Share

Aug 31, 2024

144th, 145th Episodes of R.P. Rajanayahem

144th 145th Episodes of R.P. Rajanayahem

சினிமா எனும் பூதம்

முரசு டிவியில்

01.09.2024 ஞாயிற்றுக்கிழமை

08.09.2024 ஞாயிற்றுக்கிழமை

காலை எட்டரை மணிக்கு


இசையமைப்பாளர்கள்

இளையராஜா

A.R. ரகுமான்
.....

R.P. ராஜநாயஹம் 2019 பதிவு

இசையரசியல்
- R.P. ராஜநாயஹம் 

நல்ல இளமையில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம் என்று அதீத ஈடுபாடு கொண்டிருந்தவன் நான். Thanks to Thi.Janakiraman.

என் காதில் சாஸ்த்ரீய சங்கீதம் விழுந்த அளவுக்கு வேறு யார் காதிலாவது விழுந்திருக்குமா? எவ்வளவு சங்கீத கேசட்கள். எவ்வளவு காலத்து இசைக்கெல்லாம் காதை கொடுத்திருக்கிறேன். இதற்காக எவ்வளவு தேடல், 
நேரம், பணச்செலவு.

மேற்கத்திய சங்கீதமும் பீத்தாவன், மொசார்ட் என்று காதில் விழுந்தது.

மதுரை மணி அய்யர்,எம்.டி.ராமநாதன், எம்.எஸ், மதுரை சோமு, படே குலாம் அலிகான், பிஸ்மில்லாகான், பீம்ஸென் ஜோசிக்கு கொடுத்த முக்கியத்துவம், கவனக்குவிப்பு ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகிக்கெல்லாம் இருந்ததில்லை.
சினிமா பாடல் என்றால் கூட என் காலத்துக்கு முந்தியவை தான் அப்போதே கவனப்படுத்த முடிந்தது.

மெல்லிசை பாடும்போது கூட அப்படித்தான். பி.பி.எஸ், கிஷோர்குமார், சந்திர பாபு, டி.எம்.எஸ், சீர்காழி.
இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவனுக்கு, 
’ரெண்டு’ பர்மனுக்கு கொடி கட்டி கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய தயாராய் இல்லை.

பாடுவது எப்போதும் மெல்லிசையில் இருந்து தான். சாஸ்த்ரீய சங்கீதம் பாட முயற்சி செய்யவே மாட்டேன்.

அதே போல் தான் ஹாலிவுட், உலகப்படங்களும். அதோடு உலக இலக்கிய, நவீன தமிழ் இலக்கிய வாசிப்பும். தேடல்.

பாடல் கேட்பதென்றால்கடந்த சில வருடங்களில் சூஃபி பாடல்கள்  அதிக நேரத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.

பொதுப்புத்தி ரசனை ஒட்டாமல் போனது இதனால் தான்.

கடந்த நாற்பது வருஷத்து சினிமா பாடல்களில் அதிக பரவசமோ, பெருத்த ஈடுபாடோ கொண்டதில்லை. 

முழு கவனம் சாஸ்திரீய இசையின் மீது என்பதால் இளையராஜா, ரஹ்மான் என்ற 'மேக ஆதிக்கம்' ஏற்படாமலே போய் விட்டது.
அந்நியம் நேர்ந்திருக்கிறது.

வேடிக்க - 11

வேடிக்க - 11

ந. முத்துசாமி உரையாடல்களில் தெறித்தவை

வெங்கட்ரங்கம் பிள்ளை ஒட்டி பழண்டியம்மன் கோவில் தெரு - கருப்பாணியம்மன் கோவில் மீனவக்குப்பம் முத்துசாமி 1960களில் வாழ்ந்த பகுதி. 
தெருவில் வீட்டு வாசலில் கருவாடு காயப்போட்டிருப்பார்கள்.

மீனவக்குப்பக்குடிகாரன் நல்ல போதையில் உயரமான மீசை முத்துசாமியை உற்றுப்பார்க்கிறான்.  போலீஸ் என்று இவரை நினைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். ( இதை ரசித்து அடிக்கடி சொல்வார்.)
குப்பத்தில் இருந்தவர்கள் அவனைத் திட்டி
இவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.

பாரதியார் ஜாதிக்காயை வாயில் அடக்கிக் கொள்வார். லேசான போதை இருக்கும்.
பாரதி கஞ்சா அடிப்பார்.

ஞானக்கூத்தன் அறையில்  ந.முத்துசாமி கஞ்சா அடித்திருக்கிறார்.
மீனவக் குப்பம் வீட்டில் கடல் அலை தலைக்கு மேல் வந்து அடித்தது போல் கஞ்சா போதை பிரமை.

முத்துசாமி சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது தாமோதரனுடன் Non Veg messல் சாப்பிட்டவர்.
மாயவரத்தில் தாய் மாமா நடராஜனுடன் மட்டன் கோலா உருண்டை சாப்பிட்டதுண்டு.

சென்னை திருவல்லிக்கேணியில் பழண்டியம்மன் கோவில் மீனவக் குப்பத்தில் இருக்கும் போது 
வெங்கட்ரங்கம்பிள்ளை தெரு கார்னர்ல 
முஸ்லிம் கடையில் ஆட்டுக்கால் சூப். அங்கே தீனதயாளுவுடன் சூப் சாப்பிட்டிருக்கிறார்.

பின்னாளில் முழு சைவம்.
'புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும் தொழும்' குறளை பரவசமாக சொல்வார்.

Theatre memory
புள்ளி விபரம் மீசையைத் தடவிக்கொண்டே முத்துசாமி சொல்வார்.

" சம்ஸ்கிருதத்தில் மூன்று நாடகங்களுக்கு மேல் எழுதக்கூடாது என்று மரபு. 
பாஸன் என்ற நாடகாசிரியர் மூன்று சம்ஸ்கிருத நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பதை கணபதி ஐயர் கண்டு பிடித்திருக்கிறார்."

2015 சிங்கப்பூர் போய் இறங்கிய போது
'ஏர்போர்ட்டில் சைனாக்காரன் தோள்ள
குழந்தைய பார்த்தவுடன் எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சி. எங்க அப்பா எப்பவும் என்ன தோள்ள ஒக்கார வச்சுப்பார். எனக்கு ஏழு வயசு இருக்கச்ச அப்பா செத்துப் போயிட்டார் '

குஞ்சலி மாமி " ராஜநாயஹம், அவர் சொன்னதையே சொல்லிண்டிருப்பார்"

ராஜநாயஹத்திற்கு முத்துசாமி பேச்சு அலுத்ததேயில்லை.

Aug 28, 2024

வேடிக்க - 10

வேடிக்க - 10

படிக்கிறப்ப அஞ்சாறு பேர் Jolly Trip போய் ராத்திரி தூங்கி எந்திரிச்சு சிரமபரிகார வேலை பண்ணி டூத் ப்ரஷ்ல பல் விளக்கும் போது "சீக்கிரம் பல்லு விளக்கிட்டு ப்ரஷ குடுறா " ன்னு சாதாரணமா
 'பேனாவ குடு கையெழுத்து போட்டுட்டு தர்றேன்' ற மார கூலா கேட்டான் கூதுர. 
தலக்கனம் பிடிச்ச கூதுர பெரும்பாலும் குளிக்க மாட்டான்.

"எதுக்குடா எம் ப்ரஷு" 

"பல்லு விளக்கிட்டு தரேன் "

மற்ற பயலுவல்லாம் காணல. அவிங்க கிட்டயும் கேட்டுப்பாத்திருக்கான். விசித்திர சித்ரவதை தாங்க முடியாம எல்லாரும் ரூம விட்டு எஸ்கேப். 

பம்மி எட்டிப்பாத்து எல்லாவனும் எதுத்த மரத்துக்கு பின்னால நின்னு சிரிக்கானுவ.

"டூத் ப்ரஷு எடுத்துட்டு வர மறந்திட்டியா?"

"இல்ல. வீட்ல மத்தவங்களுக்கு வேணும்ல."

புரியாம முழிக்கிறத பாத்து விளக்கினான்.
" எங்க வீட்ல எல்லாருக்கும் 
ஒரே டூத் ப்ரஷு தான். 
அம்மா, அப்பா, எங்கண்ணன், எந்தங்கச்சிக, தம்பி எல்லாரும்
 ஒரே ப்ரஷூலதான் பல்லு வெளக்குறோம்"
ஒத்துமயான குடும்பம். 
'பல்'விதமான குழப்பம்.

விசித்திர விதூஷகன் விரல நீட்டச்சொல்லி டூத் பேஸ்ட்ட பிதுக்கி "இன்னக்கி, நாளக்கி ரெண்டு நாளு விரலால பல்லு வெளக்கிக்க."

"விரலால வெளக்கினா பல்லு கொஞ்சம் கூட சுத்தமாகாதே"

" போடா வெண்ண,  யானயெல்லாம் பல்லா வெளக்குது? ஒம்பல்ல ரெண்டு நாளு லூசுல விடு. டூர்ல ஜாலியா இரு."

Aug 27, 2024

வேடிக்க - 8

வேடிக்க - 8

எம்.சரோஜா 'சர்வாதிகாரி'யில் 
பாக்க நல்ல வேடிக்க.
தங்கவேலுக்கு பின்னாளில் மனைவி. 
பிரபலமான 'கல்யாண பரிசு' தங்கவேலுவோட பிரமாதமா காமடி செய்தவர் தான். "நானும் பங்கஜமும் விழாவுக்கு வந்திருந்தோம். அந்த கண்றாவிய ரெண்டு கண்ணால பாத்தோம்"

'சர்வாதிகாரி''யில் எம்.ஜி.ஆரை உயிருக்குயிராக காதலித்து "அத்தான்" என்பார். அஞ்சலிதேவியிடம் கெஞ்சி, இறைஞ்சுவார் "தயவுசெய்து என் அத்தானை திருப்பிக் கொடுத்து விடு."
Payback.

'நில் கவனி காதலி' எம்.எஸ்.வி
இசையமைப்பில் எல். ஆர். ஈஸ்வரி பாடல்
"கண்களுக்கென்ன காவலில்லையோ,
பெண்களுக்கென்ன ஆசையில்லையோ"

விஜயலலிதா பார்க்க 
ஜெயந்தி ஆடிப்பாடுகிற காட்சி.
சாதாரணமாக இந்த பாடல் Item dancerக்கானது.
விஜயலலிதா (விஜயசாந்தி சித்தி)
தான் அப்பல்லாம் Item dancer.

Aug 25, 2024

வேடிக்க - 7

Pact

கால் நூற்றாண்டுக்கு முன் 
அவிங்க மனசுக்கு தெளிவா பட்ட விஷயம்.

"அவருக்கு வயசாயிடுச்சு. சீக்கிரம் செத்துடுவாரு. 
இவன் தான் இனிமே ரொம்ப காலம் இருக்கப் போறவன்.
இவன் தான் நமக்கு முக்கியம்.
இவன் தான் நம்மளப்பத்தி எழுதப்போறவன்ய்யா. 
இவனப்பகைச்சுக்கவே கூடாது. தேவையேயில்ல.
ஜால்ரா போடுவோம்"

பரணில் கிடக்கும் பழைய கணக்கு


எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் சொன்ன விஷயம் 
 'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை பற்றி
 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்'

தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்' என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து  வணக்கம் சொன்னார். 

குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால்  அமரிக்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். 

நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்' என்று கெஞ்சினார்.
'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்' என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். 

காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். 
இவர் அப்போதைய இருபத்தி நாலு எழுத்தாளரகளுக்கு ஓட்டு போட்ட விஷயத்தை (என்னா டெக்னிக்)எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? 

தொடர்ந்து அவர் செய்த பெரிய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 
நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.

 சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டும்.விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வு.

நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். 
பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார்.
 பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க" என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு.

இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை' என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான்.எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.

ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். 
ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா' என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். 
அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation' ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் நாடான் 'நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்' என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். 

இவர்கள் தரத்திற்கே கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? 
முட்டாள்தாசாக ராஜநாயஹம் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... 

முட்டாள்தாசுக்கு Sexually Transmitted Desease என்ற வார்த்தை தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாக நாஞ்சில் நாடானின் அபத்தக்குற்றச்சாட்டு.

...

தூங்காம சாப்பிடாம "பீ" பேலாம எழுதின புத்தகம்
ஒரு அனானி ' அவங்க தான் ஒன்னை கண்டுக்கவே இல்லையே. ஏன் அவங்களை பத்தி எழுதுறே' ன்னு மொட்டை ஈமெயில் போடுறான்.
குலைச்சிகிட்டே தானேடா இருக்காங்கே.
சுந்தர ராமசாமி செத்தப்ப ஒருத்தன் தூங்காம , "பீ "பேலாம, சாப்பிடாம ஒரு புத்தகம் எழுதினான்.
அதிலே 154 ம்பக்கத்திலே ராஜநாயஹத்தால தான் சுந்தர ராமசாமி கூட பகையே வந்ததுன்னு பீடிகையா சொல்லியிருக்கான்.
தூங்காம,பேலாம,சாப்பிடாம எழுதினா விளங்குமா?
தளையசிங்கம் கருத்தரங்கம்னு எழுதாம கவிதை பட்டறைன்னு எழுதி ஆரம்பிச்சி அந்த பாரா பூரா பொய் தான். 
ராஜநாயஹத்தால தான் சுரா கூட இவனுக்கு பகை யாம்.

டே .. இந்த ஜெகம் ப்ராடால தானே 
சுரா மனம் நொந்து செத்தாரு. அவரை எதுத்து இவன் பண்ண அரசியலும் நம்பிக்கை துரோகமும் கொஞ்சமா?
இதிலே அவர் செத்ததும் இவன் தூங்கலே பேலலே சாப்பிடலே. எழுதிக்கிட்டே இருந்தானாம்.
இன்னொரு காமெடி- வாழ்க்கையிலே முதல் முதலா 'பீர்' குடிச்சிக்கிட்டு ' பீர்' மட்டும் குடிச்சிகிட்டே எழுதினானாம்.

இவனோட பிரதான ஜால்ரா
காஞ்ச காட்டான் ஊம்ப முனி
 ' கதாசிரியனை கொலை செய்யனுமா ?' கட்டுரையிலே பேடித்தனமா கடைசியிலே உளறி இருக்கான். இவன் வண்ட வாளத்தை தண்டவாளத்தில ஏத்தியாச்சி. இன்னும் காவிய தலைவி சவுகார் ஜானகி மாதிரி உருக்கமா 'வேட்டியில புல்லழுக்கு,புடுக்குலெ சொறிசிரங்கு'ன்னுஅழுகிறான்.
இதிலே எந்நேரமும் என்னை திட்டிகிட்டே
இருக்கான்னு தகவல் .

Aug 24, 2024

"மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று.."


ஷாஜி வாட்ஸ் அப்பில் அனுப்பிய இந்த 'நான்கு சுவர்கள்' பாடல்.

"நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர் கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து
கறந்தப் பாலை தந்து 
அருந்தும் போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும் போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்"

ஷாஜி : எம்.எஸ்.விஸ்வநாதனை நெருங்க முடியுமாய்யா?

நான்கு சுவர்கள் என்றாலே
"ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா"
தான் ஞாபகத்தில் வரும்.

இந்த பாடல் கவனம் பெற்றதில்லை.

பாலச்சந்தர் "நான்கு சுவர்கள்" 
கண்ணதாசன் பாடல். இசை எம்.எஸ். வி
எஸ்.பி.பி., சுசிலா பாடிய
"நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை.."காட்சியில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ.

ஜெய்சங்கர் நடித்த இரண்டாவது வண்ணப்படம்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ணப்படம்.
ரவிச்சந்திரன் தான் 
'கலர்' கதாநாயகனாயிற்றே.
ஸ்ரீவித்யா, ஒ.ஏ.கே. தேவர் 
படத்தில் உண்டு. 

பாலச்சந்தர் இயக்கியவற்றில்  தனக்கு பிடிக்காதவை என 'நான்கு சுவர்கள்'
'பத்தாம் பசலி' இரண்டை குறிப்பிட்டார்.

பத்தாம் பசலியில் நாகேஷுக்கு
 வி.குமார் இசையில் செளந்தர்ராஜன் பாடிய அருமையான பாடல் 
"வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்றடிக்குது மழையும் கொட்டுது
ஓலைக்குடிசையிலே.."

உட்கார்ந்து பார்க்கவே முடியாத பழைய படங்களில் கூட
எப்போதுமே அற்புதமான பாடல்கள் இருக்கும்.
இசைத்துறை எப்போதும் பெர்ஃபெக்ட்.

Aug 22, 2024

The procedure of calculating நிர்ணயம்

The procedure of calculating
நிர்ணயம் 

03.12. 2003
 கல்யாண  கலகலப்பில் 
ஆர்காகெஸ்ட்ராவில்
ராஜநாயஹம் பாடிய சில பாடல்கள்

1.எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?

2. காதல் நிலவே கண்மணி ராதா 
நிம்மதியாக தூங்கு 

3. கோரா காகஸ்தா யே மன்மேரா

4.தேவன் கோவில் மணியோசை

கல்யாண மண்டபத்தில்
பாடல்களை ரசித்த கஸ்டம்ஸ் சிப்பாய் பாராட்டி விட்டு " ஒங்க கைய காட்டுங்க"
கைரேகை பார்க்கிறாராம்.

" ராஜநாயஹம் சார், நீங்க என்னமோ பண்ணப்போறீங்க. அது என்னன்னு இப்ப என்னால சொல்ல முடியல. ஆனா பிரமாதமா ஏதோ பெரிசா.என்னன்னு தெரியலயே"
The seeds of Time. Unable to open the book of fate.

21. 08.2024
இந்திய தலைநகரம் பற்றிய வானிலை அறிக்கை.
"டெல்லியில் மழை உறுதியாக கிடையாது."
ஆனால் டெல்லி கனமழை கண்டது.

கணிப்பு.

It's tough to make predictions, the future is unpredictable.

Aug 21, 2024

கயமைத்தன்மையை முதலில் தோலுரித்துக் காட்டிய R.P. ராஜநாயஹம்


வீரன்மணி பாலமுருகன் :
"நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொன்னது போல ஜெயமோகன் குறித்தும் அவர்தம் நுண் கயமைத்தனங்கள் வலதுசாரி சிந்தனைகள், இலக்கிய சட்டாம் பிள்ளைத் தனங்கள் பற்றியெல்லாம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பே 
ஒரு முன்னோடியாக பொது வெளியில் மிக காட்டமாக விமர்சித்து தோலுரித்துக் காட்டியவர் பன்முக கலைஞர் R.P.ராஜநாயஹம் அவர்கள் தான். 

தோழர் யமுனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொகுத்த ஜெயமோகன் பற்றிய இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் எனும் தொகுப்பில்
 RPR-ன் மேற்படி விமர்சனங்களையும் காணலாம். 
அவர் தான் தன் சுரீர் என்ற எழுத்துச் சொல்லடிகள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்படி இலக்கிய கள்ளப் பூனைக்கு கனத்த தொரு மணியைக் கட்டி விட்டவர். 

வடிவேல் பாணியில் சொன்னால் அந்த அடிக்கு பின்பு தான் பலரும் அவரை அடித்து பேமசானது. அன்னார் இன்று நடத்துக்கிற அணுக்கத் தொண்டர் இலக்கிய ஆராதனைக் கூட்டங்களின் அச்சாரம் தான் அன்றைய ஊட்டி தளையசிங்கத்தின் தொழுகை சிறுகதை குறித்த இலக்கிய விழா அதிலொரு வாசகராக கலந்து கொண்ட  RPR அவர்கள் மேற்படி ஆசாமிக்கி வலுவாக  கண்டன வஸ்துவை ஊட்டி விட்டதன் தொடர்ச்சி தான் இப்போது பலர் தீட்டி எடுப்பதுவும். 

அன்று தொழுகைக்கு போனவர் ஆழமாக உழுது விட்டும் ஆசானகப் பட்டவர் இன்று வரை இன்னும் திருந்திய பாடில்லை. 

ஆசானின் அவைப் புலவர்களாகவும் அணுகத் தொண்டர்களாகவும் இருந்தவர்களே இன்று அவரை அடித்து நொறுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதே அவரின் கீர்த்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

மேற்படி  பூனையின் கழுத்தை சுற்றி இறுகிய மணியின் ஓசை 
இப்போது பூனைக்கு பழக்கமான
 ஒரு சங்கீதமாகி விட்டது."

Veeranmani Balamurugan

Aug 20, 2024

வேடிக்க - 6

வேடிக்க - 6

ரிட்டயர்ட் டெபுட்டி கலெக்டர்.
'ரிட்டயராகிறதுக்கு முன்னால கலெக்டர் லீவு போட்டா அந்த டிபார்ட்மெண்ட்ல நாந்தான் கலெக்டர்'

மூணு சொந்த வீடு.
பொண்டாட்டி செத்தப்புறம் 
அந்த பென்ஷனும் இவருக்கு.
புருஷன் பொண்டாட்டி பென்ஷன் மாசா மாசம் சொளையா லட்சத்து பத்தாயிரம் widower பெரிசு வாங்கிட்டு இருக்குது.
இதயெல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பார்.

" டீ வாங்கிக் குடுங்க"ன்னு கேட்டார்.
மூணு தடவ.

வாக்கிங் போறப்ப முப்பது நாள் தான்                                 பாத்த பழக்கம். 
அப்பறம் பாத்ததேயில்லை.

என்னல்லாம் பாக்க வேண்டியிருக்கு.
இப்டி ஸ்ட்ரேஞ்சா கொஞ்சநஞ்சமா?


https://www.facebook.com/share/p/u7PE8fdZ2oSH7Um2/?mibextid=oFDknk

Aug 18, 2024

வெட்டி நெனப்பு வெத்து வேட்டு

அரசரடி ஆரப்பாளையம் ரோடு 
ஐந்தாவது தெருவில் இருந்து வெளி வந்து நடந்து வரும் Mr.Mountain 
மெய்யப்பன் தெருவுக்கு முந்தைய தெருவில் நின்று கொண்டிருந்த சரவணன் மாணிக்கவாசகம், ராஜநாயஹம், 
ஜார்ஜ் விக்டர், கண்ணன், கண்ணன் தம்பி மாரி, பாஸ்கர் முதலியோரைப் பார்த்தவுடன் நின்று விட்டார். 

'தமிழ் திரையுலகில் கண்ணதாசன், பாரதிராஜா இருவர் இடத்தையும் பிடிக்கப் போறவன் இந்த Mr. Mountain தான்'
பல வருடங்களாக மார் தட்டி,
 கழுத்தை தூக்கி கொக்கரித்துக்கொண்டிருந்த 
சண்ட, கொண்ட சேவல்.
ராஜநாயஹம் குசலம் விசாரித்தவுடன் Mr.Mountain :" தோஸ்து, 
மூணு ட்ராக். மூணு பேர் நிக்கிறோம். 
மொத ட்ராக்ல நானு. 
ரெண்டாவது ட்ராக்ல பாக்யராஜ். மூணாவது ட்ராக்ல விசு.

பந்தயத்தில யார் ஜெயிக்கப்போறதுன்றத.."
(Pause)
வானத்தை நிமிர்ந்து உற்றுப் பார்த்து விட்டு, Mr. Mountain அங்கு நின்று கொண்டிருந்த அனைவரையும் தனித்தனியாக சள் பார்வை பார்த்துவிட்டு
கையை உயர்த்தி, 'ரெட்டை' க்கு காட்டும் இரண்டு விரல்களையும் ஆட்டி ஆட்டி, மறுபடியும் வானத்தை கண்ணோக்கி " காலம் தான் பதில் சொல்லும்" 

பாக்யராஜ் பத்து படம் இயக்கி நடித்து விட்டு அமிதாப்பை வைத்து இயக்கியிருந்த இந்திப்படம் ஆக்ரி ரஸ்தா ரிலீஸ் ஆகி விட்ட நேரம்.

சம்சாரம் அது மின்சாரம் அப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. 

Mr. Mountain: "ஒங்களுக்கு புரியம்னு எனக்கு தெரியும்.பாக்யராஜ், விசு மாதிரி Mr. Mountain கதை வசனம் டைரக்சனோட ஹீரோவும் தானே"

வெறுங்கனவு மட்டுமே கொண்டிருந்த, இன்னிங்சை ஆரம்பிக்கவே செய்திராத
Mr. Mountain வாய் வீச்சு.

Necrophilia

Necrophilia

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22வயதான ரங்கராஜ் என்ற நபர், இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த உடலுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

 

 தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

 வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு  தீர்ப்பு வழங்கினர்.

அதில் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும், பிணத்துடன் உடல் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட
 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கினர்.

குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா? அல்லது குற்றம் இல்லையா? சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று, தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 

அத்துடன், இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது சட்ட ஆராய்தலுக்கு உட்பட்டது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

https://www.facebook.com/share/p/CJjwhfhkutAr597R/?mibextid=oFDknk

Aug 17, 2024

அகம்பாவம்


பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேந்தர் படங்களில் வாய்ப்பு கிடைத்து, பிரபலம், வசதி, வாய்ப்பு கிடைத்து செழித்தவர்கள் ஏராளமானவர்கள்.

பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தில் வெற்றி பெற்ற பிறகு அந்த நேர இளம் நடிகர்கள் இவர் படத்தில் நடிக்க தவித்து பரிதவித்திருக்கிறார்கள்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் இருந்து அவரைப் பார்த்து தும்பிக்கய தூக்கி இறக்கிக்கொண்டிருந்த நடிகர்.
குறிப்பிட்ட படத்தில் பாரதிராஜா சின்னதா ரோல் கொடுத்தார்.
 பாரதிராஜா தரும் கதாநாயகன் பாத்திரத்தில் ஒன்றி நடிக்க பெருங்கனவு கண்டு கொண்டே இருந்த நடிகர் தொடர் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.

ஏமாற்ற ரோசத்தில் பிறகு பாரதிராஜாவை பார்க்கவில்லை.

சில சந்தர்ப்பங்கள் சாதாரண  வெளிப்படங்கள். 

சாலி கிராம ஸ்டுடியோவில் பாரதிராஜாவை தற்செயலாக
எதிரே பார்க்க வாய்ப்பு.



பாரதிராஜா " யோவ் என்னய்யா செய்ற?"

காலில் உடனே விழுந்து ' நீங்க தான் தெய்வம், நல்ல ரோல் குடுங்க, உயிர் பிச்ச குடுங்க.. நீங்க தான் காப்பாத்தனும்'னு தேம்பியிருக்க வேண்டாமா?

இந்த நடிகர் ' இந்த படத்தில ஹீரோவா நடிச்சிக்கிட்டுருக்கேன், அந்த படத்தில கதாநாயகன் நாந்தான். ' தேங்கா மூடி பட பட்டியலை ஒப்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அகம்பாவம்.
பந்தா. வரட்டு கௌரவம்.

இயக்குநர் மேலும் கீழுமாக பார்வை பார்த்து விட்டு " அப்படியா, சரி"

என்னக்காவது அவரா கூப்ட மாட்டாரா? நிரந்தர ஏக்கத் தவிப்பில் தக்காளி வித்து..

 பல வருடம் கழித்து இதே போல தற்செயலாக எதிரே அதே நடிகரைப் பார்த்த பாரதிராஜா அவருடைய இயல்பான குரலில் பலமாக
 " நீ இன்னும் ஊருக்குப் போகலியா?!"

Aug 16, 2024

வேடிக்க - 5 Follow Focus

Follow Focus 

அடையார் ஃபில்ம் இன்ஸ்ட்டிடியூட்.
பயிற்சி மாணவர்கள் ப்ராஜெக்ட்.

அத சுவாரசியமா ரசித்து வேடிக்க பாத்த ராஜநாயஹம்.

பாடல் காட்சி ஷூட்.

காட்சி அமைப்பு பற்றியெல்லாம் படத்தில் உள்ளது போல் இல்லாமல் மாணவர்கள் விருப்பப்படி.

ப்ராஜெக்ட் கேமரா ஸ்டூடெண்ட்ஸ் ரெண்டு பேர்.
சுஹாசினி, மற்ற கேமரா ஸ்டூடண்ட் கிராமத்தில் இருந்து வந்தவராயிருக்கலாம்.
கல்லூரி மாணவர்களில் கிராமத்தில் இருந்து வந்தவர்களை சுலபமாக கண்டு பிடிக்க முடியும். நடையுடை, தோற்றம்.

சுஹாசினி கேமரா ஸ்டூடண்ட் என்பதே பெரிய செய்தி. பெண் மூவி கேமரா ஸ்டூடண்ட். அதோடு பிரபல கமல் ஹாசனின் அண்ணன் மகள்.

படம் பிடிக்கப் போட்டுக்கொண்டிருந்த பாடல் 

' உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..'

Two Acting students.
வீல் சேரில் மாணவியை உட்கார வைத்து மாணவர் அதைத் தள்ளியவாறு உருக்கமாக பாடுவதாக.

பிரபலமான ஜேசுதாஸ் பாடலை ஒலிக்கச் செய்து வரி வரியாக படப்பிடிப்பு.

திடீரென்று சுஹாசினி மூட் அவுட். கோபமாக சக கேமராமேனிடம் " நீயே பண்ணிக்க. நான் வர்ல"
ஷாட் அமைப்பது பற்றி கருத்து வேறுபாடு.

சுஹாசினி களத்தை விட்டு வெளியே வந்து விட்டார்.

மற்ற சக மாணவர்கள் விசாரிக்கிறார்கள் 
" என்ன சுஹாசினி?"  

சுஹாசினி " Follow focus என்ன பெரிய விஷயமா? Follow focus பெரிய விஷயம்ங்கறான்"

கேமராவில் நின்று கொண்டிருந்த மாணவர் படபடவென்று "Follow focus எங்களுக்கு பெரிய விஷயம் தான். பெரிய்ய விஷயம் தான்"

சுஹாசினி காதிலேயே வாங்காமல் உடனே வெளியேறினார்.

இன்ஸ்டிடியூட் கேட் முன்னால் காத்திருந்து சிட்டி பஸ்ஸில் கூட்டத்தில் முன் ஏறி நின்று கொண்டார். அதே பஸ்ஸில் முன் பக்கம் ராஜநாயஹம்.

சில மாதங்களில் நடிகர் சங்க கட்டிடத்தில்
மூன்று போலண்ட் மூவிஸ் ப்ரொஜக்ஷன்.

தற்செயலாக ஃபில்ம் இன்ஸ்ட்டிடியூட் போயிருந்த ராஜநாயஹமும் பஸ்ஸில் கிளம்பிய போது அதே பஸ்ஸில் மாணவர்கள் கூட்டத்தில் பேண்ட் போட்ட சுஹாசினியும்.

 அந்த வார 'சாவி' பத்திரிகையில் வண்ண அட்டைப் படத்தில்
சுஹாசினி.

படித்துக்கொண்டிருக்கும் போதே மகேந்திரன் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 

போலண்ட் படங்கள் ஆரம்பிக்கு முன் ஹாலில் இருந்த ப்ரொஜெக்டரை செக் செய்ய ' மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ' கந்தன் கருணை பாடல் ஆப்பரேட்டர் ஓட்டிப்பார்த்தார்.

படங்கள் பார்த்து முடிந்த பின் கிளம்பிய அடையார் இன்ஸ்டிடியூட் சக மாணவர்களிடம் சுஹாசினி
 " நில்லுங்கப்பா. நானும் பஸ்ஸில வீட்டுக்கு போகனும்."

Aug 15, 2024

142nd, 143rd Episodes of R.P. Rajanayahem

142nd, 143rd Episodes of R.P. Rajanayahem
R.P. ராஜநாயஹம்
சினிமா எனும் பூதம்

முரசு டிவியில்

18.08.2024 ஞாயிற்றுக்கிழமை

25.08. 2024 ஞாயிற்றுக்கிழமை

காலை எட்டரை மணிக்கு

ஷோபனா 

சுலக்ஷனா

Aug 13, 2024

Cold in blood

Cold in blood 


ஊர்வசி ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது முந்தானை முடிச்சு படத்தில் நடித்திருக்கிறார். 1983. பதினான்கு வயது.
ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு பள்ளிக்கு போய் பரிட்சை எழுதியிருக்கிறார்.

பாலச்சந்திரன் மலையாளப்படம் 
'ஏப்ரல் 18' நடிக்கும் போது 1984ல் ஷோபனா வயது பதின்மூன்றரை. She was hardly fourteen.
ஷோபனா முந்தானை முடிச்சு படத்திற்கும் வாய்ப்பு தேடி போயிருக்கிறார். அப்ப பதிமூணு வயசு தான. School exam date காரணமாக சொன்னதனால் shooting ஒத்து வராத நிலை.

சுலக்ஷனா 1980ல் கதாநாயகியாக முதல் தெலுங்கு படத்தில் நடித்த போது பதினான்கு வயது. கே. விஸ்வநாத் படம் சுபோதயம். 

'கிழக்கே போகும் ரயில்', 'நிழல்கள்ல கதாநாயகியாக நடிக்க முயற்சி செய்து ஏமாந்ததாக சுலக்ஷனா சொல்கிறார்.
1978ல் கிழக்கே போகும் ரயில்.
பெற்றோர் பன்னிரண்டு வயதில் பாரதிராஜாவிடம் அழைத்துப் போயிருந்திருக்கிறார்கள்.

பானுப்ரியா  எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல் படமான மெல்லப்பேசுங்கள் படத்தில் செய்த கதாபாத்திரம் டீச்சர்.1983ம்வருடம்.
பானுப்ரியா 'தூறல் நின்னு போச்சு' படத்தில் வாய்ப்புக்காக போயிருக்கிறார். கிட்டவில்லை.
அப்படின்னா 1981ல் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அவருடைய பெற்றோர் சினிமா சான்ஸ் தேடியிருக்கிறார்கள்.

சிறுமிகளாக இருக்கும் போதே திரைப்பட கதாநாயகியாகியிருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி கூட பதின்மூன்று வயதில்
'மூன்று முடிச்சு' கதாநாயகி.

When they were cold in blood.

மற்றொரு பார்வையில்,
 கன்னிமை மேதைமை நிறைந்தது. 
Little girls are wiser than men.

Aug 12, 2024

யமுனை

"யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு தான் ஆட"

'இந்த பாடல் கேட்ட பிறகு தான் யமுனைன்னு ஆறு இருப்பது எனக்கு தெரியும்' 
- குட்டி பத்மினி 

பொது அறிவு அவ்வளவு கம்மியா?

"யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே" 
இப்படி பிரபலமான 
தமிழ் சினிமா பாடல் கூட கேட்டதேயில்லையாமா?

'யமுனா கங்கா' ன்னு தேசிய கீதத்திலேயே இருக்கிறதே..

Vindhya Himachala Yamuna Ganga 

குட்டி பத்மினி சில வருடங்களுக்கு முன்னால வீடியோவில சொல்லியிருந்தார் "நாங்க சுத்த அய்யங்கார்" 
ஜம்பம்.

அப்பா சக்ரவர்த்தி மட்டும் தான் அய்யங்கார்.

அவங்க அம்மா பெயர் ரூத். சினிமா பெயர் ராதாபாய். அம்மாவோட அப்பா மதுரைக்காரரான ஜேம்ஸ். ஜேம்ஸ் கட்டிய மனைவி பெர்ஷியாக்காரர்.

குட்டி பத்மினி சித்தி முன்முன். சிம்புவோட பாட்டி. 
குட்டி பத்மினி தாய்மாமா பெயரெல்லாம் கமால், ஜமால் னு தான். மதுரை ஆரப்பாளையம் க்ராஸ் ஜிம்மி ஸ்டோர்காரங்க.
....

யமுனை தி.ஜா நாவல் மோக முள் யமுனாவை நினைவு படுத்துகிறது.
பொன்னகரம் சிறுகதையில் ஏழைகள் வீட்டு தெருவில் சாக்கடை பற்றி புதுமைப்பித்தன் பகடி
' யமுனை தானே கறுப்பாயிருக்கும்'

Aug 10, 2024

வேடிக்க - 4 'கொரியன் ரெஸ்ட்ரன்ட்'

வேடிக்க - 4

தினமும் வேறு வேறு திசைகளில் வாக்கிங்.
Angels whisper to a man when he goes for a walk.
Walk and stare. Stand and stare.
 கொரியன் ரெஸ்ட்ரன்ட் வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு. 

சின்ன அழகான வெள்ள கட்டிடம். 
லேப் டாப் முன் நின்று கொண்டிருந்த பையன் டார்ஜிலிங்கிலிருந்து வந்திருக்கிறான். 
"தாய்மொழி பெங்காலியா? இந்தி?"
இரண்டும் இல்லை. மறுத்து விட்டு சொல்கிறான்.
"Mother Tongue in Darjeeling Gorkhali"
கோர்க்காலி.
வேலை பார்க்கும் பையன்களும் சிறிய பெண்களும் நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிமிலிருந்து பெற்றோர்களைப் பிரிந்து வந்தவர்கள். நேப்பாலில் இருந்து வந்துள்ள பையன்கள் கூட.

அழகான கொரிய ஓவியங்கள் என்ன கதை சொல்கின்றன? 
A Sleeping Beauty. விழித்த நிலையிலும்.
யசுநாரி கவபட்டா எழுதிய ஜப்பானிய குறுநாவல்
' House of the sleeping beauties' ஞாபகத்தில்.
அதில் தூங்கும் அழகிளோடு கட்டிலில் விழித்தே படுத்திருக்கும் கிழவர்கள். 

ஜோனாதன் ஸ்விஃப்ட் கல்லிவர்ஸ் ட்ராவல்ஸைப் போல ஏதோ
 இது கொரிய கதையாயிருக்கலாம்.
கட்டிலில் இருக்கும் பெண்ணைச்சுற்றி லில்லிப்புட்ஸ் பெண்கள். 
பூனை கட்டிலுக்கடியில்.

Aug 6, 2024

நாயன்மார் வேடிக்க - 3


வேடிக்க - 3

மருந்தீஸ்வரர் கோயிலில் நாயன்மார்களை நின்று நின்று வேடிக்கை பார்த்த பரவசமான வேளை:

ஓஹோ, இளையராஜாவுக்கு முன்னரே
இசை ஞானி இருந்திருக்கிறாரோ? நாயன்மார்களில் ஒருவர் பெயர்
'இசை ஞானியார்'. மற்ற நாயன்மார்கள் வேட்டி கட்டிக்கொண்டிருக்க யாரோ இளையராஜா ரசிகர் இவருக்கு பட்டுடுத்தி விட்டு மரியாதை செய்திருக்கிறார் போல என நினைத்தால் தவறு. இசை ஞானியார் பெண். காரைக்கால் அம்மையார் போல.
அதனால் பட்டாடை.

( கம்பராமாயணம் எழுதியவர் இவராகத்தான் இருக்கும் என்று எடப்பாடியால் சந்தேகிக்கப்பட்ட) சேக்கிழார் கூட நாயனே தான்.

அவரவர் செயல்பாடு வைத்தே சில நாயன்கள் பெயர்.

'சித்தத்தை சிவன் பால் வைத்தார்' எல்லா நாயன்மார்களின் சித்தமெல்லாம் சிவம் தானேயானாலும் இவர் தான் இதில் அத்தாரிட்டி என புரிந்து கொள்ள வேண்டும்.

' முழு நீறு பூசுவார்' நெற்றி துவங்கி பாதம் வரை வெள்ளையடிப்பது போல திரு நீறு பூசிக்கொள்வாராயிருந்திருக்கலாம்.

இந்த ஊரில் தான் பிறந்திருக்கிறார் மற்ற நாயனான 'திருவாரூர் பிறந்தார்'


பணிவான குணவானான நாயன் 'பத்தராய் பணிவார்' 

மானிடரை பாட மறுத்த பிடிவாதமான நாயன் நாமம் 'பரமனையே பாடுவார்'

அறுபத்து மூன்று நாயன்மார்களில் 'முப்போதும் திருமேனி தீண்டுவார்'  நாமம் தரித்தவரும் உண்டு.

நாமகரணம்.
'நாமம்' ஆங்கிலத்தில் 'NAME'.