அந்த குழந்தைக்கு பத்து வயதிருக்கும். கடையில் இருந்த இரண்டு வெவ்வேறு வகை பேனாவை எடுத்து அம்மாவிடம் காட்டி 'இந்த ரெண்டுல உனக்கு எந்த பேனாம்மா பிடிச்சிருக்கு?'
அம்மா 'இந்த பேனா'
அம்மா choose செய்த பேனாவை வைத்து விட்டு அந்த இன்னொரு பேனாவை பில் கவுண்ட்டரில் வைத்து விட்டு ஓடிப் போய் இரண்டு பென்சில் எடுத்து வந்து ' எதும்மா நல்லாருக்கு?'
அம்மா 'இந்த பென்சில்'
அவசரமாக அம்மா சுட்டிக் காட்டிய பென்சிலை ஒதுக்கி விட்டு மற்ற பென்சிலை பில் கவுண்ட்டரில் வைக்கிறாள் மகள்.
இரண்டு விதமான அழி ரப்பர் எடுத்து வந்து ' நான் எதம்மா வாங்கிக்கனும்? '
அம்மா ' இது நல்லாருக்குடி'
அம்மாவுக்கு பிடிச்சதை திரும்ப வைத்து வந்து பில் கவுண்ட்டரில் உடனே வைத்து விட்டாள்.
இந்த வெளிப்படையான நிராகரிப்புக்கு அம்மா செல்ல கோபத்துடன்
" அப்ப எதுக்குடி என் கிட்ட கேட்ட கேட்குற? நான் செலக்ட் பண்ணதயெல்லாம் ஒதுக்கிடுற"
இப்ப கடைக்கு
வருகிற குழந்தைகள் இப்படித் தானாம். Trend!
அம்மாவோ அப்பாவோ
நல்லாருக்குன்னு சொல்றத கவனமா ஒதுக்கிட்டு மற்றதத்தான் எடுப்பார்கள்.
Children chase perfection to catch excellence. Child Attitude is something that makes
a strange difference.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.