Mandolin Srinivas's death is a tragic loss of a great musician.
பாவம்!அந்த மாண்டலின் இசைக்கருவி. An instrument that is neither Carnatic nor Hindustani. அதை தன் இசை சாதனைக்கு பயன்படுத்திப் பிரபலப்படுத்தியதே ஸ்ரீநிவாஸ் தான்!அதை மீட்ட இனி யாருமில்லை.
ஒரு கல். அது பல கொக்குகளை வீழ்த்திய கல். அதை குறி பார்த்து எறிந்த வித்தையாளன் மறைந்து விட்டான்.
கொக்கெறிஞ்ச கல் இது தான் என்று காட்டுவதால் என்ன பயன்?
ஸ்ரீனிவாஸின் அந்த மாண்டலின் இசைக்கருவி!
இனி யார் அதை எடுத்து மீட்டினாலும் அதனால் அந்த ஜால மாயங்களை நிகழ்த்தவே முடியாதே!
சில வருடங்களுக்கு முன் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ஹம்சத்வனி மூலாதார மூர்த்தி, ஸ்ரீ ராக எந்தரோ மஹானுபாவலு, ஸ்ரீரஞ்சனி ராக மாருபல்க, கதனகுதூகல ரகுவம்ச சுதா என்று வித்தை காட்டிய அந்த மாண்டலின் இசைக்கருவி ' கொக்கெறிஞ்ச கல்லு' போல இனி செயலிலந்து கிடக்கப்போவதை நினைத்தால் மனம் கனக்கிறது.
...........................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.