Share

Jul 13, 2016

மஹ்ஹான்


A news in Times of India 15-05-2014
The troubled relationship Gandhi had with his eldest son Harilal.
காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில் எழுதியிருந்திருக்கிறார்.
“ நம் தேச விடுதலையை விடவும் உன்னுடைய பிரச்னை எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.”
ஹரிலாலின் மகள் மனு அப்போது சபர்மதி ஆசிரமத்தில் தன் தாத்தா காந்தியாருடன் வசிக்க வந்திருந்தாள்.
காந்தி ஒரு கடிதத்தில் சொல்வது: “ மனு உன்னைப் பற்றி பயங்கரமான விஷயங்களைச் சொல்கிறாள். நீ எட்டு வருடங்களுக்கு முன் அவளைக் கற்பழித்திருக்கிறாய். இதனால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, சிகிச்சை தேட வேண்டியிருந்திருக்கிறது.”
..........................................

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கணைத்தார்;மெல்ல
சொற்பொழிவாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
’விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
’பாழ் பட்டு நின்ற’ என்றார்;
’வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
- ஞானக்கூத்தன் கவிதை
……………………………………………………………………………


காந்தியார் மரணம்- தி.ஜா 'மோகமுள்' நாவலில்

மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.
பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , " அண்ணா " என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . " காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா " என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
" எப்ப "
" என்னடாது .... ஏய் பாலு .."
" யார்ரா சொன்னா ?"
" ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .
யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.
பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.
..................................................................

1 comment:

  1. என்ன ஆச்சர்யம் !! இரு தினங்களுக்கு முன்பு தான் உங்கள் தளத்தை மேய்ந்து விட்டு, காந்தியாரை பற்றி, அவர் குடும்பம் & வாரிசுகள் தற்போதைய நிலை பற்றி 'authentic' ஆக பரவலான தமிழ் வாசிப்புக்கு எழுத வேண்டுகோள் விடுக்க நினைத்தேன்! இன்று எழுதிவிட்டீர்கள் !! நன்றி ... மேலும் எதிர்பார்க்கிறேன் நக்கீரன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.