Share

Apr 28, 2025

வேடிக்க - 37

சுப்பையா ஏ.ஏ. ரோட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தான். பெரிய மீசை. அந்த பகுதியில் ரௌடி இமேஜ் வேண்டி போராடியவன்.

போலீஸ் கேஸ்ல வகையா சிக்குனப்ப எஸ்.ஐ. 
'இவன் மீசை மசுர புடுங்குங்கடா ' ன்னு கான்ஸ்டபிள்களை ஏவியதுண்டு.
காவல் துறை பெரிய மீசை வச்சிக்கலாம். 'காவாலி'க்கு மீசை பெரிசா இருந்தா சகிச்சிக்க மாட்டாங்க. மொதல்ல சிக்குன சல்லியோட மீசைக்கு தான் உடனடி டார்ச்சர்.

பிரமலைக்கள்ளன் என்றால் ஏரியாவில் பயமும் மரியாதையும் உண்டு என்பதால் தன்னை அப்படியே கூவி கூவி கூறிக்கொள்வான். 
பிரமலைக்கள்ளர்களை முறை செப்பி விளிப்பான். 'என்ன மாமா', 'என்னா பங்காளி'

 ஆனால் அவன் தேவரே கிடையாது. வேறு ஜாதி என்று உறுதியாக பலரும் சொல்வதுண்டு. அந்த ஜாதி என்னவென்றும் சொல்வார்கள். 
'வேஷம் போட்டுத்திரியறான்ப்பு'

சலம்பல்களில் தேவமாருக்குத் தான் சப்போர்ட் பண்ணுவான்.

சோலை சிலம்பம் கற்றவன். இவன ரௌண்டு கட்டி நின்ன ஆரப்பாளையம் சல்லிகளை கையில் இருந்த கம்பை சுழற்றி நெருங்க விடாமல் செய்த போது 
 " சோல, இருடா டேய்"னு நைசா பேசி கம்பை வாங்கி விட்டான். உடனே சல்லிகளால் சோலை சுலபமாக பொரித்து, புரட்டி எடுக்கப்பட்டு விட்டான்.
சுப்பையா " ஆமா அம்ம இனத்தான்கள எதுத்தா நான் சும்மா இருப்பனா?"

கறிக்கடை தங்கப் பல்லு தங்காத்துக்கு சுப்பையாவை அறவே பிடிக்காது.
" சுப்பையா நட்டுத்தாழன். பிறமலை கள்ளனே கெடயாது, தொர."

சினிமா நட்சத்திரங்கள் பலர் பற்றி நெறய்ய gossips தவிர்க்க முடியாத விஷயம்.

குறிப்பிட்ட மூத்த பிரபல நாயகி பற்றிய பிரபல gossip : அந்த நடிகைக்கு கொங்கைகளில் ஒன்று எடுப்பா இருக்காது. சூம்பிப் போய் இருக்கும். 
கடத்திக் கொண்டு போன துஷ்டர்களில் ஒருவன் கடித்து விட்டான் என்று வதந்தி.

மற்றொரு Rumour :  அற்பாயுளில் பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்ட பிரபல பணக்கார மைனர் செய்த வேலை அது என்று நேரில் பார்த்த மாதிரியே, பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே கண்ணை விரித்து விவரமாக சொல்பவர்களும் உண்டு.

சுப்பையா declaration. ' அந்த நடிகயோட மொலைய கடிச்சவன் நான் தான். வெறியில காம்ப கடிச்சு துப்பிட்டேன் '

சகஜமாக இதை எல்லோரிடமும் எப்போதும் விரிவாக விலாவரியாக விவரித்து சொல்வான். ஒவ்வொரு தடவையும் சம்பவம் நடந்த லொக்கேஷன மாத்தி மாத்தி சொல்வான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.