1984ம் வருடம் ஃபில்ம் ஃபேர் மாகசின்
" Fifty great heroes" என்று ஹிந்தி கதாநாயகர்கள் குறித்து ஒரு ஸ்பெஷல் இதழ் வெளியிட்டது.
அந்த ஐம்பது ஹீரோக்களில்
வெள்ளி விழா கதாநாயகன் ராஜேந்திரகுமாருக்கு இடம் தரப்படவில்லை. நிராகரிப்பு.
பிஸ்வஜித் சேர்க்கப்படவில்லை. மனோஜ் குமாரும் இல்லை. ரந்திர் கபூரும் பட்டியலில் இல்லை.
ரிஷிகபூர் ஐம்பது ஹீரோக்களில் ஒருவர்.
அடுத்த இதழில் நிராகரிக்கப்பட்ட நடிகர்களுக்கு ஆதரவாக
பல கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
ஒரு வாசகர் கடிதம்: 'ரேகாவின் தந்தை ஜெமினி கணேஷ் ஏன் ஐம்பது ஹீரோஸ் பட்டியலில் இல்லை?'
ஜெமினி கணேஷ் ஹிந்தியில் மிஸ்ஸியம்மா(Miss Mary), கணவனே கண் கண்ட தெய்வம்(Devta), வஞ்சிக்கோட்டை வாலிபன்(RajTilak)
ரீமேக் படங்களிலெல்லாம் கதாநாயகனாக நடித்திருந்தார்.
டப்பிங் குரல் தான்.
கணவனே கண் கண்ட தெய்வம்(Devta) இந்தியில் குரூபியான
கூன் கிழவனாக வருகிற காட்சிகளுக்கு
ஜெமினியே தான் குரல் கொடுத்திருந்தார். இளைஞனாக வருகிற காட்சிகளுக்கு டப்பிங் குரல்.
அந்த பட விமர்சனம் ஒன்றில் 'கிழவனாக வருகிற காட்சிகளில் தான் இந்தி உச்சரிப்பு நன்றாக இருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
தலாஷ் படத்தில் இடம் பெற்ற பாடல்கள்
கீழே..
ஷர்மிளா டாகூர், ராஜேந்திர குமார்
Talaash 1969 - the costliest movie
of the day
"One Crore"
https://youtu.be/BkgK5-T5WNY
https://m.youtube.com/watch?v=6KTPBHlr31k&feature=youtu.be
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.