மண் குடத்தை கீழ போட்டவனும் "ஐய்யோ" ன்னான்!
பொன் குடத்தை கீழ போட்டவனும் "ஐய்யோ"ன்னு தான் சொன்னான்!
காலாற வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன்.
Angels whisper to a man when he goes for a walk!
ஒரு எழுபது வயது மனிதர் செக்யூரிட்டி ட்ரஸ்ஸில் அந்த வீடுகளுக்கு காவலில் நின்று கொண்டிருந்தார்.
இருட்ட ஆரம்பித்து விட்டது. நைட் டூட்டிக்கு வந்து விட்டார்.
வயதான செக்யூரிட்டி“பார்த்துப் போங்க சார். ரெண்டு நாள்ல நாலு நாகப்பாம்பைப் பாத்துட்டேன். கட்டுவிரியன் கூட போன வாரம் அடிச்சேன்!”
நான்:“ஐயா! நீங்க ஒவ்வொரு நாளும் ராத்திரி பூரா இங்க முழிச்சிக்கிட்டு இருக்கீங்க! நான் சும்மா ஏதோ அரை மணி நேர வாக்கிங்!”
“ பாம்பு பயம் இருக்கட்டும். இந்த கொசுத்தொல்லை ராவுல தாங்கவே முடியல சார்”
மீண்டும் அந்த வழியில் திரும்பும்போது அவர் ஒரு பெரிய வீட்டில் நின்று கொண்டிருந்த நாற்பது வயது பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் இரண்டு ஏ.சி. பொருத்தப்பட்டிருக்கிறது. கல்யாணத்திற்கு போய் விட்டு அப்போது தான் காரில் வீட்டிற்கு வந்திருப்பார் போல!
இரட்டை பெரிய கேட் போட்ட பங்களாவின் வெளியே தான் காரில் கணவர் இவரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு எங்கோ மீண்டும் போகிறார்.
அவசரமாக கழுத்து காது நகைகளுடன் தான் அந்த முதிய செக்யூரிட்டியிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
“ இல்லைய்யா! உண்மையாத்தான் சொல்றேன். எனக்கு வந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது. இந்த வயசுக்குள்ள நான் அனுபவிச்சிருக்கிற கொடுமை என் எதிரிக்குக் கூட
வரக்கூடாதுய்யா. ஒரு ஜென்மத்துல ஏழு ஜென்மத்து தொயரத்தைப்பாத்தாச்சி. அழறதுக்கு என் கண்ணுல தண்ணி கூட இனிமே இல்ல..போதும் இந்த ஒரு ஜென்மமே போதும்.”
செக்யூரிட்டி: “கவலப்படாதீங்கம்மா.. அந்த ஆண்டவன் இருக்கான். ஒங்களுக்கு ஒரு கொறையும் வராது”
Every horse thinks its own pack heaviest!
- Thomas Fuller
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.