Share

Jun 20, 2008

HERE IS THE RUB!

 
Criminals are Creative Artists என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் 'நாச்சார் மட விவகாரம்' என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். 'ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல.' என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது 'ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.' என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
பின்னரும் திண்ணையில் நடந்த காரசார விவாதத்தில் காலச்சுவடு கண்ணன் ஜெயமோகனின் அவதூறுகளுக்கு பதிலளித்தபோது 'ஜெயமோகனுக்கும் ராஜநாயஹத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம் இருக்கும். எனக்கும் ராஜநாயஹத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால் அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்பமுடியுமா? இது அவருக்கு நான் விடும் சவால், என்று குறிப்பிட்டு 'நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் 'காதைக் பிளக்கும் மெளனம்' நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று என்று வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தார்.

திண்ணையின் போலி ஜனநாயகத்தை சாடியிருந்த கண்ணன் தன் விவாதத்தில், திண்ணை ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி செய்திருந்த கட்டைப் பஞ்சாயத்து பற்றி பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக "நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்" என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது என்று வேதனையுடன் அப்போதே குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கண்ட விஷயங்கள் யாவற்றையும் திண்ணை இணைய இதழில் 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ கட்டுரையை பன்முகத்துக்கு அனுப்பிய பின்னர் தான் படித்தறிந்து கொண்டேன். 'விலங்கும் நாணி கண்புதைக்கும்’ பன்முகம் இதழில் வெளியாவதற்கு இரண்டு வாரம் முன்னதாக கனடாவிலிருந்து நடத்தப்படும் இணைய இதழ் பதிவுகள்.காம் ஜனவரி இதழில் லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரன் இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதாக இலக்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தெரிவித்திருந்தார்கள் ஜனவரி பன்முகம் இதழ் வெளி வந்தபின் தான் நான் அதை பார்த்தேன். யமுனா ராஜேந்திரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் 'ஜெயமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில் தான் எழுதி வந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சனையில் ராஜநாயஹம் குறித்து நாஞ்சில் நாடன் பெயரில் ஜெயமோ கட்டுரையை எழுதிப் பிரசூரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு. அந்தக் கட்டுரையைத் தான் எழுதவில்லை எனப்பொது மேடையில் நாஞ்சில் நாடன் ஒப்புக் கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம் தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெயமோ தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசூரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. "இதற்கு ஜெயமோகனின் (அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்) வாய் திறந்து விட்டது. எப்படி? 'அதே கட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சில் நாடனால் அனுப்பப்பட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் (பொருள் மாற்றம் இல்லாமல்) திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன் வைத்த குற்றச்சாட்டு. அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டும் உத்தியாக. அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில் நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறைசர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில் நாடன் ஒதுங்கிக்கொண்டார்."

யப்பா பைரவா! நீ யாரு பெத்தபுள்ளையோ உன் உடம்பு பூராவுமே பொய் தானா? சகிக்கலப்பா 'கத்தை கத்தையா ரூபாய் நோட்டு திருடமாட்டேன் சில்லறைக் காசுத் திருடன்தான் நான்' என்பதைக் கூட என்ன நாசுக்காக ஒப்புக்கொள்ள முடிகிறது உன்னால் 'நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளாரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள்' என்று திண்ணை ஆசிரியர் குழு கட்டை பஞ்சாயத்து செய்தபோது கூட நீ அதை மறுக்கவில்லை உன்வாயிலே கொழுக்கட்டை. இப்போது சில்லறைத் திருட்டை மறுக்கவுமில்லை என்று அண்டப்புளுகை அள்ளி விடுகிறாயே Here is the Rub

'2002ல் நடந்து முடிந்த போன விஷயத்தை R.P. ராஜநாயஹம் இப்போது கிளற வேண்டுமா' என்று கேட்கிறவர்கள் 2005 ஜனவரியில் ஜெயமோகன் இந்த விஷயம் பற்றி பேசுவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். கனடாவிலிருந்து ஒரு இணைய இதழ் அதில் லண்டனிலிருக்கிற யமுனா ராஜேந்திரன் பிப்ரவரி 2005ல் "நாஞ்சில் நாடன் இதனைச் சில்லறை விவகாரம் எனக் கருதுவாரானால் அவர் கனவான் என்றோ அல்லது வேலைப் பளு அதிகம் உள்ளவரென்றோ ஜெயமோ கருதலாம். பிறர் அப்படிக் கருத அவசியமில்லை. நாஞ்சில் நாடன் பேசாது தவிக்கிறார் என்று கருதலாம். ராஜநாயஹம் இன்னும் பேசவிருக்கிறார் என்றுதான் விஷயமறிந்த வாசகன் கருதுவான். பிரச்சினையில் ராஜநாயஹத்தின் தரப்பு உண்மைகள் சிற்றிதழொன்றில் விரிவான கட்டுரையாக வரவிருப்பதாக அறிகிறேன். ஜெயமோ காத்திருப்பது நல்லது" என்று 'விலங்கும் நாணிக் கண்புதைக்கும்' கட்டுரை 'பன்முகம் இதழில் வெளிவர இருப்பதை முன்னறிவிப்பு செய்வது விஷய கனத்தை புரிந்து கொண்டிருப்பதால் தான்.
தமிழ் இலக்கிய உலகுக்கு நான் ஒரு தலைசிறந்த நகைச்சுவை கட்டுரை ஒன்றை விமர்சனம் என்ற சிங்காதனத்தில் ஏறி நின்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும் விமர்சகராக எப்போது தான் ஆவது? நாச்சார் மட விவகாரம் கதை வெளியான அதே சொல்புதிது 11வது இதழில் 'என்ன ஆயிற்று இந்த எழுத்தாளர்களுக்கு?' (உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடுக்கச் சொல்லு) என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. சொல்புதிது 9வது இதழில் 'அருண் மொழி நங்கை எழுபத்தெட்டு கம்பைன்ஸ் ஊழல்' இப்போது நாறியிருக்கிற நிலையில் இந்த 'என்ன ஆச்சு இந்த எழுத்தாளர்களுக்கு' என்ற அருண்மொழி நங்கையின் கட்டுரையைப் படித்துப்பார்க்கும் போது ஒவ்வொரு வரிக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி, விலா எலும்பு பிசகிவிடுமோ என்ற பயமே ஏற்பட்டுவிட்டது எனக்கு. எழுத்தாளர்களே, விமர்சகர்களே வாசகர்களே நீங்களும் பரிட்சித்துப்பாருங்கள். ஒரு எச்சரிக்கை தார்மீக கோபம் அதிகமுள்ளவர்களுக்கு அருவருப்பில் குமட்டிக் கொண்டு வாந்தி வரவும் வாய்ப்புண்டு. Here is the Rub. I FIND A FUNNY SIDE TO EVERY THING SERIOUS நேர்மையும் நல்ல உண்மையும் உள்ளவர்கள் இந்த இலக்கிய அரசியல்வாதிகளின் ஆஷாடபூதித் தனத்தையும், வேஷத்தையும், நிஜகோரமுகங்களையும் பார்க்க நேரும் போது சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சிரிப்பு சுந்தரராமசாமி 'கோவில் மாடும் உழவுக்காளையும்' கதையில் சொல்வது போல 'அந்த சிரிப்பு அழுகைக்குப் பதிலாக வருமே அந்த சிரிப்பு'

I LAUGH. NOT BECAUSE THERE IS LAUGHTER
IN MY HEART

BUT JUST TO PREVENT
MY TEARS

IF I DONT LAUGH
I MAY START CRYING - NIETSCHE



DISCRIMINATION THY NAME IS NANJIL NADAN!
நாஞ்சில் நாடனின் நடுநிலைமை ஒரு Myth அந்த Myth உடைந்துவிட்டது என்பது தான் உண்மை பரிதாபம் தான்! ஏனென்றால் இவருடைய USP. அதாவது UNIQUE SELLING PROPOSITION என்பதே இவர் நடுநிலையாளர் என்ற Image தான் ஆனால் இவருடைய நடு நிலைமையின் பக்கசார்புகள்! பற்றி ஒரு ஆராய்ச்சி மாணவர் DOCTORATE செய்யலாம். நாஞ்சில் நாடனின் நடுநிலமை பக்கசார்புகள்! "ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை"க்கு எதிர்வினை உடனே எழுதுவார். தன்னுடைய கடிதத்தை ஜெயமோகன் திருத்தினால் அது பற்றி எதிர் வினை செய்யமாட்டார் இது சில்லறை விவகாரம். 'நாச்சார் மட விவகாரம்' கதைக்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்ட போது இவர் போடமாட்டார். ஜெயமோகனுக்கு அதற்காக ஒரு கடிதம் மட்டும் எழுதுவார். ஜெயமோகன் அடாவடியாக தமிழின் முக்கிய படைப்பாளியான எம்.ஜி.சுரேஷ் படைப்புகளை ஒட்டு மொத்தமாக நிராகா¢த்து விமர்சனம் செய்யும் போது ஏன் என்று கேட்கமாட்டார். ஆனால் அதற்கு எம்.ஜி.சுரேஷ் எதிர்வினையாற்றும் போதுமட்டும் "ஜெயமோகன் உன் மேலே நல்ல அபிப்ராயம் (?!) வைத்திருந்தான் அதை நீ கெடுத்துக் கொண்டாய்'' என்று அபிப்ராயம் சொல்வார், நடுநிலைமையின் ஒரு பக்கசார்பு CALIBER இல்லாத எழுத்தாளன் நாஞ்சில் நாடன் என்று நெருடுவது இங்குதான்.

இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பெயரை கவனமாக உச்சரிக்க மறந்து, ஜெயமோகன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்து வேதசகாய குமாரை பெரிய விமர்சகர் என்பதாக அபிப்ராயப்படுகிறார். இதுதான் நடுநிலைமையின் பக்கசார்பு என்பது. இப்படி ஜெயமோகனுக்கு ரகசியமாக ஷேக்ஹேண்ட் கொடுத்து, வாலை பட பட வென்று ஆட்டுவதை இனியும் மறைக்க முடியாது. நாஞ்சில் நாடன் நடுநிலையாளனே அல்ல. ஒரு மோசமான நாலாந்தர அரசியல்வாதி. HE CAN SMILE AND SMILE AND BE A VILLAIN.

காலச்சுவடுக்கு அனுப்பப்பட்ட மூலப்பிரதியிலேயே (தன்படைவெட்டிச்சாதல் வேண்டாம்) என்னைப் பற்றி அவதூறுகள் அதிகம்தான் திண்ணையில் வெளியானதில் கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியம். "கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை அபிநயம்” இது காலச்சுவடு கூடுதலாக திண்ணையில் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய விரிவுரையும் செய்முறையும்' என்றெல்லாம் எழுதிய கைகள் வினையை விதைத்துவிட்டன. வினையை விதைத்த நாஞ்சில் நாடனும் ஜெயமோகனும் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். காலச்சுவடில் பிரசுரமான விஷயங்களே ஜெயமோகனுக்கான ஆலாபனை, பிர்கா, சங்கதி போட்டு பாடப்பட்டது தான் வினையை விதைத்தவர்களே! வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும். கழுதையைப் புணர்ந்த ரவுடியாக நான் நடித்த போது கழுதையாக நடித்தவர் யார்? HERE IS THE RUB!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.