூரியன்



கி.அ.சச்சிதானந்தம் என்றாலே மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம் யாருக்கும் வராமலிருக்காது. மௌனியைப் பிரபலப்படுத்தியதில் இவருடைய பங்கு பெரியது.

 சச்சிதானந்தத்தின் இமயமலை Trekking மறக்கமுடியாது. இமயமலை நடைப்பயணத்திற்கான ஆயத்தத்திற்காக எவ்வளவோ காலம் தினமும் கோபாலபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு தினமும் நடந்து போய்விட்டு திரும்பி வந்திருக்கிறார்.
சிறந்த மொழி பெயர்ப்பாளர். பெக்கட் எழுதிய ”Waiting for Godat"  நாடகத்தை 
( கோடாவுக்காக காத்திருத்தல்) அழகாக மொழிபெயர்த்தவர்.
ந.முத்துசாமியின் ஐம்பதாண்டு கால நண்பர். ஓவியர் மு. நடேஷ் இவரைப்பார்த்ததும் உற்சாகமாகி 

“நடமாடும் சிறுகதை!” என்பார். பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரனின் உற்ற தோழர் சச்சிதானந்தம்.


இங்கே நான் சொல்ல வருவது தமிழக அரசியல் சம்பந்தப்பட்டது.
Don’t be too surprised by what you hear. One can’t be sure about anything these days. Just giving it to you as I hear it.
மு.கருணாநிதி ஒரு காலத்தில் சச்சிதானந்தத்தின் வீட்டில், மாடியில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.

ஒரு முறை சி.என்.அண்ணாத்துரை அந்த வீட்டிற்கு கருணாநிதியைப் பார்க்க வந்திருக்கிறார்.

வீட்டின் ’கேட்’ இவர் கையினால் திறக்கப்படுகிறது. மாடியேறிப் போய் கருணாநிதியை பார்த்து விட்டு கீழே இறங்கியவர் வீட்டு கேட்டில் உதய சூரியன் வடிவமைக்கப்பட்டிருப்பதை நின்று உற்று கவனிக்கிறார்.
There is a silver lining out there, if we just step back and take a fresh look!
ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல மீண்டும் மாடியேறி மூக்குப்பொடியை உறிஞ்சியவாறு கருணாநிதியை பார்த்து விட்டு அண்ணா சொல்லியிருக்கிறார்.
”நம் கட்சி திமுகவுக்கு சின்னம் உறுதி செய்து விட்டேன்.
உதய சூரியன்!”

உடனே,உடனே Power Monger கருணாநிதியின் எண்ண ஓட்டம் இப்படி இருந்திருக்குமோ? ”Let not ’the rising sun’ see my black and deep desires!”
மேக்பத் வார்த்தைகள் : Let not light see my black and deep desires.
…………………………………




Oct 11, 2016

Kumudam 'Kisu Kisu' Special


It is whispered என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
’கிசுகிசு’ என்ற வார்த்தையை தமிழுக்கு கண்டு பிடித்துக் கொடுத்து பிரயோகம் செய்து பிரபலமாக்கியதே குமுதம் பத்திரிக்கை தான்!
கிசு கிசு உண்மையா பொய்யா?
It can’t all be smoke without fire!
ஹாலிவுட் கிசுகிசு எல்லாம் வேறு ரகம். பெரும்பாலும்
கிசு கிசு என்று சொல்லும்படி ரகசியமும் இருக்காது. யாரெல்லாம் ஹோமோ செக்சுவல், யார் யாரெல்லாம் பைசெக்சுவல், லெஸ்பியன் என்பதெல்லாம் வகை பிரிப்பதே ரசிகனுக்கு பெருங் கடமை!. சம்பந்தப்பட்ட நடிகை, நடிகரே தான் என்ன வகை என்பதைப் பற்றி வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். இந்தக்குழப்பத்தில் Straight ஆன நடிகர் பற்றி கூட ஹோமோ செக்சுவலா? என்று சந்தேகம் இங்கே வந்து விடுவதுண்டு.

அப்படி டாம் ஹாங்க்ஸ் பற்றி சந்தேகம் வந்த போது “ He is not a homosexual. A straight person” என்று விளக்கினேன்.
காதல், திருமணம் என்று நடிக நடிகையரைப்பற்றி ஹாலிவுட்டில் கிசு கிசு எதுவும் கிடையாது. எதையும் யாரும் பெரும்பாலும் மறைக்க முயல்வதில்லை.
பாலிவுட்டில் tabloid magazines எழுதுவதில் தங்கள் பெயர் கிசுகிசுவில் வரவேண்டும் என்று இந்தி நடிக நடிகர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள்.

அந்தக் கால தமிழ் திரை நடிகர் நடிகைகளில் இப்படி இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்கிற கிசுகிசு செய்திகள் என்பதை விட பச்சை பச்சையாக மஞ்சள் பத்திரிக்கை இந்து நேசன் தான் 1940களில் எழுத ஆரம்பித்தது. அதன் ஆசிரியர் கொலை செய்யப்பட்டு எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், பட்சி ராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மூவரும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்குப் போக நேர்ந்தது. ’லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ பரபரப்பாக ஆனது. க்ளாரா என்ற நடிகை மாதுரி தேவியின் அண்ணன் ஒரு பிரபல ரவுடி. அந்த ரவுடிக்கு கூட இந்தக் கொலையில் சம்பந்தமுண்டு.

பாகவதர் உச்சத்தில் இருந்த போது இந்த வழக்கில் சிறை சென்றார். விடுதலையான பின் அவர் திரையுலக வாழ்வு சோபிக்கவேயில்லை. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளானார்.

என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலையான பின் எந்தப்பாதிப்பும் இன்றி உற்சாகமாக,சுறுசுறுப்பாக இயங்கினாலும் பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்கவில்லை.
தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன் இருவருமே ஐம்பது வயதை எட்டாமலே மறைந்து விட்டார்கள்.
சினிமாவில் பல பிரபல ஜோடிகள் பற்றி மக்கள் அறிவார்கள்.
ஜெமினி -சாவித்திரி
எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி
ரவிச்சந்திரன் -ஷீலா
பிரபலமான இந்த ஜோடிகள் இணைந்ததும் பிரிந்ததும் தெரியும். ஆனால் அதற்கும் பல ஆண்டுகள் முன் இவர்களுக்கு முன் இதே போலஇணைந்து பிரிந்த ஜோடி ஒன்று பற்றி பலருக்கு தெரியாது.
டி.ஆர் . மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி !

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா ,இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவை கட்டிலில் கட்டிவைத்தேன் போன்ற பாடல்களை பாடிய
எஸ் வரலக்ஷ்மி தான் மகாலிங்கத்துடன் பல காலம் முன் வாழ்ந்தார்.

இருவரும் அப்போது திரையுலக பிரபல ஜோடி என அறியப்பட்டிருந்தார்கள். பாடல்சத்தமாக ஒலிக்கும் நடிகர் மகாலிங்கம் காரில் வரலக்ஷ்மியும் சேர்ந்து ஸ்டூடியோவுக்கு போவதை ரசிகபெருமக்கள் சாலையோரங்களில்நின்றபடி பார்த்து கையசைத்து வாழ்த்துவது தினம் பார்க்க கிடைக்கும் காட்சியாம்.
அப்போது மகாலிங்கத்திடம் 'பிலிம்ரெப்ரசெண்டேடிவ்' வேலை பார்த்தவர் ஏ.எல்.சீனிவாசன் . கண்ணதாசனின் அண்ணன். பின்னாளில் சாரதாஸ்டூடியோ, ஏ.எல்.எஸ் புரடக்சன் என முதலாளியானவர்.

வாழ்க்கை விந்தையானது. பல வினோத திருப்பங்கள் நிறைந்தது.
டி ஆர் மகாலிங்கம் எஸ் வரலக்ஷ்மி நட்சத்திர ஜோடி பிரிந்தது. மகாலிங்கம் தயாரித்த இருவரும் இணைந்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மன வேறுபாடுக்கு காரணமாக இருந்திருக்கும்.
சில காலத்திற்கு பின் எஸ் வரலக்ஷ்மி நடிகர் மகாலிங்கத்திடம்முன்பு பிலிம் ரெப் வேலைபார்த்த
ஏ எல் சீனிவாசனின் மனைவியானார். அவருடனேயே வாழ்ந்தார்.
கண்ணதாசன் " மாலையிட்ட மங்கை "(1958)படத்தை
டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கி தயாரித்தார்.
வரலக்ஷ்மி சிவாஜியின் ஜோடியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்தார்.
கே எஸ் ஜி யின் பணமா பாசமா (1968)படம்
எஸ் வரலக்ஷ்மியை 'அம்மா' நடிகையாக பிரபலமாக்கிவிட்டது.
நட்சத்திர ஜோடி டி.ஆர் மகாலிங்கம்-எஸ்.வரலக்ஷ்மி பிரிந்து தலைமுறை காலங்களுக்கு பின்
ஏ பி நாகராஜன் இயக்கத்தில்
ராஜ ராஜ சோழன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும்
எஸ் வரலக்ஷ்மியும் ஒன்றாக பாடி நடித்தார்கள்.
" நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க " சீர்காழி பாடுவது
" நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க " டி ஆர் மகாலிங்கம்
" தஞ்சமென வந்தோர்க்கு தஞ்சம் வழங்கும் தஞ்சை பெருவுடைய சோழனே நீ வாழ்க " எஸ் வரலக்ஷ்மி தொடர்ந்து பாடுவது,
பின் சீர்காழி,மகாலிங்கம்,எஸ் வரலக்ஷ்மி மூவரும் சேர்ந்து " வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கு விண்ணுயர் பெரியகோவில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க !"
"தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !"
ஆனால் இந்த படம் வந்த காலங்களில் ஏ.எல்.எஸ் மனைவியாகவே எஸ்.வரலக்ஷ்மி அறியப்பட்டிருந்தார்.
………………..


ஜி. வரலட்சுமியின் சொந்த வாழ்க்கை பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டதுண்டு. இவர் பிரபல இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவின் மனைவி.
ஜி.வரலட்சுமி குலேபகாவலியில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர். சிவாஜியுடன் நான் பெற்ற செல்வம், அரிச்சந்திரா படங்களில் கதாநாயகி.
அரிச்சந்திரா இவருடைய சொந்தப்படம். இந்தப்படத்தை அவருடைய கணவர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் தான் இயக்கினார்.
பின்னாளில் ஜெய்சங்கரின் ’குழந்தையும் தெய்வமும்’, ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’ படங்களில் வில்லியாக நடித்தவர். மிடுக்கு, கம்பீரமுள்ள நடிகை.
இவருடன் சினிமா கேமராமேன் ஆர்.ஆர். சந்திரன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஜி.வரலட்சுமிக்கு குஸ்தி சண்டை மீது மிகுந்த ஆர்வம் வந்தது. தாராசிங், கிங்காங், அஜித்சிங் ஆகியோரின் குஸ்தி சண்டைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமானதோடு நிற்கவில்லை. இவரிடம் வகையாக சிக்கியவர் பயில்வான் அஜித் சிங். அஜித் சிங் மீது மையல் கொண்டு அவருடனேயே சுற்றினார்.அவருடனேயே வாழ்ந்தார். அஜித் சிங் குஸ்தி சண்டையில் தோற்றால் வரலட்சுமி அழுது அரற்றினார். அஜித்சிங் தான் தன் கணவர் என்றே பேட்டி கொடுத்தார்.
Published in Kumudam Kisu Kisu special last week.
............................................

Oct 10, 2016

புத்திர சோகம்


You don't choose a life. You live one.
"The Way" is a 2010 American movie directed, produced and written by Emilio Estevez, starring his father Martin Sheen. Emilio himself acted as son Daniel!
மார்ட்டின் ஷீன் நடித்த “The way”. யாத்திரைக்கு சென்ற மகன் புயலில் சிக்கி கொல்லப்படுகிறான். அப்பா மார்ட்டின் ஷீன் மகன் முடிக்காமல் விட நேர்ந்த அந்த யாத்திரையை அதே பாதையில் இவர் தொடங்குகிறார்.
Tom: [Having been handed the box with his son's ashes] I'm going to walk the Camino de Santiago.
Captain Henri: But you haven't trained for this walk, and no disrespect, you are more than 60 years old.
Tom: [shrugs] So it'll take me a bit longer than most.
Captain Henri: You'll be lucky if you finish in two months.
Tom: Well, then I'd better get started. We're leaving in the morning.
Captain Henri: [Looking a bit confused] "We"?
Tom: [Holding up the box with his son's ashes] Both of us.
மகனுடைய சாம்பலுடன் trekking போகிற தகப்பன்.
Tom: I'm sorry about your baby.
Sarah: I'm sorry about yours.
Tom: Mine was almost 40.
Sarah: Yeah, but he'll always be your baby.
......
Tom: You believe in miracles, Father?
Padre Frank: I'm a priest. It's kinda' my job.

...


ஜே.எம் கூட்ஸியின் மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க் நாவல் தாஸ்தயேவ்ஸ்கியை நாயகனாகக் கொண்டது.

“Stiff shoulders humped over the writing-table, and the ache of a heart slow to move. A tortoise heart.”

இறந்து விட்ட தன் மகன்(step son) வாழ்ந்த அதே இடம், அதே அறையில் தாஸ்தயேவ்ஸ்கி வந்து தங்குகிறார்.

Hanging over the novel is a scene from Coetzee's own life: the death of his son at 23 in a mysterious falling accident. 

கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
புத்திரனைப் பறி கொடுக்கும் தகப்பனாக ” The Way” படத்திலும்
‘The Master of Petersberg’ நாவலிலும் நாயகர்கள் அந்தத் துயரத்தை இப்படி எதிர் கொண்டு தவிக்கிறார்கள்.
............................

புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.
                                                 Killing of Indrajit painting

ராவணனின் புத்திர சோகம்:
”எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
- கம்பன்

......................................................


Oct 6, 2016

Untoward Incident


"Confusion has made it's masterpiece now"
Shakespeare in  Macbeth  (Macduff's popular dialogue)


என்னிடம் இருந்து என் எழுத்து விஷயங்களை எடுத்து பலரும் கையாள்வது ஒரு புறம் இருக்கட்டும்.
வினோதமான ஒரு திருட்டு சமீபத்தில் நடந்திருக்கிறது.
ஒரு கட்டுரை. அதில் இந்த என் புகைப்படம் வெளியாகியிருந்தது.



தினமணி.காமில் பழைய நடிகை தேவிகா பற்றி ஒரு கட்டுரை.


என்னுடைய புகைப்படத்தை அதாவது ராஜநாயஹத்தின் ஃபோட்டோவை (Rajanayahem in waist coat)என் ப்ளாக்கில் இருந்து எடுத்து தினமணி.காமில் தேவிகாவின் கணவர் தேவதாஸ் பற்றி எழுதப்பட்ட இடத்தில் வெளியிட்டிருந்தார்கள்.
அதை கண்டு பிடித்து இங்கே ஃபேஸ்புக்கில் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார் ஒரு நல்ல நண்பர். தமிழ்செல்வன் சிவா. 

எந்தக்காலத்து நடிகை அவர். என் புகைப்படம் அவருடைய கணவராக அறியப்பட பிரசுரமாவது விந்தையிலும் விந்தை.

என்னுடைய ப்ளாக்கில் ”சிக்கலான இழைகள்” பதிவிலிருந்து இந்த புகைப்படத்தை சுட்டிருக்கிறார்கள். அவசரக்குடுக்கைகள்!
’சிக்கலான இழைகள்’ பதிவில் அந்த புகைப்படத்தின் கீழ் ஒரு வரி குறிப்பு இப்போது எழுதி விட்டேன்!
ஏற்கனவே என்னுடைய பிரபலமான புகைப்படம் அது. இப்போது அதற்கு இப்படி ஒரு பிரபலம்!
ராஜநாயஹம்! உனக்கு இப்படி ஒரு popularity தேவை தானா? It is always better to be unpopular by your own choice!
அந்த என் ஃபோட்டோவை அந்த தினமணி கட்டுரையிலிருந்து நீக்குவதற்கு நான் மூன்று நாட்கள் போராட வேண்டியிருந்தது.

என் அப்பா காலத்து நடிகை தேவிகா!

என் அப்பா புகைப்படத்தை தேவிகாவின் புருஷன் என்று போட்டால் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

....

என்னை நேரில் பார்க்காமலே என் புகைப்படங்களைப் பார்த்திருப்பதால், சந்திப்பதற்கு முன்னே என்னை சாலையில் ஸ்கூட்டரில் போகும்போது பார்த்து விட்டு அடையாளம் கண்டவர் என் எழுத்தின் மீது அபிமானம் கொண்ட ’கிடாரி’ இயக்குனர் பிரசாத் முருகேசன்.
‘சார் இன்று சின்மயா நகர் பஸ் ஸ்டாப் அருகில் நீங்கள் வரும்போது பார்த்தேன்’ என்று அவர் செல் பேசியில் சொல்லி விட்டு மறு நாள் வீட்டிற்கு வந்து சந்தித்தார்.
இப்படியும் நடக்கிறது ஒரு சம்பவம்.

தினமணி வேடிக்கையும் நடக்கிறது!
…………………………………………………………..
photos
1.R.P.Rajanayahem
2.Devika
3.R.P.Rajanayahem's Father