Share

Jul 31, 2008

மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா

கெடுவான் கேடு நினைப்பான் என்று எழுதியிருந்தேன். அதன் பலனை ஐந்தே நாட்களில் ஜெயமோகன் அனுபவித்ததை நீங்கள் அறிவீர்கள்.
ஜெயமோகன் இணைய தளத்தில் எழுதியிருந்த தை ஆனந்த விகடன் மறு பிரசுரம் செய்தது. இதற்காக விகடனைக் கண்டித்தும், ஜெயமோகனுக்கு ஆதரவாகவும் சிலர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றனர். இவர்களில் யாரும் ஜெயமோகன் தனது சக எழுத்தாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது தமது சுண்டு விரலைக் கூட உயர்த்தாதவர்கள் என்பது கவனிக்கத் தக்கது. அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அக்கடிதத்தில் எனது 30 ஆண்டுக் கால நண்பரான நாஞ்சில் நாடனின் பெயரும் இருக்கக் க ண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந் தேன். ஏனென்றால், ஜெயமோகன் என்னைப் பற்றிச் செய்திருந்த அவதூறுகளால் நான் அடைந்த உடல் மற்றும் மன நலக் கேடுகளைப் பற்றி அவ்வப்போது அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அச் சமயத்தில் அவரும் மிகுந்த துயரத்தில்தான் இருந்தார். ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்த அவரது இளைய சகோதரருக்கு (வயது 45) மாரடைப்பு வந்து ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இது பற்றி ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தன. நாஞ்சில் நாடனுக்கு மிகப் பெரிய பலமாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் அவரது இளைய சகோதரர். ஆனால் இரண்டொரு தினங்களில் அவர் ஆம்ஸ்டர்டாமிலேயே இறந்து போன செய்தி கிடைத்தது.
இது பற்றி எனக்கு ஏராளமான குழப்பங்களும் மன உளைச்சலும் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் ஒருவர் லண்டனில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இப்போது சென்னையில் குடியேறி விட்டார். அவர் வயது 40க்குள் இருக்கும். அவர் சொன்னார், இந்தியா வந்த பிறகுதான் அவர் வயதுக்கும் கீழானவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதாக.
இது ஏன் ? வெளி நாட்டினர்தான் அதிக அளவில் மாமிசமும், மிருக கொழுப்பினாலான சீஸும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியர் அளவுக்கு மாரடைப்பினால் பாதிக்கப் படுவதில்லை. அப்படியே வந்தாலும் 60 வயதுக்கு மேல்தான் வருகிறது.
மேலும், நம்மவர்கள் குளிர் நாடுகளுக்கு குளிர்காலத்தில் செல்லும்போது அவர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன் ? மாஸ்கோவில் மாரடைப்பு வந்து காலமான இயக்குனர் ஜீவா ஒரு சமீபத்திய உதாரணம். இப்போது நாஞ்சில் நாடனின் தம்பி. இதற்கிடையில் அவர் மது அருந்தும் பழக்கமோ, புகைப் பழக்கமோ இல்லாதவர்.
இது நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அதிகாலையில் நாஞ்சில் நாடனிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது. “ என் மனைவியின் தம்பி ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டான். வயது 40. “
அன்றைய தினம் மதியம் நானும், நிக்கியும், மகாதேவனும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நான் வழக்கம் போல் கோக். நிக்கி இப்போது பகலில் மது அருந்துவதை விட்டு விட்டதால் அவர் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மகாதேவன் ரமனோவ் வோட்கா.
அப்போது மகாதேவன் ஒரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினர் ஒருவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக. வயது இறந்த ஊர் போன்ற விபரங்களெல்லாம் நாஞ்சில் நாடன் சொன்னதை ஒத்திருக்கவே, அது பற்றிக் கேட்டபோது தான் தெரிந்தது – நாஞ்சிலும் மகாதேவனும் நெருங்கிய உறவினர்கள் என்பது.

விபத்தில் இறந்தவர் மோட்டார் பைக்கில் இரவு பதினோரு மணிக்கு மேல் லேசாக மது அருந்தி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு பால் வேன் அடித்து விட்டதாகச் சொன்னார் மகாதேவன். அநேகமாக ஹெல்மெட்டும் அணிந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகள் மக்களின் அஜாக்கிரதையினால் நிகழ்பவை என்பது என் கருத்து.
அன்றைய தினம் தான் விகடனுக்குக் கண்டனக் கடிதம் நாஞ்சில் நாடன் கையெழுத்துடன் வெளியாகியிருந்தது. மிகுந்த விசனத்துடன் நாஞ்சிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் :
” இத்தனை துர் மரணங்களுக்கிடையில் ஜெயமோகனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டது எப்படி ? என்னை அவர் ‘ annihilate ‘ செய்ய முயற்சிப்பது பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையே இல்லையா ? “
இதற்கு நாஞ்சில் அனுப்பிய குறுஞ்செய்தி : “ நான் இது பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையிலேயே இல்லை. “
இப்போது புரிகிறதா ஜெயமோகனின் கள்ளத்தனம்? எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம். சாலைகளில் விபத்து ஏற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். லாரிக்கு அடியில் இரு சக்கர வாகனத்தினூடே நசுங்கிக் கிடப்பான் ஒருவன். நீங்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று அவன் கையில் சற்று முன்பு நீங்கள் பார்த்த மோதிரமும், கைக்கடியாரமும் காணாமல் போயிருக்கும்.
ஜெயமோகன் நாஞ்சில் நாடனின் விஷயத்தில் செய்திருப்பதும் இதேதான். ஒருவர் தன் இளவயது தம்பியையும், தன் இளவயது மைத்துனனையும் ஒரே வார கால இடைவெளியில் மிக குரூரமான முறையில் இழந்து தன் சுய நினைவிலேயே இல்லாமல் ஆழ்ந்த துக்கத்தில் கிடக்கும் போது அவருடைய பெயரை கண்டனக் கடிதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் நபரை என்னவென்று சொல்லுவது ? அதற்குத்தான் அந்த கைக்கடிகாரம், மோதிரம் உதாரணத்தைக் கூறினேன்.
களவாணித்தனம் செய்யும்போது மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது ஜெயமோகனுக்கு இது ஒன்றும் புதிதல்ல . ஏற்கனவே பலமுறை அவர் இப்படிச் செய்து இருக்கிறார் . மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என்று திட்டி கதை எழுதும் போது அவர் தன் பெயரில் எழுதவில்லை ; வேறொரு நபரின் பெயரையே பயன்படுத்திக் கொண்டார். மனோரமா மலரிலிருந்து இசை கட்டுரையைத் திருடி எழுதிய போது தன் மனைவியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும், நாஞ்சில் நாடன் சற்று வெகுளியான மனிதர் என்பதால் அவருடைய பெயரை இதுபோல் வேறொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தியவர் இந்த ஜெயமோகன்.
இதன் விபரம் அறிய நாம் சற்றுப் பின்னே போக வேண்டும்.
” R.P. ராஜ நாயஹம் சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர். அவர் எழுதி காலச்சுவடுவில் வெளியான “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை “ என்ற அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.
சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து ‘ சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளைய சிங்கத்தின் ‘ தொழுகை ‘ கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லபட்டார் என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு ‘ மெய்யுள் ‘ என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார். இது தளையசிங்கத்தின் ‘ பிரபஞ்சயதார்த்தம்‘ என் ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல். 22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடன் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாக கூறுகிறார். இந்த விபரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கபட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.
சொல் புதிது 9-ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தளைய சிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பபட்டு கிடைக்கிறது. கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் ‘புது யுகம் பிறக்கிறது ’ கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன். போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களின் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளையசிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருந்த்தக் கூடிய அளவுக்கு ” க்ராஃட்மேன்ஷிப் ” . தளையசிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி ‘ இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘ என்றும் ‘ செயற்கை இறுக்கம் நிறைந்த நடை ‘ என்றும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். “
மேற்கொண்டு R.P. ராஜ நாயஹகத்தின் கட்டுரை ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் நடந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கிறது.
விஷயத்தின் ஆதிமூலம் என்னவென்றால் ஜெயமோகன் என்னையும், மு. தளையசிஙக்த்தையும் ஒப்பிட்டு நான் மு.த. மாதிரி எழுதினால் அடித்துக் கொல்லப்படுவேன் என்று சாடையாக எழுதியதுதான். ஜெயமோகன் கூறுவது போல் மு.த. அடித்துக் கொல்லப்படவில்லை என்பதை ராஜநாயஹம் தொடர்ந்து சில கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நிரூபித்ததும் தனது அடியாள் கோஷ்டி மூலமாக ராஜ நாயஹத்தை அவதூறு செய்து அடக்கிவிட்டு தான் சொன்ன பொய்யையும் மூடி மறைத்து விட்டார். ஆனால் விவாதத்தின் எந்த இடத்திலும் இவ்விவாதத்தின் அடி ஆதாரமான என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் ஜெ.
ொதுவாகவே தமிழ்ச் சமூகம் சராசரிகளைக் ( mediocre ) கொண்டாடும் ஒரு சமூகம். இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதி விலக்கு அல்ல. உதாரணமாக, சராசரி எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி போன்றவர்களைத்தான் இவர்கள் கொண்டாடுவார்கள்; மெளனி, நகுலன், பா. சிங்காரம், அசோகமித்திரன் போன்றவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஈழத்து தமிழ் எழுத்தாளர்களை அணுகும்போதும் இதே நிலைதான். ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரை மு.தளையசிங்கம் ஒரு சராசரி. அவ்ரை விட ‘எஸ்.பொ ’ வின் ஆரம்பகாலத்து எழுத்துக்கள் மிக வீரியமானவை. ‘ ? ‘ என்ற அவருடைய நாவலும் அதில் ஒன்று. மு. தளையசிங்கத்தின் மேற்படி ‘ தொழுகை ’ கதை என் பார்வைக்கு வந்தது. என் சுண்டு விரல் நகத்தின் விளிம்பைக் கூட அந்தக் கதையால் தொட்டுவிட முடியாது. சந்தேகமிருப்பவர்கள் என்னுடைய ‘ கர்னாடக முரசும் நவீன இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ , ‘ the joker was here’ , நேநோ, மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் போன்ற சிறுகதைகளை வாசித்துப் பார்க்கலாம்.
இது ஒரு பக்கமிருக்க, மேற்படி குற்றாலம் கருத்தரங்கு பற்றி ராஜ நாயஹம் எழுதிய கட்டுரை காலச்சுவடுக்கு அனுப்பி வைக்கப் பட்ட போது, நடந்த சம்பவங்கள் பற்றி அப்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்ய புத்திரன் காலச்சுவடில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ ராஜ நாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள் . வெகு ஜன் ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற் றி எனக்குத் தெரியும். என்னுடைய பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம் “
ஜெயமோகன் பற்றி மனுஷ்ய புத்திரன் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுவதாவது;
‘ ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒரு விதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும் ’ ‘ ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை ‘
மேற்படி தளையசிங்கம், குற்றாலம் கருத்தரங்கம் குறித்து நடந்த ஏகப்பட்ட விவாதங்களில் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் திண்ணை இணைய இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பற்றி 11.07.2004 அன்று திருப்பூரில் வைத்து நாஞ்சிலிடம் ராஜ நாயஹம் நேரடியாகக் கேட்டபோது, ” திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான். நான் தர மறுத்து விட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. “ என்று சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன். இப்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாஞ்சில் நாடன் இதே ரீதியான பதிலைத்தான் என்னிடம் கூறுகிறார். ஆனால் இப்போதைய நிலை முன்னைவிட மிக மோசமானது. ஒரே வாரத்தில் இரண்டு குரூரமான மரணங்கள்.
சரி, தன்னுடைய பெயரை இவ்வளவு அருவருப்பான முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனை நாஞ்சில் நாடன் ஏன் அனுமதிக்கிறார் ?
இப்பிரச்ச்னை பற்றி திண்ணைக்கு காலச்சுவடு கண்ணன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி :
“ ஆர்.பி. ராஜ நாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன் “
வழக்கம்போல் ஜெயமோகன் இதற்கு எந்தப் பதிலும் எழுதவில்லை.


மு.தளையசிங்கத்தையும், என்னையும் ஒப்பிட்டு ஜெயமோகன் சொல் புதிதுவில் எழுதிய விவகாரம் நான்கு வருடங்களாக எங்கெங்கோ திசை மாறி, உரு மாறி, எந்த இடத்திலும் என் பெயர் பிரஸ்தாபிக்கப்படாமல் கடைசியில் மனுஷ்ய புத்திரனை ‘நொண்டி நாய் ’ என விளித்து கதை எழுதியதோடு ‘ஜெர்க் ’ ஆகி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் நடந்த மற்றொரு விஷயமும் சுவாரசியமானது. மேற்படி தளையசிங்கம் சம்பந்தமான ஊட்டி கருத்தரங்கம் ஊட்டியிலுள்ள ஒரு இந்துத் துறவிகள் மடத்தில் நடந்ததால்தான் மனுஷ்ய புத்திரன் தன்னைத் தாக்குகிறார்; ஏனென்றால் அவர் ஒரு முஸ்லீம் என்று எழுதினார் ஜெயமோகன்.
மிக மோசமான ஒரு முட்டாள்கூட மனுஷ்யபுத்திரனை முஸ்லீம் என்று தாக்க மாட்டான். அவரைத் தாக்க வேண்டுமானால் ஒருவருக்கு கிடைக்ககூடிய ஆயுதம் அவர் ஒரு காஃபிர்; ஒரு இந்துத்துவ சாயல் கொண்டவர் என்பதாகத்தான் இருக்குமே ஒழிய அவர் எந்தக் காலத்திலும் சிறிதளவு கூட இஸ்லாமிய அடையாளம் இல்லாதிருப்பவர். சமீபத்தில் கூட அவருடைய சென்னை இல்லத்தில் ஒரு விஷேசத்திற்குச் சென்றிருந்தபோது ஃபாத்திஹாவுக்குப் பதிலாக ÿ வைஷ்ணவப் பெண் ஒருவர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலிருந்தே ஒரு பாசுரத்தைப் பாடிக்கொண்டிருந்தைக் கேட்டேன் ( இந்த டிப்ஸ் எல்லாம் இனியாவது மனுஷ்ய புத்திரனைத் தாக்க நினைப்பவர்கள் இப்படி படு முட்டாள்தனமாக செயல்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் தான் தருகிறேன்)
இந்த தளையசிங்கம் – ஜெயமோகனின் விவகாரம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ராஜ நாயஹம் “ பிரச்சனை உங்களை முன் வைத்து ஆரம்பித்திருக்க நீங்கள் ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? “ என்று கேட்டார்.
ராஜ நாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம்தான் கேட்பது வழக்கம். ஆனால் அவர் எதுவும் எழுதுவதில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த எலிகளோடு பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே அவருடைய மேற்படி கேள்விக்கு என் பதிலாக இருந்தது.
“ எலிகளோடு போட்டியிட்டால் நீ அந்தப் பந்தயத்தில் வெற்றியே அடைந்தாலும் எலிப் பந்தயத்தில் கலந்து கொண்டவன் என்ற பெயரே உனக்குக் கிடைத்து நீயும் ஒரு எலியாகவே அடையாளம் காணப்படுவாய் “ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நான் எலிகளோடு பந்தயம் கட்ட விரும்பவில்லை. எனவேதான் இப்பிரச்சனையில் 5 ஆண்டுகளாக நான் வாய் திறக்கவில்லை.
இப்போது (இலக்கியத் தொடர்பான கடிதங்களைப் பிரசுரிப்பதில் தவறில்லை என்பதால்) இது தொடர்பாக ஜெயமோகன் ராஜ நாயஹத்துக்கு எழுதிய கடிதத்தை தருகிறேன்.
R. P. ராஜ நாயஹத்திற்கு ஜெயமோகன் எழுதிய கடிதம்
தக்கலைதபால் முத்திரை 28.02.2002
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சொல் 10 இதழ் அச்சில் உள்ளது.
மு. தளையசிங்கம் குறித்த என் கருத்தை சற்று பிழையாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அது என் தவறுதான்.
நான் எழுதியது இதுதான். ‘ கலக ’ ‘ பாலிய ’ எழுத்துக்களை ஒரு சவாலாக நம் சமூகம் நினைப்பது இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் போன்றதல்ல இந்து சமூகம். கருத்தியல் கலகங்களை ‘விழுங்கி ’ செரித்துக்கொள்வதை ஒரு கலையாக 2000 வருடங்களாக அது பயின்றுள்ளது. சாங்கிய ரிஷியான காலர் பிராமணர்களால் கபிலவஸ்துவில் குளிக்கும் படித்துறையில் கல் எறிந்து கொல்லப்பட்டார். பிறகு கிருஷ்ணரே, ” முன்பிறப்பில் நான் கபிலன் “ என்று கூறினார். விஷ்ணுபுரம் நாவலில் முக்கிய விவாதமே இந்த கருத்துப்பயணம் குறித்து தான்.
சாருவின் கலகம் போன்றவற்றை பொறுக்கி, கிறுக்கு என்று கூறி சமூகம் ரசிக்க ஆரம்பித்து விடும். ஓர் எல்லையில் ஞானியாகவும் ஆக்கலாம்.
பாலியல் எழுத்து இங்கு கலகமே அல்ல. கலகம் வேறு வகையானது. அதற்குப் பின்னால் ஒரு ஆய்வுப் பார்வை உண்டு. அப்பார்வை மூலம் அது மைய நரம்புகளை தொட்டு எழுப்பும். அப்போது சமூகத்திற்கு வலிக்கும். பெரியார் தமிழகத்தில் மதிக்கப் பட்டார், ரசிக்கப் பட்டார். அயோத்திதாசப் பண்டிதர் மறக்கடிக்கப்பட்டார்.
அதாவது சாரு குரைக்கும் நாய். அது கடிக்காது என அனைவருக்கும் தெரியும். தளையசிஙக்ம் கடித்த நாய். இதுவே வித்தியாசம். சாரு ஒருபோதும், மிக எளிய முறையில் கூட, தன் எல்லைகளை மீறியவரல்ல. வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே அவரது இலக்கு.
மு.த. ‘பாலியல் ’ கதைகளை மட்டும் எழுதியவரல்ல. அவரது பல கதைகளில் பாலியல் இருந்தாலும் அவற்றின் ‘கலகம் ’ பாலியல் இல்லை. உதாரணமாக கோட்டை கதை கற்பு என்ற கருதுகோளை நிராகரிக்கிறது. அதிரடியாக அல்ல; நம்பும்படியாக, கலைப்பூர்வமாக. தொழுகை கதையில் ஓதுவாரான சைவப்பிள்ளையின் காதல் மனைவி – அவர் மீது மிகுந்த பிரியம் உடைய நிலையிலும் – காம உந்துதலுக்கு உட்பட்டு ‘ கரிய சானானுடன் ‘ உறவு கொள்கிறாள். பக்கத்து அறையில் அவளது குழந்தைகள் தூங்க. ஒலிப்பெருக்கியில் கணவனின் குரலில் கோயிலில் திருப்பாவை ஒலிக்க அவள் அவன் ஆண்குறியில் சிவலிங்கத்தைக் காண்பதாக எழுதுகிறார் மு.த. ஈழத்து வெள்ளாள / சைவ சூழலில் இது எங்கே போய் தைக்கும் என்று ஊகிக்கலாம். இதையே safe ஆகவும் எழுதலாம் – சாரு போல. கதா பாத்திரங்களுக்கு சமூக குழும அடையாளங்கள் இல்லாமல், மத சாதி விஷயஙகளை தொடாமல் எழுதலாம். சாரு sensitive ஆன விஷயங்களை தொடுவதே இல்லை என்பதைக் கவனிக்கவும். இங்கு தேவர் தலித் மோதல்கள் நடந்தபோது ஒருவர் கூட அவ்விஷயத்தை கதைக் கருவுக்குள் கொண்டுவரவில்லை. சொந்த ஜாதியை விமரிசித்து எழுதுவது ஓரளவுக்கு பிராமணர்களும் தலித்துகளும் மட்டும்தான். இங்கு கலகம் என்பதே இல்லை. கலகபாவனைகள் மட்டுமே உள்ளன. கலகம் ஒரு போதும் ‘முற்போக்காக ’ இருக்காது. அது ஆதிக்க அதிகாரத்தை எதிர்க்கும். அதே சமயம் அறிவுலகில் உருவாக்கப்படும் முற்போக்கு பாவனைகளையும், கெடுபிடிகளையும் எதிர்க்கும். இங்கே நம் கலகக்காரர்கள் ஒரு போதும் politically correct ஆன விஷயங்களை எதிர்ப்பதில்லை. மீண்டும் மு.த. விஷயம். வெறுமே எழுதிமட்டுமிருந்தால் ஒருவேளை ஈழத்து வெள்ளாள உலகம் அவரை வசைபாடி மட்டும் நிறுத்தியிருக்கும். ஆனால் தளையசிங்கம் கடிக்கவும் முற்பட்டார். தலித்துகள் பொதுக் குடி நீர் எடுக்கவும் ஆலயப் பிரவேசம் செய்யவும் நேரடியாகப் போராடினார். இவை குறித்து கனடா என். கெ. மகாலிங்கம் ( தளையசிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார் (மு.பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) வேளாளர்கள் தளைய சிங்கத்தை அவர் வேலை செய்த பள்ளிக்கு வந்து மிரட்டினார்கள். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணம் தந்து அவரை கைது செய்து அடித்துக் கொல்லச்சொன்னார்கள். அவ்வதிகாரியே நேரில் வந்து விலக சொலலியும் மு.த. விலகவில்லை ( அப்போது மகாலிங்கம் உடனிருந்தார்) விளைவாக கைது செய்யப்பட்டு இரு நாட்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல் நலம் குன்றி அங்கிருந்தேஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார். ( சிறு நீரகம் உடைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது )
நான் ‘கொல்லப்பட்டார் ’ என்று எழுதியது இக்காரணத்திலேயே. இவ்விஷயம் இன்று பரவலாகவே பேசப்படுவது தான். பாலியல் எழுதியமைக்காக அவர் கொல்லப்படவில்லை. உண்மையான கலகத்தை செய்தமைக்காகவே கொல்லப்பட்டார். இதைத் தான் நான் கூறினேன். கலகம் என்று பேசுபவர்கள் உண்மையான கலகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். சாரு ’ வின் கதைகளுக்கும் தொழுகைக்கும் இடையேயான வித்தியாசம் இங்கு கலகம் உண்மையானது, உண்மையிலேயே தாக்கக் கூடியது என்பது தான்.
உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறோம் – விளக்கத்துடன்.
பிரியத்துடன்
ஜெயமோகன்.
கலகத்தை ஒரு சமூகம் எப்போதுமே கொன்றுதான் போடும் என்பது நிச்சயமில்லை. பினோசெத்தின் சர்வாதிகாரம் பல கலகக்காரர்களை கொன்று போட்டது. ஆஸ்கார் ஒயிட்டை சிறையில் தள்ளி சித்ரவதை செய்து கொன்று போட்ட ஐரோப்பிய சமூகம் இரண்டு நூற்றாண்டுகள் சென்று எல்ஃப்ரீட் ஜெலினெக்குக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது.
பெரியாரை தமிழ்ச் சமூகம் கெளரவித்தது; ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை. என் விஷயத்தில் தமிழ்ச் சமூகம் இன்னும் என்னை வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாசித்த பிறகுதான் அது என்னை என்ன செய்யும் என்று பார்க்க முடியும். அதுவரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அவ்வப்போது இந்த எலிகளுக்கு பதில் சொல்லியபடி.
* * *
“மிக எளிய முறையில் கூட சாரு தனது எல்லைகளை மீறியவரல்ல ” என்ற ஜெயமோகனின் கருத்துக்குப் பதில் கூற வேண்டுமானால் நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றையே எழுத வேண்டியிருக்கும். எனது புதினங்கள் யாவும் சுயசரிதைத் தன்மை வாய்ந்தவை என்பதால் அதை நுண்ணுணர்வு கொண்ட வாசகர் யாருமே புரிந்து கொள்ளலாம்.
தனிப்பட்ட வாழ்விலிருந்தே நம்முடைய கலகம் ஆரம்பிக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். எல்லோரும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று தங்களுடைய ரத்த பந்த வாரிசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது நான் அவந்திகாவோடு குழந்தையே பெற்றுக் கொள்ளாமல், அவளுடைய குழந்தையையே என் குழந்தையாக ஏற்று வளர்த்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட (அன்று அவனுடைய பிறந்த நாள்) எங்கோ நடுக்கடலில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்து தன்னுடைய கேப்டனின் தொலைபேசியிலிருந்து என்னை அவசரமாக அழைத்து “எப்படி இருக்கிறீர்கள்? “ என்று கேட்டான். ( அதற்கு முன்பே இரண்டு மூன்று முறை வீட்டுக்கு அழைத்த போது நான் கிடைத்திருக்கவில்லை) அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் – உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். அந்த வார்த்தைகளின் பொருளை உணர்ந்த போது என் கண்கள் கலங்கின.
காலம் காலமாக நமது சரீர ரீதியாக ஓடி வரும் பரம்பரை ரத்த சம்பந்தத்தை உதறி எறிவதே கலகத்தின் முதல் படி. இப்படி நூற்றுக்கணக்கான படிகளைக் கடந்து வந்தவன் நான். ஆனால் ஜெயமோகன் போன்ற அசடுகளுக்கு கலகம் என்றால் என்ன தெரியுமா ? கலகக்காரன் சமூகத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களை ஜெய மோகன் கலகக்காரன் என்று ஏற்றுக்கொள்வார்.
இதைத்தான் ‘கொலை வெறி ’ என்கிறேன். ஜெயமோகனால் நான் கலகக்காரன் என்று மெச்சப்பட வேண்டுமானால் நான் கொல்லப்பட வேண்டும் !.
வேண்டாம். உயிரை விலையாகக் கொடுத்து ஜெயமோகனிடமிருந்து அந்தப் பட்டம் வேண்டாம். அதற்கும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் குண்டடிபட்டுச் செத்துப் போகும் வீரர்களின் மனைவிகளுக்கு ஆண்டு தோறும் ராஷ்டிரபதி அளிக்கும் மெடல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படி நான் ஒரு மெடலாக மாற வேண்டும் என்பது தான் ஜெயமோகனின் ஆசை. ( ஜெ. தான் ராஷ்டிரபதி )
இந்த ஆசையில் தான் அவர் மு.தளையசிங்கத்தை ‘ அடித்துக் கொல்லப்பட்டதாக ’ புருடா விடுகிறார்; இதே ஆசையில் இவர் உயிர்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு ஐரோப்பிய எழுத்தாளரை பற்றிக் குறிப்பிடும் போது அவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுதினார். உண்மையில் அவர் இயற்கை மரணம் எய்தியவர்தான்.
ஜெயமோகனின் ‘கலக ’ மெடல் கிடைக்க வேண்டுமானால் ஒரு எழுத்தாளன் ஒன்று, அடித்துக் கொல்லப் பட வேண்டும்; அல்லது, தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் எனக்கு ஒரு அசிங்கமான ஆங்கிலக் கெட்ட வார்த்தைதான் ஞாபகம் வருகிறது.
* * *
மேலும், எழுத்தை கலகம், பாலியல் என்றெல்லாம் வகைப்படுத்துவதே மிகவும் அசட்டுத்தனமானது. மார்க்கேஸ், போர்ஹேஸ் போன்றவர்களிடம் என்ன கலகம் இருக்கிறது? இலக்கியத்தில் இதெல்லாம் சில கூறுகள். அவ்வளவுதான்.
* * *
கட்டுரை ரொம்பவும் சீரியஸ் தொனியில் போய் விட்டது. மன்னிக்கவும். மேற்படி ஊட்டி கருத்தரங்கிற்கு அடுத்த படியாக குற்றாலத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஜெய்மோகன் சில நண்பர்களிடம் கேட்ட ஒரு கேள்வி : “ கிரிக்கெட் மைதானத்தின் நடுவே ஏன் ஒரு இடத்தில் மட்டும் புல் வளர்க்காமல் வெள்ளையாக விட்டு வைத்திருக்கிறார்கள் ? “
இப்படிப்பட்ட ஆட்கள்தான் தமிழ் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
* * *

லியர் மன்னன் : சாரு நிவேதிதா



திருப்பூர் வரை சென்று வந்தேன். மரங்களே இல்லாத ஊரைப் பார்க்க மிக வினோதமாகவும் , வேதனையாகவும் இருந்தது. பல வெளிநாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் மரங்கள் மிகவும் குறைவு. நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை என்று சொல்லலாம். அதன் காரணமாகவே இந்தியாவில் இயற்கை உற்பாதங்களும் அதிகமாக உள்ளன. ஆனால் எவ்வளவு அழிவு வந்தாலும் சரி , நாங்கள் திருந்த மாட்டோம் என்ற மனவுறுதி படைத்தவர்கள் இந்தியர்கள். திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளின் காரணமாகவே நொய்யல் நதி
சாக்கடையாகி செத்தே விட்டது. இந்த ஊரிலிருந்துதான் மேல் நாட்டுக்காரர்களுக்காக சட்டை உற்பத்தியாகிப் போகிறது. படுபாவிகள் , அதற்காக ஒரு நதியையே கொன்று விட்டார்கள்.
திருப்பூரில் பெயருக்குக் கூட ஒரு மரம் இல்லை. அடுத்த பயங்கரம் ஆட்டோ. ஒரு பர்லாங் தூரத்துக்கு 100 ரூ. கேட்டார்கள். நானும் நண்பரும் சாப்பிடச் சென்றோம். இருவருக்கும் சேர்த்து 450 ரூ. ஆயிற்று. அது ஒன்றும் நட்சத்திர ஓட்டல் அல்ல. மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியே இல்லாத ஊர் திருப்பூர்.
நான் இதுவரை யாரையும் நானாகச் சென்று சந்தித்ததில்லை. அதற்கு எந்த விசேஷமான காரணமும் இல்லை. கூச்சமும் , பொதுவாகவே மனிதர்கள் மீது எனக்குள்ள மனக் கசப்புமே காரணமாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து அதற்காகவே திருப்பூர் வரை சென்றது இதுவே முதல் முறை.
எனக்குப் பொதுவாக என்னுடைய படிப்பைப் பற்றி ஒரு செருக்கு உண்டு. அந்தச் செருக்கைத் தலையில் தட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தவர் அரவிந்தன். அந்த அளவுக்குப் படித்தவர். அது மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்கள் உள்ளன. மொத்தத்தில் என்னை வியக்க வைத்த ஒரு மனிதர். இதுவரை நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்தவர் என்றும் சொல்லலாம். இப்போதைய தமிழக முதல்வரின் மருமகன் என்பதால் அவரைப் பற்றி அதிகம் எழுத முடியாது. அவருக்கு அடுத்து என்னைத் தன் அறிவினால் வியக்க வைத்தவர் R.P. ராஜநாயஹம். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இவரைச் சந்திக்கிறேன். மனிதர் அப்படியே இருக்கிறார். இறைவன் இவருக்குக் கொடுத்த வரம் இளமை. மற்றொரு வரம் இவரது மனைவி. அவந்திகாவைப் போல் தெய்வீக அருள் பெற்றவர்களை நான் துறவிகளாகத்தான் பார்த்திருக்கிறேன். இல்லற வாழ்வை மேற்கொண்டவர்களாகக் கண்டதில்லை. இப்போது அவந்திகாவுக்கு அடுத்த படியாக அப்படி ஒரு தெய்வீக அருள் பெற்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன். நற்குணங்கள் மட்டுமே வாய்க்கப் பெற்ற ஒரு நங்கை. இந்தக் காலத்தில் கூட இப்படிப் பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. உதாரணமாக , தன் கணவர் ஒரு நாத்திகர் என்பதால் தானும் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாராம் மலர். பெயருக்கேற்ற தோற்றமும் , குணமும் கொண்டவர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிரபலமான அரசியல்வாதியாக இருந்த எஸ்.எம்.டி. சந்திரன் என்பவரின் புதல்வி.
ராஜநாயஹம் முன்பு போலவே பெரும் செல்வந்தராக வாழ வேண்டும் என்று அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்வேன். ஆனால் இனி அப்படி பிரார்த்திக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் , அவருடைய மனைவி மலர்தான் அவருடைய மிகப் பெரிய செல்வம்.
ராஜநாயஹமும் என்னைப் போலவே ஒரு வெகுளியாகவும் , வெள்ளந்தியாகவும் இருந்தது மற்றொரு ஆச்சரியம். அதன் காரணமாகவும் , தான தர்மத்தினாலும் தன்னுடைய எக்கச்சக்கமான சொத்துக்களை இழந்து விட்டு இப்போது ஜீவனோபாயத்துக்காக ஏதோ ஒரு சிறிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் சீரும் சிறப்புமாக இருந்த போது அவரிடம் வாங்கித் தின்ற ஒருவர் , இப்போது ராஜநாயஹம் நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் போட்டாரென்று தாம் தூமென்று குதித்தாராம். ("எப்படி நீர் எனக்கு மின்னஞ்சல் போட்டு என் நேரத்தை வீணடிக்கலாம் ; என் மின்னஞ்சல் முகவரி உமக்கு எப்படிக் கிடைத்தது ?") குதித்தவர் ஒரு எழுத்தாளர்! ' ம்... பிச்சைக்காரப் பயல்கள் ' என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் "வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன்தானே ?" என்று எழுதினேன்.
குட்டிக் கதைகளில் Kiss of the Spider Woman பற்றி எழுதியிருந்தேன் அல்லவா , மனிதர் அந்த நாவலைப் பற்றியும் , அது சினிமாவாக வந்தது பற்றியும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் தோன்றியது , இந்த ஆச்சரியமான மனிதரை நேரில் பார்த்து விட வேண்டியதுதான் என்று.
ஒரு நாள் முழுவதும் பேசினோம். சங்கீதத்திலும் கரை கடந்த ஞானமுள்ளவர் ராஜநாயஹம். உலக இலக்கியத்திலும் அப்படியே. இப்படிப் பட்ட ஒருவரையா அந்த முழு மூடனான எழுத்தாளன் ' அரைகுறை ' என்று எழுதினான் என்று ஆச்சரியமாக இருந்தது. அது சரி , மூடனுக்கு அப்படித்தானே தெரியும் ?
***
திருப்பூரிலிருந்து சேலத்துக்கு பஸ்ஸில் பயணம். சேலம் சென்று அங்கிருந்து நிக்கியோடு ரயில் பயணம் என்று ஏற்பாடு. திருப்பூரிலிருந்து சேலத்துக்கு இரண்டு மணி நேரத்தில் செல்லலாம். ஆனால் நான் சென்ற பஸ் முழுசாக ஐந்து மணி நேரம் எடுத்துக் கொண்டது. (இரண்டு சினிமா போட்டார்கள். ஒருவன் இரண்டரை மணி நேரமாக பிள்ளை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதுதான் கதை. நீலப் படம் என்று நினைத்து விடாதீர்கள். எஜமான் என்று ஒரு ரஜினி படம்.)
சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை கேரளா தமிழ்நாட்டை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருக்கிறது. இரண்டே தினங்களில் வட கேரளத்திலிருந்து தென் கேரளம் வரை பஸ்ஸிலும் காரிலும் சுற்றி வந்தேன். இங்கே திருப்பூரிலிருந்து சேலம் செல்லவே அரை நாள் ஆகி விட்டது.
***
திருப்பூரில் இருந்த போது சேலத்திலிருந்து இரவு பத்து மணிக்கு போன் செய்த நிக்கி தாக சாந்திக்கு ஏதாவது போத்தல் அனுப்பி வைக்கவா என்று கேட்டான். அவனுக்கு தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் உதவியாளர்கள் உண்டு. சரி என்று சொன்னால் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்து விடும். அன்புடன் வேண்டாம் என்று கூறி விட்டேன்.
***
25.5.2008.
4.20 p.m.

Carnal thoughts-2

John barrymore என்று ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் . ஹாம்லெட் ஆக நாடகமேடையில் கலக்கியவர்.


Byron எழுதிய Don Juan காவியம். இவன் இறந்தபோது முடிவடையாமல் போன அமரகாவியம் .
Don Juan உடைய அப்பா ஒரு பெண்ணிடம் மையல் கொண்டிருப்பார் . அம்மா கோபத்தில் டிவேர்ஸ் செய்வதற்குள் இறந்து போவார் . அம்மாவோ Alfonso என்ற மனிதரை காதலிப்பாள் . இந்த Alfonso வின் மனைவி ஜுலியா வோ 16 வயது Don Juan மீது மையல் கொள்வாள் . இப்படி ஆரம்பிக்கும் Byron எழுதிய Don Juan. தலை சுற்றுகிறதா ?


நூற்றியிரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1926 வருடம் Don Juan திரைப்படமாக வந்தபோது அதில் இரட்டை வேடத்தில் கலக்கியவர் John barrymore .


அந்த John barrymore அந்திம காலத்தில் கடைசி சடங்கை நிறைவேற்ற ஒரு கிறித்துவ பாதிரி தன்னுடன் ஒரு நர்ஸ் ஒருத்தியுடன் வந்து " Confession எதாவது சொல்ல வேண்டுமா ? நான் பாவ மன்னிப்பு தருகிறேன் " என்று barrymore தலைமீது கை வைத்து கேட்ட போது மரணப்படுக்கையிலிருந்த barrymore சொன்னார் " இந்த நர்ஸ் உடம்பு மீது எனக்கு ஆசை வருகிறது . காமப்பசி இப்போது எனக்கு "



Eroticism is assenting to life even in death
-Bataille


ஒரு பெண் தெய்வத்தின் கோவில் கற்பக்கிரகத்தில் விபச்சாரம் நடந்த விஷயத்தை கி.ரா விடம் நான் சொன்னபோது அவர் பதில் -" அவளே அப்படி பிறந்தவ தானே. மனுஷனுக்கு எங்கே இடம் கிடைக்குதோ அங்கெ அவன் அதை செய்றான். இப்போ நாய் நடுத்தெருவிலே செய்யலியா? "

.......................................

Jul 30, 2008

CARNAL THOUGHTS-1

திருப்பூரில் ஒரு மூன்று நாள் பரத நாட்டிய திருவிழா இங்கு ஊரிலயே பெரிய கல்யாணமண்டபத்தில் நடக்க இருக்கிறது .
 

நண்பர் D.மயில்சாமி நல்ல சங்கீத ரசிகர் . கர்நாடக சங்கீத கச்சேரிக்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக வந்து உற்சாகமாக ரசிப்பவர் .

அவரிடம் கேட்டேன் " பரதநாட்டியம் பார்க்க வருவீங்க தானே ?" அவர் முகம் லேசாக களையிழந்தது. "இல்லீங்க..."மென்று முழுங்கினார் .

"ஏன் ? என்ன விஷயம் ?"
"நான் பொதுவா பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பாக்கரதே கிடையாது . உங்க கிட்ட சொல்றது தப்பில்லே . எனக்கு ஆடுற ஆட்டத்தின் மேல கவனம் போக மாட்டேங்குது . அந்த பொண்ணுங்க உடம்பை பார்த்து , ஒவ்வொரு அங்கமா பார்த்து வேற மாதிரி mood தப்பு தப்பா கெட்ட எண்ணமெல்லாம் தான் வரும் . அதனாலே தான் ..."
 

CARNAL THOUGHTS!
என்ன சொல்ல ? இவர் அதை குற்ற உணர்வோடு சொல்கிறார் ?
இப்படிக்கூட இதில் பிரச்சினை இருக்கிறது என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது . சரி அந்தகாலத்தில் தேவ தாசிகள் தானே பரதநாட்டியம் ஆடினார்கள் .
'காமாந்தகாரன். பவித்திரமான கலையை இப்படி கொச்சைபடுத்திவிட்டானே ' என்றெல்லாம் கோபிக்க இங்கு கலாச்சார போலீஸ்வேலை பார்க்க நெறைய பேர் கிளம்பி விடுவார்கள். தெரிந்தது தானே.
ஆனால் இதன் உளவியல் பின்னணி பற்றி யோசிக்க யார் இருக்கிறார்கள் . மனிதனுக்கு CARNAL THOUGHTS எப்போது வேண்டுமானாலும் சூழல் மீறி வரத்தான் செய்யும் . உடம்பு ! உடற்பசி ! உடம்பு மீது பசி

" காமத்துக்குசெத்த நாயுன்னும் இல்லே" பழைய பழமொழி. இரண்டாவது வரி
INCEST . "பெத்த மகளுன்னும் இல்லே "




Jul 29, 2008

கமல் நகல் --- நகல் கமல்

The Godfather part one வெளி வந்த வருடம் 1972. மார்லன் பிராண்டோ வும் அல் பாசினோ வும் நடித்த படம். இந்த படத்தை பார்க்காதவர்கள் ஒரு முறை பார்த்துவிட்டால் , கமல்ஹாசன் நடித்து 1987 ம் வருடம் வந்த "நாயகன்" ' படத்தின் மீது உள்ள பிரமிப்பும் , 1992 ம் ஆண்டு இவரே நடித்து வெளிவந்த " தேவர்மகன் " படம் பற்றிய பெருமையும் உடைபடுவதை உணர்வார்கள். ஆங்கில படங்கள் நம் மக்கள் பார்ப்பதே இல்லை என்பதால் இங்கே பல விக்ரகங்கள் உடைபடாமல் தப்பித்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மை. நாயகன் படத்தில் கமல் தலையை கோதுவது கூட மார்லன் பிராண்டோ விடமிருந்து அப்பட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்ட mannerism தான். விரிவாக பேசபுகுந்தால் இந்த
write-up பெரிய புராணமாகிவிடும் . தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் தன் பேத்தி யுடன் விளையாடும்போது இறந்து போகிற காட்சி the Godfather படத்தில் இருந்து சுடப்பட்டது தான். மார்லன் பிராண்டோ தன் பேரனோடு விளையாடும் போது அல்லவா இறக்கிறார் என்று கமல் ரசிகர் யாராவது கோபப்பட்டால் தலையில் அடித்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. தேவர் மகன் கமல் "என்னை விட்டுடுங்கையா " என அப்பாவிடம் கெஞ்சுபவர் ,அப்பா இறந்த பிறகு தன் அண்ணன் சரியில்லாததால் வேறு வழியில்லாமல் தலைமை பதவிக்கு வரும் விஷயம் உள்பட அந்த ஹாலிவுட் பட உபயம் தான் .
சரி அது அந்த காலம் இப்போ எப்படி
'the silence of the lambs ' படம் 1991ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் . இதை பார்த்தவர்கள் 'வேட்டையாடு விளையாடு ' திகில் படத்தை பார்க்கும் போது எந்த அதிர்ச்சியும் அடைய மாட்டார்கள் .
35 வருடத்திற்கு முன் எம்ஜியார் நடித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் keynote "அணுகுண்டு "தான் இன்றைக்கு தசாவதாரத்தின் "வாயல்".

எம்ஜியார் ஒரு முறை கமலிடம் சொன்னாராம் ." நான் நூறு படி ஏறி வந்திருக்கிறேன். நீ நூற்றி ஒன்றாவது படியிலிருந்து மேலே போகவேண்டும் . அது தான் உன் சாதனையாக இருக்க வேண்டும் ."





Jul 28, 2008

கோணங்கி என்ற பொன்வண்டு

புதுவைக்கு ஒரு புத்தக சந்தைக்கு வந்திருந்த கோணங்கி யை புதுவையிலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை அப்போது ரவி குமார் ( விடுதலை சிறுத்தை.இப்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்-காட்டு மன்னார் கோவில் ) எடுக்க விழைந்தார்.

என்னிடம் கேட்டார். 'உங்களால் கோணங்கிக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா?'

எங்கள் தொழிற்சாலை நிறுவனப்பணியில் கட்டட வேலை sedarapattu industrial estate ல் நடந்து முடிந்திருந்தது.மின் வேலைகள் முடிந்து யந்திரங்கள் நிறுவப்படும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 25 லக்ஷம் செலவில் உருவான நிறுவனம் . நான் சரியென்றேன். நல்லது தான். அந்த காலத்தில் 600 ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டு factory க்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன் . அப்போதே இரண்டு பேர் என்னிடம் application கொடுக்க நிற்பதை கோணங்கி பார்த்தான். ( கோணங்கியை ஏகாரத்தில் குறிப்பிடுவது தான் இயல்பாக இருக்கும். கோணங்கியைபற்றி அவர்,இவர் என்று குறிப்பிடுவது தான் ரொம்ப செயற்கையான விஷயம் ) 'சரி இங்கு வந்து விடுகிறேன்.இப்ப நான் மைலம் போய் அங்க அஷ்வகோஷ் , அவரை பார்த்துட்டு அப்படியே கோவில்பட்டி.பெட்டி படுக்கையோட வந்திடறேன் .'

லாஸ்பேட்டை கி. ரா வாசஸ்தலம் போயிருந்தேன் . கோணங்கி வரப்போகும் விஷயத்தை கி.ராவிடம் சொன்னேன் . புன்னகைத்தார் . நானிருந்த பிருந்தாவன் காலனிக்கு அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது மறு நாளே .இப்படி எழுதியிருந்தார் 'கோணங்கி என்ற பொன்வண்டு நீங்க போடுற கருவ இலையை தின்று கொண்டு உங்க தீப்பெட்டியில் அடங்கி முட்டையிடுமா?'

சில நாளில் கோணங்கியிடமிருந்து ஒரு கடிதம் . ' நீ எனக்கு கொடுக்கிற வேலையை எனக்கு பதிலா நம்ம அண்ணாச்சி இலக்கிய வெளிவட்டம் நடராஜனுக்கு கொடு' -- -இப்ப்படி! '

'சரி அண்ணாச்சியை உடனே வர சொல் ' -பதில் எழுதினேன். நடராஜன் அண்ணாச்சி - ஜனகப்ரியா.

தொடர்ந்து லாஸ் பேட்டை இலிருந்து ராஜ் கௌதமன் ஒரு கடிதம் எனக்கு எழுதியிருந்தார்.' இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல . தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர் . இது கோணங்கி யின் வழக்கமான கோணங்கிதனங்களில் ஒன்று .'

கி.ரா எழுதியதும் ராஜ் கௌதமன் எழுதியதும் தான் சரியாகிப்போனது .

ரவிகுமாரிடம் அப்புறம் நான் சொன்னேன் "கோணங்கி நமக்கு அல்வா கொடுத்து விட்டான் ! "
நாடோடி மன்னன் ஆச்சே. அவனை ஒரு ஊரில் அடைக்க முடியுமா ?

காலச்சுவடில் இரண்டு வருடம் முன் "விருது வாங்கலையோ " என்று சிலருக்கு விருது கொடுத்த போது

கோணங்கிக்கு கொடுக்கப்பட்ட விருது
" நாடோடி மன்னன் "

ரவிகுமார் -" திராவிட மாயை"

R.P. ராஜநாயஹம் - " ஊட்டி வரை உறவு ".










Jul 23, 2008

தி.ஜா கட்டிய தாலி

19 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கடிதம்.டெல்லியிலிருந்து சாகேத ராமன் எழுதியிருந்தார் .தி . ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது . ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதி யும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார். Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான் . நான் உடனே "சான்சேஇல்லை . க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.

சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன் ." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார் .


இன்னொரு சம்பிரதாய மீறல்.
திருமதி தி.ஜா தன் கணவர் இறந்த பின் தாலியை கழுத்திலிருந்து கழட்டித்தர மறுத்து விட்டாராம் . "அவர் கொடுத்ததை நான் எதற்காக கழட்டி தரனும் . நான் மாட்டேன்" என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம். திருமதி தி.ஜா இறக்கும் வரை தன் தாலியோடு தான் இருந்தாராம்.

சாகேதராமன் இறந்த விஷயம் சிட்டி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது . சிட்டி இறந்து இப்போது இரண்டாண்டு ஆகி விட்டது .







Jul 22, 2008

உலக நாயகன் நாகார்ஜுனன்

நாகார்ஜுனனின் blog இல் தற்போது இலங்கை இணைய இதழ்" தேசம் நெற் " நாகார்ஜுனனிடம் எடுத்த பேட்டி ஆறு பகுதி களில் மூன்று பகுதி இது வரை வெளியாகி இருக்கிறது . நிஜமான உலக நாயகன் நாகார்ஜுனன் தான் ! மிகை இல்லை . உண்மை . I declare.

' we will never be finished with reading and rereading Hegal ' என்று Derrida சொன்னார் . இந்த பேட்டி பற்றி மட்டுமல்ல நாகார்ஜுனனின் blog இல் உள்ள மற்ற எல்லா நாகார்ஜுனனின் எழுத்துக்களை பற்றியும் சொல்வேன் . தமிழின் மாமேதை !

nagarjunan.blogspot.com






நிரோஷ்டா ராகமும் இலக்கியவெளி வட்டமும்

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதி யில் திருப்பாவை உற்சவம் . சேஷகோபாலன் "ராஜ ராஜ ராதிதே" பாடிகொண்டிருந்தார். ஹரிகேஷ நல்லூர் முத்தையா பாகவதரின் கீர்த்தனை. இந்த நிரோஷ்டா ராகம் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒட்டவே ஒட்டாது . பாட்டு முடிந்ததும் என் வலது பக்கம் உட்கார்ந்திருத்த வத்ராப் புதுப்பட்டி நாயக்கர் இசை சுகம் பற்றி என்னிடம் சிலாகித்த போது நான் கேட்டேன் ." உங்க ஊரிலே நடராஜன் அண்ணாச்சி தெரியுமா? "
அவர் "எந்த நடராஜன்"
"நாங்க இலக்கிய வெளி வட்டம் நடராஜன் என்று சொல்வோம் . இலக்கிய வெளி வட்டம் னு அந்த காலத்திலே ஒரு நல்ல பத்திரிகை நடத்தினார். பிள்ளைமார் ஆளு .( ஜாதியை சொன்னால் தான் அந்த பக்கம் அடையாளமும் தெரிய வாய்ப்பு.)
உங்க ஊர் பாலகுரு அண்ணாச்சி , அப்புறம் ராஜ் கௌதமன் இப்போ புதுவையிலே பேராசிரியர் ஆக இருக்கார் . இவங்கல்லாம் எனக்கு நல்ல பழக்கம் ." என்றேன் .
"அந்த நடராஜன் கம்யூனிஸ்ட் ஆச்சே. naxalite ஆச்சே .அவரா உங்களுக்கு நண்பர் "புதுபட்டி நாயக்கர் பதறி விட்டார். என் இடது பக்கம் உட்கார்ந்திருந்த குடுமி ஒருவர் திரும்பி எங்களை அதிர்ச்சியோடு முறைத்து பார்த்தார். 'என்ன இது . இந்த இடத்திலே naxalite அது இத்துண்டு அபச்சாரம் ' என்று அர்த்தம் .


ஆயிரத்திதொள்ளயிரத்து எழுபத்தி எட்டாம் ஆண்டு ஒரு நாள் புதுபட்டி கிராமத்தில் போலீஸ் படை நுழைந்து நடராஜன் வீட்டில் அலசு அலசு என்று அலசி அண்ணாச்சியையும் தூக்கி கொண்டு போய் துருவி துருவி விசாரணை . நடராஜன் அண்ணாச்சி செய்த தவறு இலக்கிய வெளி வட்டம் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார் என்பது தான் . ஜனகப்ரியா என்ற பெயரில் இவரை இலக்கிய உலகம் அறியும் .

இலக்கிய வெளி வட்டம் பத்திரிக்கையை மறக்க முடியுமா? அதன் ஒவ்வொரு இதழின் உள்ளடக்க விசயங்களையும் ஸ்ரீவில்லி புத்தூர் வாசகர் திருப்பதி இப்போதும் மனப்பாடமாக ஒப்பிக்கிறார்! இன்றைக்கும் நாகார்ஜுனன், சாரு நிவேதிதா இலக்கிய வெளிவட்டத்தையும் நடராஜன் அண்ணாச்சி பற்றியும் உற்சாகமாக குறிப்பிட்டு எழுதுகிறார்கள்!! அண்ணாச்சியின் மகள் கவிதா இன்று "காலச்சுவடு" பத்திரிகையில் உதவி ஆசிரியர் ஆக வேலை பார்த்துகொண்டே படித்துக்கொண்டும் இருக்கிறார்.

Jul 18, 2008

எமர்சனும், மேற்கோள்களும்

எமர்சனை மேற்கோள் காட்டும் வழக்கம் எழுத்தாளர்களுக்கு தவிர்க்க முடியாத விஷயம் . ஆனால் எமர்சனுக்கு மேற்கோள்கள் பிடிக்காது .

" எனக்கு மேற்கோள்கள் பிடிக்காது . உனக்கு என்ன தெரியும் ? அதை எனக்கு சொல்." என்று நேரடியாக (மேற்கோள்களை தவிர்த்து) எண்ணத்தை வெளிப்படுத்த எமர்சன் வற்புறுத்துவார் .

" நிர்ப்பந்தம் ,விருப்பம் ,சந்தோஷம் காரணமாகவும் நாம் மேற்கோள்களை பயன்படுத்துகிறோம். " என்பார்!

"ஒவ்வொரு மனிதனுமே அவனுடைய மூதாதையர்களின் மேற்கோள் தான்" என்றும் சொல்கிறார் .

தமிழில் சுந்தர ராமசாமி எழுதும்போது மேற்கோள்களை தவிர்ப்பதை எப்போதும் பிரக்ஞையுடன் செய்துவந்தார் . மேற்கோள் காட்ட க்கூடாது என்பதை ஒரு நோக்கமாக கொண்டிருந்தார்.

எனக்கென்னமோ மேற்கோள் காட்டுவது தப்பான விஷயமாக தோன்றவில்லை.

என்னுடைய சொற்ப எழுத்துகளில் அவ்வப்போது சில மேற்கோள்களை காட்டியே வந்திருக்கிறேன் . சுந்தர ராமசாமியின் வாக்கியங்கள் உள் பட.

நான் மிகப் பொருத்தமாக சரியான இடத்தில் சரியான மேற்கோள்களை பொருத்துவதாக எழுத்தாளர்களும் , வாசகர்களும் பலமுறை என்னிடம் சிலாகித்து கூறியிருக்கிறார்கள்.

மேற்கோள்கள் என்பவை ஒரு எழுத்தின் சாரத்தை மேன்மைபடுத்துவதுடன் மேற்கோள்களுக்கு சொந்தக்காரர்களையும் கனப்படுத்துகின்றன.

Jul 14, 2008

தித்தித்தது

'த'கரத்தில் இனித்த "தித்தித்தது "

'வ'கரத்தில் பழிப்பு காட்டும் "வெவ்வ்வவ்வே"

'ல'கரத்தில் பாட்டு பாடும் "லாலல்லலலா"

இப்படி தமிழில் ஆறு எழுத்தில் வேறு என்னன்ன வார்த்தைகள்...........



Jul 8, 2008

PAULO COELHO's Mails to R.P.RAJANAYAHEM

Two Emails from the Great Writer Paulo Coelho !
Two feathers in R.P.Rajanayahem's Cap !!

.............................................................................

Paulo Coelho wrote:
From: "Paulo Coelho" To: Subject: Fw: The Alchemist Date: Wed, 16 Apr 2008 08:01:19 -0300

Dear R.P.Rajanayahem,

I hope that this message finds you in high spirits, as I was when I received yours. I thank you for your kind words and inspiration.
The Warrior of light concentrates on the small miracles of daily life

Paulo Coelho

www.paulocoelho.com www.paulocoelhoblog.com http://www.warriorofthelight.com

Paulo Coelho wrote:
From: "Paulo Coelho" To: Subject: Fw: Bush - Re: Thank you Bush Date: Wed, 16 Apr 2008 07:58:17 -0300

Dear R.P.Rajanayahem,

Thank you for your message and this information. Keep on fighting for what's important to you and to the world.

Paulo Coelho.

www.paulocoelho.com www.paulocoelhoblog.com http://www.warriorofthelight.com

Jul 7, 2008

லீலார்த்தம்


இந்திரா பார்த்தசாரதி தன் படைப்புகளில் பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும். ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை, லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா. சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு அந்நியமான விஷயமில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில் இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

அவனுடைய அவதாரம் பற்றி பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.

பிருந்தாவனப் பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம் புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை, நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.

வாழ்க்கை எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும் இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர் அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே Kill - Joys தான் என்கிறான்.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால் முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.

மு.கருணாநிதி சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம் பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.

‘கிருஷ்ணன் அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன் படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன் குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது கூட ஒரு Irony தான்.

துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.

கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

கிருஷ்ணன் தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.

ராதாவின் குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா ? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ? வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான் கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.

Fate Proves Stronger than Misfortune !

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?

‘ தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான் வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘ ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi - Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the dominating charactor.

நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.

The Intray is never Finished

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.

புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005

Jul 2, 2008

பிரசாதம் செய்த மாயம்


திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி பத்தாம் வகுப்பு மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் பீரியட். நீதிபோதனை செய்து கொண்டே வகுப்பில் உலாவி வரும் போது ஆசிரியர் என்னைக் கவனிக்கிறார். நான் ஆர்வமாக, தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிற புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி பார்க்கிறார். சரோஜாதேவி எழுதிய வாடாமல்லி. அவருக்கு அதிர்ச்சி. புத்தகத்தை உயர்த்திக் காட்டுகிறார். ‘மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் வகுப்பிலே செக்ஸ் புக் படிக்கிறான்யா’ வகுப்புத் தலைவனிடம் கொடுத்து உடனே புத்தகத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அவன் மூன்றாவது மாடி வெராண்டாவில் ஓட ஆரம்பிக்கிறான். அழுது கொண்டே இறைஞ்சிக் கொண்டு நிற்கிறேன் நான். ஆசிரியர் என்ன நினைத்தாரோ இன்னொரு பையனை அனுப்பி வகுப்புத் தலைவனை உடனே திரும்ப அழைத்து வரச் சொல்லி புத்தகத்தை வாங்கி என்னிடமே திரும்பக் கொடுத்து விடுகிறார். அடிக்கவில்லை. உதைக்கவில்லை. என்னை அமரச் சொல்லி விட்டு வகுப்பைத் தொடர்ந்து நடத்துகிறார். நீதிபோதனை ஆசிரியர் வில்சன்.

ஜெகசிற்பியன் எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ படித்துக் கொண்டிருந்தபோது நான் ஆசிரியரிடம் மாட்டியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அண்ணாத்துரையின் ‘கம்பரசம்’ ‘ரோமாபுரி ராணிகள்’ படித்தபோது நான் சிக்கியிருந்தால் கூட தேவலாம் தான். வகுப்பில் பாடம் நடத்தும் போது கதைப் புத்தகம் படிப்பதே கடுமையான ஒழுங்கீனம். இப்போது நான் செய்திருப்பதென்ன ?

A BLUNDERING BOY ! 7ம் வகுப்பு படிக்கும்போதே சிகரெட் பழக்கம். 8ம் வகுப்பில் சிகரெட் இல்லாமல் முடியாது என்று ஆகி சிகரெட்டுக்கு பணம் இல்லையே என்று நான் பட்ட கவலையை காண சகியாமல் சக மாணவன் மனிதாபிமானத்தோடு ஒரு பாக்கெட் COOL சிகரெட் வாங்கித் தந்தான்.

முல்லைக்குடி என்ற ஊருக்கு பிக்னிக் சென்ற போது வயல்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். மது ருசி ஏற்கனவே அறிந்தவன் நான். கூடவே நான்கு பையன்கள். நான் மட்டும் குடித்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு மடக்கு ஒரே டம்ளரில் வாங்கிக் கொடுத்து விட்டு நான் ஒருவனே மூன்று டம்ளர் விழுங்கினேன். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த குடிமகன்கள் எனக்கு மாலை போடாத குறைதான். குடித்த சந்தோஷத்தில் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து மாஹிக்ரவுண்டில் ஒரு ரவுண்டு ஓடித்தான் நிறுத்தினேன்.

எட்டாம் வகுப்பு நான் படிக்கும் போது எனக்கு ஐந்து இளைய சகோதரர்களும், இரண்டு இளைய சகோதரிகளும். பள்ளிக் கூட காலங்களில் அந்த வயதுக்கேற்றாற் போல எம்.ஜி.ஆர். ரசிகராகத் தான் இருந்தேன். அண்ணாத்துரை இறந்த போது தேம்பித் தேம்பி அழுது சாப்பிட மறுத்து விட்டேன்.

S.S.L.Cயில் 82% மார்க் எடுத்து தேர்வு பெற்ற போது டாக்டராகி விடுவேன் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள். P.U.C யில் மெஜிரா காலேஜில் 3ம் வகுப்பில் தான் தேறினேன். அப்போது தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை. P.U.C படிக்கும்போது சிகரெட், மதுவோடு இன்னொரு பழக்கமும் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் LEBATON, MANTRAX போன்ற போதை மாத்திரைகளை விழுங்கினேன். இந்த போதை மாத்திரைகளைப் போட்டு கொண்ட பின் முள் மரங்களைப் பார்த்தால் கூட ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்.

பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன். English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்த நான் அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.

நாங்கள் வசித்த பகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார். எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நான் அ.தி.மு.க. கட்சி தோன்றிய பிறகு தி.மு.க. காரனாக கருணாநிதியின் தொண்டனாக மாறியிருந்தேன். அப்போது ‘குருபீடம்’ நூலில் ஜெயகாந்தனிடம் கையெழுத்து வாங்குகிறேன். சிரிக்காமல் சிடு, சிடு வென்று அவசரமாக பலருக்கும் ஆட்டோகிராப் செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் அவருடைய நூலில் கையெழுத்து வாங்கும் என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கிறார். அந்தப் புன்னகை கோடி பெறும். கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?’ என்று கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் கர்ஜித்தபோது ஒரு சிங்கத்தை பார்த்தாற்போலவே இருந்தது. அதன் பிறகு நான் படித்த அமெரிக்கன் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக அவர் அழைக்கப்பட்டு வந்து உரையாற்றிய போதும் SHOCK VALUE அவருடைய பேச்சில் இருந்தது. ‘KANJA IS MY SOUL. LIQUOR IS MY BODY ‘ என்றார்.

கஞ்சாப் பழக்கம் என்னையும் தொற்றிவிட்டது. அரசரடி – ஆரப்பாளையம் பகுதியில் அந்தக் காலத்தில் கஞ்சா என்பது டீ, காபி சாப்பிடுவது மாதிரி சகஜமான விஷயம். அமெரிக்கன் கல்லூரியிலும் மரத்தடி மகாராஜாக்கள் எப்போதுமே கஞ்சா புகை சூழ இருப்பது தான் அப்போது இயல்பான விஷயம். பாரதி கஞ்சா அடித்தவர். என்னுடைய அபிமான எழுத்தாளரே கஞ்சா அடிப்பவர். ஜெயகாந்தன் தான் எழுத்தாளர். வேறு யாரையும் படிக்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் ஏற்பட்டுபோனது. பி.ஏ. இரண்டாமாண்டு என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன். முன்னுரையை வாசித்தேன். ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை என்னைச் செயலோயச் செய்துவிட்டது. முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.

SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.

மிக தற்செயலாக என் வாழ்வில் நடந்த SUBLIMATION பற்றியும் சொல்ல வேண்டும். இப்போது 20 ஆண்டுகளாக சிகரெட், கஞ்சா, குடி எதுவுமே கிடையாது. விளையாட்டாகக் கூட நான் தொட்டதேயில்லை.

‘செளந்திர சுகன்’ – டிசம்பர் 2004 இதழில் பிரசுரமாகியுள்ளது.