Share

Sep 14, 2014

மின்சார சம்சார சரத்பாபு
சரத் பாபுவின் இயற்பெயர் சத்ய நாராயண் தீட்சித்.

போலீஸ் ஆபிசர் ஆக ஆசைப்பட்டவர் "ஷார்ட் சைட் " பிரச்னை காரணமாக
நடிகரானவர்!

பட்டினப்பிரவேசம் படத்தில் சரத் பாபு பேசிய ஒரு நீண்ட ப்ளேய் பாய் வசனம் 1977ல் ரொம்ப ஃபேமஸ். மோனா ஆக்டிங் செய்து சினிமாவில் சான்ஸ் வாங்க அந்த வசனம் பல சில்லண்டி நடிகர்களுக்கு உபயோகப்பட்டது.

சரத் பாபு  'நிழல் நிஜமாகிறது' படத்தில் கூட ஒரு 'விடன்' கதாபாத்திரம் தான் செய்தார்.

'நூல் வேலி ' படத்தில் கதாநாயகன். சுஜாதா, சரிதாவுடன்.

கே.பாலச்சந்தர் படங்கள் மூலம் அறிமுகமான நடிகர்.

"முள்ளும் மலரும் " படத்தில் 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' மறக்க முடியாத அருமையான பாடல்!

சிரிப்பு நடிகை ரமாப்ரபா திரையில் நாகேஷின் பிரபலமான ஜோடி.
இப்ப மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்கள் அடிக்கடி பேசும்
 " அக்கா,,வயசாயிடுச்சில்லக்கா.." கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரம் பழைய நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர்.

ரத்தத்திலகம், கறுப்புப்பணம் போன்ற கண்ணதாசன் படங்களிலேயே இவரை பார்க்கலாம்.
கர்ணன் படத்தில் சல்லியன் தான் சண்முகசுந்தரம்!
 மிகை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.
சண்முகசுந்தரமும் ரமாப்ரபாவும் தம்பதிகள். மூன்று குழந்தைகள்.

சரத்பாபுவுடன் 'தொடுப்பாகி' ரமாப்ரபா சண்முகசுந்தரத்தை விட்டுப்பிரிந்து விட்டார்.

சரத் பாபு - ரமாப்ரபா தம்பதியர்  பாலச்சந்தரின் 47 நாட்கள்(சிவசங்கரி கதை) படத்தில் தம்பதியராகவே தலை காட்டினார்கள்.

 ராஜ்பரத் படம்"உச்சக்கட்டம்" - சரத்பாபு வில்லத்தனமான கதா நாயகன்.

கே. பாலச்சந்தர் இந்த சரத்பாபுவைப்பற்றிசிலாகித்து சொன்ன வார்த்தைகள் " Every inch, Sarat Babu is a gentleman!"

 நிஜ வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலேயே ' ஜெண்டில் மேன்' பாத்திரங்களுக்கு ஒரு நடிகர்.
சரத் பாபு வின் குரலில் ஒரு கண்ணியம் உண்டு.

கமல் படங்கள் " சட்டம்"  "சலங்கை ஒலி" படங்களில் கமலின் நண்பனாக,
ரஜினி படங்கள் "அண்ணாமலை" "முத்து" - முக்கிய பாத்திரத்தில் சரத் பாபு.

 சரத்பாபு படங்களை பட்டியல் போட வரவில்லை.

கங்கை அமரன் இயக்கிய ஒரு படத்தில் சரத் பாபுவும் சண்முகசுந்தரமும் ஒரே காட்சியில்  நடித்திருக்கிறார்கள்.


சரத் பாபு  ரமாப்ரபா ஜோடி பிரிந்தது. 1988 ல் விவாகரத்து.

மீண்டும் சம்சார வாழ்க்கை சரத்பாபுவுக்கு ஏற்பட்டது.
எம். என்.நம்பியாரின் மகள் சினேகலதா. இவருக்கு முதல் திருமணம் கோவிந்த மேனன் என்பவருடன் 11.12.1968ல் நடந்து பின் தோல்வியில் முடிந்தது.
சரத் பாபுவின் 37வது வயதில்சினேகலதாவை சென்னை போட் கிளப்பில் சந்தித்தாராம். 02.07.1990ல் இருவருக்கும் இரண்டாவது திருமணம்!

2014ல் சரத் பாபுவுக்கு 62 வயது. சினேகலதாவுக்கு 60 வயது.
"சரத் பாபுவால் கடும் உளைச்சல். மனரீதியாக துன்புறுத்துகிறார். அவருக்குள்ள 20 கோடி சொத்தில் உள்ள எனது பங்கை நான் மீட்கவேண்டும். "
-விவாகரத்து வழக்கு தொடுத்தார் சினேக லதா.

சென்ற வருடம் சரத் பாபு " நான் இப்போதும் 35 வயதுக்காரனாகத் தான் உணர்கிறேன். நான் மீண்டும் திருமணம் செய்யப்போகிறேன். எனக்கு மனைவியாக வருபவர் பத்திரிக்கை பின்புலம் கொண்டவர்" என்று பேட்டி கொடுத்தார்.


........................................................................... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.