Share

Aug 25, 2009

O Mehbooba, O Mehbooba

ராஜ்கபூரின் இந்தி படம் 'சங்கம்' .இந்த படத்தில் அந்த காலத்திய மற்ற எல்லா இந்தி படங்கள் போல எல்லா பாடல்களும் ஹிட் தான். ஹிந்திப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் ஒவ்வொரு பாடலை பிடித்த பாடலாக சொல்வார்கள் .
எனக்கு பிடித்த பாடல்
“ O Mehbooba , O Mehbooba
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “


இந்த ஒரு பாடலுக்கு " சங்கம் " படத்தில் வரும் பிற பாடல்கள் உறை போட காணாது .
பாடல் முகேஷ் பாடியது . இந்த பாடலை காதால் மட்டும் கேட்பது போதாது .அவசியம் கண் கொண்டு அந்த பாடல் காட்சியோடு தான் பார்த்து ரசிக்க வேண்டும் . ராஜ் கபூர் அட்டகாசம் ரொம்ப உச்சம் . என்ன ஒரு
Lively Enthusiasm , spirit, activeness! ராஜேந்திர குமாருடன் படகில் ஏறிவிடும் வைஜயந்தி மாலாவை கொஞ்சமும் மனசை விடாமல் மற்றொரு படகில் ஏறி துரத்தி பாடும் ராஜ் கபூர் . அந்த பனி மூட்டமும் அழகான ஏரியும் .. காண இரு கண் போதவே போதாது .
பெண்ணாக இருப்பதென்பது ஒரு "பிழை" யல்ல என்றாலும் கூட குறைந்த பட்சமாக அவள் ஒரு "அசாதாரண விசித்திரம் . "
To be a woman, If not a defect, is at least a peculiarity.
மேற்கண்ட வார்த்தைகள் பெண்ணிய வாதியும் சார்த்தரின் இனிய தோழியுமான சிமோன் தி புவோ (Simone de Beauvoir) சொன்னதாகும் .
தான் கவர்ந்து செல்லப்படவேண்டிய விஷேச பரிசு என்றே தன்னை பற்றி பெண் நினைப்பவள் . இதனை உணர்த்தக்கூடிய வைஜயந்தி மாலாவின் உணர்வும் , பாவமும் இந்த பாடலை மிகவும் உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது . நான் இந்த பாடல் காட்சியை மட்டும் நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருக்கிறேன் . சலிக்கவில்லை .
பாடல் காட்சிகளில் ஷம்மி கபூரின் Arrogance பற்றி ஹிந்திப்பட ரசிகர்கள் அறிவர் . உண்மையில் அவர் அண்ணன் ராஜ் கபூர் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டும் தம்பி ஷம்மியை மிஞ்சி விடுகிறார் .
பாடலை பாடும் முகேஷ் கூட தன்னுடைய எல்லையை மீறித்தான் கிஷோர் குமார் பாடுவதை போல படு குஷியோடு
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashoodஎன பாடியுள்ளார் . முகேஷ் மிகவும் அமைதியாக பாடுபவராகத்தான் பெரும்பாலும் யார் மனதிலும் தோற்றம் தருவார் . ராஜ் கபூர் என்றாலே முகேஷ் நினைவில் வந்து விடுவார் . அந்த அளவுக்கு ஒரு அபூர்வ காம்பினேசன் .

“ Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai Gham
Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
O Mehbooba, O Mehbooba “

எனக்கு இந்தி தெரியாது . இந்தி பாடல்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் கூட தெரியாது தான் . அதனால் என்ன ?!
சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் . தமிழில் கூட ஒரு பாடல் வரி நான் நினைத்ததற்கு மாறாக வேறு வார்த்தைகள் இருந்ததை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன் .
'ஹல்லோ மிஸ்டர் ஜமின்தார் ' படத்தில் பி பி எஸ் பாடிய " காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு " என் Favourite.அதே படத்தில் மற்றொரு அருமையான பாடல் " இளமை கொலுவிருக்கும் ,இயற்கை மணமிருக்கும், இனிய சுவையிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே " என்ற பாடல் . இதில் ஒரு சரணத்தில் வரும் வரிகளை " இன்று தேடி வரும் , நாளை ஓடி விடும் , செல்வம் சேர்ந்தபடி அமைந்திடுமா ? எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ?" என நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இருந்தே பாடி வந்துள்ளேன் .ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்:
" செல்வம் சேர்ந்த படி அமைந்திடுமா " என்று கவிஞர் எழுதவில்லை " செல்வம் சிரித்தபடி அமுதிடுமா ?" என்று தான் எழுதினார் !"

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

4 comments:

 1. படித்தவுடன் அந்தப்பாடல் நினைவு அடுக்குகளிலிருந்து மேலே வந்தது, பிபிஎஸ்-ன் தேன் குரலுடன். மிகவும் ரஸமான அந்தப் பாடலின் நீங்கள் குறிப்பிட்ட கண்ணதாசனின் வரி சும்மா மயக்குகிறது. என்ன மாதிரியான கவிஞன் அவன். எங்கே போய் விட்டான் இப்போது..!

  :”Kis baat pe naaraaz ho.. Mehbooba.. ” –வுக்கு இப்படி மொழி பெயர்க்கலாமா?
  “எதற்காக இத்தனைக் கோபம்
  எதற்காக இப்படியொரு சோகம்
  எந்த நினைவினிலே மூழ்கிவிட்டாய் நீ
  என் இனிய காதலியே, காதலியே
  நிகழ்ந்துவிடும் ஒருநாள் நம்சங்கமம்”

  - விஜயசாரதி, ஹவானா

  ReplyDelete
 2. Thank you Vijay for your translation.

  ReplyDelete
 3. Dear RPR,

  “ O Mehbooba , O Mehbooba
  Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
  Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “

  ஓ! காதலியே! காதலியே!
  உன் இதயத்தின் அருகேதான் நான் சென்றடைய வேண்டிய இடம்.
  நீ இடம் பெறாத குழு (கச்சேரிக்கான audience ) ஒன்று ஏதாவது உண்டா?!

  “Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai Gham
  Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
  O Mehbooba, O Mehbooba “

  எந்த விஷயத்தில் கோபம் (ஊடல், upset)?
  எதற்காக இந்த சோகம்?
  எந்த சிந்தனையில் மூழ்கி விட்டாய்?
  (நிச்சயம் நம் இருவரின்) சங்கமம் உண்டாகும்.
  ஓ காதலியே! காதலியே!

  நன்றி!

  சினிமா விரும்பி

  ReplyDelete