எஸ்.ஏ.ஜி. சாமி ஒரு துணை நடிகர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தர பாண்டியம் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்குப் போய் நாடகம் நடித்து சினிமா துணை நடிகராக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். டாக்டராக, போலீஸ் இன்ஸ்பெக்டராக 1950,1960,1970களில் பல படங்களில் தலை காட்டியவர்.
இவர் சொன்ன சம்பவம்.
'அன்னமிட்ட கை ' பட ஷூட்டிங். ஸ்டுடியோவில் சின்னவர் வந்து விட்டார். சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர்.
டைரக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் பதற்றத்தில் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எஸ்.ஏ.ஜி. சாமி காம்பினேசனில் எடுக்கப்பட வேண்டிய காட்சி. ஜெயலலிதா வரவேண்டும். எம்.ஜி.ஆர் மேக்கப் முடித்து ரெடியாக இருக்கிறார். நடிகர் எஸ்.ஏ.ஜி.சாமியும் ரெடி என்று சொல்லத்தேவையில்லை. கதாநாயகிக்காக வெயிட்டிங். பொறுமையாக கதாநாயகன்!
ரொம்ப நேரக் காத்திருப்பு. ஜெயலலிதா வருகிறார். எம்.ஜி.ஆர், கிருஷ்ணன் இருவரையும் பார்த்தவுடன் தன் கைப்பையை ஒரு சோபாவில் வீசியெறிகிறார்.
டைரக்டர் கிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர் வாயில் கை வைத்து சொல்கிறார்: "அம்மு.. கோபம்!"
மேக்கப் முடித்து ஜெயலலிதா செட்டிற்கு வருகிறார்.
டைரக்டர் எம்.கிருஷ்ணன் மெதுவாக காட்சியை விளக்கிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
" கேமரா ஸ்டார்ட் ஆனவுன்னே சின்னவர் வர்றாரும்மா.. அப்புறம் சாமி என்டர் ஆகிறார். அப்புறம் நீங்க வர்றீங்க.. வந்து...."
உடனே ஜெயலலிதா சீறி வெடிக்கிறார்: அதெல்லாம் வேண்டாம். முதல்ல நான் வர்றேன். அப்புறம் உங்க சின்னவர் வரட்டும். அப்புறம் சாமி வரட்டும்"
எம்.ஜி.ஆர் வாயில் கை வைத்து டைரக்டரைப் பார்த்து புன்னகையுடன் சைகையில் சொல்கிறார்.
"அம்மு கோபமா வந்துருக்கு!"
........................................
அதுதான் இன்னைக்கும் தொடருதே !
ReplyDelete