The Godfather part one வெளி வந்த வருடம் 1972. மார்லன் பிராண்டோ வும் அல் பாசினோ வும் நடித்த படம். இந்த படத்தை பார்க்காதவர்கள் ஒரு முறை பார்த்துவிட்டால் , கமல்ஹாசன் நடித்து 1987 ம் வருடம் வந்த "நாயகன்" ' படத்தின் மீது உள்ள பிரமிப்பும் , 1992 ம் ஆண்டு இவரே நடித்து வெளிவந்த " தேவர்மகன் " படம் பற்றிய பெருமையும் உடைபடுவதை உணர்வார்கள். ஆங்கில படங்கள் நம் மக்கள் பார்ப்பதே இல்லை என்பதால் இங்கே பல விக்ரகங்கள் உடைபடாமல் தப்பித்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மை. நாயகன் படத்தில் கமல் தலையை கோதுவது கூட மார்லன் பிராண்டோ விடமிருந்து அப்பட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்ட mannerism தான். விரிவாக பேசபுகுந்தால் இந்த
write-up பெரிய புராணமாகிவிடும் . தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் தன் பேத்தி யுடன் விளையாடும்போது இறந்து போகிற காட்சி the Godfather படத்தில் இருந்து சுடப்பட்டது தான். மார்லன் பிராண்டோ தன் பேரனோடு விளையாடும் போது அல்லவா இறக்கிறார் என்று கமல் ரசிகர் யாராவது கோபப்பட்டால் தலையில் அடித்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. தேவர் மகன் கமல் "என்னை விட்டுடுங்கையா " என அப்பாவிடம் கெஞ்சுபவர் ,அப்பா இறந்த பிறகு தன் அண்ணன் சரியில்லாததால் வேறு வழியில்லாமல் தலைமை பதவிக்கு வரும் விஷயம் உள்பட அந்த ஹாலிவுட் பட உபயம் தான் .
சரி அது அந்த காலம் இப்போ எப்படி
'the silence of the lambs ' படம் 1991ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் . இதை பார்த்தவர்கள் 'வேட்டையாடு விளையாடு ' திகில் படத்தை பார்க்கும் போது எந்த அதிர்ச்சியும் அடைய மாட்டார்கள் .
35 வருடத்திற்கு முன் எம்ஜியார் நடித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் keynote "அணுகுண்டு "தான் இன்றைக்கு தசாவதாரத்தின் "வாயல்".
எம்ஜியார் ஒரு முறை கமலிடம் சொன்னாராம் ." நான் நூறு படி ஏறி வந்திருக்கிறேன். நீ நூற்றி ஒன்றாவது படியிலிருந்து மேலே போகவேண்டும் . அது தான் உன் சாதனையாக இருக்க வேண்டும் ."
யாரையும் நம்ப முடியலயே....எது எங்க உருவனதுன்னு ஆராய தனியா நேரம் ஒதுக்கணும் போல...
ReplyDeleteby the way, நீங்கள் எனக்கு ஏற்கனவே www.charuonline.com மூலமாக அறிமுகம். நிறைய எழுதவும். படிக்க ஆவலாக உள்ளேன்.
Thank you Vijay Anandh.
ReplyDeleteintha en inaiyaththil idhu varai ezhuthappattulla matra vishayankalai padiththuvitteerkala?
ReplyDeleteVijay Anandh!
ReplyDeleteI request you to read all other articles written in my blog.
சார் எப்படி இருக்கீங்க? உலகிற்கு திருக்குறளை கொடுத்த தமிழனா ஆங்கிலப்படத்தைப் பார்த்து காப்பி அடிக்கிறான். கேவலம். ஆமா திருக்குறள் போல வேற்று மொழிகளில் ஏதாவது புத்தகங்கள் இருக்கின்றனவா ?
ReplyDeleteromba nalla irukken thangavel. neenga nalla irukkeengallae?
ReplyDeleteThirukkural ezhuthina thamizhan thiruvalluvar oru pavamum ariyathavar. eppovo poittarae.
Thirukkural maadhiri varae mozhiyilae ennaththukku? Thamilil
ezhuthiyathae pothumae.
கண்டிப்பாக...நேற்று நேரப்பற்றாக்குறை காரணமாக, பிற பதிவுகளை படிக்க இயலவில்லை.சீக்கிரம் முடித்து விடுகிறேன். மிக்க நன்றி.
ReplyDeleteKamal pala vishayangalai, "sudukiraar" enpathu oru seithithaan.But, Aangila padam paarkaatha palarukku..avar kodukkum "Koottu" samaatchaaram nallathillaiyaa?.
ReplyDeleteNeengal "Cine industrylae" evvalavu kaalam iruntheergal?.
Cogito,
ReplyDeletemuthalil Azhaithaal varuven kalakattathil irandu varudam,
'Rasukkutti'padaththukkaka oru 6 maadham
சரியா காபி அடிசுடானே வச்சுக்கோ...
ReplyDeleteநீ என்னத்த கலட்டி மாட்டுன? இது வரை நீ என்னத்த சாதிச்ச?
இன்னிக்கு நோபெல் பரிசு வாங்குறவன் கண்டு பிடிக்கிறது எல்லாம் E=MC2 அபடீன்ரத வச்சுக்கிட்டுதான். அதுக்காக இப்ப கண்டுபிடிக்கிறது எல்லாம் ஒன்னும் இல்லன்னு ஆகிடுமா என்ன?
ஒருத்தன் காபி மட்டுமே அடிச்சு 50 வருஷம் திரை உலகத்துல நிக்க முடியாது. அதையும் தாண்டி ஏதோ இருக்கு. மேட்டர் இல்லனா பத்தோட பதினொன்ன போய்டுவான்.
சும்மா குத்தம் குறை கண்டுப்பிடிக்கிரத விட்டு போய் நாடு முன்னேற நீ முன்னேறு.
நீ எனத்த கலட்டி மாட்டுன அப்படீன்னு யோசி.
உங்களது பதிவுகளை தவறாமல் படிக்கும் நான் எப்படி இந்தப் பதிவினை தவற விட்டேன் என்று தெரியவில்லை. இரு படங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள் குறித்த எனது பதிவு
ReplyDeleteகாட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!
http://marchoflaw.blogspot.in/2007/05/blog-post_07.html
திரைப்படங்கள் குறித்து நன்கு அறிந்த தாங்கள், ஒத்த கருத்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி!