Share

Aug 31, 2023

மூதறிஞர் கலைஞர் பேனா

"சிங்கங்கள் உலாவும் காட்டிலே 
சிறு நரிகள் திரிவது போல 
இன்று 
நம் நாட்டைச்சுற்றி அலைகிறது 
ஒரு சோதாக்கும்பல்.                                              எண்ணிக்கையிலே குறைந்த
 அந்த இதயமற்ற கூட்டம் 
வஞ்சகத்தால் வாழ்கிறது"
- மூதறிஞர் கலைஞர் பேனா
73 வருடங்களுக்கு முன் 

மு. தளையசிங்கம் 'போர்ப்பறை' நூலில் கலைஞர் பற்றி
எழுதிய விஷயத்தை 
நான்
2002ம் ஆண்டு ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கத்தில் சுட்டிக் காட்டிய போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ராஜநாயஹம் 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை அந்த வருடம் வெளிவந்த போதும்,
 கடந்த இருபது வருடங்களாக எத்தனையோ முறை 
' எந்த நூலில் தளையசிங்கம் சொல்லியிருக்கிறார்?' என பல முக்கியஸ்தர்கள் என்னிடம் ரகசியமாக கேட்டிருக்கிறார்கள்.

" அகிலனை விட திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட கலையின் நோக்கத்தை பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் கொண்டவன். 
அவனே மு. கருணாநிதி."

Aug 24, 2023

எந்தா சாரே? இந்தா சாயா


எங்கே போனாலும் அங்கே மலையாளி இருப்பார் என்கிற நல்ல நகைச்சுவை ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்த போதே பகிரப்பட்ட கேரள கலாச்சார சுட்டிக்காட்டல்.

God's paradise ல் பிறந்தவர்கள் எங்கங்கோ போய் பிழைப்பு நடத்துவார்கள். யதார்த்தமான
கேரள மனித கலாச்சாரம்.

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்து சொன்னார்:
" One step for man, one giant leap for mankind" 
அப்போது அங்கேயிருந்த டீக்கடை நாயர் 
"எந்தா சாரே? இந்தா சாயா" 
என்றாராம்.

இதை முன்வைத்து பிரகாஷ் ராஜ் இயல்பாய் ஜோக் செய்ததற்கு பிரச்னை செய்வது தேவையில்லை.
முரட்டு கொள்கையாளர்கள் நகைச்சுவை கலாரசனை என்றால் என்ன என்றே தெரியாத ஒளரங்கசீப்புகள்.

https://m.facebook.com/story.php?story_fbid=3667813993432040&id=100006104256328&mibextid=Nif5oz


Chandrayaan 3 success - Credit to Scientists

Borrow from Neil Armstrong

"One small step for Chanrayan 3 lander,

One Giant leap for India"

Credit to Scientists

Chanda o chanda,...
chanda o chanda...
Kisane churayee.....
teri meri nindiya
Jage sari raina, ....
tere mere naina
Jage sari raina, ...
tere mere naina

Chanda o chanda She gave her consent
Chanda o chanda She gave her consent
She grew love plant within herself
Suffered when the buds were bumping over one another
She covered the buds
There is no chance of covering further

Kishore Kumar song link below:

https://youtu.be/w5yWv7javsE?si=CBTJGtshfRq6EXDO

https://m.facebook.com/story.php?story_fbid=3667731736773599&id=100006104256328&mibextid=Nif5oz

பூக்குட்டி பதற்றம்

நான்கு வயது பேத்தி பூக்குட்டி
இப்போது Bigg Boss Kamal விளம்பரம் TVயில் பார்க்க நேரும் ஒவ்வொரு முறையும் பதறிப்போய் சோபாவில் இருந்து இறங்கி உடனே ஒளிந்து கொண்டு கண்களை இரு கைகளாலும் மூடி அந்த கமல் ஹாசன் விளம்பரம் முடிந்து விட்டதா என ஒரு கண்ணில் இருந்து விரல்களை விலக்கி பார்க்கிறாள். 
பதறுறா, 
தவிக்கிறா.. 
தக்காளி விக்கிறா.

பூக்குட்டி : "I'm scared. பயமாருக்கு"

கமல் பிக்பாஸ் விளம்பரத்தில் குயுக்தி, குரூரம் தெரிகிறது, குழந்தை மிரள்கிறது.

 விளம்பரத்தில் டிராகுலா தன்மை இருக்கிறது.

விளம்பரம் திணிக்கப்படுகிறது.

பூக்குட்டி உலகம் கார்ட்டூன். 
குழந்தைக்கென்று தனி டிவி மகன் வாங்கிக்கொடுத்திருக்கிறான்.

பிக்பாஸ் தொடர் நிகழ்ச்சியே பெரும் விசித்திர அபத்தம்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=3663549503858489&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3667813993432040&id=100006104256328&mibextid=Nif5oz

Aug 22, 2023

Skull : Keep smiling like me

மண்டை ஓட்டுக்குள் எண்ணப்பறவைகள்

Skull : "Keep smiling like me."

https://m.facebook.com/story.php?story_fbid=2693720307508085&id=100006104256328&mibextid=Nif5oz

......




மனித மண்டைஓடு
-:R.P. ராஜநாயஹம் 

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்"

Human skull is always smiling. 

சுஜாதா இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதினார்:
 " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால் "

தொன்ம ரகசியம் ஒன்று - 
பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர். 
அந்த மண்டை ஓடுகள் -
 அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.

Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை ப்பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி 'யோரிக்' கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.

A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life.

.........

மீள்  2009

Foto 

Lawrence Olivier as Hamlet

Ethics and etiquettes

Ethics and etiquettes


PLEASE STAY OUT OF MY WAY, 
Mr PHILIPS

தயவு செய்து தரக்குறைவாக நடந்து கொள்ள வேண்டாம், மிஸ்டர் பிலிப்ஸ்.
கண்ணியமான என்னை கோபப்படுத்த வேண்டாம்.

You may please go there and fight. 
என்னிடம் ஏன் உங்கள் அடாவடித்தனம்.

Ethics and etiquettes

PLEASE STAY OUT OF MY WAY, PHILIPS

தயவு செய்து தரக்குறைவாக நடந்து கொள்ள வேண்டாம், மிஸ்டர் பிலிப்ஸ்.
கண்ணியமான என்னை கோபப்படுத்த வேண்டாம்.

You may please go there and fight. 
என்னிடம் ஏன் உங்கள் அடாவடித்தனம்.

Philips..It's my kind request.. Please do not get on nerves. Humbly I beg you to leave me. 
Go away. Please stay out of my way.

Philips..It's my kind request.. Please do not get on nerves. Humbly I beg you to leave me. 
Go away. Please stay out of my way.

https://m.facebook.com/story.php?story_fbid=1621529961286089&id=100002873039076&mibextid=Nif5oz



Aug 17, 2023

குருதட்சணை - வா ராஜா வா

தில்லானா மோகனாம்பாள் 
பெரும் வரவேற்பு பெற்ற பிறகு ஏ.பி.நாகராஜன் ஆர்வத்துடன் எடுத்த படம் குருதட்சணை.
 கறுப்பு வெள்ளையில் தயாரிப்பு.

மாமா மஹாதேவன் இந்த படத்திற்கு தன் உதவியாளர் புகழேந்தியை இசையமைக்க வைத்து மேற்பார்வை செய்தார்.
புகழேந்தி மலையாளத்தில் முதலாளி படத்திற்கு இசையமைத்தவர்.
மலையாளத்தில் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
குருதட்சணைக்கு முன் செல்வியின் செல்வன் திரைப்படத்திற்கு புகழேந்தி தான் இசை.

சிவாஜி, ஜெயலலிதாவுடன் பத்மினியும்.

பாலையா, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், சகஸ்ரநாமம்
பாலாஜி, பி.டி. சம்பந்தம், பக்கோடா காதர், மாஸ்டர் பிரபாகர்.

'ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு ஆளான பொண்ணு இருக்கேன் கண்ணு மச்சான்'

'ஓராம் கிரகமடி கன்னி', 

'பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்த பாரு' பாட்டுல
தியேட்டர்ல கைதட்டு வாங்குவதற்காக ஒரு வரி
 ' சிவாஜி படிச்சா பேரு பெத்தாரு'
ராவுத்தராக தங்கவேலு பாடல் காட்சி.

குருதட்சணை சரியாக போகவில்லை. 

ஏ.பி.நாகராஜன் அடுத்து வண்ணப்படமாக சிவாஜியை வைத்து எடுக்க ஸ்கிரிப்ட்டெல்லாம் ரெடி செய்து வைத்திருந்தார். குருதட்சணை தோல்வியால் துவண்டு போய் விட்டார்.
பெரிய பட்ஜெட் இப்ப முடியாது.

சிவாஜி கதாநாயகனாக நடிக்க இருந்த மஹாபலிபர பின்னணி கதையையே சின்ன பட்ஜெட் வண்ணப்படமாக படமாக
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பில் சிறுவன் மாஸ்டர் பிரபாகரை கதாநாயகனாக நடிக்க வைத்து அதே வருடம் ஆறு மாதத்தில் வெளியிட்டார்.
"வா ராஜா வா"

' கல்லெல்லாம் செல செஞ்சான்                                            பல்லவ ராஜா. 
அந்த கத சொல்ல வந்தேனே
சின்ன ராஜா'

Aug 16, 2023

VIOLENCE - ஜெயிலர், விக்ரம்

VIOLENCE

ஜெயிலர், விக்ரம் 
கொல கொள்ள

ஜெயிலர்ல  மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்னு 
படா 'மேல் மூடி'கள்ளாம் வரத்து. Supporting actors.
விக்ரம் கமலுக்கு ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதின்னு ரெண்டு 
செம 'மேல் மூடி'க.

புத்ர சோகம்
ரஜினிக்கு வசந்த் ரவி.
கமலுக்கு காளிதாஸ் ஜெயராம்.

கொழந்த சென்டிமென்ட்
ஜெயிலர்ல மாஸ்டர் ரித்விக், 
விக்ரம்ல மாஸ்டர் தர்ஷன்.

ரெண்டுலயும் மாரிமுத்த பாக்கலாம்.
பன்னீரா வர்ராரு, நாகராஜா வந்தாரு.

ரெண்டு படத்துக்கும் அநிருத் இசைக்களரி..

ரஜினியும், கமலும் பிரமிக்க வைக்கும்
செம பெர்மாமன்ஸ்.
Both Kamal and Rajini differ in style not in ideas.
No change in "SYSTEM".

விநாயகன் 'தங்காத்து'

நகைய
ஒரசிப்பாத்தா 
விநாயனுக்கு 
விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் 
மச்சம் கம்மி.

Trend. நெறய்ய கொல கொள்ள கத தான்
இங்க இப்ப பிரமாண்ட வசூல்.

அமெஞ்சுக்கற்து தான். வாச்சுக்றது தான். ஜில்ப்பு ஜிப்பா ஜிக்கான் ஜலாபத்ரி ரெய்டு..

Aug 10, 2023

Child Attitude


அந்த குழந்தைக்கு பத்து வயதிருக்கும். கடையில் இருந்த இரண்டு வெவ்வேறு வகை பேனாவை எடுத்து அம்மாவிடம் காட்டி 'இந்த ரெண்டுல உனக்கு எந்த பேனாம்மா பிடிச்சிருக்கு?' 

அம்மா 'இந்த பேனா' 

அம்மா choose செய்த பேனாவை வைத்து விட்டு அந்த இன்னொரு பேனாவை பில் கவுண்ட்டரில் வைத்து விட்டு ஓடிப் போய் இரண்டு பென்சில் எடுத்து வந்து ' எதும்மா நல்லாருக்கு?'

அம்மா 'இந்த பென்சில்'

அவசரமாக அம்மா சுட்டிக் காட்டிய பென்சிலை ஒதுக்கி விட்டு மற்ற பென்சிலை பில் கவுண்ட்டரில் வைக்கிறாள் மகள்.

இரண்டு விதமான அழி ரப்பர் எடுத்து வந்து ' நான் எதம்மா வாங்கிக்கனும்? '

அம்மா ' இது நல்லாருக்குடி'

அம்மாவுக்கு பிடிச்சதை திரும்ப வைத்து வந்து பில் கவுண்ட்டரில் உடனே வைத்து விட்டாள்.

இந்த வெளிப்படையான நிராகரிப்புக்கு அம்மா செல்ல கோபத்துடன்
" அப்ப எதுக்குடி என் கிட்ட கேட்ட கேட்குற? நான் செலக்ட் பண்ணதயெல்லாம் ஒதுக்கிடுற" 

இப்ப கடைக்கு 
வருகிற  குழந்தைகள் இப்படித் தானாம். Trend!
அம்மாவோ அப்பாவோ 
 நல்லாருக்குன்னு சொல்றத கவனமா ஒதுக்கிட்டு மற்றதத்தான் எடுப்பார்கள்.

Children chase perfection to catch excellence. Child Attitude is something that makes 
a strange difference.

Aug 1, 2023

விஸ்வநாதன் - ராமமூர்த்தி 90வது சினிமா எனும் பூதம்

90th Episode of R.P. Rajanayahem 
Cinema Enum Bootham 
06.08.2023 
ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில்

காலை எட்டரை மணிக்கு

R.P. ராஜநாயஹம்

சினிமா எனும் பூதம்

90வது நிகழ்ச்சியில்

மெல்லிசை மன்னர்கள் 

"விஸ்வநாதன் - ராமமூர்த்தி"

R.P.Rajanayahem Family tree

Sons,

Kirti and Ashwath,

Daughters - in - law

Vijayalakshmi (Ashwath wife)
Banu (Kirti wife)

Grand children


Vyashni and Moiez

..

Salavakuppam (Mahabalipuram) 
Pulikugai Beech