நடிகவேள் ராதா மகளுக்கு கல்யாணம். கல்யாண பத்திரிகை கொடுக்க மதுரை முன்னாள் மேயர் முத்துவைப் பார்க்க வந்திருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர், பேரறிஞர் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை மதுரை முத்து. 'மதுரை முத்து எங்கள் சொத்து' என்று கலைஞர் பூரிப்பாக சொல்வார்.
ராதாவும் துடியான சாமி.
முத்து : வா மாப்ள.
ராதா: நீ பரவால்ல. மாப்ளன்னு சொல்ற.
ஒர்த்தன் கல்யாண பத்திரிகைல 'ராதாகிருஷ்ண நாயுடு' ன்னு என் பேர போட்டு கொடுக்கிறான்யா. 'இது என்னாடா நாய உடு?' ன்னு கேட்டேன்.
பேரு என்னடான்னா
ராஜாராம் நாய உடு.. நாராயணசாமி நாய உடு, ராதா கிருஷ்ண நாய உடு? ன்னு பேர சொல்றானுங்க.
மகள் கல்யாண பத்திரிகையை கொடுத்து விட்டு ராதா சட்டை மேல் பகுதியில் கையை பனியனுக்குள் விட்டிருக்கிறார்.
மதுரை முத்து நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
சட்டென்று செயற்கை பதற்றத்துடன்
" எதுக்கு கைய உள்ள விடுற? ஒங்கிட்ட கவனமால்ல இருக்கணும். துப்பாக்கிய எடுக்றியா?"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.