Share

Aug 1, 2009

மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா


மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா எழுதிய பரபரப்பான கட்டுரையில் ராஜநாயஹம் பற்றி
” R.P. ராஜ நாயஹம் சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர். அவர் எழுதி காலச்சுவடுவில் வெளியான “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை “ என்ற அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.'
'சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து ‘ சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளைய சிங்கத்தின் ‘ தொழுகை ‘ கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லபட்டார் என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு ‘ மெய்யுள் ‘ என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார். இது தளையசிங்கத்தின் ‘ பிரபஞ்சயதார்த்தம்‘ என் ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல். 22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடன் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாக கூறுகிறார். இந்த விபரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கபட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.சொல் புதிது 9-ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தளைய சிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பபட்டு கிடைக்கிறது. கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் ‘புது யுகம் பிறக்கிறது ’ கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன். போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களின் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளையசிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருந்த்தக் கூடிய அளவுக்கு ” க்ராஃட்மேன்ஷிப் ” . தளையசிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி ‘ இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘ என்றும் ‘ செயற்கை இறுக்கம் நிறைந்த நடை ‘ என்றும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். “மேற்கொண்டு R.P. ராஜ நாயஹகத்தின் கட்டுரை ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் நடந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கிறது.விஷயத்தின் ஆதிமூலம் என்னவென்றால் ஜெயமோகன் என்னையும், மு. தளையசிஙக்த்தையும் ஒப்பிட்டு நான் மு.த. மாதிரி எழுதினால் அடித்துக் கொல்லப்படுவேன் என்று சாடையாக எழுதியதுதான். ஜெயமோகன் கூறுவது போல் மு.த. அடித்துக் கொல்லப்படவில்லை என்பதை ராஜநாயஹம் தொடர்ந்து சில கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நிரூபித்ததும் தனது அடியாள் கோஷ்டி மூலமாக ராஜ நாயஹத்தை அவதூறு செய்து தான் சொன்ன பொய்யையும் மூடி மறைத்து விட்டார். ஆனால் விவாதத்தின் எந்த இடத்திலும் இவ்விவாதத்தின் அடி ஆதாரமான என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் ஜெ.
.........
மு. தளையசிங்கத்தின் மேற்படி ‘ தொழுகை ’ கதை என் பார்வைக்கு வந்தது. என் சுண்டு விரல் நகத்தின் விளிம்பைக் கூட அந்தக் கதையால் தொட்டுவிட முடியாது. சந்தேகமிருப்பவர்கள் என்னுடைய ‘ கர்னாடக முரசும் நவீன இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ , ‘ the joker was here’ , நேநோ, மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் போன்ற சிறுகதைகளை வாசித்துப் பார்க்கலாம்.
இது ஒரு பக்கமிருக்க, மேற்படி குற்றாலம் கருத்தரங்கு பற்றி ராஜ நாயஹம் எழுதிய கட்டுரை காலச்சுவடுக்கு அனுப்பி வைக்கப் பட்ட போது, நடந்த சம்பவங்கள் பற்றி அப்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்ய புத்திரன் காலச்சுவடில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ ராஜ நாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள் . வெகு ஜன் ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற் றி எனக்குத் தெரியும். என்னுடைய பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம் “ஜெயமோகன் பற்றி மனுஷ்ய புத்திரன் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுவதாவது;‘ ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒரு விதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும் ’ ‘ ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை ‘மேற்படி தளையசிங்கம், குற்றாலம் கருத்தரங்கம் குறித்து நடந்த ஏகப்பட்ட விவாதங்களில் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் திண்ணை இணைய இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பற்றி 11.07.2004 அன்று திருப்பூரில் வைத்து நாஞ்சிலிடம் ராஜ நாயஹம் நேரடியாகக் கேட்டபோது, ” திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான். நான் தர மறுத்து விட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. “ என்று சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன். இப்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாஞ்சில் நாடன் இதே ரீதியான பதிலைத்தான் என்னிடம் கூறுகிறார். ஆனால் இப்போதைய நிலை முன்னைவிட மிக மோசமானது. ஒரே வாரத்தில் இரண்டு குரூரமான மரணங்கள்.சரி, தன்னுடைய பெயரை இவ்வளவு அருவருப்பான முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனை நாஞ்சில் நாடன் ஏன் அனுமதிக்கிறார் ?இப்பிரச்ச்னை பற்றி திண்ணைக்கு காலச்சுவடு கண்ணன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி :“ ஆர்.பி. ராஜ நாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன் “வழக்கம்போல் ஜெயமோகன் இதற்கு எந்தப் பதிலும் எழுதவில்லை.
இந்த தளையசிங்கம் – ஜெயமோகனின் விவகாரம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ராஜ நாயஹம் “ பிரச்சனை உங்களை முன் வைத்து ஆரம்பித்திருக்க நீங்கள் ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? “ என்று கேட்டார்.ராஜ நாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம்தான் கேட்பது வழக்கம். ஆனால் அவர் எதுவும் எழுதுவதில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த எலிகளோடு பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே அவருடைய மேற்படி கேள்விக்கு என் பதிலாக இருந்தது.“ எலிகளோடு போட்டியிட்டால் நீ அந்தப் பந்தயத்தில் வெற்றியே அடைந்தாலும் எலிப் பந்தயத்தில் கலந்து கொண்டவன் என்ற பெயரே உனக்குக் கிடைத்து நீயும் ஒரு எலியாகவே அடையாளம் காணப்படுவாய் “ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நான் எலிகளோடு பந்தயம் கட்ட விரும்பவில்லை. எனவேதான் இப்பிரச்சனையில் 5 ஆண்டுகளாக நான் வாய் திறக்கவில்லை.
இப்போது (இலக்கியத் தொடர்பான கடிதங்களைப் பிரசுரிப்பதில் தவறில்லை என்பதால்) இது தொடர்பாக ஜெயமோகன் ராஜ நாயஹத்துக்கு எழுதிய கடிதத்தை தருகிறேன்.
R. P. ராஜ நாயஹத்திற்கு ஜெயமோகன் எழுதிய கடிதம்தக்கலைதபால் முத்திரை 28.02.௨00௨.
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சொல் 10 இதழ் அச்சில் உள்ளது.மு. தளையசிங்கம் குறித்த என் கருத்தை சற்று பிழையாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அது என் தவறுதான்.நான் எழுதியது இதுதான். ‘ கலக ’ ‘ பாலிய ’ எழுத்துக்களை ஒரு சவாலாக நம் சமூகம் நினைப்பது இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் போன்றதல்ல இந்து சமூகம். கருத்தியல் கலகங்களை ‘விழுங்கி ’ செரித்துக்கொள்வதை ஒரு கலையாக 2000 வருடங்களாக அது பயின்றுள்ளது. சாங்கிய ரிஷியான காலர் பிராமணர்களால் கபிலவஸ்துவில் குளிக்கும் படித்துறையில் கல் எறிந்து கொல்லப்பட்டார். பிறகு கிருஷ்ணரே, ” முன்பிறப்பில் நான் கபிலன் “ என்று கூறினார். விஷ்ணுபுரம் நாவலில் முக்கிய விவாதமே இந்த கருத்துப்பயணம் குறித்து தான்.
சாருவின் கலகம் போன்றவற்றை பொறுக்கி, கிறுக்கு என்று கூறி சமூகம் ரசிக்க ஆரம்பித்து விடும். ஓர் எல்லையில் ஞானியாகவும் ஆக்கலாம்.பாலியல் எழுத்து இங்கு கலகமே அல்ல. கலகம் வேறு வகையானது. அதற்குப் பின்னால் ஒரு ஆய்வுப் பார்வை உண்டு. அப்பார்வை மூலம் அது மைய நரம்புகளை தொட்டு எழுப்பும். அப்போது சமூகத்திற்கு வலிக்கும். பெரியார் தமிழகத்தில் மதிக்கப் பட்டார், ரசிக்கப் பட்டார். அயோத்திதாசப் பண்டிதர் மறக்கடிக்கப்பட்டார்.அதாவது சாரு குரைக்கும் நாய். அது கடிக்காது என அனைவருக்கும் தெரியும். தளையசிஙக்ம் கடித்த நாய். இதுவே வித்தியாசம். சாரு ஒருபோதும், மிக எளிய முறையில் கூட, தன் எல்லைகளை மீறியவரல்ல. வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே அவரது இலக்கு.மு.த. ‘பாலியல் ’ கதைகளை மட்டும் எழுதியவரல்ல. அவரது பல கதைகளில் பாலியல் இருந்தாலும் அவற்றின் ‘கலகம் ’ பாலியல் இல்லை. உதாரணமாக கோட்டை கதை கற்பு என்ற கருதுகோளை நிராகரிக்கிறது. அதிரடியாக அல்ல; நம்பும்படியாக, கலைப்பூர்வமாக. தொழுகை கதையில் ஓதுவாரான சைவப்பிள்ளையின் காதல் மனைவி – அவர் மீது மிகுந்த பிரியம் உடைய நிலையிலும் – காம உந்துதலுக்கு உட்பட்டு ‘ கரிய சானானுடன் ‘ உறவு கொள்கிறாள். பக்கத்து அறையில் அவளது குழந்தைகள் தூங்க. ஒலிப்பெருக்கியில் கணவனின் குரலில் கோயிலில் திருப்பாவை ஒலிக்க அவள் அவன் ஆண்குறியில் சிவலிங்கத்தைக் காண்பதாக எழுதுகிறார் மு.த. ஈழத்து வெள்ளாள / சைவ சூழலில் இது எங்கே போய் தைக்கும் என்று ஊகிக்கலாம். இதையே safe ஆகவும் எழுதலாம் – சாரு போல. கதா பாத்திரங்களுக்கு சமூக குழும அடையாளங்கள் இல்லாமல், மத சாதி விஷயஙகளை தொடாமல் எழுதலாம். சாரு sensitive ஆன விஷயங்களை தொடுவதே இல்லை என்பதைக் கவனிக்கவும். இங்கு தேவர் தலித் மோதல்கள் நடந்தபோது ஒருவர் கூட அவ்விஷயத்தை கதைக் கருவுக்குள் கொண்டுவரவில்லை. சொந்த ஜாதியை விமரிசித்து எழுதுவது ஓரளவுக்கு பிராமணர்களும் தலித்துகளும் மட்டும்தான். இங்கு கலகம் என்பதே இல்லை. கலகபாவனைகள் மட்டுமே உள்ளன. கலகம் ஒரு போதும் ‘முற்போக்காக ’ இருக்காது. அது ஆதிக்க அதிகாரத்தை எதிர்க்கும். அதே சமயம் அறிவுலகில் உருவாக்கப்படும் முற்போக்கு பாவனைகளையும், கெடுபிடிகளையும் எதிர்க்கும். இங்கே நம் கலகக்காரர்கள் ஒரு போதும் politically correct ஆன விஷயங்களை எதிர்ப்பதில்லை. மீண்டும் மு.த. விஷயம். வெறுமே எழுதிமட்டுமிருந்தால் ஒருவேளை ஈழத்து வெள்ளாள உலகம் அவரை வசைபாடி மட்டும் நிறுத்தியிருக்கும். ஆனால் தளையசிங்கம் கடிக்கவும் முற்பட்டார். தலித்துகள் பொதுக் குடி நீர் எடுக்கவும் ஆலயப் பிரவேசம் செய்யவும் நேரடியாகப் போராடினார்.
இவை குறித்து கனடா என். கெ. மகாலிங்கம் ( தளையசிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார் (மு.பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) வேளாளர்கள் தளைய சிங்கத்தை அவர் வேலை செய்த பள்ளிக்கு வந்து மிரட்டினார்கள். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணம் தந்து அவரை கைது செய்து அடித்துக் கொல்லச்சொன்னார்கள். அவ்வதிகாரியே நேரில் வந்து விலக சொலலியும் மு.த. விலகவில்லை ( அப்போது மகாலிங்கம் உடனிருந்தார்) விளைவாக கைது செய்யப்பட்டு இரு நாட்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல் நலம் குன்றி அங்கிருந்தேஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார். ( சிறு நீரகம் உடைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது )நான் ‘கொல்லப்பட்டார் ’ என்று எழுதியது இக்காரணத்திலேயே. இவ்விஷயம் இன்று பரவலாகவே பேசப்படுவது தான். பாலியல் எழுதியமைக்காக அவர் கொல்லப்படவில்லை. உண்மையான கலகத்தை செய்தமைக்காகவே கொல்லப்பட்டார். இதைத் தான் நான் கூறினேன். கலகம் என்று பேசுபவர்கள் உண்மையான கலகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். சாரு ’ வின் கதைகளுக்கும் தொழுகைக்கும் இடையேயான வித்தியாசம் இங்கு கலகம் உண்மையானது, உண்மையிலேயே தாக்கக் கூடியது என்பது தான்.உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறோம் – விளக்கத்துடன்.
பிரியத்துடன்ஜெயமோகன்.
மேற்படி ஊட்டி கருத்தரங்கிற்கு அடுத்த படியாக குற்றாலத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஜெய்மோகன் சில நண்பர்களிடம் கேட்ட ஒரு கேள்வி : “ கிரிக்கெட் மைதானத்தின் நடுவே ஏன் ஒரு இடத்தில் மட்டும் புல் வளர்க்காமல் வெள்ளையாக விட்டு வைத்திருக்கிறார்கள் ? “இப்படிப்பட்ட ஆட்கள்தான் தமிழ் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

5 comments:

  1. திரு. ராஜநாயஹம் அவர்களுக்கு!
    ஜெயமோகன் - நான் வாசித்தவர்களிலேயே மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய புனைவு எழுத்தாளர். அவரின் புனைவை தவிர்த்து அவரின் வலைதளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலும் எனக்கு நிறைவையே அளித்தார். சுருக்கமாக தற்போதய எழுத்தாளர்களில் ஜெயமோகன் சிறந்த ஆழுமையாக மனதில் நிற்கிறார்.

    நான் இந்த இணையதளங்களுக்கு புதிதானவன். அவரின் மேல் வைத்த விமரிசனம் என்றால் எனக்கு உடனேயே சாரு தான் நினைவிற்கு வருகிறார். அவரின் கட்டுரையின் தொணி சற்றும் ஜெமோமீது விமரிசன நோக்கில் என்னை கவனிக்க வைத்ததில்லை. இன்னிலையில் உங்களின் இந்த கட்டுரையை,விமரிசனத்தை தொடர்ந்து - நீங்கள் சொல்லும் ஆணித்தரமான வாதங்களை தொடர்ந்து மிகவும் கலங்கினேன். முதன் முறையாக ஜெமோ மீதான ஆளுமை சித்திரம் கலக்கம் கொண்டது (அவரின் தரப்பையும் படிக்க வேண்டும்.. எங்கு படிக்க கிடைக்கும்?)

    உங்களின் இந்த கட்டுரைக்கு நன்றி. பொதுவாக நான் எழுத்தாளர்களின் ஆக்கங்களை படிப்பதுடன் நிற்பேன். அவர்களின் கூட்டங்களோ, கருத்தரங்க நிகழ்வுகளிலோ நடந்ததை படிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் ஆக்கத்திற்கும் ஆளுமைக்கும் நிறைய வித்தியாசம் பார்க்காமலேயே இருந்தேன்.........
    அப்படி அல்ல என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

    என் நிலையை இப்போது சொல்ல வேண்டும் என்றால்....

    குருதிப்புனல் படத்தில் ஒரு காட்சி வருமே..தன் மேலதிகாரியே தீவிரவாதத்திற்க்கு துணைபோனவர் என்று தெரியவந்ததும் கமல் இரவில் இருட்டில் பால்கனியில் நின்று கொண்டிருக்க அருகில் வரும் தன் மனைவியையும் தள்ளி விலக்கி விடுவது......

    நாம் விரும்பும் ஆளுமை உடைந்து சிதறும் போது நம் ஆளுமையும் உருமாருகிறதோ?.......

    ReplyDelete
  2. கடந்த நாலு பதிவுகளுமே மீள்.

    ஜெயமோகன் & நாடன் - உங்களை எவ்வளவு காயபடுத்தியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. நீங்களும் இந்த சாருவும் இவ்வளவு வெள்ளெந்தியாய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    ஒரு வேளை இந்த பதிவுகள் ஜெமோவின் முகத்திரை கிழிப்பதற்க்காக கூடயிருக்கலாம்.

    ஆனால் ஜெமோவின் ’ஊமை செந்நாய்’ உயிர்மையில் படித்தேன். பிராமதம். மத்தபடி அவரது site செம்ம காமடி. முக்கியமாய் அவரது ரசிகர் sorry வாசகர் கடிதங்கள்.

    Last point: உஙகள் இலக்கியவாதிகள் சண்டைகளை பார்த்து இலக்கிய உலகத்திற்கு அடியெடுத்து வைக்கும் youngsters பயம் கொள்வர் என்பது உண்மை. (including me also).

    இதற்கு BharathiMani sir போன்றோர் நீண்ட பின்னோட்டமிட்டால் நன்று.

    ReplyDelete
  3. தங்களை எனது வலைப்பூவில் தொடர் கேள்வி பதில் தொடர அழத்துள்ளேன்.http://thogamalaiphc.blogspot.com/2009/08/blog-post_05.html

    ReplyDelete
  4. '''''அவரது site செம்ம காமடி. முக்கியமாய் அவரது ரசிகர் sorry வாசகர் கடிதங்கள்'''''

    I accept this comment and i also doubt that some of the Letters published in his blog by his fans are all actually written by Jeymohan itself.
    This is our friends belief also

    sathappan
    Qatar

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.