Share

Jul 10, 2016

பெயர்ந்த மொழி

                           
 Death’s second self என்பது தூக்கம்.
மேக்பெத்தில் ஷேக்ஸ்பியர் தூக்கத்தைப் பற்றி சொல்கிறார்
 – The death of each day’s life.


ஷேக்ஸ்பியரின் 73ஆவது Sonnet.


“ I am like a glowing ember
Lying on the dying flame of my youth.”

இதற்கு அர்த்தம் “ As the fire goes out when the pieces of wood which has been feeding it is consumed, So is life extinguished when the strength of youth is Past.
 நெருப்பு உண்பதற்கு மர விறகு தன்னையே கொடுக்கிறது. பின் நெருப்பு நீங்குவது போல, அணைந்து போவது போலவே
வலிமையான இளமை இறந்த காலமாகும் போது வாழ்க்கை அணைந்து போய் விடுகிறது.

………………………………………………


Age is an opportunity no less
Than the  youth itself
Though in another dress
And as the evening twilight fades away
The sky is filled with stars
Invisible by day
-    Longfellow

முதுமை என்பது இளமையைப் போன்றே
ஒரு நல்ல வாய்ப்பு தான். முதுமையின் உடை என்பது வேறு தான் என்றாலும் கூட
மாலையின் மங்கல் ஒளி மறைந்த பின்னே, இளமை என்னும் பகலில் மறைந்திருக்கிற நட்சத்திரங்களெல்லாம், முதுமை என்ற இரவில் தானே கண்ணுக்குப் புலப்படத்தொடங்குகிறது.
…………………………….

Death is here and death is there
Death is busy everywhere
All around, within, beneath
Above is death – and we are death
First our pleasures die and then
Our hopes, and then our fears – and when
These are dead, the debt is due
Dust claims dust  - and we die too
All things that we love and cherish
Like ourselves must fade and perish
-    Shelley


சாவு சுறுசுறுப்பாக இங்கே இருக்கிறது, சாவு சுறுசுறுப்பாக அங்கே இருக்கிறது,
மரணம் எல்லா இடத்திலும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
சுற்று முற்றும், உள்ளே, கீழே, மேலேயெல்லாம் சாவு – இவ்வளவு ஏன், நாமே சாவு தான்.

முதலில் நமது மன மகிழ்ச்சி மரிக்கிறது.
பின் நம் நம்பிக்கைகளும், அதன் பின் நமது பயங்களும் கூட.
தூசு புழுதியை உரிமை கொண்டாடுகிறது – நாம் கூட இறக்கிறோம்.
நாம் நேசிக்கிற, போற்றி காக்கிற எல்லாமே
நம்மைப்போலவே மறைந்து அழிய வேண்டியவை தான்.


……………………………………………………………………






3 comments:

Note: Only a member of this blog may post a comment.