இந்த இரண்டு படங்களிலும் பின்னாலே ஒரு பெண் முகம் தெரிவதை காணமுடியும்.
அவர் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி.
மதுரையில் உயர்நீதிமன்றத்தில் டெபுடி சொலிசிட்டர் ஜெனரல்.
நேற்று உயர்நீதிமன்ற நீதியரசராக உயர்ந்திருக்கிறார்.
மதுரையில் இசைப் பேரறிஞர் மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் வழக்கறிஞர் பா. அசோக் அழைப்பின் பேரில் நீதியரசர் மகாதேவனுடன் நானும் கலந்து கொண்ட போது சந்தித்தேன்.
அசோக்கின் சட்டக்கல்லூரி க்ளாஸ் மேட்.
கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே
அசோக் மற்றவர்களுக்காக பணம் விஷயத்தில் பெரிய செலவாளி என்று
ஃபேஸ்புக்கில் மூன்று வருடங்களுக்கு முன்
விக்டோரியா கெளரி தன் பதிவில் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்.
மறுநாள் மதிய உணவு சாப்பிட இன்று நீதியரசராகியிருக்கும் விக்டோரியா கெளரி எங்களுடன் இருந்தார். அருமையான கான்வர்சேஷனலிஸ்ட்.
அப்போது அத்வானி குறித்து
அவர் சொன்ன விஷயம்
என் நினைவில்.
பின் மதுரை ஜங்ஷனுக்கு அவருடைய காரில் தான் வந்து பின்னர்
என் சென்னை பயணம்.
வாழ்த்துகளும் பாராட்டும்
உயர்நீதிமன்ற நீதியரசராக பதவியேற்கும்
விக்டோரியா கெளரி அவர்களுக்கு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.