144th 145th Episodes of R.P. Rajanayahem
சினிமா எனும் பூதம்
முரசு டிவியில்
01.09.2024 ஞாயிற்றுக்கிழமை
08.09.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை எட்டரை மணிக்கு
இசையமைப்பாளர்கள்
இளையராஜா
A.R. ரகுமான்
.....
R.P. ராஜநாயஹம் 2019 பதிவு
இசையரசியல்
- R.P. ராஜநாயஹம்
நல்ல இளமையில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம் என்று அதீத ஈடுபாடு கொண்டிருந்தவன் நான். Thanks to Thi.Janakiraman.
என் காதில் சாஸ்த்ரீய சங்கீதம் விழுந்த அளவுக்கு வேறு யார் காதிலாவது விழுந்திருக்குமா? எவ்வளவு சங்கீத கேசட்கள். எவ்வளவு காலத்து இசைக்கெல்லாம் காதை கொடுத்திருக்கிறேன். இதற்காக எவ்வளவு தேடல்,
நேரம், பணச்செலவு.
மேற்கத்திய சங்கீதமும் பீத்தாவன், மொசார்ட் என்று காதில் விழுந்தது.
மதுரை மணி அய்யர்,எம்.டி.ராமநாதன், எம்.எஸ், மதுரை சோமு, படே குலாம் அலிகான், பிஸ்மில்லாகான், பீம்ஸென் ஜோசிக்கு கொடுத்த முக்கியத்துவம், கவனக்குவிப்பு ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகிக்கெல்லாம் இருந்ததில்லை.
சினிமா பாடல் என்றால் கூட என் காலத்துக்கு முந்தியவை தான் அப்போதே கவனப்படுத்த முடிந்தது.
மெல்லிசை பாடும்போது கூட அப்படித்தான். பி.பி.எஸ், கிஷோர்குமார், சந்திர பாபு, டி.எம்.எஸ், சீர்காழி.
இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவனுக்கு,
’ரெண்டு’ பர்மனுக்கு கொடி கட்டி கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய தயாராய் இல்லை.
பாடுவது எப்போதும் மெல்லிசையில் இருந்து தான். சாஸ்த்ரீய சங்கீதம் பாட முயற்சி செய்யவே மாட்டேன்.
அதே போல் தான் ஹாலிவுட், உலகப்படங்களும். அதோடு உலக இலக்கிய, நவீன தமிழ் இலக்கிய வாசிப்பும். தேடல்.
பாடல் கேட்பதென்றால்கடந்த சில வருடங்களில் சூஃபி பாடல்கள் அதிக நேரத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
பொதுப்புத்தி ரசனை ஒட்டாமல் போனது இதனால் தான்.
கடந்த நாற்பது வருஷத்து சினிமா பாடல்களில் அதிக பரவசமோ, பெருத்த ஈடுபாடோ கொண்டதில்லை.
முழு கவனம் சாஸ்திரீய இசையின் மீது என்பதால் இளையராஜா, ரஹ்மான் என்ற 'மேக ஆதிக்கம்' ஏற்படாமலே போய் விட்டது.
அந்நியம் நேர்ந்திருக்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.