Share

Jul 29, 2016

The Hindu Subha interviews R.P.Rajanayahem


The Hindu Subha interviews R.P.Rajanayahem
(Na. Muthuswamy's Vandichodai director)

The Hindu -Metroplus July 28,2016
Celebrating Tamil theatre
- Subha J Rao
A play written in 1968 by theatre doyen Na.Muthuswamy to impress critic Venkat Swaminathan comes alive on stage for the first time, nearly half a century after it was ideated.

But, everything in the play is still valid, says litterateur R.P.Rajanayahem, director ( in pic).

The play seeks to throw the spotlight on things that we normally shove under the carpet, such as the plight of labourers, the faceless people who keep a city in working order, and the innumerable fans of celebrities and political followers. “ It’s only here you have thonders (followers). It’s an equal system. And, what do they want? Just a smile keeps them going,” adds the director.
And while everyone has a mask on to hide their real faces, these people go faceless. “ Have you ever stopped to see the face of the man who lays tar on the road? They have no identity: one of them represents all; all of them are one,” says Rajanayahem, who has also been part of the film industry.
The play delves into the concept of metamorphosis. A goat turns into a goatherd after eating a powerful herb. “ Most of it is beyond belief, but it is possible. We speak about how knowledge must be shared by all, without withholding information.”

The play has a rhythm that Muthuswamy is known for. And so, Rajanayahem did not have to rework anything as a director. “It is about 50 minutes after rehearsals. If we edit out even a line, the meaning will change entirely,” he says. The director is well – versed with the works of Muthuswamy. He first read him as an 19 – year- old. “ I have grown in age and stature reading him.”

For the kind of scope the play has, it needed actors who would imbibe the spirit of the wriing, internlise it and understand the subtext. “ Luckily, we got actors who have the correct posture, gesture and speech,” says the director.
The play falls in the absurdist theatre category and Rajanayahem says that it will be appreciated and understood by those who read and keenly follow theatre.
How was the process of bringing alive such a feted script? It is sweet sorrow,” smiles Rajanayahem, 52. There is the delight of directing something written by a veteran, and the pressure to ensure it reaches the audience.”
However, says Rajanayahem, “even if I never direct again, I’d be happy I began my stint as theatre director with a gem as this.”


......................................................................



Jul 28, 2016

எம்.கே.ராதா


எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.
சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா திருமணம் செய்து கொண்டார். எம்.கே.ராதாவின் அப்பா கந்தசாமி முதலியார் தான் சதி லீலாவதி தயாரிப்பாளர், இயக்குனர்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, தங்கவேலு ஆகியோரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.

எம்.கே.ராதா கதாநாயகனாய் நடித்த ’சந்திரலேகா’(1948) மிகுந்த பொருட்செலவில் ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஞ்சன் வில்லன்.
அபூர்வ சகோதரர்கள் 1949ல் வந்தது. எம்.கே.ராதாவுக்கு இரட்டை வேடம்.
1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா.

சாத்வீகமான நடிகர். கோபத்தைக் கூட அடக்கமாக வெளிப்படுத்திய நடிகர்.
பின்னால் சில படங்களில் கதாநாயகர்களுக்கு அப்பா ரோல் செய்தார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்.கே. ராதாவை பார்க்கப் போயிருந்த எம்.ஆர்.ராதா சொன்னார்: ”அடப் பாவி! எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிற நான் நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ நோயாளியாகி விட்டாயே!”
எம்.ஜி.ஆருக்கு எம்.கே.ராதாவின் மீது மிகுந்த மரியாதை. அபூர்வசகோதரர்கள் படத்தை 1971ல் “ நீரும் நெருப்பும்” என்ற பெயரில் எடுத்து எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டார்.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது ஒரு நாள் கோட்டைக்கு போகும் போது திடீரென்று எம்.கே.ராதா வீட்டிற்கு காரை செலுத்தச் சொல்கிறார்.
”அண்ணே! எப்படி இருக்கீங்க” எம்.ஜி.ஆர் ஆரத்தழுவிக்கொள்கிறார்.
முதியவர் ராதா மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

கிளம்பத் தயாராகும் எம்.ஜி.ஆரைப் பார்த்து “ தம்பி! ராமு! எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டுப் போகலாமே!”
எம்.ஜி.ஆர் தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்:
“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”
”ராமு..”எம்.கே.ராதா உடைந்து போய் விம்முகிறார்.
………………………………………………………..


Jul 24, 2016

சிக்கலான இழைகள்

’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்
“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா டக்குனகோ டக்குனகோ” சௌராஷ்ட்ரா மொழி!
நான் காலேஜில் படிக்கும்போது என் நண்பன் A.K.ரவியிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
(A.K.Ravi is standing behind R.P.Rajanayahem)

சொட்டிஜா – விட்டுப்போ
சொன்னவா – விடமாட்டேன்(டி)
தாக்கெரஸ் – பயமாருக்கு
ஜாவா டக்குனகோ – போடி, பயப்படாதே
சினிமாவில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன் ஆகியோர் சௌராஷ்டிர இனத்தை சார்ந்தவர்கள். நடிகர்கள்
வில்லன் டி.கே.ராமச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா
சௌராஷ்டிரா தான்.

நடிகை தேவிகாவின் கணவர் (கரகாட்டக்காரன் கனகாவின் அப்பா!) எஸ்.எஸ்.தேவதாஸ் கூட சௌராஷ்ட்ரா தான். பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தேவதாஸ். ’வெகுளிப்பெண்’, ’முன்னூறு நாள்’ படங்களின் இயக்குனர். 

ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”

” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!
………………………………………………
பன்றி மலத்தை தின்று முகம் சுளிக்க வைக்கிறது.
கரப்பான் பூச்சியோ டாய்லட்டில் முகம் சுளிக்க வைக்கிறது.
இங்கே பன்றி வால் பற்றி கவிஞர் கலாப்ரியாவும்
கரப்பான் பூச்சி கால் பற்றி க.நா.சுவும் எழுதியவை

‘இன்றைய தினத்தை
ஆரம்பித்து வைக்கிறது
பன்றியின் சுருட்டை வால்
அழகு’
- கலாப்ரியா


“கரப்பான் பூச்சியைப் போல, என் எண்ணக்கால்கள் இருந்த இடம் விட்டு நகராமல் சைக்கிள் விடுகின்றன……………..
கரப்பான் பூச்சி அருவருப்பு தரும் பூச்சி தான். ஆனால் அது மல்லாந்து கிடந்து காற்றிலே கால்களால் சைக்கிள் விடும்போது என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடிவதேயில்லை. கவர்ச்சியும் தான் இருந்தது அதிலே!”
- க. நா.சு - ‘அசுர கணம்’ என்கிற பிரமாதமான நாவலில்
( நாவலா? குறு நாவலா?)
……………………………………….



Jul 23, 2016

தூறலாய் சாரல்


வேலைய சரியா செய்யாட்டி
“என்னய்யா திருப்பதி அம்பட்டயன் செரைச்ச மாதிரி”.
இது தேய்ந்த சொலவடை.
கி.ராஜநாராயணனுடன் போனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த போது இதற்கு மாற்றாக ஒன்று சொன்னார். மாற்றாக சொல்வதற்காக சொல்லவில்லை. அந்த நேர பேச்சில் சொல்ல வந்த ஏதோ ஒரு விஷயத்துக்கு பொருத்தி இதை சொன்னார்.
”ஊரான் பிள்ளைக்கு ஒரு பொம்பள குண்டி கழுவி விட்ட மாதிரி…” தன் பிள்ளைக்கு கழுவற மாதிரி ஊரான் பிள்ளை குண்டிய அவ சரியா, சுத்தமா கழுவி விட மாட்டா. 


……………………………………………

அகமெம்னான் நாடகம் மொழிபெயர்த்த ஜம்புநாதனுக்கு ஒரு ஓவியம் பெசண்ட் நகரில் பரிசளிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை வரைந்தவர் மு.நடேஷ்.
அதில் நடேஷ் ஒரு வாக்கியம் எழுதியிருந்தார்.
“சுவாதிகள் இல்லையடி பாப்பா”

நடேஷ் தன் ஓவியங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயம்: ”பிக்காஸோ தான் எனக்கு Reference point.ஆனா அவன் செஞ்சதுக்கு எதிரா தான் நான் செய்யறேன்!”

நடேஷ் சார்த்தரின் ”மீள முடியுமா” நாடகத்தில் நடிக்கும்போது
83 பக்க text ஐ நாலரை மணி நேரத்தில் மனப் பாடம் செய்தவர்!

இங்கே கூத்துப்பட்டறையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி
பரத நாட்டிய மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது நடேஷ் சொன்ன வார்த்தை “தமிழனின் தலையெழுத்துக்கு அண்ணாத்துரையின் மூக்குப்பொடி தான் மூலம்!” 
தமிழ் மண்ணில் திராவிட இயக்க அரசியல் தாக்கம் பற்றிய ரத்தினச் சுருக்க Sarcasm!
………………………………………………………………………

சில விளம்பரங்கள் எப்போதும் மறக்க முடியாதவையாய் மனதில் நிலைத்து விடும்.
ரொம்ப வருடங்களுக்கு முன் ரொம்ப funny ஆக ஒரு விளம்பரம்.
ஒரு கௌபாய் டைப் பாரில் பலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். Chubby ஆக தலையில் தொப்பி போட்ட ஒருவனை கிண்டலாக மற்ற குடிகாரர்கள் கவனிப்பார்கள். அந்த குண்டு ஆள் “ இந்த ஸ்ட்ராங்க் பீர் மஹாவீருக்கு எந்த சரக்கும் சர்பத் தான்டா!” என்று ஒரு ’மக்’கில் உள்ளதை கட,கட,மட,மடவென்று குடித்து விட்டு ஃப்ளாட் ஆகி விடுவான்.

மூன்று நான்கு வருடங்கள் முன் டி.வியில் அடிக்கடி காட்டப்பட்ட விளம்பரம்.
சிக்னல் நிறுத்தத்தில் ஒரு கார். பக்கத்தில் வியர்த்து விறுவிறுத்து ஒரு பள்ளிச்சிறுவன் சைக்கிளில் வந்து நிற்பான். காரில் உள்ளவர் பையனைப் பார்த்து முகம் சுளிப்பார். சிறுவன் தன் அழுக்கான ஆடையை அவசரமாய் திருத்தி, கழுத்து டையை ஒழுங்கு செய்து கொள்வான். புறப்பட பச்சை சிக்னல் விழும்போது பையன் சைக்கிளை அழுத்திக்கொண்டே காரில் உள்ள பணக்காரரைப் பார்த்து சொல்வான்
”ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்க்கிள். ஒரு நாள் அதுவும் வந்திடும்.”

நகைக் கடை விளம்பரங்கள் எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.அப்படியிருந்தும் ஒரு விளம்பரம் கொஞ்ச நாட்களுக்கு முன் நெகிழ்த்தியது.
தன் அம்மாவுக்கு நகைகள் வாங்கித்தருகிறாள் ஒரு யுவதி. நகைக்கடையில் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு அம்மா அழுகிறாள்.
”அசடாட்டம் அழாதம்மான்னு நான் சொன்னப்ப ‘ம்..ம்..ம்…’னு தலையை ஆட்டிக்கிட்டே அம்மா என் கண்ண துடைச்சி விட்டா…”
……………………………………………………..


மணிகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன்
’சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை’
இந்த மணிகள் கவிதைக்கு என்றில்லை, உரைநடைக்கு மட்டுமில்லை
இன்னும் பலவற்றுக்குமான இலக்கணம் தான்.
…………………………..
photos
1.M.Natesh
2. Ki.Rajanarayanan with Kamal
3.Gnanakoothan
4.R.P.Rajanayahem
..........................................

Jul 21, 2016

“வண்டிச்சோடை”யில் ஆட்டுக்காரன்


பெசண்ட் நகரில் ஏஸ்கிலஸின் அகமெம்னான் நாடகம் பார்க்க ந.முத்துசாமியுடன் போயிருந்த போது நாடகத்தை மொழிபெயர்த்த ஜம்புநாதன் அவர்களைப் பார்த்தேன்.


திருச்சியில் அவர் 2002ல் யூஜின் அயனெஸ்கோவின் “பாடம்” நாடகத்தை இயக்கி மேடையேற்ற செய்த முயற்சி! 

என்னை protagonist roleல் ப்ரொஃபசர் ஆக நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். பெண்ணேஸ்வரன் தமிழில் மொழி பெயர்த்திருந்த நாடகம். காலச்சுவடில் வெளியாகியிருந்தது. நான் வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்திருந்தேன். ஆனால் முயற்சி ஈடேறவில்லை. மாணவி பாத்திரத்தில் நடிக்க ஜம்புவின் நண்பர் ஒருவருடைய மனைவி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு, பிறகு அவர் கர்ப்பமாயிருந்த காரணத்தால் முடியாமல் போனது. பின் அந்த நேரத்தில் வேறு பெண் யாரும் நடிக்க கிடைக்கவில்லை. ஒரு நல்ல நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கிற வாய்ப்பு எனக்கு தட்டிப்போயிற்று. A slip between the cup and lip.
பிஎஸ்என்எல் கண்ட மிக நேர்மையான அதிகாரி ஜம்பு.
இவரை விட உயர்ந்த பதவியில் இருந்த கோவிந்தராஜு
சொல்வார் : ”என்னுடைய நேர்மைக்கு எனக்கு ஜம்பு தான் ஆதர்ஸம்!”
ஜம்பு நாதன் பற்றி ந.முத்துசாமிக்கு ஏற்கனவே இந்த விஷயத்தை குறிப்பிட்டு, அவருடைய நாடக ஈடுபாடு பற்றியெல்லாம் நிறைய சொல்லியிருந்தேன். பெசண்ட் நகர் ‘ஸ்பேஸஸ்’ தியேட்டரில் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன்.

………………………………………………………
தேவதச்சன் கவிதை 

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள், காலில்,
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன
வெட்டவெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!


ந.முத்துசாமியின் ”வண்டிச்சோடை” நாடகத்தில் ஒரு ஆட்டுக்காரன்!
ஆடாய் இருந்து கசாப்புக்குத் தப்பி மூலிகைகளை மேய்ந்து மனிதனாக மாறிய ஆட்டுக்காரன்.
“ ஒங்க அனுபவத்துக்கு அடங்காததெல்லாம் பொய் இல்லே……ஆடு மனுஷனா மாறினா அதுக்கு அறிவே அலாதி. கசாப்புக்குப் போகாமே தப்பிச்ச ஆடு நான்…… ஆட்டுக்கு மரணம் கசாப்புக்கடையில தான் உண்டு. கசாப்புக்குத் தப்பிய ஆட்டுக்கு மரணமில்லே… கசாப்புக்குத் தப்பிய ஆடு மூலிகைகளையே மேய்ஞ்சிக்கிட்டிருந்தா மனிதனாய் மாறிடும். சிரஞ்சீவியாயிடும்……..”


”வண்டிச்சோடை” நாடகம் என்னுடைய இயக்கத்தில் முதல் முறையாக மேடையேற இருக்கிறது! ஹிண்டு ட்ராமா ஃபெஸ்டிவலில் ஆகஸ்ட் மாதம் சென்னை மியூசியம் தியேட்டரில்!

………………………………………………………………………

Jul 18, 2016

N.Muthuswamy's "Vandichodai" being directed by R.P.Rajanayahem


An article in The Hindu Metroplus  on Vandichodai
18th July, 2016.

"Forging new paths" Akila Kannadasan


Vandichodai  is a  Tamil word that denotes cart tracks on a mud road. In the context of The Hindu Theatre Fest 2016, It holds a deeper meaning – that of a new path forged into unchanted territory. For the first time since its inception in 2005, the festival features three Tamil plays.
The is being held from August 19 to 21 and August 26 to 28, the latter resrved for  Aayirothiyoru  iravukal by THEeatre Zero, Mundhirikkotte, by Guduguduppukkari, and Vandichodai by Koothu-p- pattarai.


Tamil theatre is as old and as powerful as the language itself. From the touring drama companies that tell daramatic stories from our epics in village squares to the avant- garde productions of the likes of Na.Muthuswamy, the horizon of Tamil theatre is constantly expanding. The Hindu Theatre Fest 2016 seeks to capture this essence – that of change and diversity.
Veteran playwright Na.Muthuswamy feels that serious Tamil theatre with good story telling has always had a small audience..”The situation is still the same.”he adds.
Isn’t it a good sign that they are now part of one of the biggest festivals for theatre in the country? “Yes, the change good.” Observes the 80 year old.
Koothu-p-pattarai, the theatre group Muthuswamy founded, presents “VANDICHODAI” for lovers of stylized, abstract productions that questions our understanding of society. The play is staged for the first time since Muthuswamy wrote it in 1968. It is being directed by Litterateur R.P.Rajanayahem.

………………………………………………………………………………………
………………………………………………………………………………………….

Vandichodai
Synopsis prepared by R.P.Rajanayahem 

Vandichodai is an alchemical play written by N.Muthuswamy. Vandichodai means “The path of Bullock cart”It is a nonfigurative  play from the beginning to end. Every step of this play shows much poetic qualities and precisely Vandichodai is frozen music. The playwright N.Muthusamy is successfully preserving its complexity, liveliness and dynamism. The spectators will find this play an open experimental laboratory with its beautiful, mystic imageries.
The play opens with two strangers in front of a tree. The first dialogue of the play is “You got what I said, ‘The play has begun!’ “ So the viewers can very easily understand this is an atypical, unusual play. One of them climbs the tree and stays there.

 A newcomer joins the man standing under the tree. He claims that his age is above hundred. The man under the tree says that he also is above hundred.
Their chatting centers around antique medicinal healing studies. Traditionally, the guru always conceals some medicinal secrets and he doesn’t teach what all he knows to his students. Thus medical lessons are shortened and reduced as time passes by.

The man on the tree is a shepherd. These two men want him to go to his wife to give birth to many workers for this society. Manual workers don’t have any specific qualities generations after generations and they are born to work for ever. Soldiers for battles, workers to pull the temple car and party cadres.

Metamorphosis also takes place! The shepherd reveals that he was once a lamb and was transformed into a human being. Fantasy always plays a role throughout the play.

The author insists that all these laborers have no different faces but a similar face throughout history. Whether they are tar road workers or electrical workers, they don’t differ in any way. They are unaware of cultural identity.It is a game in order to survive. There are elements that are relevant to any local situation in which one man is being exploited or oppressed by another.

………………………………..


Set and lighting will be done by shri M. Natesh

.................................................................




I’m humbled


கட்டுரை என்பதின் சம்பிரதாய வடிவத்தையே எழுத்தில் உடைத்தவன் நான்.


ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி நான் தோற்றமளிக்கிறேன்.
குறிப்பிட்ட இருவர் இப்படி சுஜாதாவுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.


Enjoy Applause ; but never quite believe it!
பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
I will survive anything, even praise, I cheerfully suspect.  

2009ல் பஞ்சரு பலராமன் : என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
நான்கு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1ம் தேதி ’கூத்தாடி’ ட்விட்டரில் எழுதினார்: இவர் இணையத்தில் இல்லையே என நான் வருத்தப்பட்ட ஒரு நபர் சுஜாதா. இவர் இருக்கிறாரே என அகமகிழ்ந்தது ராஜநாயஹம் சாரைப் பார்த்து.


லக்கி கிருஷ்ணா: துணுக்குக்கும் கட்டுரைக்கும் இடையிலான வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.
பழைய டயரியை புரட்டி வாசிப்பதைப் போன்ற சுகமான சுவாரஸ்யம் R.P.ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது.
தோழர் ராஜநாயஹத்திற்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.
மேலும் R.P.ராஜநாயஹம் வலையின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.


கிருஷ்ணமூர்த்தி S : எத்தனையோ ஆயிரம் பேர்கள் தமிழில் வலைப்பூ வைத்துக்கொண்டு பதிவுகள் எழுதுகிறார்கள். ஆனால் ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால், தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா? சுருங்கச்சொல்லி, நெத்தியடியாக ’பத்தி எழுத்து’ என்றால் அது இப்படித்தான் என்று ஒரு உதாரணம் காட்ட வேண்டுமா? இலக்கியம், கவிதை, சினிமா என்று பல தளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரை காட்ட வேண்டுமென்றால் அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்!

சுதர்சன் ஹரிபாஸ்கர் : ராஜநாயஹம் சார் அநியாய Random writer…!!
மெமண்ட்டோ படம் பாக்குற மாதிரி துண்டு துண்டா narrate பண்ணிக்கிட்டே போறாரு………யாராச்சும் எடிட்டர் வெச்சு எடிட் பண்ணி லீனியரா போட்டா தேவல….!

ஆல் தோட்ட பூபதி: அனுபவம் எனும் அழகிய குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்!

Kana Praba: என்ன எழுத்துய்யா… அசுரன் ஐயா நீங்கள்!

Selva/வினையூக்கி: The funny thing about ‘Miracles’ is that they happen! R.P.Rajanayahem is one such! You are an Information INTELLECT அமுதசுரபி!

பிரபல ரவுடி : உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன். எழுத்து ராட்சசன்ங்க நீங்க… Awesome

 நல்லவன் : உங்க ஞாபக சக்தி ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்துகிறது.



சித்ரா சம்பத்: ராஜநாயஹம் ’பயன் காணா மேதை’!

ராஜரத்தினம் : இந்த மனுஷனுக்கு (R.P.ராஜநாயஹம்) தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சிக்க ஆசைப்படமாட்டார்!
ஜெகன் T: சந்தோஷமோ, சோர்வோ – அதிலேயே விழத்தோன்றுகிறது. சந்தோஷம் கூட்டும் சோர்வை குறைக்கும் அந்த அதிசயம் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்து.
கெக்கெ பிக்கினி : ராஜநாயஹம் பத்தி எழுத்தாளராக தனக்கென தனி இடம் பிடித்தவர்.சினிமாச் செய்திகளை சொல்லும் விதமே தனி.

(சு)வாசிக்கப்போறேங்க! : வலைப்பதிவுகளின் வடிவமும், வெளிப் படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது. அதைக்கண்டு கொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போக வேண்டாம். இப்போதே இங்கேயே R.P.ராஜநாயஹம் ஒருவர் இருக்கிறார்! அவரை விட வலைப்பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் பார்ப்பது மிகவும் கடினம்.


kaveri ganesh : பின்னிப் பெடல் எடுப்பதென்பது மிகக் கம்மியான மதிப்பீடு! :-)))))

பத்தி எழுத்து, வலைப்பதிவுகளின் எல்லையை நன்குணர்ந்து எழுதத் தெரிந்தவர் என்று நான் வியந்து ரசிப்பது ஆர்பிஆர் ஒருவரைத்தான்!
 


மகிழ்வரசு : கண்டிப்பா இணையத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ராஜநாயஹம். அப்பப்ப இவரை நான் quote பண்ணுவேன்.

ஏதாவது ஒரு பிடித்த கால கட்டத்திற்கு போக வேண்டுமா. R.P.ராஜநாயஹம் சட்டைக்காலரைப் பிடித்துத் தொற்றிக்கொண்டால் போதும்.


SKP Karuna : உண்மை. இணையத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். எத்தனை அனுபவம்! எத்தனை நினைவாற்றல்!
I always like your writing style especially the way you abruptly exit while the article still has the scope of extension.



செந்தழல் ரவி: R.P.ராஜநாயஹம் இனிமேல் ஒரு நாவல் எழுதினால் அது சாகித்ய அகாடமி பெறக்கூடும்.




Prathipa :எல்லாவற்றையும் பகுத்தறிந்து எழுதுவது சாதாரணம் இல்லை! R.P.ராஜநாயஹம் சார் ப்ளாக் படிங்க. You will learn a lot!


லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: நேர்த்தியாகவும், அதே சமயம் விஷய ஞானத்துடனும் எழுதத்தெரிந்தவர் நண்பர் R.P.ராஜநாயஹம். திருப்பூரில் வீடு தேடிப் போய சந்தித்தேன்!

UmamaheshVaran Lao Tsu : ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts படிக்காத நாளே இல்லை!
எனக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளர் ராஜநாயஹம் தான். தலைவர் தொடாத ஏரியாவே கிடையாது.


Covai M Thangavel :தமிழ் நாட்டுச் சாராயம் போல இருப்பவர்கள் எல்லோரும் இலக்கிய கர்த்தாக்கள் என்று அலறிக் கொண்டிருக்கும் போது அருமையான உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை தரும் ஒயின் போத்தலான நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. எழுத்தாளர்களின் உச்சம் நீங்கள் தான். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். உங்களின் அருகில் நிற்க கூட எந்த தமிழ் எழுத்தாளருக்கும் தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

பா. அசோக்  : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை

Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..




  
...........................................................