Follow Focus
அடையார் ஃபில்ம் இன்ஸ்ட்டிடியூட்.
பயிற்சி மாணவர்கள் ப்ராஜெக்ட்.
அத சுவாரசியமா ரசித்து வேடிக்க பாத்த ராஜநாயஹம்.
பாடல் காட்சி ஷூட்.
காட்சி அமைப்பு பற்றியெல்லாம் படத்தில் உள்ளது போல் இல்லாமல் மாணவர்கள் விருப்பப்படி.
ப்ராஜெக்ட் கேமரா ஸ்டூடெண்ட்ஸ் ரெண்டு பேர்.
சுஹாசினி, மற்ற கேமரா ஸ்டூடண்ட் கிராமத்தில் இருந்து வந்தவராயிருக்கலாம்.
கல்லூரி மாணவர்களில் கிராமத்தில் இருந்து வந்தவர்களை சுலபமாக கண்டு பிடிக்க முடியும். நடையுடை, தோற்றம்.
சுஹாசினி கேமரா ஸ்டூடண்ட் என்பதே பெரிய செய்தி. பெண் மூவி கேமரா ஸ்டூடண்ட். அதோடு பிரபல கமல் ஹாசனின் அண்ணன் மகள்.
படம் பிடிக்கப் போட்டுக்கொண்டிருந்த பாடல்
' உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..'
Two Acting students.
வீல் சேரில் மாணவியை உட்கார வைத்து மாணவர் அதைத் தள்ளியவாறு உருக்கமாக பாடுவதாக.
பிரபலமான ஜேசுதாஸ் பாடலை ஒலிக்கச் செய்து வரி வரியாக படப்பிடிப்பு.
திடீரென்று சுஹாசினி மூட் அவுட். கோபமாக சக கேமராமேனிடம் " நீயே பண்ணிக்க. நான் வர்ல"
ஷாட் அமைப்பது பற்றி கருத்து வேறுபாடு.
சுஹாசினி களத்தை விட்டு வெளியே வந்து விட்டார்.
மற்ற சக மாணவர்கள் விசாரிக்கிறார்கள்
" என்ன சுஹாசினி?"
சுஹாசினி " Follow focus என்ன பெரிய விஷயமா? Follow focus பெரிய விஷயம்ங்கறான்"
கேமராவில் நின்று கொண்டிருந்த மாணவர் படபடவென்று "Follow focus எங்களுக்கு பெரிய விஷயம் தான். பெரிய்ய விஷயம் தான்"
சுஹாசினி காதிலேயே வாங்காமல் உடனே வெளியேறினார்.
இன்ஸ்டிடியூட் கேட் முன்னால் காத்திருந்து சிட்டி பஸ்ஸில் கூட்டத்தில் முன் ஏறி நின்று கொண்டார். அதே பஸ்ஸில் முன் பக்கம் ராஜநாயஹம்.
சில மாதங்களில் நடிகர் சங்க கட்டிடத்தில்
மூன்று போலண்ட் மூவிஸ் ப்ரொஜக்ஷன்.
தற்செயலாக ஃபில்ம் இன்ஸ்ட்டிடியூட் போயிருந்த ராஜநாயஹமும் பஸ்ஸில் கிளம்பிய போது அதே பஸ்ஸில் மாணவர்கள் கூட்டத்தில் பேண்ட் போட்ட சுஹாசினியும்.
அந்த வார 'சாவி' பத்திரிகையில் வண்ண அட்டைப் படத்தில்
சுஹாசினி.
படித்துக்கொண்டிருக்கும் போதே மகேந்திரன் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
போலண்ட் படங்கள் ஆரம்பிக்கு முன் ஹாலில் இருந்த ப்ரொஜெக்டரை செக் செய்ய ' மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ' கந்தன் கருணை பாடல் ஆப்பரேட்டர் ஓட்டிப்பார்த்தார்.
படங்கள் பார்த்து முடிந்த பின் கிளம்பிய அடையார் இன்ஸ்டிடியூட் சக மாணவர்களிடம் சுஹாசினி
" நில்லுங்கப்பா. நானும் பஸ்ஸில வீட்டுக்கு போகனும்."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.