Share

Aug 22, 2023

Skull : Keep smiling like me

மண்டை ஓட்டுக்குள் எண்ணப்பறவைகள்

Skull : "Keep smiling like me."

https://m.facebook.com/story.php?story_fbid=2693720307508085&id=100006104256328&mibextid=Nif5oz

......




மனித மண்டைஓடு
-:R.P. ராஜநாயஹம் 

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்"

Human skull is always smiling. 

சுஜாதா இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதினார்:
 " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால் "

தொன்ம ரகசியம் ஒன்று - 
பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர். 
அந்த மண்டை ஓடுகள் -
 அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.

Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை ப்பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி 'யோரிக்' கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.

A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life.

.........

மீள்  2009

Foto 

Lawrence Olivier as Hamlet

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.