தில்லானா மோகனாம்பாள்
பெரும் வரவேற்பு பெற்ற பிறகு ஏ.பி.நாகராஜன் ஆர்வத்துடன் எடுத்த படம் குருதட்சணை.
கறுப்பு வெள்ளையில் தயாரிப்பு.
மாமா மஹாதேவன் இந்த படத்திற்கு தன் உதவியாளர் புகழேந்தியை இசையமைக்க வைத்து மேற்பார்வை செய்தார்.
புகழேந்தி மலையாளத்தில் முதலாளி படத்திற்கு இசையமைத்தவர்.
மலையாளத்தில் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
குருதட்சணைக்கு முன் செல்வியின் செல்வன் திரைப்படத்திற்கு புகழேந்தி தான் இசை.
சிவாஜி, ஜெயலலிதாவுடன் பத்மினியும்.
பாலையா, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், சகஸ்ரநாமம்
பாலாஜி, பி.டி. சம்பந்தம், பக்கோடா காதர், மாஸ்டர் பிரபாகர்.
'ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணு இருக்கேன் கண்ணு மச்சான்'
'ஓராம் கிரகமடி கன்னி',
'பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்த பாரு' பாட்டுல
தியேட்டர்ல கைதட்டு வாங்குவதற்காக ஒரு வரி
' சிவாஜி படிச்சா பேரு பெத்தாரு'
ராவுத்தராக தங்கவேலு பாடல் காட்சி.
குருதட்சணை சரியாக போகவில்லை.
ஏ.பி.நாகராஜன் அடுத்து வண்ணப்படமாக சிவாஜியை வைத்து எடுக்க ஸ்கிரிப்ட்டெல்லாம் ரெடி செய்து வைத்திருந்தார். குருதட்சணை தோல்வியால் துவண்டு போய் விட்டார்.
பெரிய பட்ஜெட் இப்ப முடியாது.
சிவாஜி கதாநாயகனாக நடிக்க இருந்த மஹாபலிபர பின்னணி கதையையே சின்ன பட்ஜெட் வண்ணப்படமாக படமாக
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் சிறுவன் மாஸ்டர் பிரபாகரை கதாநாயகனாக நடிக்க வைத்து அதே வருடம் ஆறு மாதத்தில் வெளியிட்டார்.
"வா ராஜா வா"
' கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவ ராஜா.
அந்த கத சொல்ல வந்தேனே
சின்ன ராஜா'
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.