மதுரை டவுன் ஹால் ரோடு- தாஜ் ரெஸ்ட்ரண்ட்.
சமுசாவும், டீயும் ஆர்டர் செய்து விட்டு அங்கிருந்த ஜூக் பாக்ஸில் காசு போட்டு
Goddess on the mountain top
Burning like a silver flame
மெய் மறந்து ரசித்துக் கேட்ட காலம் துவங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வில் இனணந்து வந்த தாஜ் ரெஸ்ட்ரண்ட்.
செழிப்பாய் இருந்தால் பிரியாணி, பரோட்டா என்று அடித்து நொறுக்குவது வழக்கம்.
தாஜ் எதிரே ஒரு கண்ணில்லாத மனிதர் புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருப்பார். புல்லாங்குழலில் அவர் அழகாக பல பாடல்களை வாசித்துக்கொண்டிருப்பார்.
தாஜ் ரெஸ்ட்ரெண்ட் அதிபர் ஒரு ஜாலியான மனுஷர். காரின் பேனட் மீது தான் உட்கார்ந்துகொண்டு டிரைவரை கார் ஓட்டச் சொல்லி அவ்வளவு பிசியான ரோட்டில் வலம் வருவார்!
மதுரையில் இருந்து வெளியேறிய பின்னும் ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, பாண்டிச்சேரி என்று வாழ்ந்த காலங்களிலும் மதுரை வந்தால் குடும்பத்துடன் எப்போதும் தாஜ் போய் பாம்பே டோஸ்ட், ஸ்பிரிங்க் சிக்கன், சிலோன் எக் புரோட்டா, மட்டன் பிரியாணி, ஃப்ரூட் சாலட் சாப்பிட்ட டாஜ் ரெஸ்ட்ரெண்ட்.
பழனியில் நான் இருந்த போது மதுரை வந்து குடும்பத்துடன் தாஜில் சாப்பிட்டு விட்டு கிளம்பிய போது குழந்தை கீர்த்தி தன் விலையுயர்ந்த விளையாட்டுப் பொம்மையை அங்கே விட்டு விட்டான். அது தொலைந்து விட்டதாகத் தான் நினைக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து நாங்கள் மீண்டும் தாஜ் வந்த போது சர்வர் தாஜுதின் பாய் அந்த பொம்மையைபத்திரமாகக் கொண்டு வந்து கீர்த்தியிடம் கொடுத்தார்!
மொஹிதீன் பாய், தாஜிதின் பாய் ஆகியோரின் பரிமாறும் அழகு.
2009ல் மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு உறவு கல்யாணத்திற்கு போயிருந்த நான் தாஜ் போயிருந்த போது யூனி பார்ம் இல்லாமல் முதிய மொஹிதின் பாய் " ரிட்டயர் ஆயிட்டேன். ஆனாலும் தினமும் டாஜ் வந்துடுவேன்."
தாஜ் களையிழந்து.. பொலிவிழந்து...
அன்று ஸ்பெஷல் ஆக அவரே பறிமாறும் போது பழைய விஷயம் பற்றி பேசினார். Nostalgia! என்னிடம் கேட்டார்." ஞாபகம் இருக்கா? நீங்க இங்க உங்க ஃப்ரெண்ஸோட ஒக்காந்து சாப்பிடுவீங்க... விஜய காந்து அவரோட ஃப்ரெண்ஸூங்களோட அந்த டேபிளில் உக்காந்து இருப்பாரே! ஞாபகம் இருக்கா?"
தாஜிதின் பாய் 'கோஸி' ஹோட்டலுக்கு ரொம்ப நாள் முன்னாலே போய் விட்டார்!
நேற்று திருநெல்வேலியில் ஒரு கல்யாணம். நானும் கீர்த்தியும் போய் விட்டு திரும்பும்போது
கீர்த்தி --"மதுரையில் தாஜில் பாம்பே டோஸ்ட் சாப்பிட்டு விட்டு திருப்பூர் போவோமே!"
தாஜ் !
எல்லாவற்றிற்குமே ஒரு காலம் தான்!
மொத்தமாக வெளிறி,மாறிப் போய் ஒரு ஆள் கூட சாப்பிடாத நிலையில் தாஜ். சோர்வாக ஒரு வெயிட்டர்.
'மெனு பார்க்கத்தேவையில்ல சார்! சொல்லுங்க.'
"பாம்பே டோஸ்ட்!"
'அதெல்லாம் இப்ப கிடையாது சார்'
வேறு எதுவுமே சாப்பிடாமல் கிளம்பி விட்டோம்.
"பிரேமா விலாஸ்" அல்வாக்கடை மட்டும் ஜெகஜ்ஜோதியாய் டவுன் ஹால் ரோட்டில் இன்று! ஆனாலும் செழிப்பிலும் அதன் முகம் கூட சுத்தமாக மாறிப் போய் தான் இருக்கிறது.
.............................................

The summit of beauty and love
And Venus was her name
And Venus was her name
She's got it
Yeah, baby, she's got it
I'm your Venus, I'm your fire
At your desire"
http://www.dailymotion.com/video/xo0l9_shocking-blue-venus-1970_music
https://www.youtube.com/watch?v=x7E3JMW_Q9M

Please visit Taj now. It is back to form
ReplyDeleteOh, I see, good
ReplyDelete