Share

Aug 18, 2024

வெட்டி நெனப்பு வெத்து வேட்டு

அரசரடி ஆரப்பாளையம் ரோடு 
ஐந்தாவது தெருவில் இருந்து வெளி வந்து நடந்து வரும் Mr.Mountain 
மெய்யப்பன் தெருவுக்கு முந்தைய தெருவில் நின்று கொண்டிருந்த சரவணன் மாணிக்கவாசகம், ராஜநாயஹம், 
ஜார்ஜ் விக்டர், கண்ணன், கண்ணன் தம்பி மாரி, பாஸ்கர் முதலியோரைப் பார்த்தவுடன் நின்று விட்டார். 

'தமிழ் திரையுலகில் கண்ணதாசன், பாரதிராஜா இருவர் இடத்தையும் பிடிக்கப் போறவன் இந்த Mr. Mountain தான்'
பல வருடங்களாக மார் தட்டி,
 கழுத்தை தூக்கி கொக்கரித்துக்கொண்டிருந்த 
சண்ட, கொண்ட சேவல்.
ராஜநாயஹம் குசலம் விசாரித்தவுடன் Mr.Mountain :" தோஸ்து, 
மூணு ட்ராக். மூணு பேர் நிக்கிறோம். 
மொத ட்ராக்ல நானு. 
ரெண்டாவது ட்ராக்ல பாக்யராஜ். மூணாவது ட்ராக்ல விசு.

பந்தயத்தில யார் ஜெயிக்கப்போறதுன்றத.."
(Pause)
வானத்தை நிமிர்ந்து உற்றுப் பார்த்து விட்டு, Mr. Mountain அங்கு நின்று கொண்டிருந்த அனைவரையும் தனித்தனியாக சள் பார்வை பார்த்துவிட்டு
கையை உயர்த்தி, 'ரெட்டை' க்கு காட்டும் இரண்டு விரல்களையும் ஆட்டி ஆட்டி, மறுபடியும் வானத்தை கண்ணோக்கி " காலம் தான் பதில் சொல்லும்" 

பாக்யராஜ் பத்து படம் இயக்கி நடித்து விட்டு அமிதாப்பை வைத்து இயக்கியிருந்த இந்திப்படம் ஆக்ரி ரஸ்தா ரிலீஸ் ஆகி விட்ட நேரம்.

சம்சாரம் அது மின்சாரம் அப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. 

Mr. Mountain: "ஒங்களுக்கு புரியம்னு எனக்கு தெரியும்.பாக்யராஜ், விசு மாதிரி Mr. Mountain கதை வசனம் டைரக்சனோட ஹீரோவும் தானே"

வெறுங்கனவு மட்டுமே கொண்டிருந்த, இன்னிங்சை ஆரம்பிக்கவே செய்திராத
Mr. Mountain வாய் வீச்சு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.